அம்மம்மா.. கேளடி தோழி..-160

160 நான்  சொல்லாத  சொல்லினையும்.. அவனறிந்தானே அது எப்படி தோழி..? ராதிகா கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்க்கத் தோதாக சோபாவில் சாய்ந்த...

160
நான்  சொல்லாத  சொல்லினையும்..
அவனறிந்தானே அது எப்படி தோழி..?


ராதிகா கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்க்கத் தோதாக சோபாவில் சாய்ந்து கொண்டாள்... மீனாட்சியின் கால்கள் பின்னிய தளர்நடை.. அவள் கண்களில் சிரிப்பை வரவழைத்தது...
ராதிகாவின் முகத்தில் தோன்றிய சுவராஸ்யத்தைக் கண்ட முரளி புருவங்களை உயர்த்தினான்.. அவன் காதருகே வாகாக சரிந்து ராதிகா மெதுவான குரலில் கிசுகிசுத்தாள்...
"நம்ம வீட்டு ரவுடி ரங்கம்மா... எப்படி வெட்கப் பட்டு வந்து நிற்கிறான்னு பாருங்களேன்..."
"இந்த பயபுள்ள மட்டும் என்னவாம்.. ஊரில இருக்கிற அத்தனை பொண்ணுகளையும் ஒரு மார்க்கமாகத்தான் பார்ப்பான்.. இவன் நூல்விடாத முறைப்பொண்ணே இல்லே..."
இதைக்கேட்டதும் ராதிகாவுக்குள் முரளியைச் சுற்றிக் கொள்ளும் அவனுடைய முறைப் பெண்களின் நினைவு வந்தது...
"அதானே.. தேனூத்தில பிறந்த ஆண்மகன்கள்தான் கொடுத்து வைச்ச பிறவிகளாச்சே... உங்களுக்குன்னு எப்படித்தான் முறைப் பெண்கள் கூட்டம்.. கூட்டமா வந்து வாய்க்கிறாங்களோ..."
ராதிகாவின் நொடிப்பில் அவளின் மனச்சிணுங்கல் புரிய பாலமுரளிக்கு சிரிப்பு வந்தது...
"விடுடி.. நம்ம பஞ்சாயத்தா இப்ப முக்கியம்..? இவங்க பஞ்சாயத்தை முதலில முடிச்சு வைக்கலாம்..."
"என்னத்தைச் சொல்ல.. மீனாட்சிக்கு என்ன குறை..? வாய்தான் எட்டு ஊருக்கு நீளும்.. மத்தபடி குணத்தில தங்கமில்ல..."
"யாரு இல்லேன்ன சொன்னது...?"
"பேச்சாலேயே கடலைபோட நினைக்கிற ஆளைக் கூட துரத்தி விடற கெட்டிக்காரியாச்சே..."
"அதுக்கென்னடி இப்ப...?"
"ம்ஹீம்.. இப்படிப்பட்ட பொண்ணுக்கு... ஜொள்ளுவிடற ஆள்தான் கிடைச்சிருக்கு..."
"ஓ... நீ அப்படி வர்றயா..? ஒன்னை நீ யோசிச்சுக்கனும்டி.."
"எதை யோசிக்கனுமாம்..."
"என்னதான் நூல் விட்டாலும்.. மஞ்சக்கயிறுன்னு ஒன்னைக் கட்டினா.. மீனாட்சி கழுத்திலதான் கட்டுவேன்னு பிடிவாதமா காத்திருக்கான் பாரு... அங்கே தான் அவன் நிற்கிறாண்டி..."
பாலமுரளி சொன்னதைக் கேட்ட ராதிகா திரும்பிப் பார்த்தாள்... நாச்சியப்பன் பவ்யமாக நின்று கொண்டிருந்தான்...
"இல்லையே... அவர் இங்கேதான நிற்கிறார்..?" என்றாள்... முரளி அவளையே இமைக்காமல் பார்க்க..
"போதும்... பார்த்தது... அத்தை நம்மளையே பார்க்கிறாங்க..." என்று முணுமுணுத்தாள்...
"மாடிக்கு வாடி... உனக்கு இருக்கு... கடிஜோக் சொல்ல உனக்கு வேற நேரமே கிடைக்கலியா.. இந்தக் கடி கடிக்கிறயே..."
மனைவியை செல்லமாக கடிந்து விட்டு.. மீனாட்சியின் பக்கமாக திரும்பினான் பாலமுரளி...
"என்ன மீனாட்சி.. நம்ம நாச்சியப்பன் பிரச்சனையையும் கொஞ்சம் கவனிக்கிறது..?" என்று அவன் சொல்ல... மீனாட்சி திருதிருத்தாள்...
அவள் பேசமுடியாமல் மேகலாவைப் பார்க்க அவள் பேச்சைத் தொடர்ந்தாள்...
"அதாண்டி.. கட்டினா உன்னைத்தான் கட்டுவேன்னு நம்ம நாச்சியப்பன் ஒத்தைக்காலில நிக்கறாhனில்ல.. அதத்தான் முரளி சொல்றான்..."
மீனாட்சி.. நாச்சியப்பனை ஓரக் கண்ணால் பார்க்க.. அவன் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி... கம்பீரமாக நிற்க முயன்றான்...
"இன்னொரு காலில அடிபட்டிருக்கும்மா... அதனால இந்த ஆம்பள அப்படி நின்னிருக்கும்..."
அவள் இடக்காகப் பேச... நாச்சியப்பன் பதில் சொன்னான்...
"எனக்கு எந்தக் காலிலயும் அடிபடலங்கய்யா... எம்மாம் உசரமான தென்ன மரமானாலும் ஒத்த ஆளா... உயரத்தில ஏறி.. காய் பறிச்சுப் போடற ஆளு நானு.. எனக்காவது அடி படறதாவது..."
"அப்ப தென்னமரத்தக் கட்டிக்க வேண்டியது தானேம்மா..."
"இவளக் கட்டிக்கிறதும்.. தென்னமரத்தக் கட்டிக்கிறதும் ஒன்னுதானங்க ஐயா..?"
"மரத்தோட பொழைச்சுப் பொழைச்சு... இந்த மனுசனுக்கு மரத்தைப் போலவே புத்தியும் இருக்கும்மா..."
"மரமா இருக்கிறது.. நானா.. இல்ல இவளாங்கய்யா..? என் மனசைப் புரிஞ்சுக்காம.. மரம் மாதிரியே நிற்கிறாய்யா..."
"இந்த விகடமெல்லாம் எங்கிட்ட வேணாமுன்னு சொல்லுங்கம்மா..."
"வேற யாருகிட்டயும் விகடம் பேசறதா நானில்லன்னு சொல்லுங்கய்யா..."
"ஊரெல்லாம் ஆளை வைச்சுக்கிட்டு யாருகிட்ட சரடு விடுதுன்னு கேளுங்கம்மா..."
"வெறும் சரடைத்தான் எங்கயும் விட்டிருக்கேன்.. மஞ்சச் சரடை இவ கழுத்தில மட்டும்தான் கட்டுவேன்னு சொல்லுங்கய்யா..."
"இந்தக் கதையை நம்ப நான் தயாரில்லைன்னு சொல்லுங்கம்மா... என்னமோ.. என்னக் கட்டிக்க இந்த ஆளு ஒத்தக்காலில் நிக்குதாம்... பாண்டி விளையாட யாராவது கோட்டைக் கிழிச்சிருப்பாங்க... இந்த ஆளு அதைத் தாண்ட ஒத்தக் காலில நின்னிருக்கும்.. மத்தபடி.. இந்த ஆளாவது.. ஒரு மனசா நிக்குறதாவது.. எனக்கு நம்பிக்கையில்லம்மா..."
"இப்ப அவ என்னதான் சொல்றான்னு கேளுங்கய்யா.."
"இந்த ஆள நம்பி.. இது பின்னால போக நான் தயாரா இல்லன்னு சொல்லுங்கம்மா..."
பாலமுரளிக்கும்... மேகலாவிற்கும் வேலையே வைக்காமல்... நாச்சியப்பனும்.. மீனாட்சியும் மோதிக் கொள்ள.. ராதிகா சுவராஸ்யமாக அதை ரசித்துக் கொண்டிருந்தாள்...
முரளியும்... மேகலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...
"ஏண்டி.. இதுக ரெண்டும் அடிச்சுக்கிட்டு நிற்குதுக.. நீ அதை வேடிக்கைப் பார்த்து ரசிச்சுக்கிட்டு இருக்க... உன்னை என்னதாண்டி செய்யறது..?"
மனைவியிடம் முறைத்த பாலமுரளியின் பார்வையிலும் கோபமில்லை... வார்த்தையிலும் கோபமில்லை... அவர்களின் ரகசிய உரையாடலில் மேகலாவின் முகம் கனிந்தது...
"இதில ஒரு டெக்னிக்கை ரெண்டு பேரும் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்காங்க... அதை நீங்க கவனிச்சீங்களா..?" ராதிகா கேட்டாள்...
"இதுக ரெண்டும் நேராப் பேசிக்கலையாம்.. இவன் என்கிட்டத்தான் பேசரானாம்.. அவ.. அம்மாகிட்டத்தான் பேசறாளாம்.. அதைத் தானே சொல்ற..." முரளி இமைசிமிட்டினான்...
"அஃதே..."
கணவனின் இமை சிமிட்டலில் மயங்கிப் போன ராதிகா... அந்த மயக்கத்தை விழிகளில் பிரதிபலித்தவளாக சொன்னாள்...
அவளின் மயக்கத்தை உணர்ந்தவனின் மனதில் ஆண்மையின் கர்வம் சூழ்ந்தது... அவளுடன் ரகசியப் பேச்சுப் பேசுவதில் ஒர் அந்தரங்கத்தை உணர்ந்தான் பாலமுரளி...
"இதுகளை மோத விட்டா.. இன்னைக்குப் பூரா இன்ட்ரெஸ்டா வேடிக்கை வேனும்னா பார்க்கலாம்.. ஆனா.. வேலைக்கு ஆகாது..."
"அது எனக்கும் தெரிஞ்சிருக்கு.. நான் நாச்சியப்பனை ஒரு அதட்டல் போட்டாப் போதும்... அவன் அடங்கிருவான்..."
"மீனாட்சியை அடக்க அத்தை இருக்காங்க..."
"இதுகளை அடக்கினா மட்டும் போதுமா..?"
"அதுதானே..? அதுக்கா இவங்க ரெண்டு பேரையும் ஒன்னா பேச்சு வார்த்தைக்கு அழைச்சிருக்கீங்க...?"
"இந்த மீனாட்சிக்கு என்னதாண்டி பிரச்னை..? அவ மனசில நாச்சியப்பன் மேல நோக்கமிருக்கிறது போலத்தான் எனக்குப் படுது.. இருந்தும் இவ இந்தப் பேச்சு பேசறாளே...?"
"இதுக்கு நான் ஒரு வழியைப் பண்றேன்..."
"அதை முதலில் செய்டி.. அம்மாவுக்கு இந்த மீனாட்சியோட கவலையில திரும்பவும் உடம்புக்கு முடியாமல் போயிருமோன்னு யோசனையாய் இருக்கு.."
"கவலையே படாதீங்க.. உங்க பெண்டாட்டி நானிருக்கேன்..."
அவள் அபயம் அளித்ததைவிட.. அந்த அபயத்தை 'உங்க பெண்டாட்டி...' என்ற சுய அறிமுகத்துடன் அளித்ததில் முரளியின் மனதில் ரகசிய சந்தோசம் ஊற்றெடுத்தது...
"என்னடி செய்யப் போற...?"
"வெயிட் அன்ட் ஸீ..."
ராதிகா மீனாட்சியின் பக்கமாக பார்வையைத் திருப்பினாள்...
"விடாதே மீனாட்சி.. வெளுத்துக்கட்டு.. நான் உன் கட்சிதான்.." என்று திடிர் ஆதரவை அளித்தாள்...
'இது என்னத்துக்கு...' மீனாட்சி பேந்தப் பேந்த விழித்தாள்...
"என்னடி..?" ரகசியமாக கேட்ட முரளியிடம்...
"நீங்க நாச்சியப்பனுக்கு வக்காலத்து வாங்கி.. என்ன விசயம்ன்னு என்னிடம் கேளுங்க...", என்று முணுமுனுத்தாள் ராதிகா...
'மனைவி ஒரு மந்திரி...' என்பதை அந்த நொடியில் ஏற்றுக் கொண்ட முரளி.. மனைவி போட்டுக் கொடுத்த பாதையில் பயணித்தான்...
"என்ன ராதிகா..? நாச்சியப்பனைப் பத்தி அவ கன்னா பின்னான்னு பேசறா.. நீயும் அவளை சப்போர்ட் பண்ற.. நாச்சியப்பன் குணத்தில தங்கம்.. தெரியுமில்ல..."
அவ்வளவுதான்.. கணவனை நோக்கி.. அமைதியாய் இருக்கும்படி கண்சமிக்ஞை செய்து விட்டு.. ராதிகா பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்...
"அப்படியிருந்தா.. மீனாட்சி எதுக்காக இப்படிக் கோபப்படப் போறா..? நீங்க ஆயிரம்தான் சொல்லுங்க.. நாச்சியப்பனுக்கு குணம் சரியில்லைன்னுதான் நான் சொல்லுவேன்..."
ராதிகாவின் ஆணித்தரமான வாதத்தில் மீனாட்சி திகைத்துப் போய் ஊடே தடுத்துப் பேசினாள்...
"சின்னம்மா..."
"நீ கவலைப்படாதே மீனாட்சி.. நான் கேட்கிறேன்.. ஏங்க.. இந்த நாச்சியப்பனெல்லாம் மனிதனா...?"
"சின்னம்மா..."
"மீனாட்சியோட அழகுக்கும்.. அறிவுக்கும்.. அவளோட கால்தூசிக்கு நாச்சியப்பன் இணையாவாரா..?"
"சின்னம்மா..."
"சேச்சே.. இந்த நாச்சியப்பன உடனே வேலையில இருந்து தூக்குங்க.. மீனாட்சி கோபப்பட்டா அதில ஒரு நியாயமிருக்கும்..."
"ஐயோ.. சின்னம்மா..."
"இந்த வீட்டுப்பக்கமே சேர்க்காம துரத்தியடிங்க.. அப்பத்தான் மீனாட்சி நிம்மதியாயிருப்பா..."
ராதிகா நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தாள்.. நாச்சியப்பனைப் போன்ற மனிதப் பிறவிக்கு அந்த தென்காசிப் பட்டினத்திலேயே இடம் தரக்கூடாது என்று சொன்னாள்...
மீனாட்சியின் மனதில் நாச்சியப்பனின் மீது எந்த அளவுக்கு வெறுப்பிருந்தால்... இப்படியெல்லாம் பேசுவாள் என்ற கேள்வியை முன் வைத்தாள்..
அப்படிப்பட்ட நாச்சியப்பனுக்கு யாரும் பெண் தரமாட்டார்கள் என்று ஆருடம் சொன்னாள்.. அப்படி மீறிப் பெண் கொடுக்க முனைந்தால்.. ஒரு மொட்டைக் கடிதத்தை தட்டி விட்டு.. அதன் மூலம் அதை தடுத்து நிறுத்துவாள் மீனாட்சி என்று சூளுரைத்தாள்..
நாச்சியப்பனின் கண் முன்னாலேயே.. மீனாட்சியின் திருமணம் அமோகமாக நடக்கும் என்ற ஆசிர்வாதத்தை அளித்தாள்...
பொங்கி வரும் வெள்ளமாக.. வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்த ராதிகாவின் மணிப்பிரவாகப் பேச்சில் குறுக்கிட.. 'சின்னம்மா.. சின்னம்மா...' என்று குரல் எழுப்பி பகீரதப் பிரயத்தனங்கள் செய்து ஓய்ந்து போன மீனாட்சி பொங்கி வெடித்தாள்...
"நிறுத்துங்க.. சின்னம்மா..!"
இடைவிடாத பேச்சினால் மூச்சு வாங்கிக் கொண்டிருந்த ராதிகா...
'இப்பவாவது நிறுத்தச் சொன்னாளே...' என்று ஆறுதல் பட்டுப் போனாள்...
மனைவியைக் காருண்யப் பார்வை பார்த்த முரளி.. அருகிலிருந்த தண்ணீர் ஜக்கைத் தூக்கி அவளிடம் கொடுக்க.. அதை வாங்கியவள் அப்படியே அதை தொண்டையில் சரித்தாள்...
அவள் பேச்சை நிறுத்திய மீனாட்சி.. பேச ஆரம்பித்து விட்டாள்...
"யாரை பார்த்தும்மா மனுசனான்னு கேட்டிங்க..? இந்த மனுசன் மனுசனில்லன்னா.. வேற யாருதான் மனுசன்..?"
மீனாட்சியின் கேள்வியில் முரளியின் முகம் பார்த்த ராதிகாவின் விழிகளில் வெற்றிப் பெருமிதம் இருந்தது.. அதைக் கவனித்த மேகலாவின் விழிகளில் வியப்புத் தெரிந்தது... அவளும்தான் தலையால் தண்ணீர் குடித்துப் பார்த்தாள்.. மீனாட்சியின் பிடிவாதத்தை தளர்த்தி விட அவளால் முடிந்ததா..?
அதை ஒரு நிமிடத்தில் ராதிகா செய்து முடித்து விட்டாளே...
'எப்புடீ..?'
ராதிகா புருவங்களை உயர்த்தி.. விழிகளால் கணவனிடம் கேட்டாள்...
'பிரமாதம்டி.. கிழி.. கிழின்னு கிழிச்சிட்ட..'
அவன் இரண்டு விரல்களையும் ஒன்று சேர்த்து கிழிப்பதைப் போல  பாவனை செய்தான்..
"உங்க வீட்டு உப்பைத் தின்ன மனுசன்ம்மா இந்த மனுசன்.. இதுக்கு சூது.. வாது தெரியாது.. இதுக்கா குணமில்லன்னு சொல்றீங்க.. இது குணசாலிம்மா..."
ராதிகா விரித்த வலையில் தான் மாட்டிக் கொண்டிருப்பதை அறியாத கிராமத்து மீனாட்சி.. தன் மனதை வெளிப் படுத்திக் கொண்டிருந்தாள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி..-160
அம்மம்மா.. கேளடி தோழி..-160
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-160.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-160.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy