எங்கிருந்தோ ஆசைகள்.. -67

67 என்னவென்று நான் சொல்லிடாமல் -நீ எனையுணர ஆசைகொண்டேன்... 'என்ன தைரியமிருந்தா அவன் எந்தங்கச்சிகிட்ட வாலாட்டுவான்...' தேவராஜனை...

67
என்னவென்று நான் சொல்லிடாமல் -நீ
எனையுணர ஆசைகொண்டேன்...


'என்ன தைரியமிருந்தா அவன் எந்தங்கச்சிகிட்ட வாலாட்டுவான்...'
தேவராஜனை வாங்கு... வாங்கென்று வாங்கிவிட வேண்டுமென்ற வேகம் கண்ணதாசனுக்குள் எழுந்தது.. எதையும் சொல்ல முடியாமல் தவித்து நின்ற காவ்யாவைப் பார்த்தபோது அந்த வேகம் அவனுக்குள் அதிகரித்தது...
"புதுசா ஒரு பிரச்னையைக் கிளப்பறான்னு சொல்லிட்டு பேசாம இருந்தா என்னம்மா அர்த்தம்..? என்னன்னு சொன்னாத்தானே தெரியும்..?"
கண்ணதாசன் அதட்டினான்.. காவ்யா மருண்டு விழித்தாள்.. அவளுடைய காதலை தேவராஜன் கண்டுபிடித்து வைத்து மிரட்டுகிறான் என்பதை கண்ணதாசனிடம் அவள் எப்படிச் சொல்வாள்..?
"கண்ணா..."
காபித் தம்ளர்களுடன் சமையலறையை விட்டு வெளியே வந்த அன்னபூரணி வியப்புடன் அழைத்தாள்.. வாஷ்பேசினில் அருகே நின்று ரகசியம் பேசிக் கொண்டிருந்த அந்த அண்ணன்.. தங்கையை பார்த்து அவளது புருவங்கள் உயர்ந்தன...
"இங்கே என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்க..?"
"ஒன்னுமில்லம்மா.. தங்கச்சிகூடப் பேசிக்கிட்டு இருக்கேன்..."
"உந்தங்கச்சி கிட்ட பாசப்பயிர வளக்க நல்ல நேரம் பார்த்தபோ.. திருக்குறள விட்டுப் பிரியாத உங்கப்பாவே அத விட்டுப் பிரிஞ்சு வந்திருக்கிற மனுசன்கிட்டப் பேசப் போயிட்டாரு.. நீ என்னடான்னா உந்தங்கச்சியை விட்டுப் பிரிய மாட்டேங்கிற.. போப்பா.. போயி என்ன ஏதுன்னு கேளு.. உங்கப்பாவுக்கு என்ன தெரியும்..? இவரு பாட்டுக்கு அந்த மனுசன்கிட்ட திருக்குறளுக்கு அர்த்தம் சொல்ல ஆரம்பிச்சிரப்
போறாரு.."
சிவதாணு அப்படிப்பட்ட ஆள்தான் என்பதால் தங்கையை மறந்து முன்னறைக்கு ஓடினான் கண்ணதாசன்.. அதிசயத்திலும் அதிசயமாக சிவதாணு திருக்குறளை மறந்துவிட்டு.. பொதுவான குடும்ப நிலவரங்களை துரியோதனனிடம் பேசிக் கொண்டிருந்தார்..
"பொண்ணு படிச்சு முடிச்சிருச்சில்ல..."
"முடிச்சிருச்சு மச்சான்.. மேல படிக்கனும்ங்குது.. நான்தான் வேண்டாம்ன்னுட்டேன்.. இந்தப் படிப்புக்கு மாப்பிள்ள தேடவே தரிங்கினத்தோம் போடனும்.. இதில மேல படிக்கவைச்சா அம்புட்டுத்தான்.." என்று விளக்கம் சொன்னார் துரியோதனன்..
"அதுசரி.. அதுசரி.. அதனாலதான் நாங்களும் எங்க காவ்யாவ டிகிரி படிக்க வைச்சதோட நிறுத்திட்டோம்.." என்றார் சிவதாணு...
தானாகவே காவ்யாவிடம் பேச்சு வந்து நின்று விட்டதில் உற்சாகமாகி விட்டார் துரியோதனன்.. போதாக் குறைக்கு கண்ணதாசனும் வந்து அவனுக்குப் பின்னாலேயே காபித்தம்ளரோடு அன்னபூரணியும் வந்து விட்டதில் அவருக்கு பரிபூரண திருப்தி...
'குடும்பத்தில இருக்கிற பெரிய மனுசங்களும்.. குடும்பத்த நடத்தறவனும் இருக்காங்க.. இனிமே விசயத்த போட்டு உடைச்சிர வேண்டியதுதான்..' மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டவராக அவர் பேச்சை ஆரம்பித்தார்..
"அதில பாரு தங்கச்சி.. இந்த மாதிரி விசயங்களப் பேசறப்ப வீட்டுப் பொம்பளய கூப்பிட்டுக்கிட்டுத்தான் வரனும்.. செல்விக்கும் வரனும்கிற எண்ணம்தான்.. திடிர்ன்னு அவளோட சித்தப்பன் பேத்திக்கு மஞ்சள் நீராட்டு விழான்னு தகவல் வந்துச்சு.. நீங்க கிளம்பறதுன்னு முடிவாகிருச்சு.. அதனால கிளம்பினது கிளம்பினதாவே இருக்கட்டும்.. நா மட்டும் போயிட்டு வந்துர்றேன்னு சொல்லிட்டு ஊருக்கு கிளம்பிட்டா.. அவ அந்தப்பக்கம் போறா நா இந்தப் பக்கம் வர்றேன்..."
செல்வி எந்தப் பக்கமும் போகவில்லை.. வீட்டில் தான் இருந்தாள்.. இதுபோன்ற தகிடுதத்தங்களுக்கு துணை வரமாட்டேனென்று உறுதியாகச் சொல்லி விட்டாள்.. வேறு வழியின்றி.. ஒற்றை மனித ராணுவமாக தனியே கிளம்பி வந்த துரியோதனன்.. சரமாரியாக கதை பிணைந்தார்..
'எந்த மாதிரியான விசயம்..? இவரு எதுக்காக அந்தப் பக்கமா பொண்டாட்டிய அனுப்பிட்டு இந்தப் பக்கமா இங்க வந்தாரு...?'
விவரம் புரியாத அந்த மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...
கண்ணதாசன் துரியோதனனை பேச விட்டுக் கேட்டுக் கொண்டிருக்க.. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக.. சிவதாணு பட்டென்று கேட்டு விட்டார்..
"இந்த மாதிரி விசயம்ன்னா.. எந்த மாதிரி விசயம்..? புரியலயே..."
கண்ணதாசன் இமை கொட்டி அன்னபூரணியைப் பார்க்க.. அவளும் அதைப் போலவே மகனைப் பார்த்தாள்..
இதுபோன்ற அதிசயத்தை இதற்கு முன்னால் அந்தக் குடும்பம் பார்த்ததில்லை.. சிவதாணுவாவது.. பொறுப்பான குடும்பத் தலைவனாக ஒரு கேள்வியைக் கேட்டு விடுவதாவது.. அதுவரை அவர் அதுபோலக் கேட்டதில்லை.. கண்ணதாசன் கெஞ்சிப் பார்ப்பான்...
"சொன்னாக் கேளுங்கப்பா.. என்னதான் நான் வீட்டுக்கு மூத்தமகனா இருந்தாலும்.. குடும்பத் தலைவன்னு என்னைச் சொல்ல மாட்டாங்க.. உங்களத்தான் சொல்லுவாங்க.. நீங்தான் இந்தக் குடும்பத்தோட தலைவர்.. அதுக்குத்தான் கெஞ்சறேன்.. வீட்டு விசயத்தில தலக் கொடுங்க..."
"அதுக்குத்தான் நீ இருக்கியேப்பா..."
இப்படிச் சொல்லிக் கழண்டு கொள்கிற சிவதாணுதான் அருமை.. பெருமையாக.. அர்த்தம் பொதிந்த அந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தார்...
"இதென்ன மச்சான் இப்புடிக் கேட்டுப் புட்டிங்க..?" பெரிதாக சிரித்தார் துரியோதனன்...
மற்ற மூவரும் சிரிக்கவில்லை.. உன்னிப்பாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களுக்கு சிரிப்பில் கலந்துகொள்ளும் உத்தேசமில்லை என்பதைப் புரிந்து கொண்டவராக துரியோதனன் சிரிப்பதை நிறுத்தி விட்டு பேச்சைத் தொடர்ந்தார்..
"நம்ம ரெண்டு பேரு வீட்டிலயும் கல்யாணவயசில புள்ளைக இருக்கு.. பொண்ணக் கொடுத்து.. பொண்ணக் கட்டிக்கிற சொந்தமும் இருக்கு.. இத்தன விசயம் இருக்கிறப்ப.. என்னவிசயம்ன்னு கேக்கறிங்களே.."
'சொன்னேனே.. கேட்டியா..' அன்னபூரணியின் விழிகள் கண்ணதாசனிடம் கேட்டன...
"கண்ணதாசன் கல்யாணத்தப் பத்தி இப்ப பேசறதா இல்ல.. தங்கச்சி கல்யாணம் முடியாம அவன் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிட்டான்..."
இதையும் சிவதாணுதான் சொன்னார்.. எள் என்று நினைக்கும் முன்னால் எண்ணையாக நிற்கும் கணவரின் மீது காதல் பெருகியது அன்னபூரணிக்கு...
'இந்த மனுசனுக்கு இப்படிக்கூடப் பேசத் தெரியுமா..?' அவள் புல்லரித்துப் போய் விட்டாள்...
"அப்படித்தான் இருக்கனும்..." என்று துரியோதனன் பாராட்டியதில் அவர்கள் மூவருக்குமே தூக்கிவாரிப் போட்டது...
'என்னடா... இது...'
திரும்பவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...
பெண் கொடுக்கவென்று வீடு தேடி வந்துவிட்டு.. அந்த மாப்பிள்ளை திருமணத்தைத் தள்ளிப் போட்டிருப்பதை பாராட்டிப் பேசினால் அவர்கள் என்னவென்றுதான் நினைப்பார்கள்...?
"என்னடா கண்ணா.. இந்த மனுசன் இப்படிச் சொல்றாரு..?" அன்னபூரணி முணுமுணுத்தாள்...
"எனக்கும் அதுதாம்மா புரியல..." கண்ணதாசன் பதிலுக்கு முணுமுணுத்தான்...
சிவதாணுதான் அந்த முணுமுணுப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவராயிற்றே.. அவர் வினோதமாக துரியோதனனைப் பார்த்தபடி...
"அப்படித்தான் இருக்கனும்னு பாராட்டறவரு.. எதுக்காக பொண்ணு கொடுக்கிறதப் பத்திப் பேசனும்னுதான் புரியல.." என்று சொல்லி விட்டார்...
"பொண்ணு கொடுக்கனும்னு வந்திருக்கேனா..?"
அப்போதுதான் கண்ணதாசனை மாப்பிள்ளை என்ற கோணத்திலேயே யோசித்தார் துரியோதனன்.. மாநிறமாக.. கம்பீரமாக இருந்தவனைப் பார்க்கும் போது...
'இது கூட நல்ல பேச்சாயிருக்கே...' என்று அவருக்குத் தோன்றியது...
'இத எப்படி யோசிக்காம விட்டேன்..?'
கண்ணதாசனின் படிப்பும்... பதவியும் அவரை ஈர்த்தன.. அப்படிப்பட்ட மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்துக் கொண்டு போனால் செல்வி அவருக்கு பாத பூஜையே பண்ணி விடுவாள்தான்.. ஆனால் அவர் வந்த நோக்கம் வேறாயிற்றே...
"நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டிங்க மச்சான்.. நான் சம்பந்தம் பேச வந்திருக்கிறது என்னவோ உண்மைதான்.. ஆனாப் பொண்ணு கொடுக்கறேன்னு கேட்டு வரல.. பொண்ணுக் கொடுங்கன்னு கேட்டு வந்திருக்கேன்..."
"யாருக்கு...?"
கடுமையான முகபாவத்துடன் இந்தக் கேள்வியையும் சிவதாணுதான் கேட்டார்...
"வேற யாருக்கு..? என் ஒரே மகன் தேவராஜனுக்குத் தான் உங்க மக காவ்யாவ பொண்ணுக் கேட்டு வந்திருக்கேன்..."
தேங்காயை உடைத்ததைப் போல துரியோதனனும் பதிலைச் சொல்லி விட்டார்.. கண்ணதாசனின் தாடை இறுகியது.. அன்னபூரணி கொதித்து விட்டாள்.. அவள் அந்த தேவராஜனைப் பார்த்திருக்கிறாள்.. அவனைப் பற்றிக் கேள்வியும் பட்டிருக்கிறார்...
'படிக்காத கூதர.. ஊர் வம்ப விலைக்கு வாங்கிட்டு வர்ற ரௌடி.. திரும்புன பக்கமெல்லாம் கடன வாங்கி வைச்சு.. அப்பன் ஆரம்பிச்ச கடய விக்க வைச்ச ஊதாரி.. அந்தத் தறுதலக்கு பொண்ணுக் கொடுக்கத்தான் எம்புள்ளய வம்பாடுபட்டு பெத்து.. வளத்து.. படிக்க வைச்சு.. ஆளாக்கி வைச்சிருக்கேனா..?'
அவளின் கோபத்தை வெளிக்காட்ட வகையாக ஹாலின் டெலிபோன் அடித்தது.. எடுத்து காதுக்கு கொடுத்தவள் சரமாரியாக பொரிய ஆரம்பித்து விட்டாள்...
"அதுக்குத்தான காத்திருக்கேன்..? உனக்கு என்னப் பாத்தா எப்புடித் தோணுது.. கூறுகெட்ட கூதரைன்னு தோணுதா..? ஆகாவழிப் பேச்ச பேசிக்கிட்டு இருக்க.. ஆருகிட்டப் பேசறன்னு யோசிச்சுத்தான் பேசறயா.. நீ கெட்ட கேடுக்கு உம்மனசில இம்புட்டுப் பெரிய நினப்பு இருக்கா..? அடச்சீ.. போன வைய்யி..."
அவள் போனை வைத்த வேகத்தில் அது உடையாமல் தப்பிப் பிழைத்தது.. துரியோதனனின் முகத்தில் ஈயாடவில்லை.. இப்படிப்பட்ட எதிர் தாக்குதலை அவர் எதிர்பார்த்திருக்கவில்i..
'என்னடா இது.. இங்கயும் ஒரு செல்வி இருக்கு..'
மதுரை மாநகரில் வீட்டுக்கு வீடு செல்வி இருப்பார்கள் என்று தெரிந்து வைத்துக் கொண்டே அவர் அந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டார்...
"யாரும்மா அது..?" அறியாதவனைப் போல வினவினான் கண்ணதாசன்..
"அந்த அச்சுக் கெட்ட மகாராணிதான் போன் பண்ணியிருந்தா..."
"அண்ணியவா சொல்றீங்க..?"
"அவளத்தான் சொல்றேன்.. எங்க அக்காவ சொல்லனும்.. இவளயெல்லாம் பேச விட்டு வேடிக்க பார்கக் கூடாது கண்ணதாசா.. இழுத்துப் போட்டு நாலு மிதி மிதிக்கனும்.. அப்பத்தான் அடங்கும்ங்க.. எங்கே.. உங்க பெரியம்மா மகனுக்குத்தான் அந்த தைரியம் வல்லயே..."
அன்னபூரணி ஜாடையாக கணவரைப் பார்த்தாள்.. எடுத்துக் கொடுக்க வேண்டிய அவசியமின்றி அவர் மகா தைரியத்துடன்தான் இருந்தார்.. துரியnhதனனை நேருக்கு நேராகப் பார்த்து...
"உங்களுக்கும் ஒரு மக இருக்கா துரியோதனன்.. உங்க மகனப் பத்தி நான் சொல்ல வேண்டாம்.. ஊருக்கே அது தெரியும்.. உங்களுக்கும் அது தெரியும்.. என் கேள்வியே வேற.. இது போல ஒரு மாப்பிள்ளைக்கு உங்க மகளைப் பொண்ணு கேட்டா.. நீங்க கொடுத்துட்டுத்தான் வேற சோலி பாப்பீங்களா..?"
செல்வி கேட்ட கேள்வியை சிவதாணு கேட்டு விட்டார்.. துரியோதனனுக்கு எங்கே முகத்தைக் கொண்டு போய் வைத்துக்கொள்வது என்று தெரியவில்லை.. ஆனாலும் அவர் தழைந்து பேசாமல் ஓங்கியே பேசினார்..
"என்ன பேசறிங்க சிவதாணு.. எம் மகனுக்கென்ன குறைச்சல்..? தோட்டம்.. துரவிருக்கு.. போதாக்குறைக்கு.. கடைத்தெருவில பெரிசா ஜவுளிக்கடையிருக்கு.. சொந்த வீடிருக்கு.. இப்படியாப்பட்ட மாப்பிள்ள உங்களுக்குத் தேடினாலும் கிடைக்குமா..?"
கண்ணதாசன் மௌனத்தை கலைத்து விட்டான்.. எவ்வளவு நேரம்தான் அவனும் பொறுமை காப்பான்..? குடும்பத் தலைவராய்.. லட்சணமாய் சிவதாணுதான் வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருக்கிருந்தாரே.. அதனால் அவன் மௌனம் சாதித்தால் துரியோதனன் வீட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டே போவதா..?
"நாங்க தேடலை துரியோதன் சார்..." அவன் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்...
"உங்க மகனைப் போல மாப்பிள்ளய நாங்க தேடலை.. என் தங்கைக்கு நாங்க பார்க்கப் போகிற மாப்பிள்ள படிச்சிருப்பார்.. பண்பானவரா இருப்பார்... குடிக்க மாட்டார்.. குணசாலியா இருப்பார்.. அவர் சம்பாத்தியத்தில பெண்டாட்டியை வாழ வைக்கிற ஆம்பளயாய் இருப்பார்.. அப்படிப்பட்ட மாப்பிள்ளயத்தான் நாங்க தேடிக்கிட்டு இருக்கோம்.. படிக்கலன்னா கூடப் பரவாயில்ல.. நான் சொன்ன மத்த குணங்கள் உங்க மகன்கிட்ட இருந்தா.. நீங்க பொண்ணு கேட்டு வந்ததில ஒரு அர்த்தமிருக்கு.. அதெல்லாம் உங்க மகன்கிட்ட இல்லேன்னு உங்களுக்கே நல்லாத் தெரியும்..
இருந்தும் எங்கவீட்டு படியேறி வந்து பொண்ணு கேட்கறிங்கன்னா.. இது நல்லாயில்லங்க அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.."
கண்ணதாசன் கண்டிப்பான தொனியில் மறுத்து விட்டான்...





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -67
எங்கிருந்தோ ஆசைகள்.. -67
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-67.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-67.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy