எங்கிருந்தோ ஆசைகள்...74

74 தொட்டு விட்டுச் சென்றவனை.. கட்டிவிட ஆசைகொண்டேன்... தீனதயாளனின் வீட்டிலிருந்த வரை அவர்களுக்கு அருகேதான் அனுபமாவும்.. தீனதயாளனும் சு...


74
தொட்டு விட்டுச் சென்றவனை..
கட்டிவிட ஆசைகொண்டேன்...


தீனதயாளனின் வீட்டிலிருந்த வரை அவர்களுக்கு அருகேதான் அனுபமாவும்.. தீனதயாளனும் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.. நேகா மிதப்பாக புருவங்களை உயர்த்தியபடி யாரிடமாவது பேசுவாள்.. அவர்களுக்கு அருகே வருவாள்.. அருகில் நிற்கிறாளே.. ஏதாவது பேசலாம் என்று சுந்தரி வாயைத்திறந்தால், அதைக் கவனிக்காததைப் போல வேறு யாரிடமாவது பேசப் போய் விடுவாள்.. தொலைந்தாள் என்று நிம்மதியாக சுந்தரி அனுபமாவிடம் பேச ஆரம்பித்தால்.. மறு நொடியில் வந்து நிற்பாள்...
'என்ன பெண் இவள்..'
சுந்தரிக்கு அலுப்பாக இருந்தது.. ரங்க ராட்டினம் போல ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிக் கொண்டிருப்பவளின் கால்களில் சக்கரரேகை இருக்கிறதா என்று ஆராய வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டாள்...
கிளம்பும் போது வாய் நிறையப் புன்னகையுடன் தீனதயாளனும்.. அனுபமாவும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.. அப்போதும் கூட நேகா இரண்டும் கெட்டான் நிலையில்தான் இருந்தாள்.. வாசலுக்கும் வராமல்.. வீட்டிற்குள்ளும் போகாமல்.. இடைப்பட்ட இடத்தில் நின்று கொண்டு.. சிரிக்கவும் செய்யாமல்.. சிரிக்காமலும் இருக்காமல் லேசாக உதட்டை வளைத்துக் கொண்டு நின்றாள்...
'அடேங்கப்பா..' சுந்தரி மலைத்துத்தான் போனாள்..
'இந்த வயசிலேயே இத்தனை வித்தைகளா..? கெட்டிக்காரிதான்...'
அங்கிருந்து கார் கிளம்பியதும் அவளுக்கு மூச்சு முட்டும் சூழ்நிலையிலிருந்து தப்பித்து வந்து விட்டதைப் போல இருந்தது...
வீட்டுக்குள் நுழைந்ததும்.. 'அப்பாடி...' என்ற நிம்மதியுணர்வுடன் அவள் உடைமாற்றப் போனாள்.. தூங்கப் போனபோது தூங்காமல் விழித்திருந்தார் பார்த்தசாரதி...
"உறக்கம் வரலையா..?" கண்கள் செறுக கேட்டபடி கட்டிலில் சரிந்தவளின் பக்கமாக திரும்பிப் படுத்தார் பார்த்தசாரதி...
"சுந்தரி..."
"உம்ம்..."
"அந்தப் பெண்ணப் பத்தி என்ன நினைக்கிற..?"
"எந்தப் பெண்ண சொல்கிறிங்க..?" சுந்தரிக்கு தூக்கம் சொக்கியது...
"எந்தப் பெண் வீட்டுக்குப் போனோம்..?"
"அனுபமாவையா சொல்கிறிங்க..?"
"அறிவுதான்.. அது பெண்ணா..? பெண்ணுக்கு அம்மா..."
'பெண்ணுக்கு அம்மாவா...?' சுந்தரிக்கு தூக்கம் பறந்துவிட்டது...
"யாரைச் சொல்றிங்க..? அந்தப் பெண் நேகாவையா சொல்றீங்க..."
"ஆமாண்டி..."
"அவளைப் பத்தி நான் நினைக்க என்ன இருக்கு..?"
"நிறைய இருக்குடி.. அவ கல்யாண வயசில இருக்கிற பெண்.. நம்ம வீட்டில கல்யாண வயசில அர்ஜீன் இருக்கான்.."
"நீங்க அப்படியா வர்றீங்க...?"
"நான் வரலை.. பெண் கொடுக்கனும்னு தீனதயாளன்தான் வருகிறார்.. நேகாவுக்கு அர்ஜீன் மேல இன்ட்ரெஸ்ட் இருக்காம்..."
சுந்தரி பதில் சொல்லவில்லை.. பார்ட்டியில் இருந்த கொஞ்ச நேரத்திற்குள் நேகா அவளை அலைக்கழித்த அலைக்கழிப்பு அவள் நினைவில் வந்தது..
அப்படியொரு பெண்ணுடன் வாழ்நாள் முழுவதும் மாமியார், மருமகள் உறவில் வாழ்வதென்பது அவளுக்கு சாத்தியப்படுமா..?
"உனக்கே தெரியும்.. அந்தப் பெண்தான் நேகா குரூப் ஆஃப் கம்பெனிகளுக்கு சொந்தக்காரி..."
"நம்மகிட்டயும் சொத்திருக்கு.. உங்ககிட்ட எக்ஸ்போர்ட் கம்பெனியும்.. அர்ஜீன்கிட்ட கம்யூட்டர் கம்பெனியும் இருக்கு..."
"இதுகூட நேகா குருப் ஆஃப் கம்பெனிஸீம் சேர்ந்தா வேண்டாம்ன்னா சொல்லிருவ...?"
"அளவுக்கு மீறின சொத்துக்கூட மூச்சை முட்ட வைக்கும்.. மனசுக்கு அமைதியை அது தராது..."
"சுந்தரி..." பார்த்தசாரதி கோபமாக அதட்டினார்...
"நீ வேணும்னே பேசற.. நம்ம ஸ்டேட்டஸீக்கு நேகாதான் ஈக்குவலா வருவா.. நீ காஞ்சிபுரத்திலயே நிக்காதே.. வெளியில வா..."
"நான் காஞ்சிபுரமாவே இருந்துட்டுப் போறேன்.. நீங்க ஃபாரின்காரரா இருந்துட்டுப் போங்க.. இப்ப இந்த காஞ்சிபுரத்துக்காரிக்கு தூக்கம் வருது.. ஆளை விடுங்க.."
"பொறுடி.. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு..."
"என்ன..?"
"அந்தப் பெண்ணை உனக்குப் பிடிச்சிருக்கில்ல.."
பார்த்தசாரதி கெட்டிக்காரர்.. எப்போதுமே அவர் சுந்தரியின் முடிவுகளைக் கேட்டுக் கொண்டதில்லை.. அவருடைய முடிவுகளைத்தான் சுந்தரியின்மீது திணிப்பார்.. அன்றும் அதைத்தான் அவர் செய்தார்...
சுந்தரி ஆற்றாமையோடு அவரைப் பார்த்தாள்...
'இவர் ஏன் இப்படி இருக்கிறார்..?' என்று வருந்தியது அவளின் நெஞ்சம்..
எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம்.. மகனின் வாழ்க்கை மீதான முடிவை அவள் எப்படி ஏற்றுக் கொள்வது..?
"இல்லைன்னு சொன்னா விட்டுருவீங்களா..?"
"முட்டாள் போல பேசாதே..."
"அதாவது.. அந்தப் பெண்ண வேணாம்ன்னு சொன்னா நான் முட்டாள்.. அப்படித்தானே..? ஓ.கே.. எனக்கு புத்திசாலிப்பட்டம் தேவையில்லை..."
"பிடிவாதம் பிடிக்காதே சுந்தரி.. நேகாதான் இந்த வீட்டோட மருமகள்..! நான் முடிவு பண்ணிட்டேன்..."
"இதை நீங்க முடிவு பண்ணினா போதுமா..? அர்ஜீன் முடிவு பண்ண வேண்டாமா..?"
கேட்டுவிட்டு சுந்தரி உறங்கிப் போனாள்.. உறங்காமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் பார்த்தசாரதி...
அர்ஜீனின் மனதைப் பற்றி அவருக்குத் தெரியும்.. என்றுமே நேகாவை அவனுக்குப் பிடிக்காது.. அப்படியிருக்கையில் எந்த நம்பிக்கையில் இந்த சம்பந்தத்தை பேசி முடித்திருக்கிறார்...
சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவரின் வயிற்றில் இன்னும் கொஞ்சம் பீதியைக் கலந்து ஊற்றினார் துரியோதனன்...
துரியோதனனின் போன் வந்தபோது.. தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார் பார்த்தசாரதி.. இதமான காலை நேரத்தில் ஓய்வாக உலாவிக் கொண்டிருந்ததால் போனை எடுத்து...
"ஹலோ.." என்று சொல்லி விட்டார்...
"யாரு.. என் சம்பந்தியா பேசறது..?"
நக்கலாக ஒலித்த குரலைக்கேட்டவுடன் 'இது யார்' என்ற கோபத்துடன் எண்களைப் பார்த்தார்.. துரியோதனன் என்று அது சொல்லியது...
'என்ன தைரியமிருந்தா இவனுக்கு நான் சம்மந்தின்னு சொல்லுவான்..' பார்த்தசாரதிக்குள் கோபம் கொப்புளித்தது.. போனை காதுக்கு கொடுத்தவர்..
"சம்பந்தியா..? யாருக்கு யார் சம்பந்தி..?" என்று கேட்டு விட்டார்..
"என்ன சம்பந்தி இப்படிச் சொல்றீங்க.. நீங்கதான் எனக்கு சம்பந்தி..." கிண்டலாகப் பதில் சொன்னார் துரியோதனன்...
பதிலுக்கு பதில் கொடுக்கத் துடித்த நாவைக் கட்டுப் படுத்திக் கொண்டார் பார்த்தசாரதி.. வேண்டாமென்று சொன்ன பின்பும் வீண்வம்புக்கு வருகிற துரியோதனனிடம் வாய்ச்சண்டை போட்டு அவருக்கு சரியாக
இறங்குவதில் பார்த்தசாரதிக்கு விருப்பமில்லை.. அழைப்பது துரியோதன்தான் என்பதை முன்னரே கவனித்திருந்தால் அவர் போனையே எடுத்திருக்க மாட்டார்.. போனை எடுத்த பின்னால் பாதிப் பேச்சிலேயே துண்டிப்பது அநாகரிகம் என்று நினைத்தார் பார்த்தசாரதி...
அவருக்குத்தான் வலிக்காமல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப் போல பேசும் வித்தையைத் தெரிந்திருந்ததே...
"இன்னும் நீ உன் பெண்ணைக் கொடுக்கும் நினைவில இருந்து வெளியில வரலை போல.. எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு.. பட்.. அர்ஜீன் மனசில வேற பெண் இருக்கிறாளே.. நாம என்ன செய்ய முடியும்..? ஸோ.. மனதை தேற்றிக்கிட்டு.. உண்மையை ரியலிஸ் பண்ணிக்க கத்துக்க துரியோதனா... பை தி வே.. என்னோட சம்பந்திக்கு மத்தவங்க என்னை சம்பந்தின்னு கூப்பிட்டாப் பிடிக்காது..."
அதனால நீ இனிமேல் என்னை சம்பந்தியென்று கூப்பிடாதே என்று சொல்லாமல் சொன்ன பார்த்தசாரதியின் பதிலில் கொதித்துப் போனார் துரியோதனன்...
'வைக்கிறேண்டா உன் ஆணவத்துக்கு ஒரு வேட்டு..'
டப்பிங் பட வசனம் போல வீராவேசமாக மனதுக்குள் வெகுண்டவர்.. குரலில் நையாண்டியைக் கலந்து குழைத்து.. பார்த்தசாரதியின் காதில் அதை ஊற்றினார்..
"என்ன பார்த்தா இப்படிச் சொல்லிப்புட்ட..? நீ எனக்கு சம்பந்தியானா என்ன.. இல்ல என் ஊருக்காரனுக்கு சம்பந்தியானா என்ன..? சம்பந்தி.. சம்பந்திதான பார்த்தா..?"
பார்த்தசாரதி துணுக்குற்றார்.. அவருக்கு துரியோதனனைத் தெரியும்.. வேண்டுமென்றே வம்புக்கு வருகிற ஆள் துரியோதனன் அல்ல.. ஏதேனும் அவல் கிடைக்காமல் அவர் வெறும் வாயை மெல்ல மாட்டார்...
"உங்க ஊர்காரருக்கு.. நான் சம்பந்தியா...?"
"ஆமா.. அர்ஜீன் மனசுக்குப் பிடிச்ச பொண்ணு எங்க மதுரையில பெறந்த பொண்ணுதான்.. அது உனக்கும் தெரியும்தான..."
பார்த்தசாரதிக்கு சுரீர் என்றது.. அவர் சொன்ன பொய்யில் அவரே மாட்டிக் கொண்டதை உணர்ந்தார்..
'அர்ஜீன் மனசில காதலிருக்கா..?'
அதுநாள்வரை அது அவருக்குத் தெரியாது.. பார்த்தசாரதி மின்னல் வேகத்தில் யோசித்தார்.. மதுரையில் கடையை வாங்கியபின்னால் அர்ஜீன் இந்தியாவுக்கு வந்தால் சென்னையில் தங்காமல் மதுரையிலேயே நிலை கொண்டு விடுவதின் மர்மம் என்னவென்று அப்போதுதான் அவர் புத்திக்கு உறைத்தது...
"அவனோட குடும்பம் இங்க இருக்கா.. இல்லை.. மதுரையில் இருக்கா..?"
வெளிநாடுகளில் சுற்றி விட்டு வரும் மகனுக்கு வாய்க்கு ருசியாக பிடித்ததைச் சமைத்துப் போட்டு சாப்பிட வைக்க முடியாமல் அவன் மதுரைக்கே ஓடி விடுவதில் வருத்தப்படும் சுந்தரி புலம்பிய புலம்பலில் உள்ளடங்கியிருந்த புதுப்புது அர்த்தங்கள் அப்போதுதான் திரை மறைவிலிருந்து வெளிவந்தன...
"என்ன பார்த்தா.. பேச்சயே காணோம்..?" துரியோதனனின் குரலில் விசமம் வழிந்தது...
"நத்திங்.. ஒன் இம்பார்டண்ட் மீட்டிங் இருக்கு.. அதைப்பற்றி யோசித்தேன்..."
"நினைச்சேன்.. நான் இந்தப் பேச்சை எடுத்தவுடனேயே உனக்கு முக்கியமான வேலை வந்துரும்ன்னு.. எது எப்படியோ போகட்டும் பார்த்தா.. இனிமே நாம ஒன்னுக்குள்ள ஒன்னு.. நீ என் பொண்ண உன் மகனுக்கு கட்டாட்டியும்.. எங்க ஊருப் பொண்ண உன் மகனுக்கு கட்டி வைக்கிற.. அந்த வகையில் எனக்கு சந்தோசம்தான்.."
'உனக்கு எதில சந்தோசம்ன்னு எனக்கு தெரியாதா...?'
"காவ்யா தங்கமான பொண்ணு..."
'ஓ.. அந்தப் பெண்ணின் பெயர் காவ்யாவா..?'
"நடுத்தரக் குடும்பம்தான்.. ஆனாலும் அவளோட அப்பா ஸ்டேட் கவர்ண்மெண்டில வேல பாக்கிறாரு.. அண்ணனோ இன்னும் ஒருபடி மேல போயி.. ஸ்டேட் கவர்ண்மென்டில் பெரிய உத்தியோகமே பார்க்கிறான்.. பூர்விக வீட்ட வாடகைக்கு விட்டுட்டு.. சொந்தமா வீடு கட்டி அதில குடும்பத்தை குடி வைச்சிருக்கான்னா பாரேன்.. சொந்தமா அவனுக்கு கார்கூட இருக்குதுப்பா.. இந்த சின்ன வயசிலயே என்னா பொறுப்பு.. என்னா முன்னேற்றம்..."
'கடுப்பக் கிளப்பாதேடா.. இங்க நான் ஒரு கோடிஸ்வரிய என் மகனுக்கு மனைவியாக்க முடிவு பண்ணியிருக்கேன்...'
"வசதி வாய்ப்பில குறைவில்லாதவன் கண்ணதாசன்.. அவன் தங்கச்சிக்கு நூறுபவுன் நகை போடுவான்..."
'டேய்.. துரியோதனா.. இது வைரங்கள் கொட்டிக்கிடக்கிற வீடுடா...'
"லாரி நிறைய சீர் கொடுப்பான்..."
'அதுக்குத்தானே நான் காத்திருக்கேன்...'
"எனக்கு இதில ரொம்ப சந்தோசம்..."
'இருக்காதா.. பின்ன..?'
"என்னமோ போ பார்த்தா.. நீ எங்க ஊருக்கு சம்பந்தியாகிறதில எனக்கு அம்புட்டு மகிழ்ச்சி.. அந்தப் பொண்ணு நீ வாங்கியிருக்கிற கடையிலதான் வேலை பார்க்குது.. உன் மகன் இல்லாதப்ப.. கடை பொறுப்பு முழுசும் அதோடதுதானாம்.. சம்பளமே அதுதான் போடுதுன்னா பாத்துக்கயேன்..."
'இவ்வளவு நடக்குதா..? இதை நான் கவனிக்காமல் போயிட்டேனே...'
"அழகா.. அம்சமா.. குடும்பக் குத்துவிளக்கா இருக்கும்..."
'அது எதுக்கு.? எனக்கு நியான் விளக்கா இருந்தாலும்.. நேகாதான் என் வீட்டுக்கு மருமகளா வரனும்..'
"உன் மகனும் அதுவும் சுத்தாத இடமில்லயாம்.. இந்த மதுரையை உன் மகனுக்கு சுத்திக் காட்டினதே காவ்யாதானாம்..."
வார்த்தைக்கு வார்த்தை காவ்யாவின் பெயரை துரியோதனன் உச்சரிக்க உச்சரிக்க.. அந்த காவ்யாவை நேரில் பார்த்து அந்த விவகாரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார் பார்த்தசாரதி..
"அம்புட்டுத்தான் நான் சொல்றது.. எனக்கென்ன வேணும்..? எங்க ஊரு பொண்ணு உன் வீட்டுக்கு மருமகளாகனும்.. வேறென்ன..."
போடா.. உனக்கு என்ன வேணும்ன்னு எனக்குத் தெரியாதா என்ற கோபத்துடன் செல்போனை அணைத்து விட்டார் பார்த்தசாரதி...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்...74
எங்கிருந்தோ ஆசைகள்...74
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-74.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-74.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy