அம்மம்மா.. கேளடி தோழி...!, -166

166 ஊனுருக பாடி நின்றாலும்.. உன்மனதில் நான் வரவில்லை... நாச்சியப்பனுடன் பேசியபடி அவனுடைய சைக்கிளின் பின்பக்க இருக்கையில் மீனாட்சி உட்க...

166
ஊனுருக பாடி நின்றாலும்..
உன்மனதில் நான் வரவில்லை...


நாச்சியப்பனுடன் பேசியபடி அவனுடைய சைக்கிளின் பின்பக்க இருக்கையில் மீனாட்சி உட்கார்ந்து கொள்ள... நாச்சியப்பன் அவளுக்குத் தணிவாகப் பதில் சொல்லியபடி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.. மறந்தும் ஷோபாவின் பக்கமாக அவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை... அதைக் கவனிக்கும் நிலையிலும் ஷோபா இல்லை...
தூரத்தில் புள்ளியாக அவர்கள் மறைவதை பார்த்தபடி அசையாமல் நின்றவளின் அருகே வந்த அவளின் கணவன் கோகுல்..
"ஹீ ஆர் தே..?" என்று விசாரித்தான்...
"என் ரிலேடிவ் வீட்டில சர்வன்டா இருக்கிறாங்க.."
"சர்வண்ட்ஸ் கூடவா இத்தனை நேரம் ஸ்பெண்ட் பண்ணின..?"
அவன் ஆட்சேபமாகி பேசியதற்கு ஷோபா பதில் பேசவில்லை...
"இங்கே உன் ரிலேடிவ்ஸ் இருக்கிறாங்கன்னு நீ சொல்லவே இல்லையே..."
அடுத்த கேள்வி கோகுலிடமிருந்து கிளம்பி வர... லேசாக எரிச்சல் பட்டாள் ஷோபா...
"நீங்க கேட்கவில்லையே..."
"ஓ..."
அவ்வளவு பேசியதே அதிகம் என்பதைப் போல அவன் தோளைக் குலுக்கிக் கொண்டு மௌனமாகி விட்டான்.. அவர்கள் இருவரும் மௌனமாக காரை நோக்கி நடந்தார்கள்...
அடிக்கடி அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் மௌனத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தாள் ஷோபா.. வெறுமையான இந்த வாழ்வை... இன்னும் எத்தனை நாள்தான் போலியான் சிரிப்புடன் வாழ்வது என்று அவளுக்கு அலுப்பாக இருந்தது.. கடந்து போகும் கசப்பான நிகழ்வுகளை புரட்டிப் போட்டு புது வாழ்வு வாழ்ந்திடும் நாள் அவளுக்கு வாய்த்திடுமா என்ற வழிவகையே அவளுக்குத் தெரியவில்லை...
நினைத்தால் வெளிநாட்டிற்குப் பறப்பவன்.. அரிதாக குற்றாலம் போக நினைத்தது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.. அந்தக் குற்றாலப் பயணத்தையும் அவளுடன் போக நினைத்ததில் அதைவிட ஆச்சரியப் பட்டுப் போனாள்...
அரிதிலும்... அரிதாக அவனே அழைத்ததில் அவனுடன் கிளம்பி குற்றாலம் வந்திருந்தாள்.. வந்த இடத்தில் உறவினர்வீட்டைப் பற்றி அவள் சொல்ல வில்லையே என்று அவன் கேட்டால் அவள் அதற்கு என்ன பதிலைச் சொல்வாள்...?
ஹோட்டல் அறைக்குத் திரும்பியதும் அவன் யாருடனோ செல்போனில் பேசிவிட்டு படுத்துத் தூங்கி விட்டான்... ஷோபா பால்கனிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள்.. சுற்றிலும் தெரிந்த குற்றால மலையின் பசுமையழகு அவள் மனதைக் கவரவில்லை... மாறாக.. ராதிகாவின் வெற்றிகரமான திருமண வாழ்வே அவள் மனதைப் போட்டு உறுத்திக் கொண்டிருந்தது...
கையிலிருந்த செல் போனைப் பார்த்தவளின் மனதில் ஒர் எண்ணம் பளீரென உதயமானது... முகம் ஒளிர.. செல்போனை எடுத்து குறுஞ்செய்தியொன்றை அனுப்பி முடித்தாள்... சற்று நேரத்தில் அவள் எதிர்பார்த்தபடி செல் போன் ஒலித்தது...
"ஷோபா..." என்றான் சங்கர்...

கைகளை முன்னால் கட்டியபடி புருவங்கள் முடிச்சிட... ஷோபா சொன்னதை கவனமாக கேட்டான் சங்கர்...
"இது ராதிகா பேசிய பேச்சுத்தான் சங்கர்... காலேஜில் எங்க கிளாஸ் மேட்டிடம் இதைப் பேசினா.. நான் ரெகார்டு பண்ணிக்கிட்டேன்..."
"எதுக்காக..? நிச்சயமாய் எனக்கு அனுப்புவதற்காக ரிகார்டு பண்ணியிருக்க மாட்ட..."
"ஷ்யூர்... இதை பாலமுரளிக்கு அனுப்பினேன்...."
"மை.. காட்..!"
சங்கருக்கு அணைத்தும் விளங்கியதைப் போல இருந்தது... தெளிவில்லாமல் அவன் அத்தனை நாளும் அலைந்தது தெளிவாகி விட்டதைப் போல அவன் உணர்ந்தான்...
"ஏன் அப்படிச் செய்தாய் ஷோபா..?"
"உங்களுக்கும்.. ராதிகாவுக்கும் இடையே நடக்கவிருந்த மேரேஜை நிறுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை..."
"என்ன காரியம் செய்துட்ட ஷோபா.. கடைசியில் உன்னால்தான் அந்த முரளியிடம் ராதிகா மாட்டிக் கொண்டாளா..?"
"ம்ம்ம்..."
"இப்போதுதான் எல்லாம் புரிகிறது.. அந்த முரளி ராதிகாவை ஏதோ ஒருவகையில் மிரட்டிப் பணிய வைத்திருக்கிறான்..."
'உன் தலை..!' என்று நினைத்துக் கொண்டாள் ஷோபா...
'போடா மடையா..! அவள் முரளியைத்தான் காதலித்திருக்கிறாள்... அது தெரியாம பேக்கு போல நான்தான் முரளியைத் தூண்டிவிட்டு அவளை மேரேஜ் பண்ணிக்கிற அளவுக்கு கொண்டு போய் விட்டுட்டேன்.. அது தெரியாம பினாத்தாதே...'
"என்மேல் ராதிகாவுக்கு விருப்பமில்லையோன்னு என் மனதில் ஒரு மூலையில் எண்ணம் இருந்தது... அது இன்றைக்குத்தான் கிளியராச்சு... அவள் என்னை இந்த அளவுக்கு விரும்பியிருக்கிறாளா..? எனக்கு இது தெரியாமல் போச்சே..."
'இப்பத் தெரிஞ்சுக்கிட்டேயில்ல.. போ.. போய் அவள் பின்னால்.. சுத்து.. கடலை போடு.. முரளிக்கும்.. அவளுக்கும் நடுவில் பள்ளம் பறித்து விடு...'
ஷோபாவுக்கு அதுதான் வேண்டியிருந்தது.. அத்தனை நாளும் அவனிடம் வெளிப் படுத்தாத ராதிகாவின் பேச்சை அன்று அவள் வெளிப் படுத்தியதற்கான காரணம் அதுதான்...
அவள் மனதிற்கு மிக நன்றாகத் தெரியும்.. ராதிகா அந்தப் பேச்சை பொய்யாகத்தான் பேசினாள் என்பது..
அந்தப் பேச்சின் வாயிலாக ஷோபாவின் பொறாமையுணர்வை தூண்டிவிட அவள் முயன்றாள்.. சங்கருடனான ராதிகாவின் திருமணப் பேச்சைப் பற்றிய செய்தியை ஷோபா அறிந்தால் எந்தவகையிலாவது அதை தடுத்து நிறுத்தி விடுவாள் என்ற கணிப்பின்படியே அவள் அதைப் பேசினாள்...
இதையெல்லாம் என்றோ ஷோபா அறிந்து கொண்டிருந்தாள்.. ஆனால் அந்த உண்மையை பாலமுரளியிடமும்.. சங்கரிடமும் வெளிவிட.. அவளென்ன முட்டாளா..?
"தேங்க்ஸ் ஷோபா..."
'இது எதுக்குடா..?'
"காலம் கடந்தாவது இந்த உண்மையை எனக்கு நீ சொன்னாயே..."
'இது உண்மையே இல்லைடா.. அவ சும்மா ஒரு ஜீஜீபி வேலையைக் காட்டி அவ நினைத்ததை சாதிச்சுக்கிட்டா.. அது தெரியாம நான் முரளியையும் கோட்டை விட்டேன்.. உன்னையும் கோட்டை விட்டேன்..'
"எனக்கு இது போதும்..."
'எனக்கும் இது போதும்டா.. இப்படியே நீ உருகிக்கிட்டு இரு.. நீயும் நிம்மதியா தூங்க மாட்ட.. அவளையும் நிம்மதியா தூங்க விடமாட்ட.. எனக்கு வேறென்ன வேனும்..? நீயே சொல்லு...'
"உன்னால் முடிந்ததை நீ செய்து விட்ட.."
'கொஞ்சமா.. நஞ்சமா..? நிறையச் செய்து விட்டேன்.. ஆனாலும் அவளை அசைக்க முடியலையே.. ஆலமரம் போலயில்ல.. அசையாம நிற்கிறா.. உன்னால முடிஞ்சதை உன் பங்குக்கு நீயும் கொஞ்சம் செய்து பாரு..'
"இந்தப் போன் பேச்சு மட்டும்தான் இனி எனக்கு ஆறுதல்..."
'எனக்கும் அதுதாண்டா ஆறுதல்...'
"குட்பை.. ஷோபா..."
'மகராஜனாய் போயிட்டு வா..' என்று மனதில் சொல்லிக் கொண்ட ஷோபா..
"குட்பை சங்கர்.." என்று முகம் மலர விடை கொடுத்தாள்...

அவள் ஹோட்டலுக்குத் திரும்பிய போது கோகுல் விழித்திருந்தான்... சூடான காபியை வரவழைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தவன்.. அவளை நிமிர்ந்து பார்த்து புருவம் சுருக்கினான்..
"எங்கே போயிருந்த..?"
"ஜஸ்ட் எ வாக்கிங்..."
"ஓஹோ..."
அதற்கு மேல் கேட்க எதுவுமேயில்லாததைப் போல அவன் காபியில் கவனமாகி விட.. ஷோபா பெருமூச்சுடன் டிவியை உயிர்ப்பித்தாள்...

மீனாட்சி சொன்னதைக் கேட்ட ராதிகா யோசனையானாள்...
"நிஜமாகவே நீ ஷோபாவைப் பார்த்தியா...?"
"பின்ன.. பொய்யாவா பாத்தேன்..? ஏன் சின்னம்மா நீங்க வேற என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறிங்க.. அந்தக் கருமத்தைப் பாத்தேன்னு சும்மா சொல்ல எனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு..?"
"அதுக்கில்ல மீனாட்சி.. அவ வந்திருந்தா.. வீட்டுப் பக்கம் வந்திருப்பாளே.. அதுதான் கேட்டேன்.."
"உங்களுக்கு அது வேற குறையாயிருக்கா..? ஏம்மா.. அது வந்து போனா வீடு தாங்குமா..? நீங்க வேற பிள்ளைத்தாய்ச்சிப் பொண்னா இருக்கீங்க... இப்பப் போயி ரோதனை வேணுமாம்மா..?"
"அடடா.. அவ அத்தைக்கு சொந்தக்காரி மீனாட்சி.. அதை நினைப்பில வைச்சுக்கிட்டுப் பேசு..."
"அதையெல்லாம் என்னால நினைப்பில வைச்சுக்க முடியாதும்மா.. மனுஷியாம்மா அந்த ஜென்மம்..? என் கண்ணுக்கு முன்னாலேயே.. என் புருசன் மேல கை போடுதுங்கறேன்.. அதை உணக்கையாய்.. கேட்டுட்டு.. அது விருந்தாடிக்கிட்டு வரலையான்னு என்கிட்டயே.. எதிர்கேள்வி கேட்கறிங்க.. நல்லா இருக்கும்மா உங்க நாயம்..!"
"ஐயோ மீனாட்சி.. நான் அந்த அர்த்தத்தில சொல்லலை..."
"எனக்கொன்னு நல்லா புரிஞ்சு போச்சும்மா..."
"அது... எது...?"
"தலைவலியும்... காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்கிறது..."
"இப்ப எதுக்காக காய்ச்சலைக் கட்டி இழுக்கிற..? நான் நிம்மதியா நடமாடினா உனக்குப் பொறுக்காதா..?" 
"ஏம்மா பேசமாட்டிங்க.. அவ கையைப் போட்டது என் மச்சானோட தோள் மேலதானே... அதுவே.. உங்க கண்ணுக்கு முன்னாலே ஐயா தோள் மேல அவ கையைப் போட்டிருந்தா இப்படித்தான் அமைதியா வெட்டி நாயம் பேசிக்கிட்டு இருந்திருப்பீங்களாக்கும்...?"
மீனாட்சியின் மனச்சடவு புரிய.. ராதிகா அவளைச் சமாதானப் படுத்துவதில் முனைப்பாக இறங்கினாள்...
"இதோ பாரு மீனாட்சி.. நம்ம வீட்டுக்கு வந்திருந்தப்ப அவ ஆடின ஆட்டத்தை நீயே நேரில பார்த்ததானே... உங்க ஐயா மேலே அவ கையைப் போட யோசிக்கிற ஆளா..?"
"அதைச் சொல்லுங்க..."
"உங்க ஐயா அதுக்கு இடம் கொடுக்கலை..."
"ம்ஹீம்.. ராமனைப் போல புருசன் வந்து உங்களுக்கு வாய்ச்சிருக்கார்... எனக்கும் வந்து ஒன்னு வாய்ச்சிருக்கே..."
மீனாட்சி விட்ட அனல் பெருமூச்சில் அந்தச் சுற்றுப் புறமே சூடாகிக் கொண்டிருந்த அந்த உச்சி மதிய வேளையில் அவளுக்கென்று வாய்த்திருந்த நாச்சியப்பன் வீட்டுக்குள் நுழைந்து தொலைத்தான்...
"இதோ.. நாச்சியப்பனே வந்தாச்சே..."
தப்பித்தோம்.. பிழைத்தோமென்று ராதிகா கை காட்ட.. திரும்பிப் பார்த்த மீனாட்சியின் முகத்தில் வெடித்த எள்ளையும் கொள்ளையும் கண்டு.. நாச்சியப்பன் திடுக்கிட்டான்...
"என்னடி மீனாட்சி..?"
"ஏன் அதோட நிறுத்திட்ட மச்சான்.. அடுத்து 'சொன்னது என்னாச்சு'ன்னு பாட வேண்டியதுதானே.. உன் பாட்டைக் கேட்டுக் கேட்டுத்தானே இந்தக் கதிக்கு ஆளாகியிருக்கேன்..?"
"ஏண்டி.. உன் கதிக்கு என்ன குறை..?"
"உன்னப் போல ஒரு புருசனை கல்யாணம் கட்டிக்கிட்டேனே அதுதான் குறை..."
"அடிச்சுப் பல்லைக் கழட்டிருவேண்டி..."
"அதைத்தானே அந்தக் காலம் முதலா.. இந்தக் காலம் வரைக்கும் ஆம்பளைக செஞ்சுக்கிட்டு இருக்கீங்க..?"
"உனக்கு என்னதாண்டி ஆச்சு...?"
"அவ கையைப் போட்டா.. தட்டி விட தைரியமில்ல.. அதுக்கு நீளாத கை.. என் பல்லைக் கழட்ட மட்டும் நீளுமோ..?"
எது நீளுமோ... நீளாதோ.. மீனாட்சியின் வாய் மட்டும் எட்டு ஊரின் பரப்பளவுக்கு நீளும் என்பதை அறிந்திருந்த நாச்சியப்பன் தலையில் கை வைத்துக் கொண்டான்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...!, -166
அம்மம்மா.. கேளடி தோழி...!, -166
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-166.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-166.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy