எங்கிருந்தோ ஆசைகள்.. -71

71 பகைமுடித்து அதை வென்று.. நீ எனைச்சேர ஆசைகொண்டேன்.. காதல்...! அது எந்தச் சூழ்நிலையையும் உணராதது.. உணர விடாதது... அதில் மூழ்க...

71
பகைமுடித்து அதை வென்று..
நீ எனைச்சேர ஆசைகொண்டேன்..


காதல்...!
அது எந்தச் சூழ்நிலையையும் உணராதது.. உணர விடாதது... அதில் மூழ்கி விட்டவர்களுக்கு காதலை மட்டும்தான் தெரியும்.. நல்லது, கெட்டது தெரியாது...
காவ்யாவும் அப்படித்தான்.. அவளைக் காக்கத் துடித்த அன்னையின் பரிதவிப்பை துன்பமாக நினைத்தாள்.. அதை காதுகொடுத்து கேட்கும் தமையனின் பொறுப்பை அச்சத்துடன் நோக்கினாள்...
'இவங்க பேசறத பாத்தா இந்த மாசமே கல்யாணத்த முடிச்சு... கழுத்தப் பிடிச்சு புருசன் வீட்டுக்குள்ள தள்ளிருவாங்க போல இருக்கே..' என்று திகிலடைந்தாள்..
அந்தப் புருசனாக அர்ஜீனை மட்டுமே அவளால் நினைத்துப் பார்க்க முடிந்தது.. புகுந்த வீட்hக அர்ஜீனின் வீட்டை மட்டுமே அவளால் நினைத்துப் பார்க்க 
முடிந்தது...
அர்ஜீனின் குடும்பத்தாரை அவள் பார்த்ததில்லை.. எல்லா விவரமும் அர்ஜீனின் வாய்மொழியின் வழியாக அவள் தெரிந்து கொண்டதுதான்.. அவற்றையும் அவன் கனடா போனபின்பு செல்போனின் வழியாகத்தான் சொன்னான்.. நேரில் பேசிப் பழக ஆரம்பித்தவுடனே தான் அவன் பிரிந்து.. பறந்து போக வேண்டியிருந்ததே...
"அப்பா பார்த்தசாரதி..."
"ம்ம்ம்..."
"பக்கா பிஸினெஸ்மேன்.. எந்த இடத்திலயும் வேரூன்றி நிற்க மாட்டார்.. நகர்ந்துக்கிட்டே இருப்பார்..."
"அவர் குணம்தான் உங்களுக்கும்..."
"ஷ்யூர்.. எங்க பூர்விகம் திருநெல்வேலிப் பக்கமாம்.. பட்.. எங்க தாத்தா காலத்திலேயே மதுரையில தொழில் தொடங்க வந்து செட்டில் ஆனவங்களாம்.."
"நிசமாவா.. நீங்க மதுரைக்காரங்களா..?"
"எதுக்குடி இவ்வளவு ஆர்வம் காட்டற..? மதுரைக் காரனா இருந்தாத்தான் கழுத்தை நீட்டுவியா...?"
"அப்படிச் சொன்னேனா..? ஊர்ப் பாசம்தான்..."
"இப்ப நான் சென்னைக்காரண்டி.. யார் கண்டது.. வருங்காலத்தில கனடாக்காரனா ஆனாலும் ஆகலாம்..."
"ஆவிங்க.. ஆவிங்க.. சொல்ல முடியாது.. உங்க வம்சம்தான் இருக்கிறத விட்டுட்டு பறக்கறதப் பிடிக்கிற வம்சமாச்சே..."
காவ்யா ஏன் அப்படிச் சொன்னாள்.. எதற்காக அப்படிச் சொன்னாள் என்று அவளாலேயே கண்டு பிடிக்க முடியவில்லை... எதிலும் நிலைத்து நிற்காதவன் அவளில் நிலைத்து நிற்பானா என்ற சந்தேகம் அவளின் அடிமனதில் இருந்ததினால் அப்படிச் சொன்னாளோ...
அர்ஜீன் அப்படியெல்லாம் ஆழமாக யோசிக்க வில்லை.. அவள் பேச்சை ரசித்துச் சிரித்தான்...
"நீ கூட பறக்கிற பறவையைப் போலதான் காவ்யா.."
இந்தப் பேச்சில் காவ்யாவின் மனதிலுள்ள சஞ்சலம் அகன்று விடும்..
"ஆமாமாம்.. எனக்கு ரெக்கை முளைச்சிருக்கு..."
"ஈஸிட்..? அப்ப பறந்து இங்க வந்திடேன்..."
அவனின் தாபத்தில் அவள் தத்தளிப்பாள்.. இது என்ன மாதிரியான இம்சை என்று கிறங்கித்தவிக்கும் அவளது உடலும்.. மனமும் தவிக்கும்.. 
ஆளைக்கொல்லும் அற்புதமான.. அழகான.. இன்பமான.. இம்சை அது..
எங்கிருந்தோ ஆசைகளைத் தேடிப் பிடித்து.. மனதில் விதைத்து ஆட்டிப் பார்க்கும் அவஸ்தை அது...
ஊனும்.. உயிரும்.. உருகித் தவிக்க.. ஆசைகளின் அலைக்கழிப்பில்.. அலைமோதும் இதயங்களை பந்தாடும் வலி அது...
அந்த அலைக்கழிப்பில் அலைபாயும் அவளின் பெண் மனம்...
"ஆசை, தோசை, அப்பளம், வடை.. உங்க பேரை மட்டும் சொல்லிட்டுத் தப்பிக்கப் பாக்கறிங்களா..? அம்மாவ பத்திச் சொல்லுங்க..."
"அம்மா பெயர் சுந்தரி.. ஹவுஸ் வொய்ப்..."
"அதாவது நீங்கள்ளாம் ஹவுஸ் அரெஸ்டில வச்சிருக்கிற ஒரு ஜீவன்.."
"ஏய்ய்.. அவங்க இல்லத்தரசிடி..."
"அப்படிச் சொல்லிச் சொல்லியே இல்லத்துக்குள்ள பூட்டி வைச்சிருவீங்களே..."
"நீ நினைக்கிறது தப்புடி.. வீட்டிலே எத்தனை சர்வண்ட்ஸ் தெரியுமா..?"
"அவங்கள நம்பி வீட்டை விட்டுட்டு வருவீங்களா..?"
"அது.. அது.. வந்து..."
"முடியாதில்ல..? சமையலுக்கு ஆள் இருக்கலாம்.. ஆனா.. யார் யாருக்கு என்ன பிடிக்கும்ன்னு மனப்பாடம் பண்ணிவைச்சுக்கிட்டு.. தினம் தினம் என்ன சமைக்கனும்னு சொல்ல உங்க அம்மா இருந்தாகனும்.. வீட்டைத் துடைக்க ஆள் இருக்கலாம்... ஆனா எங்கெங்கே தூசி இருக்குதுன்னு சொல்லி.. அங்கெல்லாம் துடைக்கக் சொல்லி மேற்பார்வை பார்க்க உங்க அம்மா இருந்தாகனும்.. காரோட்ட டிரைவர் இருக்கலாம்.. ஆனா.. அந்தக் கார தினமும் கழுவித் துடைக்கச் சொல்ல உங்க அம்மா இருந்தாகனும்..."
காவ்யா சொல்லச்சொல்ல.. இவள் என்ன பக்கத்திலிருந்து அம்மா செய்கிற வேலைகளைப் பார்த்தாளா என்ற திகைப்பு அர்ஜீனுக்கு வரும்.. 
"எப்படி காவ்யா..? ஹவ் இஸ் இட் பாஸிபிள்..?"
"ஊம்.. வெத்தலயில மை தடவி ஜோஸியம் பார்த்தேன்.."
"அப்படின்னா..?"
அர்ஜீனுக்கு விளங்காது.. செல் போனின் திரையிலேயே உலகத்தைப் பார்க்கிறவனிடம் போய் வெற்றிலையில் மை தடவிப் பார்க்கும் ஜோதிடத்தைச் சொன்னால் அவனுக்குப் புரியுமா..?
"அப்படின்னா.. அப்படித்தான்.. இதுக்கே ஹவ் இஸ் இட் பாஸிபிள்ன்னு மலச்சா எப்புடி..? இன்னும் இருக்கு மச்சான்..."
"மச்சானா..? ஏய்ய்..."
அவன் தேன் குடித்த நரியாவான்.. அவனின் குரல் தரும் போதையில் கள்ளூறும் பூவாக காவ்யா மாறுவாள்..
"போதுமே.. இம்புட்டு வேலகளயும் மேற்பார்வை பாக்கிறது பெரிசில்ல.. உங்க வீட்டில அவங்கள நகர விடாம காலிங் பெல் அடிக்கும்ல்ல.. அதுக்குப் பதில் சொல்லி அனுப்புறதுதான் பெரிய விசயம்.."
"அதுக்கெல்லாம் ஏன்னு கேட்க ஆள் இருக்குடி..."
"அந்த ஆள் பதில் சொல்லி அனுப்ப முடியுமா..? அந்த அதிகாரம் அவங்களுக்கு இருக்கா.. அம்மா இன்னார் வந்திருக்காங்க.. இன்தைச் சொல்றாங்க.. இதுக்கு என்ன சொல்லி அனுப்பட்டும்ன்னு கேட்டு ஆள் வருமில்ல.. அந்த ஆளுக்கான பதில உங்க அம்மாதான சொல்லியாகனும்..? தானிக்கு பேரு ஏமி..?"
"அட்லனா..."
"தெழுங்கு தெரியுமா...?"
"உலகத்தச் சுத்தறவன் இந்தியாவச் சுத்தாம இருப்பேனா..?"
"உங்களுக்கு உங்க பெருமை.. உங்க அம்மாவுக்கு அவங்க கஷ்டம்.. குளிக்கக் கூடப் போக முடியாம அவங்கள வீட்டைப் பாத்துக்கிட்டாகனும்.. போனுக்கு 
பதில் சொல்லியாகனும்.. இதில உஸ்ஸீ... புஸ்ஸீன்னு வீட்டை விட்டு வெளியே போகிற கொடுத்து வைச்ச பிறவியெல்லாம் திரும்பி வர்றப்ப என்னன்னு அவங்க எதிர்கொண்டு கேக்கனும்.. காபி கொடுக்கனும்.. சாப்பாடு பரிமாறனும்.. இதுக்கு ஊட உங்க அழுக்குத் 
துணிய எல்லாம் கலெக்ட் பண்ணி வேலையாள்கிட்டக் கொடுக்கனும்..."
"வாஷிங் மெஷின் இருக்குடி..."
"அதில தானாப் போய் துணிகள்ளாம் விழுகுமா..?"
"அத போட்டு எடுக்க வேலைக்காரங்க இருக்காங்கடி.."
"அந்த வேலைக்காரங்க ஒவ்வொரு ரூமிலயும் மூலை முடுக்கில கிடக்கிற அழுக்குத் துணிகள எடுத்துக்கிட்டு வருவாங்களா.. அதைத் துவைச்சு மடிச்சுக் கொடுத்ததும்.. அந்தந்த ரூமுக்கு பிரிச்சு அனுப்புவாங்களா..?"
காவ்யா சொல்லச் சொல்ல.. இத்தனை பொறுப்புக்களையும் சுந்தரி சுமக்கிறாளா என்ற வியப்பு அர்ஜீனுக்குள் ஏற்ப்பட்டது...
"இத்தனை நாளாய் இது எனக்குத் தெரியாது காவ்யா.. எல்லா வசதியும் இருக்கே.. அம்மா ஷேஃபா இருக்காங்கன்னுதான் நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.."
"அவங்க பாதுகாப்பாத்தான் இருக்காங்க.. கூடவே உங்க எல்லாத்தையும் பாதுகாத்துக்கிட்டு.. பொறுப்புக்கள தலயில சுமந்துக்கிட்டு இருக்காங்க..."
"ஓ..."
"அம்மாவப் பத்திச் சொல்லியாச்சு.. அப்புறம்..?"
"அக்கா.. ஆனந்தின்னு பேரு..."
அர்ஜீனின் குரலில் தெரிந்த மென்மையில் காவ்யாவுக்கு பொறாமை எழுந்தது.. காதலில் மட்டுமே எழுகின்ற உரிமையுணர்வு அவள் மனதில் எழுந்தது...
"பாசமலர வளர்க்கிறதப்போல இருக்கே..."
"அப்படித்தான்.. அக்காவுக்கு என்மேல் பாசமும்.. பிரியமும்.. அதிகம்..."
"சாருக்கு எப்படியாம்..?"
"அதே பாசமும்.. பிரியமும் என் மனசிலயும் இருக்கு.."
"ஓ.. நீங்க ரெண்டு பேரும் ஒரு கொடியில் பூத்த இருமலர்களா..?"
"ஆமாம்ன்னுதான் சொல்லனும்.. அக்காவை ஃபாரின்ல பிஸினெஸ் பண்ற குடும்பத்தில இருந்து பெண் கேட்டாங்க.. அவங்க எங்கள விட அதிகமான பண வசதி இருக்கிறவங்க.. வெளிநாட்டில் தொழில் பண்றவங்க.. ஆனா அக்கா மாட்டேன்னு சொல்லிருச்சு.."
"ஏன்...?"
"ஏன்னா.. அங்கே மேரேஜ் ஆகிப் போயிட்டா.. சென்னையில இருக்கிற தம்பியைப் பார்க்க முடியாதாம்.."
காவ்யா திகைத்து விட்டாள்.. வெளிநாட்டில் திருமணமாகி விட்டால் இந்தியாவுக்கு அடிக்கடி வந்து போக முடியாது என்பதில் ஒர் அர்த்தம் இருக்கிறது.. பெற்றவர்களைப் பிரிந்திருக்க முடியாது என்று சொல்லும் பெண்களைத்தான் அவள் பார்த்திருக்கிறாள்...
இங்கே அப்படியில்லையே.. கூடப்பிறந்த தம்பியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக.. வெளிநாட்டில் மணம் முடித்துப் போவதற்கான வாய்ப்பைத் தட்டிக் கழித்த பெண்ணை இப்போதுதான் அவள் பார்க்கிறாள்...
"இதப்பாருடா.. அப்போ நீங்க அக்கா செல்லம்ன்னு சொல்லுங்க..."
இதைச் சொல்லும்போது காவ்யாவின் குரலில் தொனித்த பொறாமையை உணர்ந்து கொண்டவனாக சிரிப்பான் அர்ஜீன்...
"ஏண்டி..? உனக்கு நான் செல்லமில்லயா..?"
அவன் குரல் கிசுகிசுக்கும்.. அந்தக் கிசுகிசுப்பில் அவனைச் செல்லம் கொஞ்சி.. மடியில் போட்டுத் தாலாட்ட துடிதுடிப்பாள் காவ்யா.. அதற்குத்தான் அவன் அருகில் இல்லையே என்ற ஏக்கம் அவள் மனதில் சூழும்.. அந்த மனத்தாங்கலுடன்...
"போதும்.. கிளப்பி விட வேணாம்..." என்று சிடுசிடுப்பாள்...
அந்த சிடுசிடுப்பில் அவன் உரத்த குரலில் ரசித்துச் சிரிப்பான்... அவள் காதினில் தேன் பாயும்...
"காவ்யா... ஐ லவ் யுடி..."
காதலுடன் அவன் சொல்லும் போது.. அவனின் காதலைப் பெற்று விட்ட கர்வத்தில் அவள் மனம் துள்ளும்...
"அக்காவுக்கு ரெண்டு பசங்க.. மூத்தவன் சரண்.. ஆறுவயசாகுது.. சின்னது சாரா.. நாலு வயசாகுது.. அக்கா ஹஸ்பெண்ட் பேரு சத்தியமூர்த்தி.."
அவனின் குடும்ப விவரங்கள் அவளுக்கு அத்துபடி.. தினமும் ஏதாவது ஒரு புதுத்தகவலை அவளுக்கு சொல்லிக் கொண்டேயிருப்பான் அர்ஜீன்... அவளும் 
அதை ஆர்வத்துடன் கேட்டுக் கொள்வாள்...
காதல் என்பது... காதலிப்பவனைச் சார்ந்த அனைத்தையும் நேசிப்பது.. காவ்யாவும் அப்படித்தான்.. அர்ஜீனின் குடும்பம் என்பதற்காகவே அவள் அவனின் குடும்பத்தை நேசித்தாள்...
காவ்யா அர்ஜீனை நேசித்தாள்.. அதனால் அவனுடைய குடும்பத்தையும் நேசித்தாள்.. அவர்களில் எவரையும் அவள் பார்த்ததில்லை.. ஆனால் அவர்கள் எல்லோருமே அவளுக்கு சொந்தமாக அவள் மனதில் குடியேறினார்கள்..
அர்ஜீன் பேசும் செல்போன் பேச்சுக்களில் அவள் உயிர்த்தாள்.. அதைப் பற்றுக் கோடாக பிடித்துக் கொண்டு அவன் வரும் நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.. அவன் வந்துவிட்டால் போதும்.. அவளுடைய துன்பமெல்லாம் தீர்ந்து விடும்.. அவன் வரும் வரை அவளுக்கு துன்பம் நேராமல் இருக்க வேண்டுமே...
"கண்ணன் வரும் நாளில்..
கன்னி இருப்பேனோ...
காற்றில் மறைவேனோ..."
டிவியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த பழைய பாடலில் காவ்யாவின் கண்களிலிருந்து கண்ணீர்துளி தெறித்து விழுந்தது.. அன்னபூரணி தோசையை 
எடுத்துக் கொண்டு வருவதற்காக சமையலறைக்குள் போய்விட்டாள்.. கண்ணதாசன் ரகசியக் குரலில்...
"காவ்யா..." என்று அதட்டினான்..
காவ்யா சமாளித்துக் கொண்டாள்.. அன்னபூரணி தோசைகளுடன் திரும்பியபோது அவள் முகம் நிர்மலமாக இருந்தது...
"என்னடா தம்பி... ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற.."
"இப்பத்தான் சொல்லியிருக்கீங்க.. அவங்களப் பத்தி விசாரிக்கறேன்..."
"அவங்களப் பத்தி விசாரிக்க என்ன இருக்கு..? சாமித்துரையண்ணனும்.. சின்னச்சாமியண்ணனும் என்ன அன்னியமா.. அசலா...?"
காவ்யா கலங்கிப் போனாள்.. சொந்தபந்தம் தான் விசாரிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள் என்றால் அர்ஜீன் என்ன அன்னியனா..? அயலானா..? அவனைப் பற்றி விசாரிக்க வேண்டுமா..?
"அவங்களப் பத்தி விசாரிக்க வேண்டியதில்லம்மா.. அவங்க மகனுக வேலை செய்கிற ஆபிசில விசாரிக்கனுமா.. வேணாமா..?" கண்ணதாசன் கேட்டான்...
"அதைக் கேக்கனும்தான்.." அன்னபூரணி ஒப்புக் கொண்டாள்...
"அதுக்குத்தான் டயம் கேக்கறேன்.. அவங்க வேலை எப்படி..? சம்பளம் எப்படின்னு தெரிஞ்சாத்தான மத்த பேச்சைபேச முடியும்..?"
கண்ணதாசன் அப்போதைக்கு அந்தப் பேச்சை அமுக்கி விட்டான்.. காவ்யா சஞ்சலத்துடன் கடைக்குப் போனாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -71
எங்கிருந்தோ ஆசைகள்.. -71
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-71.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-71.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy