எங்கிருந்தோ ஆசைகள்.. -69

69 நீயிருக்கும் நிலாவெளியில்... நான் உலவ ஆசைகொண்டேன்.. காவ்யாவின் மீதான துரியோதனனின் அபிமானத்தில் கதிகலங்கிப் போனான் தேவராஜன்.. கடையை வ...

69
நீயிருக்கும் நிலாவெளியில்...
நான் உலவ ஆசைகொண்டேன்..

காவ்யாவின் மீதான துரியோதனனின் அபிமானத்தில் கதிகலங்கிப் போனான் தேவராஜன்.. கடையை விற்பதற்கு முன்னால் அவன் கடைக்குப் போனால் காவ்யாவிடம் நெருங்கக்கூட துரியோதனன் அவனை அனுமதித்ததில்லை.. அந்த அளவுக்கு காவ்யாவின் மீது மதிப்பும்.. அக்கறையும் வைத்திருந்தவர்...
"உன் பேச்சைக் கேட்டு அந்த வீட்டுக்கு போனதுக்கு என் மரியாதை குறைஞ்சதுதான் மிச்சம்.. இதுக்கு முன்னாலே அந்தக் குடும்பமே என்னப் பாத்தா அம்புட்டு மரியாதை கொடுக்கும்.. என் கடைங்கிறதாலதான் கண்ணதாசன் அவன் தங்கச்சியை வேலைக்கே அனுப்பினான்.. நான் கடையை வித்துட்டேன்னு தெரிஞ்சவுடனே அவன் தங்கச்சிக்கு வேற வேலை பார்த்துக் கொடுத்தவன்தான் அவன்.. காவ்யாதான் இன்னும் கொஞ்ச நாளக்கி இந்தக் கடையிலயே இருக்கிறேன்னு சொல்லியிருக்கு..."
"அதானே... அர்ஜீன்பய கடய விட்டு அவ போவாளா..?"
"அவ.. இவன்ன.. பல்லக் கழட்டிருவேன்.. படவா ராஸ்கல்.. அந்தப் பொண்ணுதான் இல்லேன்னு ஆகிப் போச்சே.. இன்னும் எதுக்காகடா உரிமை கொண்டாடிப் பேசற..? நீ நினக்கிறாப்புல எல்லாம் ஒன்னுமில்ல.. அர்ஜீனுக்கு ஆயிரம் வேல.. இந்தக் கடையை அவங்கப்பன் ரோசத்துக்கு வாங்கிப் போட்டிருக்கான்.. மத்தபடி.. இந்த வருமானத்த எல்லாம் அவங்க பெரிசா நினைக்க மாட்டாங்க.."
"இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க..?"
"மதுரையைப் பத்தியும் கடையோட கணக்கு வழக்கப் பத்தியும் அர்ஜீனுக்குத் தெரியாது... அது அத்தனையும் தெரிஞ்ச ஒரே ஆளு காவ்யாதான்.. இத நான்தான் அர்ஜீன்கிட்டயே சொன்னேன்..."
"உங்களுக்கு இது தேவையாப்பா..."
"தேவைதாண்டா.. என் கடையில இருக்கிறவங்கள்ள.. வேலை தெரிஞ்சவங்களா.. நேர்மையான வங்களா.. அதே சமயம் நம்பிக்கைக்கு உரியவங்களா யாரிருக்காங்கன்னு அர்ஜீன் கடையை வாங்கின சமயத்தில கேட்டான்.. அப்ப அவன் பார்த்தசாரதியோட மகன்னு எனக்குத் தெரியாது.. கேட்டதவிட அதிகமா பணம் கொடுத்திருந்தானே..
அந்த நன்றிக்கடனில காவ்யாவ அடையாளம் காட்டினேன்.. அர்ஜீன் கேட்ட அத்தனையும் அந்தப்புள்ள கிட்டத்தான் இருந்துச்சு..."
'அப்படியா..? அவன் கேட்ட.. நம்பிக்கை.. நாணயம்.. நல்லதரமெல்லாம் இவகிட்டத்தான் இருக்குதா.. இத வைச்சே நான் விளையாடிக் காட்டறேன்.. நான் காட்டற ஆட்டத்தில... அவளும் அவனும் ஆடிப் போயிரனும்..' மனதுக்குள் கருவினான் தேவராஜன்...
"அதனால அந்தப்புள்ள வம்புக்குப் போகாம விலகியிருக்கிற வழியப்பாரு..."
"பயப்படறிங்களாப்பா.."
"இது பயமில்லடா.. தற்காப்பு.. அந்த சிவதாணுக்கு ஆள்பலம் ஜாஸ்தி.. அவன் பங்காளிக ஒன்னு கூடினாங்கன்னு வைய்யி... நம்ம ஊரு மந்தை கொள்ளாது.. பத்தாததுக்கு அந்தக் கண்ணதாசன் கவர்ன்மெண்டில பெரிய ஆபிசரு.. அவன்கூட மோதறதுங்கிறது நல்லதில்ல..."
"அப்பா..."
"எனக்கு ஆயிரம் சோலி இருக்கு.. இதுல பகையைத் தீர்க்கிறேன்னு சண்டை போட்டுக்கிட்டு இருந்தா இருக்கிறதயும் காப்பாத்த முடியாது.. ஜவுளிக்கடையில இப்பத்தான் வியாபாரம் சூடு பிடிச்சிருக்கு.. இதைக் கெடுத்துக்க நான் தயாரா இல்ல..."
"அதுக்காக விட்டுக் கொடுக்கறிங்களாப்பா..?"
"எதடா விட்டுக் கொடுக்கிறேன்..? அந்த பார்த்தசாரதி என்ன எனக்கு மாமனா.. இல்ல மச்சானா..? இந்த சிவதாணுதான் சொந்த மச்சினனா..? ரெண்டும் இல்ல... அவன் கிட்ட பொண்ணக்கட்டுன்னும் கேட்டிருக்கக் கூடாது... இவன்கிட்டப் பொண்ணு கொடுன்னும் சொல்லியிருக்கக் கூடாது... ரெண்டையும் செஞ்சுட்டு.. கடப்பாறையை விழுங்கிட்டு.. ஜீரணமாகலன்னு வயித்தப் பிடிச்சா... யாரு என்ன பண்றது..?"
துரியோதனன் எளிதாக கழண்டு கொண்டார்... அவர் விவரமானவர்... பார்த்தசாரதியின் மீதிருந்த வன்மத்தினாலும்.. அர்ஜீனின் பண வசதியின் மேலிருந்த மோகத்தினாலும் தேவராஜன் சொன்னதற்கு காது கொடுத்து விட்டார்.. அது நிறைவேறாத கோபத்தில் காவ்யாவைப் பெண் கேட்க கிளம்பி விட்டார்.. அங்கும் அடி விழுகவும் விழித்துக் கொண்டார்...
அவருக்கு அவருடைய மரியாதையும்.. உயரமும் கீழே இறங்குவதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை.. பெரிய வீடு என்று அவருடைய கிராமத்தில் அடையாளம் சொல்லும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருப்பவர் அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் கவனமாக இருந்தார்...
"உங்க அம்மா சொல்றதுதான் சரி.. உனக்கு பொண்ணு கொடுக்க ஆயிரம் பேரு இருக்காங்க.. நம்ம தேன்மொழிக்கு மாப்பிள்ளை தேடினாலும் ஆயிரம் பேர் கிடைப்பாங்க... இதுதான்னு எதையும் குறிச்சு வைச்சு அதில இறங்கி என் நேரத்த விரயம் பண்ண முடியாது.. எனக்கு வயசும் திரும்பல.. சம்பாதிச்சுப் போடறதுக்கு என்ன விட்டா இந்தக் குடும்பத்தில யாருமில்ல..."
துரியோதனன் மறைமுகமாக தேவராஜனை தண்டச் சோறு என்று சுட்டிக் காட்டி விட்டதில் அவனுக்கொன்றும் ரோசம் வந்து விடவில்லை... அதை விட்டுவிட்டு.. அவனுக்குப் பெண் கொடுக்க ஆயிரம் பேர் வருவார்கள் என்று சொன்னதில்தான் அவனுக்கு கோபம் வந்தது..
அவனே ஐந்தாம் கிளாஸ்.. அவனுக்கு பெண் கொடுப்பவர்கள் கைநாட்டுப் போடும் பெண்ணைத்தானே கொடுப்பார்கள்..? அவள் கழுத்து நிறைய நகையும்.. மஞ்சக் காணி நிலமுமாக வந்தாலும் காவ்யாவுக்கு இணையாவாளா..?
"வேற எவ வருவா..?" என்று வெடுவெடுத்தாள் செல்வி...
"உங்கிட்ட இருக்கிறதுதான உனக்கும் கிடைக்கும்.. அந்தக் கண்ணதாசன் சொல்லுச்சாமில்ல.. படிக்காட்டியும் பரவாயில்ல.. கட்டின பெண்டாட்டிய வாழ வைக்கிற அளவுக்கு சம்பாத்தியமும்.. நேர்மையும் இருந்தாப் போதும்.. அது உங்க மகன்கிட்ட இருக்கான்னு கேட்டுச்சாமே..."
"ஏம்மா.. ஊரில சொத்திருக்கு.. மதுரையில ஜவுளிக்கடையிருக்கு.. இது போதாதா..?"
"இதெல்லாம் உன் சம்பாத்தியமா..? ஊரில இருக்கிறது உன் பாட்டன் சொத்து... அதில உக்காந்து சாப்பிட உங்கப்பாவுக்கு தெரியாதா..? அவரு ஏன் உழைச்சுச் சம்பாதிச்சாரு.. மதுரையில வீட்டைக்கட்டி கடையை ஆரம்பிச்சாரு..? நீயும் அதப் போல எதையாவது செஞ்சிருந்தா நம்பிப் பொண்ணக் கொடுப்பாங்க.. நீ அதையும் செய்யாம.. ஊரு பூராவும் கடன வாங்கி வைச்சு.. உங்க அப்பா ஆரம்பிச்ச கடையவுமில்ல விக்க வைச்ச.. உன்ன நம்பி யாரு பொண்ணக் கொடுப்பாங்க.. பேசாம வாயடக்கி.. கையடக்கி கொஞ்ச நாளைக்கு இருந்தீன்னா ஊருப்பக்கம் பொண்ணத் தேடலாம்..."
"எனக்கு பட்டிக்காட்டுப் பொண்ணு வேணாம்..."
"இவரு பெரிய பட்டணத்து துரை.. போடா.. போயி ஆகற சோலியப் பாரு.."
செல்வி கோபத்துடன் அகன்று விட்டாள்.. வாழ்நாளில் வாங்காத பேச்சுக்களை பெற்ற மகன் வாங்கிக் கொடுத்து விட்டானே என்ற கோபத்துடன் தனிமையை நாடி துரியோதனன் மாடிக்குச் சென்று விட்டார்.. உன்னால்தானே இவ்வளவும் என்ற முறைப்புடன் தேன்மொழி விலகிச் சென்றுவிட்டாள்.. தனிமையில் உட்கார்ந்து நகத்தைக் கடித்துத் துப்பியவனுக்குள் கோபம் கொந்தளித்தது..
'சோலியப் பாக்கிறதா..? இனிமே என் சோலியே.. அந்த அர்ஜீனையும்.. காவ்யாவயும் பிரிக்கறதுதான.. எனக்கு அவ கிடைக்கலேன்னாலும் பரவாயில்ல.. அந்த அர்ஜீன் பயலுக்கு மட்டும் கிடைக்கக் கூடாது.. அவ காதலிச்சவனோட வாழவே கூடாது.. காலம் பூராவும் ஆசைப்பட்டவனை கட்டிக்க முடியலேன்னு மறுகி.. மறுகி.. அவசாகனும்.. என்ன அவகட்டிக்க மாட்டாளா..? அவ ஆசைப்பட்டவன எப்படிக் கட்டிக்கிறான்னு நானும் பாக்கறேன்...'
அடுத்து வந்த நாள்களில் தேவராஜன் கடைப் பக்கமே போகாமல் தங்கராஜை மட்டும் இரவு வேளைகளில் கடைப்பக்கம் தள்ளிக் கொண்டு போனான்.. அவன்
செய்து கொடுத்த தாகசாந்தியிலும்.. வாங்கிக் கொடுத்த புரோட்டாவிலும் மனம் மயங்கிப்போன தங்கராஜ்.. போதையில் உளறிய விவரங்களை சேகரித்துக் கொண்டான்..
தேவராஜன் வலையை பின்னிக் கொண்டிருப்பதை அறியாதவளாக காவ்யா உற்சாகத்துடன் இருந்தாள்.. தேவராஜனுக்கு அவளுடைய காதலைப் பற்றிய விவரம் தெரிந்து விட்டதே என்று அவள் பயப்படவேண்டிய அவசியமில்லாமல் போய் விட்டதில் மகிழ்ச்சியாக இருந்தாள்.. வீட்டுக்கு வந்து தேவராஜனுக்காக அவளைப் பெண்கேட்ட துரியோதனன் கொளுத்திப் போட முயன்ற போது... அதை முறியடித்து பதிலுக்கு கொளுத்திப் போட்டு மிரட்டி அனுப்பி விட்ட கண்ணதாசனின் பராக்கிரமத்தில் அவள் நிம்மதியாக இருந்தாள்...
"நானிருக்கேன்.. பயப்படாதே..."
அவளுடைய அண்ணன் அவளுக்குத் தைரியம் கொடுத்திருந்தான்... ஒருவார்த்தைகூட.. துரியோதனன் என்ன சொல்லவந்தார் என்று அவன் தங்கையிடம் விசாரிக்கவில்லை...
அந்த அவனின் பாசத்தில் காவ்யா நெகிழ்ந்து போயிருந்தாள்...
அர்ஜீன் அவளுக்கு போன் செய்து கொண்டிருந்தான்.. கடையில் இருக்கும் போது அவள் குறிப்பிட்ட நேரத்தில் ஏதோ வேலையிருப்பதைப் போல அவனது அலுவலக அறைக்குள் போய் விடுவாள்.. அவனது டேபிளின் மீதிருக்கும் லேன்ட் லைன் போனின் மணியொலிக்கும்.. எடுத்துக் காதில் வைத்துக் கொள்வாள்..
"மணிக்கணக்கா யாருகூடடி செல்போனில பேசற..?"
பாவனா ஒருமுறை கண் சிமிட்டிக் கேட்டதால் அர்ஜீன் சொல்லிக் கொடுத்த வழியிது...
"நீ ஆபிஸ் ரூமுக்குப் போ.. லேன்ட் லைனில கூப்பிடறேன்.. அப்ப கடைவிவகாரம்ன்னு நினைச்சுக்குவாங்க.."
காதல் ஒளிந்து கொள்ள ஆயிரம் வழிகளைக் கண்டு பிடித்துக் கொடுக்கும்.. சுகமான ஒளிதல்களும்... இன்பமான தேடல்களும் காதலில் மட்டுமே சாத்தியமானவை...
"காவ்யா..."
"ம்ம்ம்..."
"என் நினைப்பிருக்கா...?"
அவன் கேட்கும் போது இதமான இம்சை அவள் வயிற்றில் பரவும்.. அதன் கிளர்ச்சியில் அவள் தவித்து சிடுசிடுப்பாள்...
"இல்ல.. போதுமா..?"
வெடுக்கென்ற பதிலில் அவன் உல்லாசமாக சிரிக்கிறபோது அவள் மனம் அந்தச் சிரிப்பை என்று பார்ப்போமோ என்று ஏங்கும்...
"இதை நம்பச் சொல்றியா..?"
"ஏன்.. ஏன்.. ஏன்..?"
"எதுக்கு இத்தனை ஏன்..?"
"ஏன் நம்ப மாட்டிங்க..?"
"போடி.. உன்னை எனக்குத் தெரியாதா..?"
அவனின் சிரிப்பில் திரும்பவும் அவள் மனம் ஊஞ்சலாடும்... அவன் அருகிலிருக்க.. அவன் மார்பில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல உடலும் மனமும் பரபரக்கும்...
"என்ன தெரியுமாம்..?" அவள் சிணுங்குவாள்...
"உனக்கு என்மேல் ஆசையிருக்குன்னு தெரியும்.." அவன் மீண்டும் சிரிப்பான்...
'சிரிக்காதே...' அவள் தவித்துப் போவாள்..
"எனக்கொன்னும் யார்மேலயும் ஆசையில்ல..."
"நான் யாரையும் சொல்லையே.. என்மேல உனக்கு ஆசையிருக்குன்னுதான் சொன்னேன்.."
அவன் பேச்சில் வல்லவனாக இருந்தான்.. யாராலும் ஜெயிக்க முடியாத காவ்யாவின் மனதை அவன் ஜெயித்தான் அதனால் பேச்சிலும் அவனே ஜெயித்தான்.. எவரையும் எதிர்பேச்சு பேச விடாத காவ்யா.. அவன் பேச்சுக்கு எதிர் பேச்சைப் பேச முடியாமல் மௌனமானாள்...
மௌனமான அந்த நேரங்களில் அவர்களின் நெஞ்சங்கள் பேசிக் கொண்டன.. பகல் பொழுதுகளில் கடையில் உள்ள போனுக்கு அழைப்பவன்.. இரவு வேளைகளில் அவளின் செல்போனில் அழைத்தான்..
அவன் அருகேயில்லாத வெறுமையான பொழுதுகளை அவனுடைய பேச்சு இட்டு நிரப்பிக் கொண்டிருந்தது...
எங்கிருந்தோ வந்த ஆசைகளால் அலைபாய்ந்த அவள்மனது அவன் பேச்சுக்களால் சமனப்பட்டுக் கொண்டிருந்தது..
அந்தப் பேச்சுக்களின் ஊடே தேவராஜனைப் பற்றி அவள் அர்ஜீனிடம் சொல்லியிருக்கலாம்... ஆனால் அவள் அதைச் சொல்லவில்லை...
அவனுக்கும் அவளுக்குமான இனிமையான அந்தப் பொழுதுகளில் தேவராஜனைப் பற்றிப் பேச அவள் விரும்பவில்லை.. அந்தத் தருணங்களின் இனிமையை அது கெடுத்து விடும் என்பது மட்டுமல்ல.. வெளிநாட்டில் இருக்கும் அர்ஜீனுக்கு தேவையில்லாத மன உளைச்சலைக் கொடுக்க வேண்டாம் என்ற நினைவினாலும் தான் அவள் அதைச் சொல்லாமல் விட்டாள்..
அவளுக்கு அர்ஜீனைப் பற்றித் தெரியும்.. அவளின் நிழலைக் கூட வேறு யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் அவன் கவனமானவன்.. அப்படியிருக்கும்போது
அவன் இல்லாத நேரத்தில் காவ்யாவிடம் தேவராஜன் வம்புக்கு வருகிறான்.. மறைமுகமாக மிரட்டுகிறான்.. பெண் கேட்கும் அளவிற்கு போய் விட்டான் என்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது.. போன வேலையை விட்டு விட்டு அடுத்த விமானத்தைப் பிடித்துக் கிளம்பி வந்தாலும் வந்து விடுவான்.. காவ்யாவுக்கு அதில் விருப்பமில்லை...
அவளைக் காவல் காக்க அவள் அண்ணன் இருக்கும் போது அர்ஜீனை எதற்காக தொந்தரவு செய்ய வேண்டும்? அவன் கனடாவிலிருந்து திரும்பி வந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று அதைச் சொல்லாமல் விட்டு விட்டாள்..
ஒருவேளை அவள் அதைச் சொல்லியிருந்தால் அர்ஜீன் உடனடியாக கனடாவிலிருந்து திரும்பியிருப்பான்.. அவளைத் திருமணமும் செய்து கொண்டிருப்பான்.. அப்படியில்லாமல் அவன் வரவேண்டிய நாளில் வந்தபோது.. காவ்யாவும் அவனும் பிரிகின்ற சூழ்நிலை வந்து நின்றது...

- மூன்றாம் பாகத்தில் தொடரும் -





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -69
எங்கிருந்தோ ஆசைகள்.. -69
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-69.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-69.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy