அம்மம்மா.. கேளடி தோழி.-162

162 சில்லென்ற காற்று வந்ததிலே.. என்மனம் அவனைத் தேடுதடி... நாச்சியப்பனுடனான மீனாட்சியின் கல்யாணம் அமோகமாக நடந்து முடிந்தது.. வேலையாள்களி...

162
சில்லென்ற காற்று வந்ததிலே..
என்மனம் அவனைத் தேடுதடி...

நாச்சியப்பனுடனான மீனாட்சியின் கல்யாணம் அமோகமாக நடந்து முடிந்தது.. வேலையாள்களின் திருமணத்தைப் போலில்லாமல்.. வீட்டு மனிதர்களின் திருமணத்தைப் போலவே.. அழைப்பிதழ் அடித்து.. விநியோகம் செய்து.. மண்டபம் பிடித்து.. மூன்று வேளையும் குறைவில்லாமல் விருந்து கொடுத்து.. அதை நடத்தி முடித்திருந்தான் பாலமுரளி...
'இவன் அண்டி வருகிறவர்களுக்கு ஆலமரம் போல நிழல் கொடுத்து.. ஆதரித்து வாழ வைப்பவன்...'
ராதிகாவின் மனம் பொங்கியது.. அவனின் அந்தத் தன்மையில் ஆகர்ஷிக்கப்பட்டாள் அவள்...
'இவன்தான் எப்பேற்பட்ட குணமுடையவனாக இருக்கிறான்..!'
அவள் வியந்து போனாள்.. அரசன் மகனான அர்ஜீனனை அரவணைத்த கண்ணபிரான்.. அதே நட்போடு குசேலனையும் அரவணைத்ததை புராணாங்களில் படித்திருக்கிறாள்.. அன்றுதான் அதே போன்ற ஒரு நிகழ்வை நேரில் பார்த்தாள்...
முரளியின் மீதான அவளின் காதல் அதிகமாகியது..  அதை அவளது கண்கள் உணர்த்தியதில் முரளியின் கண்கள் மின்னின...
மணமக்களை ஆசிர்வதித்து விட்டு வந்தவன்.. மனைவியின் பக்கமாக குனிந்து.. ரகசியக் குரலில்...
"என்னடி.. ஒரு மார்க்கமாப் பார்த்து வைக்கிற... என்ன விசயம்..?" என்று வினவினான்...
சுற்றிலும் ஆள்கள் இருக்க... அவர்களின் மத்தியில் எதையும் சொல்ல முடியாத ராதிகாவின் முகம் சிவந்தது.. அதை ரசித்தவன்...
"பாரு.. பாரு.. யாரைப் பார்க்கிற.. உன் புருசனைத்தானே பார்க்கிற.. நீ பார்க்கத்தானே நானிருக்கேன்...", என்றான்...
ராதிகா முகச்சிகப்பு அதிகரிக்க.. அவன் கையில் ரகசியமாக கிள்ளினாள்...
"இரும்பை.. எறும்பு கடிக்கிறதுன்னா இப்படித்தானா..?" அவன் சிரித்தான்...
"வீட்டுக்கு வாங்க.. இருக்கு உங்களுக்கு..."
அவள் கோபத்துடன் சொல்ல... அவன் பரபரத்தான்..
"என்னங்க..?" அவள் புரியாமல் வினவினாள்...
"எப்ப வீட்டுக்குப் போவோம்ன்னு இருக்குடி..."
"எதுக்காம்..?"
"நீ செமத்தியாய் கவனிப்பயே..."
அவன் கண்கள் சிமிட்டியதில் அவள் மீண்டும் கன்னம் சிவந்தாள்.. பேசியபடியே நாற்காலியில் வாகாக சாய்ந்து கொண்டவனின் கை அவள் தோள் மேல் படர்ந்து அவளை சுற்றி வளைத்துக் கொண்டதில் அவளுக்குள் இன்பமான இதம் பரவியது...
அவன் அப்படித்தான் செய்வான்.. வீட்டில் மேகலாவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் சரி.. வெளியிடங்களுக்குப் போய் ஜனக்கூட்டத்தின் மத்தியிலிருந்தாலும் சரி.. அவனது கை.. இயல்பாக அவள் தோள்மீது விழுந்து சுற்றி வளைத்துக் கொள்ளும்..
ராதிகாவுக்கு அவனின் இந்தச் செய்கையை மிகவும் பிடிக்கும்.. அதை அவன் உணர்ந்திருக்கிறானா.. இல்லையா என்பதை அவள் அறிய மாட்டாள்.. அவன் கை அவள் தோள் மேல் விழுந்து சிறைபிடிப்பதை அவள் மிகவும் விரும்பினாள்..
முரளியுடனான ராதிகாவின் அன்யோன்யத்தில் மேகலா நிம்மதியடைந்திருந்தாள்.. அவர்களுக்குள் அடிக்கடி வரும் சண்டைகளைப் பற்றி அவள் அறிந்திராத போதிலும்.. மகனின் முகத்திலிருந்து அவன் கோபத்தையும்.. ராதிகாவின் காய்ச்சலில் இருந்து அவள் சோகத்தையும் மேகலா உணர்ந்துதான் இருந்தாள்..
அவை விலகி.. அவர்கள் இருவரும் காட்டிக் கொண்ட அந்தரங்க கண்ஜாடைகளில் மேகலாவின் மனதில் சூழ்ந்திருந்த கவலை மூட்டம் விலகியிருந்தது...
மீனாட்சியும்.. நாச்சியப்பனும் குடித்தனம் பண்ண... தோப்பு வீட்டை குடுத்திருந்தான் முரளி.. அவர்களின் குடித்தனத்திற்கு தேவைப்படும் பொருள்களை மேகலா வாங்கிக் கொடுத்திருந்தாள்.. ராதிகா அவள் பங்குக்கு புதுப்புடவைகளை வாங்கி பரிசரித்திருந்தாள்.. அவர்கள் வெற்றிகரமாக குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.. நாச்சியப்பன் வழக்கம் போல தோப்பையும் பார்த்துக் கொண்டு.. முரளியின் தேனூத்து வீட்டின் தோட்ட வேலையையும் கவனித்துக் கொண்டான்.. மீனாட்சி காலையில் வந்து.. மாலையில் திரும்பி விடும் வழக்கத்திற்கு மாறிக் கொண்டாள்..
தினமும் நாச்சியப்பனின் சைக்கிளில் ஏறி வந்து அவள் இறங்கும் போது அவள் முகத்தில் பெருமை பொங்கி வழியும்...
"என்னமோ.. புல்லட் ஓட்டற புருசன் பின்னாலே சொகுசா உட்கார்ந்து வந்து இறங்கற மாதிரிதான் சிலுப்பிக்கிறா..."
காவேரி பொறாமையில் வெந்து போவாள்.. ராதிகாவும் அதைக் கவனித்திருக்கிறாள்.. மாடி பால்கனியில் நின்று கொண்டிருக்கும் போது.. நாச்சியப்பனுடன் சைக்கிளில் வரும் மீனாட்சியின் முகபாவத்தை முரளிக்கு காட்டுவாள்...
"அவளுக்கு அது புல்லட்தாங்க... அவ மனசுக்கு நாச்சியப்பன்தாங்க பெரிய ஹீரோ..." என்று சொல்வாள்..
அதைக் கேட்கும் முரளியின் முகத்தில் கோடிட்டுப் போகும் உணர்வுகளுக்கான அர்த்தம் என்னவென்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை...
ஆனால்... அதன் பின்னால் அவளை இறுக்கிக் கொள்ளும் முரளியின் ஆவேச அணைப்பிற்குப் பின்னால். ஏதோ இருக்கிறது என்பது மட்டும் அவளுக்கு நிச்சயமாய் தெரியும்...
ராதிகாவின் வயிறு மேடிட ஆரம்பித்தது.. தாய்மையின் வளர்ச்சியை அவளது தளர்நடை உணர்த்த.. மேகலா அவளை உள்ளங்கையில் தாங்காத குறையாகப் பார்த்துக் கொண்டாள்.. முரளியோ அவளை உண்மையாகவே கைகளில்தான் சுமந்தான்...
அவளால் நடக்க முடியாத இடங்களில் தயங்காமல் அவளைக் கைகளில் தூக்கிக் கொள்வான்.. சுற்றிலும் மற்றவர்கள் இருக்கிறார்களே என்று யோசிக்க மாட்டான்.. வெட்கத்துடன் ராதிகா அவன் கைகளில் இருந்து இறங்க முயன்றால் பார்வையினாலேயே அதட்டுவான்...
அவனின் அந்த ஆண்மையான காவலில் ராதிகா சிலிர்த்துப் போவாள்.. அவன் மீதான காதலில் திணறிப் போனாள்...
அவன் மீதான அவளின் காதல்.. வளர்பிறையைப் போல வளர்ந்து கொண்டிருந்தது.. அவர்களுடைய காதலின் அடையாளமாக அவள் வயிற்றில் வளரும் அவனின் குழந்தையும் வளர்பிறை போல வளர்ந்து கொண்டிருந்தது.. சென்னையிலிருந்து பதினைந்து நாள்களுக்கு ஒரு தரமென்று.. கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துடன் வந்து போனார்... ராதிகாவின் மசக்கையைப் போக்கும் குழம்பு வகைகளையும்.. அவளுக்குப் பிடித்த பலகார வகைகளையும் செய்து டப்பாக்களில் நிரப்பிக் கொண்டு.. வருவாள் ராஜேஸ்வரி.. மேகலாவுக்கு அதில் பலத்த ஆட்சேபம் உண்டு...
"இதை எதுக்கு வீணாய் சுமக்கிற ராஜி..?" என்று கடிந்து கொள்வாள்...
"வேற என்ன செய்யறது அண்ணி..? பெண்ணைப் பெத்தவளாப் போயிட்டேன்.. மசக்கைக்கு தாய் வீட்டில இருந்து வாய்க்கு உணக்கையா சாப்பிட்டு சீராடனும்.. நாங்க ராதிகாவை அனுப்பி வையுங்கன்னு கெஞ்சினோம்.. நீங்க அனுப்பினீங்களா..? ராஜேஸ்வரியின் குரலில்.. மனத்தாங்கல் மறைந்திருக்கும்..."
"நானா மாட்டேன்னு சொன்னேன்..? உன் மருமகன்தானே மாட்டேன்னு ஒரே வார்த்தையிலே வாயை அடைச்சுட்டான்..? அவனைப் போயி கேளு..."
"அவரை யார் கேட்கிறது...?"
"தெரியுதில்ல.. அப்புறம் என்கிட்ட எதுக்காக கோவிச்சுக்கறே..?"
"இது கோபமில்ல அண்ணி... தவிப்பு.. மூணு பிள்ளைகளைப் பெத்தவ நானு.. மசக்கை எப்படிப் பாடாப் படுத்தும்ன்னு எனக்கும் தெரியும்.. உங்களுக்கும் தெரியும்.."
"பார்த்துக்க நானிருக்கேன் ராஜி.."
"அதைச் சொன்னா.. என் மனசு கேட்கணுமே.."
"சரி.. உனக்குத் தோணினதைச் சமைச்சுப் போடு... நான் வேணாம்ன்னு சொல்லலை... அதை எதுக்காக சென்னையிலேயே செஞ்சு சுமந்துக்கிட்டு வர்றேன்னுதான் நான் கேட்கிறேன்.. நம்ம வீட்டில வந்த செஞ்சு போடு..."
"இது என் மக வீடுண்ணி.. என் வீடில்ல..."
ராஜேஸ்வரி.. தெளிவான.. உறுதியான தொனியில் கூறிவிட்டாள்..
"தாய் கையில சமைச்சது.. தாய் வீட்டில செஞ்சதா இருக்கனும் அண்ணி.. எனக்கு அது முக்கியம்..."
மேகலாவுக்கு ராஜேஸ்வரியைப் புரிந்திருந்ததால் அவள் அதற்கு மேல் எதையும் சொல்லாமல் விட்டு விட்டாள்... இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வரும் ராதிகாவின் பிறந்த வீட்டினர் ஒரு நாளுக்கு மேல் அங்கே தங்க மாட்டார்கள்..
"சென்னையிலே ஆயிரம் வேலை இருக்குண்ணி..."
அதற்கான பதிலும்.. ராஜேஸ்வரியிடமிருந்து உடனடியாக வந்துவிடும்.. மேகலாவின் வற்புறுத்தலுக்கு கிருஷ்ணமூர்த்தி புன்னகையைத்தான் பதிலாகக் கொடுப்பார்.. ராஜேஸ்வரிதான் வார்த்தைகளில் பதில் சொல்வாள்... அவளின் அந்த நிமிர்வு மேகலாவுக்கு பிடித்துப் போனது...
"ராஜேஸ்வரியின் வளர்ப்பில்ல... அப்படித்தான் இருக்கும்..."
ராதிகாவின் செயல்களைப் பாராட்ட வேண்டு மென்றால் மேகலா இப்படிச் சொல்லித்தான் பாராட்டுவாள்..
"யாரு பெத்த பொண்ணு.. ராஜேஸ்வரி பெத்த பொண்ணாச்சே..." என்று சிலாகிப்பாள்...
பாலமுரளி மேகலாவின் பாராட்டுதலை அடிக்கடி கிண்டல் செய்வான்...
"மாமியார் மெச்சின மருமகள்ன்னு கேள்விப் பட்டிருக்கேன்ம்மா.. சம்பந்தியை மெச்சும் சம்பந்தியை இப்பத்தான் பார்க்கிறேன்..." என்பான்...
"போடா.. உனக்கு எல்லாமே கேலிதான்..."
இப்படிச் சொல்லும் மேகலாவின் முகத்தில் அந்தப் பிணைப்பின் வலிமை பிரதிபலிக்கும்...
தேனூத்தில் இருக்கும் அந்த ஒருநாளில்.. குற்றாலம் பார்க்க கீதாவும்.. சுந்தரும் போய்வருவது வழக்கமாக இருந்தது.. அவர்களின் துணையாக மீனாட்சியும்.. நாச்சியப்பனும் போய் வருவார்கள்.. அப்படி சென்றிருந்த சமயத்தில் ஹேமாவை குற்றாலத்தில் சந்தித்தவர்கள்.. அவளது அழைப்பை மதித்து.. தென்காசியிலிருந்த அவளின் வீட்டிற்கும் போய் வந்து விட்டார்கள்...
"ஹேமாக்காவைப் பார்த்தோம்க்கா..."
டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சுந்தர் உற்சாகமாகச் சொல்ல.. ராதிகாவின் மனதில் பதட்டம் சூழ்ந்தது.. பரிமாறிக் கொண்டிருந்தவளின் கை நடுங்க ஆரம்பித்தது.. சுந்தரை நிமிர்ந்து பார்த்த முரளியின் கடினமான முகத்திலிருந்து அவளால் எதையும் கண்டு கொள்ள முடியவில்லை...
"அவளை எங்கேடா பார்த்தீங்க..?" ராஜேஸ்வரி ஆர்வமாக விசாரித்தாள்...
"குற்றாலத்தில்ம்மா.. உனக்குத் தெரியுமா ராது.. ஹேமாக்காவின் குழந்தை என்கிட்ட அப்பிக்கிருச்சு.. ஸோ.. குவிட்.. பேபி.." கீதா ரசித்துச் சொன்னாள்...
"ஏன் ராதிகா.. நீ அடிக்கடி அவளைப் பார்க்கிறதுண்டுதானே..?" கிருஷ்ணமூர்த்தி கேட்ட போது.. ஆமாம் என்று சொல்ல முடியாமலும்.. இல்லையென்று மறுக்க முடியாமலும்.. தோராயமாக ஒரு திசையில் தலையை ஆட்டி வைத்தாள் ராதிகா...
"இல்ல தம்பி.. ராதிகா ஹேமாவைப் பார்க்கப் போகிறதில்ல.. அவளும் இங்கே வாரதில்ல..", மேகலாதான் ராதிகாவின் சார்பாக பதில் சொன்னாள்...
"ஆச்சரியமாயிருக்கே.. உங்களுக்குத் தெரியாது அத்தை.. இவளும் ஹேமாக்காவும்.. 'மாற்றாள்' போல ஒட்டிக்கிட்டே அலைவாங்க...", கீதா ஆச்சரியப்பட்டாள்..
"அதென்னடி 'மாற்றாள்..'?" ராஜேஸ்வரிக்கு புரியவில்லை..
"அதான்ம்மா.. 'மாற்றான்'னு ஒரு சினிமாவிலே ரெட்டைப் பிறவியான ஹீரோ ஒட்டிக்கிட்டே அலைவாங்க.. அதைத்தான் இவ சொல்ற..", சுந்தர் விளக்கம் சொன்னான்..
"சினிமாவைக் கூட நீ விட்டு வைக்க மாட்டியாடி..? என்ன பெண்ணோ தெரியலை... நானும் போன தடவையே கேட்கனும்னு நினைச்சேன் ராதிகா.. உனக்கும் ஹேமாவுக்குமிடையே ஏதாவது சண்டையா..? இதோ இருக்கிற தென்காசியில அவ இருக்கா.. உங்க ரெண்டு பேருக்குமிடையே போக்கு வரத்தே இல்லை போல இருக்கே..."
ராஜேஸ்வரி கேட்டு விட்டாள்.. எந்தக் கேள்வியை எதிர் நோக்க ராதிகா பயந்தாளோ.. அந்தக் கேள்வி அவளுடைய பிறந்த வீட்டிலிருந்து கிளம்பி வந்து விட்டது..
என்னவென்று அவள் சொல்வாள்..? கடந்து வந்த வாழ்வுப் பாதையின் நிகழ்வுகளை மறக்க அவள் முயன்று கொண்டிருக்கும் போது.. அந்த நிகழ்வை எப்படிச் சொல்லுவாள்..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.-162
அம்மம்மா.. கேளடி தோழி.-162
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-162.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-162.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy