அம்மம்மா.. கேளடி தோழி -158

158 புலர்கின்ற பொழுதை..  சேவல் மட்டும் எப்படி அறிந்தது..? "கோவிலுக்குப் போயிட்டு வரலாமா ராதிகா..?" முரளி அழைத்ததும் மறுக்கா...

158
புலர்கின்ற பொழுதை.. 
சேவல் மட்டும் எப்படி அறிந்தது..?


"கோவிலுக்குப் போயிட்டு வரலாமா ராதிகா..?"
முரளி அழைத்ததும் மறுக்காமல் கிளம்பினாள் ராதிகா.. பெருமாள் கோவிலுக்குப் போவதற்கு முன்னால்.. அருவிக் கரையிலிருந்த பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் சென்றான் முரளி..
"இதுதானேடி.. உன்னையும்.. என்னையும் சேர்த்து வைச்ச தெய்வம்.. .முழுமுதற்கடவுள்.. விநாயகப் பொருமான்.. இவரைக் கும்பிட்டுக்க.. அதுக்கப்புறம் இவரோட மாமனைக் கும்பிடப் போய்க்கலாம்.."
தனித்தனியே அந்த கணபதியிடம் முறையிட்டுக் கொண்டிருந்த அந்தத் தம்பதிகள் இருவரும் சேர்ந்து நின்று கணபதியை வணங்கினார்கள்..
அருவிக் கரையில் அமர்ந்தபோது ராதிகா லேசாக தடுமாற.. பதறிப்போய் அவளைத் தாங்கிப் பிடித்தான் முரளி..
"பார்த்து நடக்க மாட்டயாடி.."
அவனது அக்கறை அவள் மனதிற்கு இதத்தைத் தந்தது..
பெருமாள் கோவிலுக்குப் போனபோது அங்கே கூட்டமிருந்தது.. முரளியின் அருகே நின்ற ராதிகாவைப் பார்த்த பெண்கள் கூட்டம் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டது..
'இங்கே எதிலயும் பிரைவஸி இருக்காது...'
ராதிகா நினைத்தக் கொண்டாள்.. அவள் தாய்மையடைந்திருக்கும் செய்தி... அந்த வட்டாரம் முழுவதும் பரவியிருக்கும் என்ற நினைவில் அவள் முகத்தில் செம்மை படர்ந்தது.. பெருமாளையும்.. தாயாரையும் சேவித்து விட்டு அவர்கள் திரும்பிய போது.. ஹேமா எதிரே வந்து கொண்டிருந்தாள்..
"ராது.. " அவள் பரவசத்துடன் அழைத்தபோது.. முரளியின் கோபத்துக்கு அஞ்சியவளாக ராதிகா அவன் முகம் பார்த்தாள்..
"உன் சிநேகிதி வந்திருக்காப்புலயில்ல.. பேசேண்டி.." முரளியின் வார்த்தைகளில் அனுமதி மறைந்திருந்தது..
ராதிகா முகம் மலர்ந்து போனாள்.. ஹேமாவின் குழந்தை ராதிகாவிடம் தாவினான்.. அதைத் தூக்கிக் கொண்ட ராதிகாவின் முகத்தில் குழந்தைக்கான ஏக்கம் இல்லாததைக் கவனித்த முரளியின் மனம் கனிந்தது..
முன்பொரு முறை.. அத்தி பூத்தாற்போல ராதிகாவை இதே போலக் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தான.. அப்போதும் இதே போலதான் ஹேமா குழந்தையுடன் வந்திருந்தாள் குழந்தையும் ராதிகாவிடம் தாவியது.. அதைத் தூக்கிக் கொஞ்சிய ராதிகாவின் முகத்தில் குழந்தைக்கான ஏக்கம் அப்பட்டமாகப் பொங்கி வழிந்தது..
'பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று...
பூக்காமல் காய்க்காமல்
இருந்த மரம் ஒன்று...'
அன்றைய இரவில் பால்கனியின் தனிமையில் அவள் பாடிய பாடல் முரளியின் நெஞ்சை வாள்கொண்டு அறுத்தது...
இன்று அப்படியில்லாமல் பிள்ளைச் செல்வத்தை அள்ளி வழங்கி விட்ட பெருமாளிற்கு மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டான் முரளி...
அவர்கள் திரும்பி வந்த போது வாசலிலேயே மேகலா காத்திருந்தாள்... முரளி புருவங்களை உயர்த்தியபடி காரிலிருந்து இறங்கினான்...
"என்னம்மா...?"
"ஏண்டா.. பிள்ளைத்தாய்ச்சிப் பொண்ணைக் கூப்பிட்டுக்கிட்டுப் போயிருக்க.. நீ திரும்பி வருகிற வரைக்கும் பதட்டமா இருக்காதா..?"
மேகலாவின் பார்வை ராதிகாவை அளக்க.. முரளிக்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது..
"அவ என் பெண்டாட்டி..! அந்த நினைப்பு மனசில இருக்கில்ல..?"
"அடேங்கப்பா... எதுக்குடா உனக்கு இம்புட்டுக் கோபம்வருது..?"
"பின்னே என்னம்மா.. என் பெண்டாட்டியை வெளியில கூப்பிட்டுக்கிட்டுப் போக எனக்கு உரிமையில்லையா...?"
"யாருடா இவன்..."
"உங்க மகன்..! மருமக நினைப்பில அதுவும் மறந்து போயிருச்சா...?"
முரளியின் கோபத்தை மேகலா பொருட்படுத்தாமல் செல்லமாக அவன் முதுகில் ஒரு போடு போட்டாள்..
"பச்சைப்புள்ள மாதிரி பேசறான் பாரு... அவ அதிர்ந்து கூட நடக்கக் கூடாதுடா முரளி..."
அன்றைய இரவில் ராதிகாவிடம் புகைந்தான் முரளி..
"வரவர.. உன்னைத் தொட்டுப் பேசக்கூட முடியலைடி.."
இரவு நேரத்தின் குளுமையில்.. முரளியின் பேச்சில் ராதிகாவின் மனதில் தென்றலடித்தது... பிடிவாதக்காரச் சிறுவனாக முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தவனின் முடிக்குள் கைகளை அளைய விட்டாள்...
"இப்படி என்னை யாரும் தொட்டதில்லை தெரியுமா..." முரளிகூற.. முரளியின் பேச்சில் சிரித்தாள் ராதிகா...
"இவரை மட்டும் யாரும் தொடக்கூடாதாம்.. ஆனா இவர் மட்டும் என்னைத் தொட்டுப் பேசனுமாம்..."
அவளது சரஸத்தில் கிறங்கிப் போனவனாக அவள் பக்கமாகத் திரும்பிப் படுத்தான் முரளி... அவன் கைகள் ராதிகாவை அரவணைத்துக் கொண்டன...
"என் முடியைக் கலைக்கிறதை நான் சொன்னேன்.. இந்த தைரியம் யாருக்கும் வந்ததில்ல... எனக்கு தலைமுடி கலைந்தா பிடிக்காது.. அம்மா சில நேரம் தலையைத் தடவிக் கொடுப்பாங்க... அதுக்கே எனக்கு கோபம் வந்துரும்..."
"ம்ஹீம்... உங்க கோபத்தைப் பத்தி எங்கிட்டச் சொல்லனுமா..? நீங்கதான் மூக்குக்கு மேல கோபத்தை வைச்சுக்கிட்டு இருக்கிறதுர்வாச முனிவராச்சே..."
"நீ எப்படி வேனும்னாலும் என்னைக் கூப்பிடு... ஆனா முனிவர்ன்னு மட்டும் சொல்லாதே... நானே இத்தனை நாள் கழிச்சு.. இப்பத்தான் பெண்டாட்டியை வாசம் பிடிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. இப்பப் போய் முனிவர் அது இதுன்னு சொல்லி வைச்ச... அறைஞ்சு பல்லைக் கழட்டிருவேன்..."
ராதிகாவின் தோள் தடவியபடி அவன் சொல்ல...
மனதிற்குள் நகைத்துக் கொண்டாள் ராதிகா...
'அறைகிற ஆளைப் பார்...'
ஆனாலும்.. பயப்படுவதைப் போல பாவனையும் செய்து வைத்தாள்...
"அடிக்கப் போறிங்களா..? அப்புறமாய் காய்ச்சல் வந்துருமே.. சாயங்காலம்தான் மீனாட்சி சொன்னா..?"
"என்னத்தைச் சொன்னா..?"
அந்த இரவு நேரத்தில் சிருங்காரமாகப் பேசாமல்... மீனாட்சியைப் பற்றி ராதிகா பேசியதில் முரளி எரிச்சல் பட்டான்...
"வேற என்னத்தைச் சொல்லுவா..? இப்பல்லாம் அம்மாவுக்கு காய்ச்சலே வர்றதில்லைன்னு சொன்னா... அத்தை கூட அவளைத் திட்டினாங்க..."
"அவங்க என்னத்தைத் திட்டினாங்க..?"
"ஏண்டி... இப்படியெல்லாம் பேசற..? நானே வயிற்றிலே நெருப்பைக் கட்டிக்கிட்டு.. முரளிக்கு கோபம் வந்துடக் கூடாதுன்னு ஊரில இருக்கிற சாமிக் கிட்டயெல்லாம் வேண்டிக்கிட்டு இருக்கேன்.. இதில நீ வேற பீதியைக் கிளப்பறியேன்னு அவளைத் திட்டித் தீர்த்தாங்க..."
"ஆக மொத்தம் உன்னை அடிச்சுக் காய்ச்சலில் விழ வைக்கிறதுதான் என்னோட வேலைன்னு ஒட்டு மொத்த குடும்பமே முடிவு பண்ணிட்டிங்க..."
முரளியின் குரலில் கனன்ற கோபத்தை 'களுக்' கென்று ரசித்துச் சரித்தாள் ராதிகா...
"சிரிக்காதேடி... உன்னை வெளியில கூப்பிட்டுக்கிட்டுப் போனா திரும்பி வர்ற வரைக்கும்... வாசலிலேயே.. நம்பியாரைப் போலக் கையைப் பிசைஞ்சுக்கிட்டு அம்மா நிற்கிறாங்களே... அவங்க மனசில என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க...?"
"அவங்க நினைப்பைப் பத்தி என்னிடம் கேட்டா... அதைப்பத்தி எனக்கென்ன தெரியும்..?"
"ஓஹோ... உன் மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே..."
முரளி எரிச்சலுடன் கேட்க... ராதிகா நகர்ந்து... அவனை ஒட்டிப் படுத்துக் கொண்டாள்...
அவளின் அந்த நெருக்கத்தில் முரளியின் எரிச்சல் தணிய ஆரம்பித்தது...
அவனின் முடியை விருப்பத்துடன் கலைத்து விட்டபடி... ராதிகா மெல்லிய குரலில் சொன்னாள்...
"உங்களைத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்..."
காதோடு ஒலித்த அவளின் கிசுகிசுப்பான குரலில் போதையேறிப் போனவனாக... முரளி அவளை ஆக்ரமித்தான்.. அவனின் முரட்டுத்தனமில்லாத... ஆனால் வேகம் குறைவில்லாத அணைப்பில் கிறங்கிப் போனவளாக... ராதிகா அவனது முன்னுச்சி முடியை மீண்டும் கலைத்தாள்...
"நீ இதையே ஒரு பிழைப்பாய் வைச்சிருக்கடி..." அவன் கோபமில்லாத குரலில் சொன்னான்...
"அப்படித்தான் செய்வேன்... அதுக்கு இப்ப என்னாங்கறிங்க...?" ராதிகா சண்டைக் கோழியானாள்..
"அடேங்கப்பா... சண்டைக்கு அழைக்கிற... ரொம்பத் தைரியம்தான்... என் அக்காவைக் கூட.. என் தலைமுடியைக் கோத நான் அனுமதிச்சதில்ல தெரியுமா..?"
அவள் கைகளை விலக்காமல்... அவள் விரல்களுக்கு தடை சொல்லாமல்... தலைமுடியை அவளிடம் ஒப்படைத்தவனாக அவன் பேசியபோது... ராதிகா அவன் முடியை இறுக்கிப் பிடித்தாள்...
"என்னடி..?"
"சும்மா... அக்கா.. சொக்கா... அம்மா... ஆட்டுக்குட்டின்னு எதையாவது பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா எனக்குக் கோபம் வந்திரும்..."
"இதைப்பாருடா... என் பெண்டாட்டி கோவிச்சுக்கிறா... கோபம் வந்தா என்னடி செய்வ...?"
"கடிச்சு வைச்சிருவேன்..."
மிக அருகில் தெரிந்த முரளியின் கன்னத்தை ராதிகா கடித்துவிட பாலமுரளிக்குள் இன்பம் கிளர்ந்து எழுந்தது... அவள் தோளை வளைத்திருந்த அவனின் கைகள் அவளை இறுக்கிக் கொள்ள... ராதிகா அவனுக்குள் புதைந்தாள்...
"உனக்கு கோபம் வந்தா... இப்படித்தான் தண்டிப்பியா...?"
அவன் குரலில் வழிந்தோடிய போதை அவளை நனைத்தது...
"ஆமாம்... அப்படித்தான்.. நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம்..."
அவள் குரலில் வழிந்தோடிய உரிமையில் அவன் கிறங்கிப் போனான்... அவள் கொண்டாடிய உரிமையில் அவன் மனம் சிறகடித்துப் பறந்தது...
"இல்லேன்னு நான் சொன்னேனா...?"
"உங்களை என்ன வேணும்னாலும் செய்வேன்..!"
"எடுத்துக்க.. நான் தடுத்தேனா...?"
"நீங்க முழுசாவே எனக்குச் சொந்தம்கிறப்ப முடியைக் கோதக் கூடாதுன்னு நீங்க எப்படிச் சொல்லலாம்...?"
"இனிமேப்பட்டு.. அதை நான் சொன்னா... ஏன்னு கேளுடி..."
அவன்... அவளிடம் தன்னை ஒப்புக் கொடுத்தான்.. உரிமைக்காரியான அவள்.. தனது உடமைப் பொருளான அவனை.. அவனது சொல் பிரகாரம் எடுத்துக் கொண்டாள்... வெள்ளம் அணையுடைத்தது... பொங்கிப் பெருகிய அருவியாய்... அவன் மீதான காதல் உணர்வுகளை அவள் கொட்ட... அவன் அதில் மூச்சுத் திணறிப் போனான்... தடைகளில்லாத ஓட்டம்... அவளுடையதாக இருந்தது... அதில் முரளி கடமையைக் காணவில்லை... காதலைக் கண்டான்... அந்த இரவு முடிந்து... பொழுது விடிந்தபோது... அவன் முழுமையாக அவளுக்குச் சொந்தமானவனாக ஆகிப் போயிருந்தான்..
வழக்கம் போல செல் போனை காதுக்குக் கொடுத்தபடி இறங்கி வந்த மகனிடம் தீபாதரனைத் தட்டை நீட்டினாள் மேகலா...
கற்பூர ஜோதியைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டவனின் முகத்தில் என்றுமில்லாத திருப்தியைக் கண்டவளின் கண்கள் கேள்வியைக் காட்டின... தாயின் முகத்தைக் கவனித்தவன்.. லேசாகச் சிரிக்க... அந்தச் சிரிப்பில் மனம் நிறைந்து விட்டவளாக மேகலா பூஜையறைக்குள் போய்விட்டாள்...
டைனிங் டேபிளில் தட்டை வைத்துக் கொண்டிருந்த ராதிகா.. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்... அவர்களின் பின்னிக் கொண்ட பார்வையில் பொதிந்திருந்த அந்தரங்கத்தில் அவர்களின் மனங்கள் சிலிர்த்தன...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி -158
அம்மம்மா.. கேளடி தோழி -158
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-158.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-158.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy