எங்கிருந்தோ ஆசைகள். -68

68 கடல்தாண்டி நீயிருந்தாலும் - என் கனவில் நீவர ஆசைகொண்டேன்.. துரியோதனன் வெகுண்டார்... என்னதான் தேவராஜன் கண்ணதாசன் சொல்வதைப் போல கண்டபட...

68
கடல்தாண்டி நீயிருந்தாலும் - என்
கனவில் நீவர ஆசைகொண்டேன்..


துரியோதனன் வெகுண்டார்... என்னதான் தேவராஜன் கண்ணதாசன் சொல்வதைப் போல கண்டபடி அலைகிற புறம்போக்கு போக்கிரியாக இருந்தாலும்.. பெண்கேட்டு வந்தவரிடம் இந்த அளவுக்கு கண்ணதாசன் பேசியிருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் அவர் நினைத்தார்...
'என் மகன் உதவாக்கரைன்னு.. இவன் எப்படிச் சொல்லலாம்...?'
துரியோதனன் பற்ற வைக்கத் தயாரானார்..
"தப்புத்தான் சிவதாணு.. எம்மகனுக்கு உங்க மகளக் கேட்டது தப்புத்தான்.. அதிலயும்.. அரசல் புரசலா ஆயிரம் விசயங்க காதில விழுந்தும்.. துணிஞ்சு நான் பொண்ணு கேக்க வந்தது தப்புத்தான்.. மனசுக்குள்ள அர்ச்சுன மகராசன் போல மாப்பிள்ள வருவான்னு ஆசையிருக்கத் தான் செய்யும்.. ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவு.. உள்ளேயிருக்குமாம் ஈரும்பேனுன்னு.. உள்ளார நுழைஞ்சு பார்த்தாத்தான் எல்லாம் வெட்டவெளிச்சமா தெரியும்..."
துரியோதனன் பேசப்பேச.. கண்ணதாசனின் கண்கள் மின்னின.. அவன் லேசாக தலையைத் திருப்பி வீட்டுக்குள் பார்த்தான்.. காவ்யாவின் முகத்தில் பதட்டம் வழிந்தது.. கண்ணதாசன் புரிந்து கொண்டான்..
'ஓ.. அப்பனும்.. புள்ளயும்.. அர்ஜீன் விவகாரத்த இழுக்கப் பாக்கறானுகளா..? அதான் எந்தங்கச்சி இந்த பயம் பயப்படுதா..' பல்லைக் கடித்தான்..
"என்னது..?" சிவதாணு புருவங்களை உயர்த்த.. அவரைப் பேச விடாமல் ஊடே புகுந்தான் கண்ணதாசன்..
"இவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை.. கிளம்புங்க..." என்று அதட்டினான்..
"இருப்பா.. இவரு என்னவோ சொல்ல வர்றாரே.. என்ன சொல்றாருன்னுதான் கேப்போமே.." என்றார் சிவதாணு...
"சொல்லுவாருப்பா.. சுரைக்காய்க்கு உப்பில்லன்னு ஆயிரம் சொல்லுவார்.. அத ஊம் போட்டுக்கேக்க.. நாம ஒன்னும் சேலயக்கட்டி வளயல மாட்டியிருக்கல.. எந்தங்கச்சியப் பத்தி நாக்கு மேல பல்லப்போட்டு எவன் பேசினாலும்.. அவன் நாக்க இழுத்து வைச்சு நறுக்கிருவேன்.. யாருன்னு நினைச்சாங்க.. இவரு மகன் எந்தங்கச்சிட்ட வாலாட்டறானாம்.. இத்தன நாளா இந்த விசயத்த காவ்யா எங்கிட்டச் சொல்லலைப்பா.. இந்தாளு தலயக் கண்டதும் சொல்லுது.. முதல்லயே தெரிஞ்சிருந்தா அந்த தேவராஜனை தூக்கிப் போட்டு மிதிச்சிருப்பேன்.. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல.. இனிமே எந்தங்கச்சிகிட்ட உங்க மகன் வால ஆட்டிப் பாக்கட்டும்.. குடல உறுவி மாலபோடலேன்னா.. என்னன்ன கேளுங்க..."
சிவதாணுவிடம் ஆரம்பித்து துரியோதனனிடம் முடித்தான் கண்ணதாசன்.. பேச்சு திசை திரும்பி.. தேவராஜன் காவ்யாவிடம் வாலை ஆட்டுவதில் முடிந்து விட்டதில் துரியோதனன் என்னசொல்ல வந்தார் என்பதையே அன்னபூரணியும்.. சிவதாணுவும் மறந்து விட்டார்கள்.. அவர்கள் மகளிடம் தேவராஜன் வம்புக்குப் போனான் என்பது மட்டுமே அவர்கள் நினைவில் நின்றது...
"ஆத்தி.. இந்தக் கொடும எத்தன நாளா நடக்குதாம்...?"
"எனக்கே தெரியாதும்மா.. இப்பத்தான் காவ்யா சொல்லுச்சு..."
"யாரு வீட்டு புள்ளகிட்ட யாரு வாலாட்டறது..? ஏன்ய்யா.. நீங்களும் ஒரு பொண்ணப் பெத்த புண்ணியவான்தான.. உங்க மககிட்ட ஒருத்தன் இப்படி வம்பு பண்ணினா சும்மாயிருப்பீங்களா..?"
"இருந்தாலும் இருப்பார்.. யாரு கண்டது..?"
"வேண்டாம் கண்ணதாசன்.. வாய் நீளுது.."
"உனக்கு மட்டும் வாய் நீளலையோ..? என் மகனுக்கு மட்டும்தான் நீளுதோ..? இந்த சிவதாணுக்கு திருக்குறளயும் தெரியும்.. திருப்பாச்சி அருவாளயும் தெரியும்.. உன்ன மாதிரிதான் நானும்.. சண்டைன்னு வந்துட்டா புழுதியில பொறள தயங்க மாட்டேன்... என்ன தெனாவெட்டு இருந்தா என் முன்னாடியே என் மகன கைநீட்டிப் பேசுவ..?"
"விவரம் புரியாம பேசாத சிவதாணு..."
"எல்லாம் புரிஞ்சுதான் பேசறேன்ய்யா.. போக்கத்தவனுக்குப் பொண்ணு தரத்தான் நாங்க பொண்ணப் பெத்து வளத்து வைச்சிருக்கோமா..? உம்மகன் ஆசைப்பட்டா நீயில்ல எடுத்துச் சொல்லியிருக்கனும்..? அத விட்டுப்புட்டு அந்த வெம்போட்டுப் பய பேச்சக் கேட்டு பொண்ணுக் கேட்டு வந்தியாக்கும்..? அறிவில்ல..?"
"இந்தாளுக்கா அறிவில்ல..? அது கடல் போல இருக்குப்பா.. எத.. எங்கே.. எப்படிக் கொளுத்திப் போடனும்கிற சூட்சுமப் புத்தி படைச்சவரில்ல இவரு... அந்த வித்தாரத்தனத்த கண்ணதாசன் கிட்டக் காட்ட வேணாம்ன்னு சொல்லி வையுங்க.. என் குணத்தக் காண்பிச்சேன்னு வையுங்க.. இந்த ஆளு தாங்க மாட்டாரு.."
அவர்கள் மூவரும் மாறிமாறிப் பேசியதில் ஓடி வந்தவர்தான்.. வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்ட பின்புதான் ஓட்டத்தையே நிறுத்தினார் துரியோதனன்...
குழம்புக்காக வெங்காயத்தை உரித்துக் கொண்டிருந்த செல்வி கணவரை விசித்திரமாகப் பார்த்தாள்...
"என்னாடி தேனு.. உங்கப்பா இந்த ஓட்டம் ஓடி வர்றாரு... பொண்ணு கேக்கப் போன இடத்தில நாளக்கே கல்யாணத்த வைச்சுக்கலாம்ன்னு சொல்லிப் புட்டாங்களா.. அதுக்குத்தான் இந்த ஓட்டமா..?" என்று கிண்டலாக மகளிடம் கேட்டாள்..
"யம்மோவ்.. இந்த விளையாட்டுக்கே நான் வரலை.. அப்பாகிட்ட பேசனும்னா நேரடியாப் பேசு.. ஊடாலே என்ன இழுக்காத.. அதுக்கு நான் ஆளில்ல..."
"உங்கப்பாகிட்ட நேரடியாப் பேசிட்டாலும்..."
செல்வி நொடித்தபடி விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.. தகப்பனாரின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்த தேவராஜன் தடதடவென்று மாடிப்படிகளில் இறங்கி வந்தான்...
"என்னப்பா ஆச்சு..?" என்று பரபரப்பாக கேட்டான்..
"உங்க ஆசைமகன் கேக்கறானில்ல.. சொல்லுங்க.."  இடக்காக சொன்னாள் செல்வி..
"அவனுக பொண்ணுதர மாட்டேனுட்டாங்கடா.." ஆத்திரத்துடன் பேசினார் துரியோதனன்..
தேவராஜனின் முகம் மாறியது.. அவன் துரியோதனனின் செல்வாக்கில் நம்பிக்கை வைத்திருந்தான்.. எதுவந்தாலும் பூர்விக சொத்தில் கைவைக்காத மனிதர் அவர்...
தோப்பும்.. வயலும்.. தோட்டமும்.. காடுமாக.. துரியோதனனுக்கு கிராமத்தில் இருந்த சொத்து பத்துக்கள் ஏராளம்.. ஊருக்கே பெரிய வீடு.. இவர் மதுரையில் கடைவைத்தபின்பு.. அண்ணா நகரில் பெரிய பங்களாவைக் கட்டியிருந்தார்.. கம்யூட்டர்களை கொள்முதல் செய்து விற்கும் கடையை விற்றிருந்தாலும்.. புதிதாக ஜவுளிக்கடையை திறந்திருப்பவர்.. இத்தனை வசதிகளிருக்கும் துரியோதனனின் மகனுக்கு பெண் தர மாட்டேனென்று சொல்லி விட்டார்களா..?
மறந்தும் தேவராஜன் தன் தகுதியை நினைத்துப் பார்க்கவில்லை... அவனுக்கென்று சொல்லிக் கொள்ளும்படி தனியான தகுதிகள் எதுவும் இல்லையென்பதை அவன் அறிவான்...
"நீங்க கேட்டுமா மாட்டேன்னு சொன்னானுக..?" அவன் ஆத்திரத்துடன் கேட்டான்...
"கேட்டுக்கடி தேன்மொழி.. உங்கப்பா என்னவோ குணசாலின்னு சொன்னியே.. அவருக்கு இந்த வயசில ரெண்டாம் தாரமா பொண்ணு வேணுமாம்.." செல்வி நொடித்தாள்..
"ஏய்ய்.." துரியோதனன் பல்லைக்கடித்தார்..
"எங்கிட்ட என்னத்துக்கு முறைக்கறிங்க..? இந்த முறைப்பயெல்லாம் உங்க மகன்கிட்டக் காட்டுங்க.. அவன்தானே சொன்னான்..?"
"என்னடி சொன்னான்..?"
"நீங்க கேட்டுமா அவங்க பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னானா இல்லியா..?"
"அவன் அப்படிச் சொல்லலைடி.. அவனுக பொண்ணு தர மாட்டேன்னு சொன்னானுகன்னுதான்  சொன்னான்.."
"இதில்ல முக்கியம்..! நல்லாச் சேர்ந்திருக்கீங்க பாருங்க.. அப்பனும்.. மகனும் கூட்டணி போட்டுக்கிட்டு.. என்னத்தையோ பண்ணித் தொலைங்கன்னு பேசாம இருக்கவும் முடியல.. நம்ம தகுதிக்கு... ஊருப்பக்கம் பொண்ணத் தேடினா.. சொத்து பத்தோட.. நூறுபவுன் நகையைப் போட்டே பொண்ணக் கொடுப்பாங்க.. அத விட்டுட்டு நடக்காதுன்னு தெரிஞ்சும் அவங்க வீட்டுக்கு பொண்ணு கொடுன்னு ஏன் போகனும்..?"
"காரணமாத்தான் போனேன்னு உனக்குத் தெரியாதா..?"
"எனக்கு நல்லாத்தான் வந்திரும் வாயில.. இவரு காரணத்தில தோரணம் கட்டினவரு.. இந்த எடுபட்டபய ஆட்டி வைக்கறான்.. நீங்களும் ஆடறிங்க..."
"அம்மா பேசறத காதில போட்டுக்காதீங்கப்பா.."
"ஆமடா.. இப்படி உங்கப்பனுக்குச் சொல்லிக் கொடுக்கத்தான் உன்னை பத்து மாசம் வயித்தில சுமந்து பெத்துப் போட்டேன்.."
"இதுக்கு வேற வேலயே இல்ல..."
"உனக்கு என்ன வேலயிருக்குடா சாமி..? நான் வேல நிறுத்தம் பண்ணினேன்னு வைய்யி.. இந்தக் குடும்பம் மொத்தமும் ஓட்டலுக்கு படையெடுத்தாகனும்.. அத நினப்பில் வைச்சுக்க..."
"எப்பப் பாத்தாலும் இப்படியே பேசிக்கிட்டிருக்கும்.."
"அந்தப் பேச்சக் கேட்டதாலதான் உங்கப்பா உருப்பட்டாரு.. இப்ப புதுசா உன் பேச்சைக் கேட்டதுக்கு பலனப் பாத்த பின்னாலயுமா இப்புடிப் பேசற..?"
"பொறும்மா.. அவரு போயிட்டு வந்த கதையத்தான் சொல்லட்டுமே..."
"சொல்லுங்க.. மகன் nக்கறானில்ல.."
"அதையேண்டா கேக்கற.. அவனுக முதலில நாம பொண்ணுக் கேட்டுப் போயிருக்கோம்ன்னே நினைக்கலடா..."
"அப்புறம்..?"
"பொண்ணு கொடுக்க வந்திருக்கோம்ன்னு நினைச்சுப் புட்டானுக..."
இந்தவார்த்தையில் தேன்மொழி நிமிர்ந்தாள்.. அவள் விழிகள் ஒளிர்ந்தன.. அவளுக்கு கண்ணதாசனைப் பிடிக்கும்.. சொந்த பந்தங்களின் விசேசங்களுக்குப் போகும்போது சில தருணங்களில் கண்ணதாசனை அவள் பார்த்திருக்கிறாள்.. அவனது தோற்றத்திலும்.. நடவடிக்கைகளிலும் மனது ஈர்க்கப்படுவதை உணர்ந்திருக்கிறாள்...
'அவனை மாப்பிள்ளை கேட்கப் போனாருன்னு நினைச்சிட்டாங்களா..?'
அவள் மனதை மயிலிறகு வருடிச் சென்றது.. அதைச் செல்வியால் புரிந்து கொள்ள முடிந்தது...
"ஆனமான அப்பன்னா அதைச் செஞ்சிருப்பாரு.. இந்த அப்பன்தான் புத்தியக் கடன் கொடுத்திருக்காரே..." என்று ஆற்றாமையுடன் சொல்லி வைத்தாள்...
"யாருடி இவ.. அவனுக சொன்ன பின்னாலதான் என்புத்திக்கே அது உறைச்சுச்சு.. தேடினாலும் கண்ணதாசனப் போல ஒரு மாப்பிள்ள கிடைக்க மாட்டான்தான்.. இனிமே அதுக்கு வழியில்லாம போயிருச்சு செல்வி..."
தேன்மொழியின் முகம் இருண்டது.. அவள் வேதனையுடன் கையிலிருந்த புத்தகத்தில் பார்வையைப் பதித்தாள்.. அதைப் பார்த்த செல்வியின் மனம் சங்கடப்பட்டது...
'இப்புடியும் ஒரு மனுசன் இருப்பாரா.. யாராச்சும் கையில வெண்ணய வைச்சுக்கிட்டு நெய்யத் தேடி அலைவாங்களா...' என்று ஆற்றாமைப்பட்டாள்...
"முதல்லயே இந்தப்புத்தி இருந்திருக்கனும்.. கண்ணுக்கு முன்னால பெரிய படிப்பை படிச்சு.. கவர்ன்மெண்டில பெரிய உத்தியோகம் பார்க்கிற மாப்பிள்ளை இருக்கிறப்ப.. என்ன அலுவலுக்கு அந்தப் பார்த்தசாரதிக்கு போனப் போட்டிங்க..? இந்த நினப்பு முதல்லயே இருந்திருக்க வேணாமா..? புத்தியைக் கடன் கொடுக்கலாமா..?"
"யாருடி இதயெல்லாம் நினைச்சா..?"
"நீங்க தானாய் நினைக்கலிங்க.. இந்தத் தறுதலப்பய நினைக்க வைச்சான்.. தேன்மொழிக்கு கண்ணதாசன பாக்கலாம்ன்னு உங்கள நினைக்க வைக்கிறதுக்குப் பதிலா.. அந்த அர்ஜீனை பாக்கலாம்ன்னு சொல்லிக் கொடுத்தான்.. அவங்க மாட்டேன்னதும் அதுக்குப் பழி தீர்க்க இவனுக்கு காவ்யாவ பொண்ணு கேக்கலாம்ன்னு சொல்லிக்கொடுத்தான்.. ரெண்டுமே ஆகாத சோலிக.. மறந்தும் ஆகற சோலியப் பத்தி இவன் சொல்லிக் கொடுக்கலியே..."
துரியோதனனுக்குப் அது புரிந்துதான் இருந்தது.. காலம்கடந்த ஞானோதயத்தால் யாருக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது.. அத்துடன் அவருக்கும்.. கண்ணதாசனின் குடும்பத்திற்குமான போர் ஆரம்பமாகி விட்டது... இனிமேல் எதைப் பற்றியும் பேசிப் பிரயோஜனம் இல்லையே...
"நான்கூட நினைச்சேண்டி.. அவனுக பொண்ணக் கொடுத்தா நாமளும் தேன்மொழிய கண்ணதாசனுக்கு பேசி முடிச்சிரலாம்ன்னு நினைச்சேன்..."
"அந்த நினப்புனாலதான் இத்தன பாடும்..? பட்டும் புத்தி வரலையே.."
"பொண்ணு கொடுத்து பொண்ண எடுத்தா சொந்தம் பலப்படுமில்ல..."
"நாம பொண்ண எடுக்கனும்னு சொன்னால அவங்க வீடுகட்டி அடிப்பாங்க.. இந்த லட்சணத்தில பொண்ணக் கட்டிக்கன்னு எந்த மூஞ்சிய வைச்சுக்கிட்டு கேக்கறது..? சொந்தம் பலப்படுமாமில்ல.. இந்த தறுதலபேச்சக் கேட்டா இருக்கிற சொந்தமும் இல்லாம போகும்.."
"விடுடி.. இனிமே அதப் பேசி ஆகப் போகிறதென்ன..?"
"நீங்க கொளுத்திப் போடனும்னு சொன்னது என்னாச்சுப்பா..?"
பேச்சின் திசையை மாற்றினான் தேவராஜன்.. அவனுக்கு பேச்சுப் போகும் திசையே பிடிக்கவில்லை.. கண்ணதாசனை மாப்பிள்ளை கேட்க வேண்டுமென்று அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.. அந்த வீட்டில் காவ்யாவைத் தவிர.. வேறு யாரும் அவன் கவனத்தில் பட்டதே இல்லை...
அவனுக்கு தேன்மொழி என்றொரு தங்கை இருக்கிறாள் அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு வந்ததில்லை.. அதைப் பற்றி யோசிக்க வேண்டுமென்ற கடமை அவனுக்கில்லை.. துரியோதனனுக்குத்தான் இருக்கிறது என்ற எண்ணமுடையவன் அவன்...
அவன் திசை திருப்பி பாதையில் பேச்சைத் திருப்பினார் துரியோதனன்..
"அதத்தான் ஆரம்பிச்சேன்.. அந்த கண்ணதாசன் பய விடலையே..."
"என்னப்பா சொல்றீங்க..?"
"நான் பத்த வைக்கிறதுக்குள்ள.. அவன் உன்னப்பத்தி பத்த வைச்சிட்டான்.. நீ அந்தக் காவ்யாப் பொண்ணுகிட்ட வம்பு வளர்க்கிறன்னு சொன்னான்.. நீ சிக்கினா பின்னிப் பெடலெடுத்திருவான்னு சொன்னான்.. அதக் கேட்டதும் மொத்தக் குடும்பமும் என்ன மொத்த ரெடியாகிட்டானுக.. ஏண்டா.. நீ அந்தப் புள்ள கிட்ட வாலாட்டினயா..?"
"சேச்சே.. இல்லவே இல்லப்பா.."
"இத நம்பச் சொல்றியா..? என் கடையில ரொம்ப நாளா அந்தப்புள்ள வேல பாக்குது.. தங்கமான புள்ள.. யாரையும் நிமிர்ந்துகூடப் பாக்காது.. இந்த அர்ஜீன் பய விவகாரத்தக்கூட நீதான் சொல்ற.. என்னால நம்ப முடியல.. அந்தப் புள்ளகிட்ட வாலாட்டியிருக்கயே.. உன்ன என்னதாண்டா செய்யறது..?"
துரியோதனனின் கோபத்தில் தேவராஜன் ஆடிப்போய்விட்டான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -68
எங்கிருந்தோ ஆசைகள். -68
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-68.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-68.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy