அம்மம்மா.. கேளடி தோழி. -163

163 சாய்ந்து கொள்ளத் தோள் தேடி.. கால் சளைக்க நடந்து விட்டேன்... ராதிகாவின் அமைதியில் கிருஷ்ணமூர்த்தி கூட நிமிர்ந்து அவளைப் பார்த்தார்....

163
சாய்ந்து கொள்ளத் தோள் தேடி..
கால் சளைக்க நடந்து விட்டேன்...


ராதிகாவின் அமைதியில் கிருஷ்ணமூர்த்தி கூட நிமிர்ந்து அவளைப் பார்த்தார்.. என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் தவித்துக் கொண்டிருக்கையில் அவளை மீட்பதைப்போல முரளி உதவிக்கரம் நீட்டினான்..
"அது ஒன்னுமில்ல அத்தை.. ஹேமாவோட கல்யாணத்துக்கு எங்களால போக முடியல.. அவளுக்கு அந்த கோபம்..."
"அப்படியா ராதிகா..?" ராஜேஸ்வரி கேட்டாள்..
"ஆமாம்மா..." ராதிகா நன்றியுடன் கணவனைப் பார்த்தாள்...
"அப்ப.. நீயாவது அவளைப் பார்க்க போயிருக்கலாமில்ல..?" ராஜேஸ்வரி விடவில்லை...
"எப்படிப் போவாங்க..?"
எப்போதும் போல மீனாட்சி.. முந்திரிக் கொட்டையாக மூக்கை நுழைத்தாள்...
"இதென்ன கேள்வி மீனாட்சி.. காரில போகனும்.. இல்லேன்னா நடந்துதான் போகனும்.." கீதா பதில் கொடுத்தாள்...
"ரெண்டும் சரிதான்ம்மா.. அதுக்கு முதல்ல உடம்பு சொகமாயிருக்கனுமில்ல.. அதானே முக்கியம்..?"
மீனாட்சி அலட்டிக் கொள்ளாமல் கேட்டதில் ராஜேஸ்வரி பதறி விட்டாள்...
"உடம்பு சுகமில்லாம இருந்துச்சா..? எப்ப ராதிகா..? ஏன் என்கிட்டச் சொல்லலை...?"
"ஒருநா.. ரெண்டு நான்னா சொல்லியிருப்பாங்க.. இவங்கதான் சரக்குன்னா காய்ச்சலில் விழுந்துருவாங்களே.."
மீனாட்சி அதிர்வெடியைப் பற்ற வைக்க.. ராதிகாவின் பிறந்த வீட்டினர் சாப்பாட்டை மறந்தார்கள்..
"இவ காய்ச்சலில் விழுவாளா..? இருக்காதே... இவதானே மத்தவங்கள காய்ச்சலில் விழவைப்பா.." கீதா யோசனையுடன் தமக்கையை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்..
"அக்காவுக்கு காய்ச்சல் வர சான்ஸே இல்லை மீனாட்சியக்கா.." சுந்தர் அடித்துச் சொன்னான்..
"ராதிகா ஆரோக்கியமானவ.. எங்க வீட்டில இருந்தப்ப இவ தலைவலின்னு கூடச் சொன்னதில்ல.." ராஜேஸ்வரி மனதை மறைக்காமல் பேசிவிட்டாள்..
ராதிகாவுக்கு பயம் வந்து விட்டது.. இந்த வார்த்தைகளை புகுந்த வீட்டில் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற கவலையுடன் அவள் மேகலாவைப் பார்த்தாள்..  அவள் முகத்தில் வேறொரு கவலை சூழ்ந்திருந்தது.. மருமகளுக்கு காய்ச்சல் வரும் மர்மத்தை அவள் அறிந்து வைத்திருந்ததால்.. அதை மறைத்து எப்படிப் பேசுவது என்ற தவிப்புடன் அவள் மகனைப் பார்த்தாள்..
'இவனால்தான் எல்லா வினையும்.. கோபம் வந்தா கண்ணு.. மண்ணு தெரியாம கையை நீட்டி வைச்சு.. பெண்டாட்டியை காய்ச்சலில் விழ வைப்பான்.. அந்தக் கதையை பெண்ணைக் கட்டிக் கொடுத்தவங்ககிட்டச் சொல்ல முடியுமா..?'
முரளிக்கு எந்தவிதக் கவலையுமில்லை.. அவன் இயல்பாக கீதாவைப் பார்த்துப் புன்னகை செய்தான்..
"உங்க அக்காவுக்கு வந்த காய்ச்சலைப் பத்தி ஏற்கனவே உன்கிட்டச் சொல்லியிருக்கேனே கீதா.."
"ஆமாம் அத்தான்.. எனக்கும் நினைவிருக்கு.. அப்பவே இவளுக்கும் காய்ச்சலுக்கும் காத தூரம்ன்னு நானும் சொன்னேனே.. உங்களுக்கு அது நினைவில்லையா..?"
"உனக்கே நினைவிருக்கும்போது எனக்கு மட்டும் மறந்து போகுமா? எல்லாம் நினைவிருக்கு.. இவ உங்க வீட்டில இருந்தப்ப எல்லோறையும் அரட்டிக்கிட்டு இருந்தா.. அதனால காய்ச்சலும் இவளக் கண்டா காத தூரத்துக்கு ஓடிருச்சு.. எனக்குப் பெண்டாட்டியாகி என்கூட வந்த பின்னாலே.. எதைக் கண்டாலும் இவ அரண்டு நிக்கிறா.. அதான் காய்ச்சல் இவள போட்டுப் பார்த்துருச்சு.."
"அப்படியா ராது..?"
"இப்பக்கூடப் பாரேன்.. எப்படி அரண்டு போய் நிற்கிறான்னு.. தட்டைப் பார்த்து குருமாவை ஊத்துடி.."
"அட.. ஆமாம் அத்தான்.."
கீதா சிரிக்க.. பாலமுரளி பேச்சின் திசையை மாற்றி விட்டான்.. மாமியாரும்.. மருமகளும்.. நிம்மதிப் பெருமூச்சுடன் பரிமாறுவதை தொடர்ந்தார்கள்..  சாப்பிட்ட விருந்தினர் தூங்கப் போய் விட.. ராதிகா மாடியேறினாள்.. ஹேமாவின்  வீட்டிற்கு கீதாவும்.. சுந்தரும் போனதற்காக முரளி எப்படியெல்லாம் கோபித்தக் கொள்ளப் போகிறானோ என்ற பயம் அவளைப் பிடித்து ஆட்டி வைத்துக்கொண்டிருந்தது..
கதவைத் தாழிட்டுவிட்டுத் திரும்பிய போது.. முன்னறையில் லேப்-டாப்பை மடியில் வைத்துத் தட்டிக் கொண்டிருந்த முரளி அவளை அழைத்தான்..
"என்.. என்னங்க..?" பதட்டத்தில் ராதிகாவின் தொண்டை உலர்ந்து விட்டது..
"என்னாச்சு.. உனக்கு..?" விசித்திரமாக அவனைப் பார்த்தான் முரளி..
"ஒன்... ஒன்னுமில்லையே..." வார்த்தைகள் தந்தியடிக்க.. ராதிகா கண் கலங்கி விட்டாள்...
எந்தக் கடவுள் தந்த வரமோ.. கொஞ்ச நாளாகத்தான் அவன் அவளிடம் இணக்கமாகப் பேசிக் கொண்டிருக்கிறான்.. சுந்தரும்.. கீதாவும் செய்த ஹேமா வீட்டுப் பரவேசத்தால் அவளுக்கு என்னவெல்லாம் பாட்டுக் கிடைக்கப் போகிறதோ என்று அவள் மனம் கலங்கியது...
'இந்த மீனாட்சியைச் சொல்லனும்.. அவதான் அடிக்கடி வாய் வைத்தா.. இப்பல்லாம் சின்னம்மாவுக்கு காய்ச்சலே வரதில்லையேன்னு  ஏக்கப்பட்டுத் தொலைச்சா.. அவ ஆசைப்படி இன்னைக்கு ராத்திரியே  காய்ச்சல் வரப் போகுது...'
விடிவதற்குள் காய்ச்சல் வரப் போவது நிச்சயம் என்ற நினைவில் அவள் விழியில் நீர் முத்துக்கள் உருண்டு திரண்டன...
"என்னடி.. பித்துப் பிடிச்சாப்புல நிக்கிற..?"
"இல்லையே.."
"இல்லையா.. தண்ணி வேணும்னு திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.. நீ அசையாம நின்னுட்டு.. இல்லைங்கறியே..."
"அதில்லைங்க... நீங்க வேற ஏதும் கேட்கறிங்களோன்னு நினைச்சேன்"
"நினைப்ப.. நினைப்ப.. வரவர.. நீ ஒரு மார்க்கமாத்தாண்டி இருக்க.."
முரளியின் பேச்சில் துணுக்குற்ற ராதிகா.. அவசரமாக அவன் முகம் பார்த்தாள்.. அவன் அமைதியாக லேப்-டாப்பின் திரையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.. அவன் கேட்ட தண்ணீர் வராததில் நிமிர்ந்தவன்.. அவளது பார்வையைக் கண்டதும் புருவங்களை உயர்த்தினான்..
" ராதிகா..?"
" ஊம்.."
அவள் உடல் தூக்கிப் போட அவனைப் பார்த்ததும் அவனது புருவங்கள் முடிச்சிட்டன.. எழுந்து அவளருகே சென்று.. அவள் முகத்தை நிமிர்த்தி.. விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்..
அவற்றில் தெரிந்த சஞ்சலத்தில் என்ன நினைத்தானோ.. அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று படுக்கையில் அமர வைத்த விட்டு.. அவனாகவே தண்ணீர் ஜக்கை தேடி எடுத்துக் குடித்து முடித்தான்.. அவளிடமும் கொடுத்து குடிக்க வைத்தான்.. விளக்கை அணைத்து விட்டு.. அவளைத் தன் கை வளைவிற்குள் இழுத்துக் கொண்டான்..
"மானைப் போல மிரண்டு விழிக்கறியேடி.. என்கிட்ட உனக்கெதுக்கு பயம்..?"
ராதிகாவிற்கு தன் செவிகளையே நம்ப முடியவில்லை.. தூங்க விடாமல் விடியவிடிய குற்றப் பத்திரிக்கை வாசித்து உயிரை எடுக்கப் போகிறான் என்று எதிர்பார்த்து வந்தால்.. அவன் கனிவோடு கட்டி அணைக்கிறானே..
" உங்களுக்க என்மேல கோபமில்லையா..?" குழந்தையாக அவள் கேட்டாள்..
வயிற்றில் அவனது குழந்தையைச் சுமந்து  கொண்டு... குழந்தைபோல அவள் பேசிய விதத்தில் அவனக்கு சிரிப்பு வந்தது...
"எதுக்கு கோபம் வரனும்..?" விளையாட்டாக அவள் தலையில் முட்டினான் முரளி..
அந்த இதமான சூழ்நிலையைக் கெடுத்துக் கொள்ள ராதிகாவிற்கு விருப்பமில்லைதான்.. ஆனாலும்.. அதைச் சொல்லாமலிருக்க அவளால் முடியவில்லை..
"ஹேமா வீட்டுக்கு.. கீதாவும்.. சுந்தரும் போய் வந்திருக்காங்களே.. அதுக்கு கோபம் வரலையா..?"
அவள் சொல்லி விட்டாள்.. விலகி அவள் முகம் பார்த்தவனின் விழிகளில் ஆச்சரியம் மிதந்தது..
"அவங்கதானடி போய் வந்திருக்காங்க..? அதுக்கு உன்மேல எதுக்காக கோபப் படனும்..?"
அவன் கேள்வியில் ராதிகாவிற்கு மயக்கமே வந்து விட்டது...
'என்னடா இது.. எப்பயிருந்து இவன் இவ்வளவு நியாயக்காரனா மாறினான்..?'
இவ்வளவு குணசாலியாகவும் கணவன் பேசக்கூடும் என்பதை அது வரை அறிந்திராத ராதிகா மலங்க மலங்க விழித்தாள்..
ஹேமா என்ற பெயரைக் கேட்டாலே அவனுக்கு எரியும்.. அவன் வழியில் தென்பட்டு விட்டால்.. அன்று முழுவதும் ராதிகாவை அவன் வார்த்தைகளாலேயே வறுத்தெடுத்து விடுவான்.. வேறு வழியின்றி அவளைப் பேச அனுமதித்துவிட்டு.. அவளைத்தான் திட்டுவான்..
அப்படிப்பட்டவனா இப்படி நியாயம் பேசுகிறான்..?
"அவங்க தெரியாமப் போயிட்டாங்க.." அவள் தடுமாறி விளக்கம் சொன்னாள்..
"எனக்கும் தெரியும்டி.. நீ அலட்டிக்காம படுத்துத்  தூங்கு.." அவள் இமைகளில்  அவன் முத்தமிட்டான்..
"அதில்லைங்க.. அவங்களுக்கு.. அவ மேல பிரியம் ஜாஸ்தி.."
"சின்னவயசில இருந்து பார்த்துப் பழகிவைங்க மேல பிரியம் வருவது இயற்கைதானே ராதிகா.."
"அம்மாவும்... அப்பாவும் கூட அவ பேச்சைப் பேசிட்டாங்க..."
"அந்த அளவுக்கு அந்தப் பொண்ணு மேல பாசம் வைச்சிருக்காங்க... நீ.. தூங்கு"
ராதிகாவுக்கு அதற்கு மேல் பேச வேண்டிய தேவையில்லாமல் போய் விட்டது.. அவன் கோபப்பட மாட்டான் என்பதே அவளுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுக்க.. அவன் மார்பில் தலைவைத்துக் குழந்தை போலத் தூங்கி விட்டாள்.. அவளை அரவணைத்த முரளி.. அவள் தூங்கும் வரை அவள் முடி கோதிக் கொண்டிருந்து விட்டு.. தானும்  தூங்கிப் போனான்..
மறுநாள் பொழுது புலர்ந்தபோது.. என்றும் இல்லாத வகையில் மனதுக்குள் புத்துணர்வு உதித்திருப்பதை உணர்ந்தாள் ராதிகா..
குளித்து விட்டு கீழே இறங்கியவர்.. காபியுடன் திரும்பி வந்தாள்.. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பால முரளிடம்..
"ஒரு ஆலயமாகும் மங்கை மனது...
      அதை அன்றாடம்..
கொண்டாடும் காலைப் பொழுது..
     நல் காலைப் பொழுது..."
என்று பாடியபடி.. காபியையும்.. பேப்பரையும் நீட்டினாள்.. அவளின் அந்த உற்சாகத்தில் மனம் லயித்தான் பால முரளி...
"என்னடி.. பாட்டெல்லாம் தூள் பரக்குது.." என்று கேட்டபடி இரண்டையும் வாங்கிக் கொண்டான்..
"அது அப்படித்தான்.." என்றபடி.. கட்டிலில் சுருண்டு கிடந்த மெத்தை விரிப்புகளையும்.. தலையணைகளையும் சரிசெய்ய ஆரம்பித்தாள் ராதிகா.. அவரின் வாய் தன் போக்கில் பாடிக் கொண்டிருந்தது..
அவளின் பாடலை ரசித்தபடி காபியை உறிஞ்சிக் கொண்டிருந்த முரளி.. பேப்பரை பார்வையிட மறந்தவனாக அவனைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்..
குளித்து.. முடிந்து.. ஈரத்தலையை டவலில் சுற்றியிருந்தவளின் நெற்றி வகிட்டில் குங்குமம் பளீரிட்டது..
அவளின் குடும்பப் பாங்கான அழகில் அவன் ஈர்க்கப்பட்டான்..
"குலமகள் அவள் கோலம்..
       குங்குமச் சிலையாகும்..
தேவனின் சன்னதி...
       தேவியென் நிம்மதி..."
பாடிக் கொண்டிருந்தவனை பின்னால் நின்று அணைத்து இறுக்கிக் கொண்டவன்.. அவள் காதோரமாக முணுமுணுத்தான்...
"டாக்டர் என்னன்னா.. உன்னைப் பக்குவமா தொடனும்னு அறிவுரை சொல்றாங்க.. நீ என்னன்னா.. பச்சக்குன்னு அழகாயிருந்துக்கிட்டு.. என் மனசில ஆசைத்தீயை பத்த வைக்கிற.. நான் என்னதாண்டி செய்யறது..? "
அவன் நியாயம் கேட்டான்.. அவள் அவனுக்கு நியாயம் செய்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி. -163
அம்மம்மா.. கேளடி தோழி. -163
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-163.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-163.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy