எங்கிருந்தோ ஆசைகள்..-73

73 உன்னிடத்தில் என் மனதை... ஒப்படைக்க ஆசைகொண்டேன்... "ஆக.. அந்தப் பார்த்தசாரதி ஒத்தப் பொண்ணாப் பொறந்த பணக்கார வீட்டம்மாவாப் பாத்த...

73
உன்னிடத்தில் என் மனதை...
ஒப்படைக்க ஆசைகொண்டேன்...


"ஆக.. அந்தப் பார்த்தசாரதி ஒத்தப் பொண்ணாப் பொறந்த பணக்கார வீட்டம்மாவாப் பாத்து தேடிப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு சொல்றிங்க..."
"ஆமாண்டா.. அதுக்கப்புறம் அவன் தொழில வளக்க அவனுக்குத் தேவைப்பட்ட பணம் கிடைச்சிருச்சு.. மாமனார் வீட்டுப் பணத்த தொழில்ல போட்டான்.. கோடிஸ்வரனா ஆகிட்டான்..."
"அப்படியாப்பட்டவரு மகனுக்கு எப்படியாப்பட்ட இடத்தத் தேடுவாரு...?"
"நிச்சயமா அவன் கட்டிதைப் போல ஒத்தப் பொண்ணாப் பொறந்த பணக்கார வீட்டத்தான் தேடிப் பிடிப்பான்.. அவன் மகனும் ஏப்ப.. சாப்ப இல்லையில்ல..."
தேவராஜனுக்கு இந்தப் பேச்சை பிடிக்கவில்லை.. அர்ஜீன்.. ஏப்ப.. சாப்பை இல்லைதான்.. ஆனால் தேவராஜன் அப்படியில்லையே.. அவன் முன்னால் அர்ஜீனைப் பற்றி அப்படிச் சொல்லலாமா..?
அதை துரியோதனனிடம் அவனால் சொல்லிவிட முடியுமா..? அதனால் அவன் அதை கண்டு கொள்ளாமல் அடுத்த பேச்சுக்குத் தாவினான்..
"நானும் அப்படித்தாம்ப்பா நினைக்கறேன்..."
"பரவாயில்ல.. இது ஒன்னிலயாவது புத்தியோட நினைக்கறியே..."
"இத மட்டுமில்லப்பா.. வேற ஒன்னயும் சேர்த்து நினைக்கறேன்..."
"நீ ஒத்த நினப்பு நினைச்சாலே அது ஆபத்தில வந்து முடியும்.. இதில கூட ஒரு நினைப்பயும் சேத்து நினக்கறியா..? அது டேஞ்சராச்சே..."
"யாருக்குப்பா..?"
"யாருக்கோ..."
"தெரியுதில்ல.. யாருக்கோ.. என்னவோ ஆனா உங்களுக்கென்ன..? உங்களப் பழுதுபடிக்கப் பேசின அந்தக் கண்ணதாசன பழிவாங்கனுமா வேணாமா..?"
மகனின் கேள்வியில் அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தார் துரியோதனன்.. அந்தப் பார்வையில் திணறிப் போனான் தேவராஜன்..
'என்னடா இது.. அந்தப் பார்த்தசாரதிதான் ஒரு மார்க்கமாப் பார்ப்பான்னு சொல்லிட்டு.. இப்ப இவரு ஒரு மார்க்கமாப் பாக்கறாரே... பேசாம ஓடிப் போயிரலாமா...?'
அவன் ஓடுவதற்கு அஞ்சியவனில்லைதான்.. அவன் புறமுதுகு காட்டிய நிகழ்வுகளை மட்டுமே அவனுடைய வாழ்க்கை வரலாறு.. படம் பிடித்துக் காட்டும்...
அப்படிப்பட்ட தேவராஜன் அப்போது புறமுதுகு காட்ட யோசித்தான்.. அவன் சம்பந்தபட்ட விவகாரம் என்றால் அவன் புறமுதுகு காட்டி ஓடி விடலாம்.. ஆனால் அது அடுத்தவரைக் கெடுக்கும் விவகாரமாயிற்றே...
எடுத்த அந்தக் காரியத்தை முடிக்காமல் ஓடினால் அவன் எப்படி தேவராஜன் ஆவான்..?
ஆதலினால் அவன் துரியோதனனின் துன்பம் தரும் ஒருமார்க்கபார்வையை சங்கடத்துடன் சந்தித்தபடி..
"என்னப்பா..?" என்று நெளிந்தான்...
"இப்படிக் கொம்பு சீவிவிட்டே என் உடம்ப ரணகளமாக்கிரனும்கிற முடிவோட இருக்கிற..."
"என்னப் பாத்து இப்புடிச் சொல்லிப்புட்டிங்களேப்பா.."
"டேய்ய்.. நடிக்காதடா.. உன் நடிப்ப நீ பிறந்தப்ப இருந்து பாத்துப் பழக்கப்பட்டவண்டா.. இப்ப என்ன அலுவலுக்கு அந்தக் கண்ணதாசன பழி தீர்க்கப் போன்னு எங்கையில அருவாளத் தூக்கிக் கொடுக்கிற..?"
"நான் எங்கேப்பா அருவாளத்தூக்கிக் கொடுத்தேன்..?"
"அப்புடிக் கொடுத்திருந்தாக்கூடப் பராவயில்லயே.. வீரமான மகனப் பெத்துப் போட்டிருக்கேன்னு சந்தோசப் பட்டிருப்பனே.. நீ அந்த வேலயயும் செய்ய மாட்டியே.. முதுகுக்குப் பின்னால குழி பறிக்கல்ல சொல்லுவ..."
"அப்பா.. அந்தக் கண்ணதாசன் குடும்பம் உங்கள வாய்க்கு வந்தபடி பேசுச்சா.. இல்லயா..?"
"அதுக்கு முன்னால.. அவங்க வீட்டுப் பொம்பளப் புள்ளய நான் வாய்க்கு வந்தபடி பேசினேன்.. அதனால அப்படிப் பேசினாங்க... நம்ம வீட்டில வந்து தேன்மொழியப் பத்தி அப்படிப் பேசினா நீயும்.. நானும் சும்மாயிருப்போமா..? உன்னப் போயி என்கூட இணை கூட்டறேன் பாரு...
நீ சும்மாயிருப்ப.. நான் இருக்க மாட்டேன்.. பேசினவன உண்டு.. இல்லன்ன... ஒருவழி பண்ணிருவேன்.. அதத்தான அவங்களும் செஞ்சாங்க..?"
'ஆஹா.. இந்தாளு நாயமா பேச ஆரம்பிச்சிட்டாரே.. இவரு நாயம் பேசினா.. நான் நினைச்சத முடிக்க முடியாதே...' தேவராஜன் திகிலடைந்து போனான்...
"ஏம்ப்பா இப்படி நெய் காய்ச்சற சட்டியப் போட்டு உடைக்கறிங்க..."
"உனக்கு நெய் வேணாம்ன்னுதான்..."
"எனக்குத்தான் இல்லன்னு ஆகிப்போச்சே.. அந்தப் பேச்ச நான் பேசினேனா..? ஒரே கல்லில் ரெண்டு மாங்காயை அடிக்கிறதுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு.. அதைச் செஞ்சு.. உங்க ரெண்டு பகையாளிகளயும் பழிதீர்த்துக்குவீங்களா.. அத விட்டுட்டு வெட்டி நாயம் பொளந்துக்கிட்டு இருக்கீங்க..."
"அடிச்சேன்னா பல்லு பதினாறையும் உதுத்துப்-புடுவேன்.. படவா.. யாரப்பாத்து வெட்டி நாயம் பொளக்கறவன்னு சொல்ற.. முதல்ல உன்னப் பொளந்திருக்கனும்.. அத விட்டுப்புட்டு வாய் பேச விட்டிருக்கேன் பாரு.. அதுக்கு நீ இதையும் பேசுவ.. இதுக்கு மேலயும் பேசுவ..."
"அப்பா.. கோவப்படாம நான் சொல்றதக் கேளுங்க.."
"நீ உருப்படியா எதையும் சொல்ல மாட்டியே..."
"அப்புடி நீங்களா நினைச்சுக்கிட்டா எப்புடிப்பா..? இப்ப அந்தப் பார்த்தசாரதியும்.. கண்ணதாசனும் உங்களுக்கு பகையாளிகதான..?"
"நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன்.. என்னத் தூண்டிவிட்டு அந்தப் பார்த்தசாரதிகிட்ட மாப்பிள்ள கேக்கவைச்சு மூக்கு உடைபட வைச்சே.. அதுவும் பத்தாதுன்னு கண்ணதாசன்கிட்டப் பொண்ணுக்கேக்கச் சொல்லி.. மிச்சம் மீதி மூக்கையும் காணாம போக
வைச்சே.. இப்ப வந்து அந்த ரெண்டு பேரையும் எனக்கு பகையாளியாக்கி விடற.. உன் மனசில என்னதாண்டா நினப்பு ஓடுது..? அவனுக யாரு.. நான் யாரு..? எதுக்கு அவனுகள நான் பகையாளியா நினைக்கனும்..?"
"பகையாளிகள பகையாளித்தான்ப்பா நினக்கனும்.."
"அது என்ன அலுவலுக்கு..?"
"அப்பத்தாம்ப்பா அவனுகள பழி தீர்க்க முடியும்..."
"அந்தப் பொழப்ப நான் பாத்தா என் வீட்டுப் பொழப்ப யாரு பாக்கிறது..?"
"உங்கள என்ன அருவாளத் தூக்கிக்கிட்டுப் போயி அவனுகரெண்டு பேத்தையும் போட்டுட்டு வாங்கப்பான்னா சொல்றேன்..?"
"உன்னப் புள்ளயா பெத்த கொடுமைக்கு நீ அதையும் செய்வியா..?"
"அப்பா.. ஒத்த போன்காலு.. அந்த ஒன்னிலயே ரெண்டு பேத்தையும் சிண்டப் புடிக்க வைக்கலாம்.. என்ன சொல்றீங்க..?"
அவன் எதையோ சொல்ல வருகிறான் என்பது துரியோதனனுக்குப் புரிந்தது.. அந்த 'எது...' எதுவென்று தான் கேட்டுப் பார்ப்போமே என்ற நினைவில்..
"சொல்லு..." என்றார்...
"உங்க சிநேகிதரு பார்த்தசாரதிக்கு ஒரு போனப் போடுங்க..."
"அவன் எனக்கு சிநேகிதனில்ல..."
"இருந்துட்டுப் போகட்டும்.. நமக்கென்ன வந்துச்சு.. அப்பா அந்த ஒத்தப் போன்காலில.. அடேய் பார்த்தசாரதி.. உம்மகன் இங்கே காவ்யான்னு ஒரு பொண்ணக் காதலிக்கிறாண்டா.. பொண்ணு தங்கமான பொண்ணு.. உங்குடும்பத்துக்கு ஏத்தகுத்து விளக்குன்னு சொல்லி வாழ்த்துங்க.. இதில என்ன வில்லங்கம் வரப் போகுது..?"
அப்பாவியாகக் கேட்ட தேவராஜனின் கண்களில் கொட்டிய வில்லத்தனத்தை கூர்ந்து கவனித்த துரியோதனனின் இதழ்கள் விரிந்தன.. அவர் மெல்லச் சிரித்தார்...
"சில சமயத்தில உனக்குக் கூடமூளை எக்குத்தப்பா வேலை செய்யுதுடா மகனே.." என்றபடி போனை கையில் எடுத்தார்...
பார்த்த சாரதி சந்தோசமான மனநிலையுடன் இருந்தார்.. தீனதயாளனின் வீட்டுக்கு பார்ட்டி என்ற பெயரில் அவரும் சுந்தரியும் போயிருந்தார்கள்.. அதுவரை பார்ட்டிகளுக்குப் போவதென்றால் பார்த்தசாரதி சுந்தரியை அழைத்துக் கொண்டு போக மாட்டார்.. சீக்கிரமாக வீட்டுக்குத் திரும்ப வேண்டுமென்று வற்புறுத்துவாள்.. அவளருகிலேயே இருக்க வேண்டுமென்று சொல்லுவாள்.. அவர் கண்ணாடிபாட்டிலை கையில் எடுத்தாலே அதற்குள் இருப்பது குளிர்பானமா.. இல்லைவேறு எதுவுமா என்று தெரியாமலே அவரை விழியால் மிரட்டிக் கொண்டிருப்பாள்.. அவர் யாருடன் பேசினாலும்
விழியாலே பின் தொடர்வாள்...
இத்யாதி.. இத்யாதி.. காரணங்களினால் அவளை அவர் பார்ட்டிகளுக்கு அழைத்துச் செல்வதில்லை.. பார்ட்டிகளுக்குப் போவதனால் ஏற்படும் பிரத்யேக சந்தோசத்துக்கும்.. சுதந்திரத்திற்கும் பங்கம் வந்துட கூடாது என்பதினால் கவனமாக அவர் மனைவியை
தவிர்த்து விடுவார்...
அப்படிப்பட்ட பார்த்தசாரதி அன்று அதிசயத்திலும் அதிசயமாக மனைவியை உடன் அழைத்துக் கொண்டு தீதையாளனின் வீட்டுப் பார்ட்டிக்குச் சென்றார்...
"நானுமா..?" சுந்தரி கண்களை விரித்தபோது...
"நீயும்தான்.." என்று கண்சிமிட்டிச் சிரித்தார் அவர்..
"என்ன ஆச்சு..? இளமை திரும்பிருச்சா..?"
"ஆமாம்... வேணும்னா ஐம்பதிலும் ஆசைவரும்ன்னு பாடவா..?"
"நீங்க பாடனும்னா அறுபதிலும் ஆசை வரும்னுல்ல பாடனும்...?"
"நான் உனக்காகச் சொன்னேன்டி.. நீ இப்பத்தான ஐம்பதைக் கடந்திருக்க..."
வாலிபம் திரும்பியதைப் போல அவர் குழைந்த குழைவில் பழைய நாள்களுக்குத் திரும்பியதைப் போல உணர்ந்தாள் சுந்தரி.. அவருடன் பார்ட்டிக்குப் போன போது தீனதயாளனின் குடும்பத்தில் அவர்களை மரியாதையுடன் வரவேற்றார்கள்...
"எதுக்குப் பார்ட்டியாம்..?" சுந்தரி கணவரிடம் கிசுகிசுத்தாள்..
"ஏதோ பெரிய பிஸினெஸ் டீலிங் முடிவாகியிருக்காம். அதுக்குன்னு மிஸ்டர் தீனதயாளன் சொன்னார்..."
"இவர்கூட உங்களுக்கு அதிகமா பழக்கமில்லைன்னு சொன்னீங்களே..."
"இனிப் பழகிக்க வேண்டியதுதான்..."
அதிகப் பழக்கமில்லாத.. புதிதாக நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒருவர் தரும் பார்ட்டிக்கு.. எதற்காக அவளையும் அவர் கணவர் அழைத்து வந்தார் என்று புரியாமல் விழித்தாள் சுந்தரி...
"ஹலோ மிஸ்டர் பார்த்தசாரதி.. வாங்க.. அனுபமா உங்கமிஸஸை மீட் பண்ணனும்கிறா.." தீனதயாளன் அவர்களுக்கு அருகே வந்து அழைத்தார்...
"யா.. ஷ்யூர்.." பார்த்தசாரதி.. வெகு நாகரிகமாக மனைவியின் தோள் தொட்டு அழைத்துக் கொண்டு போனார்....
அனுபமா சுந்தரியைப் போன்ற குண இயல்புடையவள் என்பதை பார்த்த முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விட்டாள் சுந்தரி..
"வணக்கம்..." கை குவித்த அனுபமாவிற்கு பதிலுக்கு...
"வணக்கம்.." என்று சுந்தரி கை குவித்த போதே.. அவர்கள் இருவருக்குள்ளும் ஒருவிதமான நட்பு ஏற்பட்டு விட்டது...
"சுந்தரி.. இது நேகா.. தீனதயாளனின் ஒரே பெண்.. நேகா குருப் ஆஃப் கம்பெனிகளுக்கு ஒரே வாரிசு..."
பார்த்தசாரதி அறிமுகப் படுத்திய நேகாவை.. முதல் பார்வையிலேயே சுந்தரிக்கு பிடிக்காமல் போய்விட்டது...
அவள் தாயைக் கொண்டிருக்கவில்லை என்பதை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விட்டாள் சுந்தரி...
வெட்டிவிடப்பட்ட கூந்தலும்.. ஜீன்ஸீம்.. குர்தாவும்.. கண்களில் அலட்சியமும்.. இதழ்களில் உதட்டுச் சாயமுமாக...
"ஹாய்.." என்று கை நீட்டியவளின் கையைப் பிடித்துக் குழுக்க அவளுக்கு மனம் வரவில்லை..
இருந்தாலும் சபை நாகரிகம் கருதி.. அதைச் செய்தாள்.. சுந்தரியின் கையை பட்டும் படாமல் பிடித்துக் குழுக்கிய நேகாவின் இயல்பில் அவளுக்கு மனம் ஒட்டவில்லை...
அவர்கள் விலகி நின்று பேசினார்கள்.. பொதுவான நல விசாரிப்புகளை சுந்தரியும்.. அனுபமாவும் கேட்டுக் கொண்டார்கள்..
"ஹௌ இஸ் யுவர் சன்..?"
இந்தக் கேள்வியினை அனுபமா கேட்டிருந்தால் புன்சிரிப்புடன் அதற்குப் பதில் சொல்லியிருப்பாள் சுந்தரி..
அதை அனுபமா கேட்கவில்லை.. மாறாக.. நேகா அதைக் கேட்டாள்...
"நல்லாயிருக்கான்ம்மா..." மனதின் சுணக்கத்தை மறைத்தபடி பதில் சொன்னாள் சுந்தரி...
"இந்தியாவுக்கு எப்ப ரிட்டர்ன் ஆகிறார்..."
"இன்னும் ரெண்டு மாசமாகும்மா..."
"ஓ..."
என்னவோ பட்டிக்காட்டில் புல்வெட்டும் பெண்மணியைப் பார்ப்பதைப் போன்ற பாவனையுடன் பார்த்து விட்டு உதட்டைக் குவித்தாள் நேகா.. அந்தப் பார்வையில் அவள் கன்னத்தில் நாலு அப்பு.. அப்பினால் என்ன என்று யோசித்தாள் சுந்தரி...
அவளுக்கும்தான் மகள் இருக்கிறாள்.. ஆனந்தியென்ன இந்த நேகாவைப் போலவா இருக்கிறாள்..? அவர்களிடம் இல்லாத பணமா..? இருந்தும் ஆனந்தி பெண்மையின் பிரதிபலிப்பாக இருந்தாள்.. இந்த நேகா அப்படியில்லையே...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்..-73
எங்கிருந்தோ ஆசைகள்..-73
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-73.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-73.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy