அம்மம்மா.. கேளடி தோழி...! -164

164 அவன் பார்த்த பார்வைகளில் என் உயிர் வாழ்ந்ததென்ன தோழி..! காய்ந்த தென்னை மரக் கிளைகள் விழுந்த கிடக்க.. அவற்றைத் திரட்டி ஓரமாகப் போட்...

164
அவன் பார்த்த பார்வைகளில்
என் உயிர் வாழ்ந்ததென்ன தோழி..!


காய்ந்த தென்னை மரக் கிளைகள் விழுந்த கிடக்க.. அவற்றைத் திரட்டி ஓரமாகப் போட்டுக் கொண்டிருந்தான் நாச்சியப்பன்.. காய்ந்த தென்னங்கீற்றுக்களை கத்தியால் சீவி.. விளக்குமாறாக மாற்றிக் கொண்டிருந்தாள் மீனாட்சி.."
சிட்டுக் குருவியின் சுறுசுறுப்போடு வேலை செய்து கொண்டிருந்தவளைப் பார்த்த நாச்சியப்பன் அவளைக் கடிந்து கொண்டான்..
"ஏ..புள்ள.. எதுக்காக இப்படி விரல் நோக கீத்தை அறுத்துக்கிட்டு இருக்கிறவ..?"
"ஊம்..? பார்த்தாத் தெரியல.. விளக்குமாற செஞ்சுக்கிட்டு இருக்கேன் மச்சான்.."
அவளது 'மச்சான்' என்ற அழைப்பில் மயங்கிப் போனான் நாச்சியப்பன்.. கைவேலையை விட்டுவிட்டு.. அவளருகே வந்து தென்னை மரத்தின் அடியிலிருந்த கனமான வேர்த்திண்டில் அமர்ந்தவன் அவள் மீது ஒரு சுள்ளியை விட்டு எரிந்தான்...
அது அவள்மேல் பட்டுத் தெறிக்க.. அவள் சரசமாகச் சிரித்தாள்..
"ஏண்டி.. எதுக்காக இந்த வேலைக் கழுதய அதிகப் படுத்திக்கற..?"
"தோப்பைக் காவல் காக்கிற பொறுப்பு நம்மளது... இதில இருக்கிற காய்க்கு மட்டும்தான் நாம கணக்குக் கொடுக்கணும்... மத்தபடி இந்த காய்ஞ்சு போன கீத்துக்கள்ளாம் கணக்குச் சொல்ல வேணாமுன்னு பெரியம்மா சொல்லிட்டாங்க.. மட்டயத்தான் சூளைக்கு அனுப்பனுமே..."
"அதுக்கு..?"
"புரியாம பேசாதே மச்சான்.. இந்த காய்ஞ்சுபோன மட்டையில நம்ம வீட்டு விரகுக்கானது போக மிச்சத்தை செங்கச் சூளைக்கு அனுப்பனும் காய்ஞ்சு போன தென்னங்கீத்தில விளக்குமாற்றை செஞ்சு.. சந்தையில வித்தா காசு கிடைக்கும்.."
"ஏன்புள்ள.. காசு கிடைக்குதுங்கிறதுக்காக.. உடம்பு நோக நீ வேலையைக் கூட்டிக்கனுமா..?"
"அங்கே மட்டும் என்னவாம்..? இந்த விட்ட விடியக்காலைல எதுக்காக நீ மட்டையைச் சேர்க்கிற..?"
"செங்கல் சூளைக்கு காய்ஞ்ச மட்டய அனுப்பனும்டி.."
"இத்தனை நாளா இத ஏத்திப் போக மர வண்டி வரும்.. இப்ப நீ வண்டிய வாடகைக்கு எடுத்து நீயே ஏத்திப் போக ஆரம்பிச்சிருக்கயே.. அது எதுக்காம்..?"
"என்னடி புள்ள.. தெரியாததைப் போலக் கேட்கிறவ.. அதுக்கான கூலிய தனியா எடுத்துக்கலாமில்ல.."
"அதத்தான் நானும் செய்யறேன்.."
"ஏண்டி.. இதுக்கா உன்ன நான் கட்டிக்கிட்டு வந்தேன்..? ஏண்டி வேலையைக் கூட்டிக்கறே..?"
"நீயேன் கூட்டிக்கறே.."
"நான் உனக்குப் புருசன்.. நேத்து வரைக்கும் ஓண்டிக்கட்ட.. பார்த்த வேலைய மட்டும் பார்த்தேன்.. இன்னைக்கு அப்படியா.. உன் கழுத்தில தாலியக் கட்டி குடும்பமா ஆயிட்டேன்.. நாளைக்கே நமக்கு புள்ள குட்டி பொறக்கும்.. குடும்பச் செலவு அதிகமாகும்.. அதுக்கெல்லாம் சம்பாத்தியத்தை அதிகப் படுத்திக்க வேணாமாடி.."
நாச்சியப்பனின் பொறுப்பான பேச்சில்.. அவன்மீது வாஞ்சை கொண்டாள் மீனாட்சி..
"ஏன் மச்சான்.. உனக்கே இம்புட்டுப் பொறுப்பு இருந்தா.. பொம்பள எனக்கு எம்புட்டுப் பொறுப்பு இருக்கும்..? நானும்.. நாளைக்கு பொறக்கப் போற.. புள்ள குட்டிக்காகத்தான் இப்பவே சேர்த்து வைக்க ஆரம்பிக்கறேன்.."
அவனை சரசத்துடன் பார்த்தபடி.. அவள் தென்னங்கீற்றை நேர்த்தியாகக் கிழித்துக் கொண்டிருந்தாள்.. அவளின் அந்தச் செய்கையில் நாச்சியப்பனின் மனதில் மோகத்தீ மூண்டெழுந்தது..
" நாளப் பின்ன புள்ள குட்டி பொறக்கப் போகுதுன்னு காசு சேர்த்து வைக்கறியே.. அதுக்கு முதல்ல.. புள்ள குட்டி பொறக்கிறதுக்கான வழியை யோசிக்கறயா..?"
நாச்சியப்பனின் விகடப் பேச்சில் மறைந்திருக்கும் மறைமுக அழைப்பைப் பற்றி மீனாட்சிக்கா தெரியாது..? அவனுக்கே அவ்வளவு தெரியும்போது.. அவளுக்கு எவ்வளவு தெரியும்..!
"நான் மட்டும் யோசிச்சு என்ன கதைக்கு ஆகப் போகுது மச்சான்..? நீயுமில்ல சேர்ந்து யோசிக்கனும்.."
அவள் போட்ட போட்டில் அயர்ந்து விட்டான் நாச்சியப்பன்...
"மீனாட்சி.."
வசிய மருந்தால் தாக்கப்பட்டவன் போல.. மீனாட்சியின் அருகே நகர்ந்து அவள் இடுப்பை வளைத்துக் கொண்டவனை பொய் கோபத்துடன் முறைத்தாள் மீனாட்சி..
"தள்ளி உட்காருய்யா.."
"அது எதுக்கு..?"
"வேலையாய் இருக்கேன்.. கண்ணுக்குத் தெரியுதா..?"
நாச்சியப்பனின் கண்ணுக்கு தெரிந்ததெல்லாம்.. அவளது இழுத்துச் செருகியிருந்த புடவையில் கீழாகத் தெரிந்த அவளின் முழங்கால்களும்.. இடுப்பும்தான் என்பதைத் தெரிந்து கொண்டே அவள் நொடித்தாள்..
"அதை அப்புறமாய் பார்த்துக்கலாம்டி.." அவன் கெஞ்சினான்..
"ம்ஹீம் உனக்கு வாக்கப்பட்டு.. இந்த தென்னங்கீத்தை அறுக்கிறதத் தவிர வேற எதை நான் பார்த்தேன்..?" அவள் வேண்டுமென்றே பெருமூச்சை விட்டாள்..
"எதைடி பார்க்கனும்..?" அவளைப் பார்வையால் மேய்ந்தபடி நாச்சியப்பன் கேட்டான்.
"கூப்பிடு தொலைவில குத்தாலத்தை வைச்சுக்கிட்டு கேப்பய்யா.. கேப்ப.." மீனாட்சி பொய் கோபம் கொண்டாள்..
"அதான் ரெண்டு வாரத்துக்கு ஒருதரம்.. சின்னம்மா வோட தம்பி... தங்கைகளுக்கு காவலா போயிட்டு வாரோமில்ல புள்ள..?" நாச்சியப்பன் கேட்டான்..
"யோவ்.. காவலாத்தான் போறோம்.. காதலா போகலை.." மீனாட்சிக்கு உண்மையிலேயே கோபம் வந்து விட்டது...
"எப்படிடீ.. இப்படியெல்லாம் பேசக் கத்துக்கிட்ட..?"
மனைவியின் வாக்குச் சாதுர்யத்தில் மகிழ்ந்து போய்விட்டான் நாச்சியப்பன்..
" உனக்கு கழுத்தை நீட்டியிருக்கேனில்ல.. அதான்.. உன் அறிவுக் காத்துப் பட்டு.. நானும் அறிவுக் களஞ்சியமாயிட்டேன்.. ஏன்ய்யா.. நானும்.. நீயும் தன்னந்தனியா.. ஒருதரமாவது குத்தாலத்தில குளிச்சு வந்திருக்கோமாய்யா..?"
மீனாட்சியின் கேள்வியில் தொனிந்த ஆதங்கத்தில் நாச்சியப்பன் ஆதங்கப் பட்டுப் போனான்..
"நிசம்தாண்டி.. இது ஏன் என் மரமண்டைக்கு உறைக்காமப் போச்சு..?" தன் பின்னந்தலையில் ஒரு போடு போட்டுக் கொண்டான் அவன்..
"அதான்ய்யா.. மரத்தோடு.. மரமா பொழப்பு நடத்தறியில்ல.. அதான் உனக்கு மரமண்டையாப் போயிருச்சு.. பொண்டாட்டி மேல.. ஆசையே இல்லாம அலையற.. அதனால எனக்கும் உன் மேல ஆசையில்லாம போயிருச்சு.."
அவனின் ஆசையின் அளவைத் தெரிந்திருந்தும்.. வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுத்தாள் மீனாட்சி..
அவள் கைவேலையை முடித்திருந்தாள்.. செய்து வைத்திருந்த விளக்கு மாற்றுக் கீற்றுக்களை.. தனித்தனியாக பிரித்து அடுக்கி.. நாறால் இருக்கிக் கட்டி.. வரிசைப்படுத்தி அடுக்கி முடித்திருந்தாள்.. அதிக அளவில் கற்றைகள் சேர்ந்திருந்ததில் அவள் மனதிற்குள் திருப்தி வந்திருந்தது... வேலை முடிந்து விட்ட விடுதலையுணர்வில் அவள் மனம் சிட்டுக்குருவியாக விட்டுச் சிறகடித்தது.. அவள் தேகம் நாச்சியப்பனுடன் கூடுவதற்கான கூடலுக்காக விழைந்தது.. மனதின் நினைவுகள் அவளுக்குள் எழுப்பிய உணர்வலைகளில் அவள் சிருங்காரத்தை உணர்த்தியவளாக எழுந்து நின்றாள்..
" உனக்காடி என்மேல ஆசையில்ல..?"
அவளைத் தொட்டு இழுக்க அவன் முயன்றபோது.. அவள் போக்கு காட்டி விலகி ஓடினாள்.. ஓடினவளின் சேலை முந்தானை அவன் கையில் அகப்பட்டுக் கொள்ள.. அவன் வசமாக அதைப் பிடித்து சுண்டியிழுந்தான்.. அவன் மேல் பூமாலையாக அவள் விழுந்தாள்..
"அம்மாக் கண்ணு..
    சும்மா சொல்லு..
ஆசையில்லையோ...
     என்மேல் ஆசையில்லையோ...
உன்னை அள்ளிக்
     கட்டிக் கொள்ளும் போது
எண்ணம் வல்லையோ...
    அந்த எண்ணம் வல்லையோ..."
அவன் கேலிக்குரலில் பாடியபோது.. அவனது ஆண்மைநிறைந்த அந்த அணுகுமுறையில் அவள் கிளர்ச்சி கொண்டாள்.. யாருமற்ற தோப்பின் தனிமையில்.. மனதுக்குப் பிடித்தவனுடன் கூடுவதில் உள்ள சுகத்தை அறிந்திருந்தவளின் உடல்.. அந்தக் கூடலுக்கான துடிப்பை அவளுக்குள் உணர்த்திக் கொண்டிருந்தது..
"ஏதோ சொன்னேன்..
     கோபம் கொண்டேன்..
பாசமில்லாம...
    நீங்க இப்போச் சொன்னா..
எதுவும் செய்வேன்
    கோபம் கொள்ளாம..."
அவளின் காதலை அவள் உணர்த்தி விட.. அவனுக்குள் மோகவெறி பொங்கி எழுந்தது.. அடங்காத முரட்டுக் காளையைக் கூட அடக்கி விடலாம்.. ஆனால்.. அடங்காத கன்னி மனத்தை அடக்கி அடைவது எத்தனை சிரமமான காரியம் என்பதைப் புரிந்து வைத்திருந்த நாச்சியப்பன்.. ஆண்மையின் கர்வம் கொண்டான்.. அவளை வெற்றி கண்டுவிட்ட மமதை அவன் குரலில் தெரிய..
"ஆஹா.. ராணி உன்னப்போல
   ஒரு ராசாத்தி உண்டோ..?"
அவளை இடுப்பில் கை கொடுத்து அலேக்காக அவன் தூக்கி.. அவன் தோளுக்கு மேலே உயர்த்தினான்...
"ஆஹா... மாமா..! உன்னப்போல
  நல்ல மாப்பிள்ள உண்டோ..?"
அவன் தோளிரண்டில்.. கையிரண்டையும் ஊன்றி அவன் முகம் பார்த்துப் பாடினாள் மீனாட்சி...
"நானா வந்து.. தானா நின்னா...
    நல்லாயில்லையின்னு..
நான் ஓடிப்பார்த்து.. ஒளிஞ்சு பார்த்து..
     வந்தேன்.. சொந்தமின்னு..."
பாடல் வரிகளில் மீனாட்சி அவளை வெளிப்படுத்திக் கொண்டிருக்க... கைதட்டல் சத்தம் பலமாக கேட்டது...
'யாரது..?'
கொலைவெறியோடு திரும்பிப் பார்த்த நாச்சியப்பன்.. பாலமுரளியும்.. ராதிகாவும் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் அவசரமாக மீனாட்சியை இறக்கி விட்டான்...
அவளும் அவன்மேல் சரிந்து இறங்கி.. இன்பமான இம்சையை அவனுக்குள் கிளப்பி விட்டு.. தன் பங்குக்கு அவனுக்கு தனிமை கிடைக்காத கடுப்பை கிளப்பி விட்டாள்...
"தூள் கிளப்பிட்ட மீனாட்சி..." ராதிகா கேலி செய்தாள்...
"இவன் மட்டும் சம்மாவா..? ஆனானப்பட்ட மீனாட்சியையே அடக்கி ஆண்டிட்டானில்ல..", பாலமுரளி நாச்சியப்பனை பாராட்டினான்...
"தோப்புப் பக்கம் போகலாமுன்னு நான் சொன்னேன் மீனாட்சி.. அங்கே என்ன இருக்குன்னு இவர் கேட்டார்.. மீனாட்சி இருக்கான்னு நான் சொன்னேன்.. இங்கே வந்து பார்த்தா 'டூயட்' பாட்டே இருக்குது.. அட..அட.. அடா.. என்னமா பாடின மீனாட்சி.. உன் எக்ஸ்பிரசனைப் பார்த்து அசந்து போயிட்டேன்... தெரியுமா..?" ராதிகா கைகளை ஆட்டியாட்டிப் பேசினாள்..
"கேலி பண்ணாதீங்க சின்னம்மா..!"
பாலமுரளியின் முன்னால் டூயட் பாடி மாட்டிக் கொண்ட வெட்கத்தினால் தலைகவிழ்ந்து நின்றிருந்தாள் மீனாட்சி...
"எளநீ.. வெட்டட்டுமாங்கய்யா..?" அரை மனதாக கேட்டான் நாச்சியப்பன்...
"அதைக் குடிச்சா.. எங்க வயிறு குளிரும்.. மனசு குளிராது.. உன் தனிமையைக் கெடுத்துட்டோமோன்னு தோணும்.. அதனால அப்புறமா இளநீக்குலையை வெட்டி வீட்டுக்கு அனுப்பு.. நானும் ராதிகாவும் இப்ப அருவிக் கரைக்குப் போகிறோம்..."
பாலமுரளியின் முடிவைப் பாராட்டிய பாராட்டுதல் ராதிகாவின் விழிகளில் தெறித்து விழுந்தது... அவர்கள் அந்தப் பக்கமாக நகர.. இந்தப் பக்கமாக.. அவசரத்துடன் மீனாட்சியை இழுத்துக் கொண்டு தோப்பு வீட்டுக்குள் நுழைந்தான் நாச்சியப்பன்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -164
அம்மம்மா.. கேளடி தோழி...! -164
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-164.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-164.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy