அம்மம்மா.. கேளடி தோழி..-157

157 இமையோர நினைவுகளில்.. எந்த நினைவு உந்தன் நினைவு..? கண்மூடி.. சேர்ந்து படுத்திருந்தாள் ராதிகா.. அவளது கூந்தல் கலைந்திருந்தது.. மயங்க...

157
இமையோர நினைவுகளில்..
எந்த நினைவு உந்தன் நினைவு..?


கண்மூடி.. சேர்ந்து படுத்திருந்தாள் ராதிகா.. அவளது கூந்தல் கலைந்திருந்தது.. மயங்கி விழுந்து முரளி அவளைத் தாக்கிக் கொண்டு வந்ததில் அவளது உடையும் கசங்கியிருந்தது.. இது அத்தனையிருந்தும் அவள் முகம் அன்றுதான் பூத்த புது மலரைப் போல பொலிவுடன் மலர்ந்திருந்ததைக் கவனித்தபடி அவளருகே சென்று அமர்ந்தான் பால முரளி.
"ராது.."
அவள் முடியைக் கோதி விட்டபடி.. வார்த்தைக்கு வலிக்குமோ என்று மென்மையான குரலில் அழைத்தான் பாலமுரளி...
அவனது விரல்களின் பழகிய ஸ்பரிசத்தில் கண் விழித்துப் பார்த்தாள் ராதிகா.. அவள் முகத்துக்கு நேராகக் குனிந்திருந்த அவளின் காதல் கணவனின் முகத்தில் தெரிந்த கனிவை அவள் பார்வை கணக்கிட்டது..
"ம்ம்ம்..."
"நீ கேட்ட வரத்தைக் கொடுத்துட்டேண்டி..."
அவன் இமை சிமிட்டியதில் அவள் முகத்தில் செம்மை படர்ந்தது.. வெட்கம் முகத்தில் சூழ.. அருகிலிருந்தவனின் கையில் செல்லமாகக் கிள்ளினாள் ராதிகா...
"ம்ஹீம்... எறும்பு கடிச்சாப்புலக் கூட இல்ல.. இதுதான் நீ தாக்கற லட்சணமா..?"
"நீங்க இரும்புல செஞ்சு வைச்ச மனுசர்.. உங்களத் தாக்க யாராலேயும் முடியாதப்ப.. என்னால மட்டும் அது முடிஞ்சிருமா..?"
அவள் புரண்டு அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.. பால முரளி கால்களை நீட்டிக் கட்டிலில் சாய்வாக அமர்ந்து அவளை வாகாக மடியில் படுக்க வைத்துக் கொண்டான்..
"இந்த இரும்பு மனுசனையும் இளக்கிட்டயேடி..."
குனிந்து அவள் நெற்றியில் அவன் முத்தத்தைப் பதித்தபோது.. கண்மூடி அந்த நொடியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டாள் ராதிகா..
'இவன் உண்மையாகத்தான் சொல்கிறானா..?'
அவன் மனதில் சந்தேகம் எழுந்தது.. அவனே சொன்னதைப் போல அவள் வரம் கேட்டாள்.. அவனும் வரம் கொடுத்தான்.. இதில் இளகல் எங்கிருந்து வந்தது என்று நினைத்துப் பார்த்தாள் ராதிகா..
"அதிகமா யோசிக்காதேடி.."
அவளது யோசனையில் சுளிந்திருந்த புருவங்களை நீவி விட்டான் பால முரளி..
"உன் வயிற்றிலே என் புள்ளையிருக்கு.. மனசைப் போட்டு அலட்டிக்கக் கூடாது..."
மிருதுவாக அவன் பேசியபோது.. இவன் கனிவு இதற்காகத்தானோ என்ற எண்ணம் ராதிகாவுக்குள் தோன்றியது...
'இவன் குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. அந்தப் பாசத்தில்தான் இப்படி உருகுகிறான்...'
எதற்காக இப்படியெல்லாம் நினைவுகள் வந்து அலைக்கழிக்கின்றன என்று ராதிகாவிற்கே புரியவில்லை.. விழிப்புமில்லாத.. மயக்கமுமில்லா  அந்த இரண்டுங் கெட்டானான மசக்கை நிலையில் இப்படித்தான் ஏதாவது நினைவுகள் வந்து சூழுமோ என்று கலவரத்துடன் அவள் நினைத்துக் கொண்டான்...
"இனி அந்த கோமதி நாயகத்தின் பொண்டாட்டி எங்கே போய் முகத்தை வைச்சுக்கும்ன்னு பார்க்கலாம்.."
அவளது மனநிலையை அறியாமல் பேசிக் கொண்டிருந்தான் பால முரளி.. அவன் குரலில் தொணிந்த  உற்சாகத்தில் தகப்பனாகப் போகும் குதூகலம் அப்பட்டமாகத் தெரிந்தது..
'இவன் மனசிலயும் அந்த ஏக்கம் இருந்திருக்கலாம்..' ராதிகா நினைத்துக் கொண்டாள்..
இருந்தால்தான் என்ன தவறு என்று அவளுக்கு நினைக்கத் தோன்றவில்லை.. ஊருக்கு முன்னால் அவனுடைய வெற்றியைப் பறைசாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே நினைக்கத் தோன்றியது..
"அம்மாவுக்கு தரையில கால் படலைடி... அப்படியே அந்தரத்தில் மிதக்கிறாங்க.. இத்தன நாளா அவங்க முகத்தைப் பார்க்க முடியாம ஒரு குற்ற உணர்ச்சி என் மனதிலிருக்கும்.. இப்ப அத காணாமல் போயிருச்சுடி ராது..."
அவள் கன்னத்தில் படிந்த அவனின் கையின் தொடுகையில் அவன் உடலில் ஓடிய சிலிர்ப்பை ராதிகாவால் உணர முடிந்தது..
"பிள்ளை வரம் கேட்டு இது அத்தனையையும் சாதிச்சிட்ட ராது.. நீ கெட்டிக்காரிடி..."
இல்லையென்றால் இவன் என்னைத் தொட்டிருக்க மாட்டான் என்று சொல்கிறானோ என்று மனம் குமைந்தாள் ராதிகா..
"என்னமோ போடி ராதிகா... நீ மட்டும் வாய் திறந்து இப்படியொரு வரத்தைக் கேட்கலைன்னா.. காலம் முழுவதும் நீயும்.. நானும் பிரிஞ்சே நின்னுருப்போம்..."
அவன் வார்த்தைகளின் வீரியம் தாங்காமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள் ராதிகா.. தாள மாட்டாத அவளது உணர்வுகள் அவளின் இமையோரமாக கண்ணீராக பொங்கி வழிந்தது..
அவன் மடி நனைந்த ஈரத்தில் அவள் விழிநீரைத் துடைத்தவன் அதட்டினான்..
"எதுக்காகடி இப்பப் போய் அழுது வைக்கிற..? பழசையெல்லாம் நினைச்சு அழ இதுதான் நேரமா..? வயித்திலே பிள்ளையை வைச்சுக்கிட்டு அழுகிறா பாரு.. இந்த மாதிரி சமயத்திலே உன்னை அறைஞ்சு வைக்க மாட்டேங்கிற தைரியமா..?"
முரளியின் கோபத்தில் ராதிகா கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டாள்...
"வீடேசந்தோசம் கொண்டாடுது.. இவ மட்டும் கண்ணீரை விட்டுக்கிட்டு இருக்கா.. அழுக எதுடா சாக்குன்னு காத்திருப்பயா..? உம்முன்னு முகத்தை வைச்சுக்கிட்டு இருக்காம சிரிச்ச முகமாய் இருடி.."
"ம்ம்ம்.."
"இதையும் உம் முன்னுதான் சொல்லனுமா..? ஏன்.. மகராணி வாயைத்திறந்து.. சரின்னு சொல்ல மாட்டிங்களா..?"
"சரி.."
"அதைச் சிரிச்சுக்கிட்டே சொல்ல மாட்டிங்களா..?"
ராதிகா லேசாக இதழ் விரித்துச் சிரித்தாள்.. அந்தச் சிரிப்பில் மயங்கிப் போன முரளி.. அவள் இதழ் மீது முத்தத்தை பதித்தான்..
'இந்த முத்தம் எதற்காக..? இவன் மகனைப் பெற்றுக் கொடுக்கப் போகிறேனே.. அதற்காகவா..?'
என்னதான் போராடினாலும் இந்த எண்ணம் மனதில் சூழ்வதை அவளால் கட்டுப் படுத்தவே முடியவில்லை.. அவள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க அவனோ வேறு ஒன்றை சொல்லி வைத்தான்..
"பாருடி.. இத்தனை நாளா பிள்ளைக்காக என்கிட்டக் கொஞ்சிக் குழாவிட்டு.. நினைச்சது கிடைச்சதும் என்னைக் கண்டுக்காம பட்டினி போட்டேன்னு வைய்யி.. எனக்கு கொலைவெறி கிளம்பிடும்.. சொல்லிட்டேன்.. பார்த்து நடந்தக்க.."
ராதிகாவின் மனதில் இன்னமும் அதிகமாக சோர்வு சூழத் தொடங்குவதை புரிந்து கொள்ளாமல் அவள் கன்னத்தில் தட்டினான் அவன்..
இவன் இப்படியேதான் பட்டம் கட்டுவான் என்ற சோர்வு அவளுக்குள் கிளம்பியது..
குழந்தைக்காகத்தான் அவனிடம் கொஞ்சி குழாவினாள் என்றே சொல்லப் போகிறான்.. காலம் முழுவதும் இந்த வார்த்தைகள் அவளைத் துரத்தப் போகின்றன என்ற நினைவில் அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தன.. அதற்கும் அவன் திட்டுவான் என்ற நினைவில் இமை கொட்டி அந்தக் கண்ணீரை அடக்கிக் கொண்டாள் ராதிகா...
"கீழே போகனும்.."
மாலையில் முரளி கடிந்து கொண்டும் பிடிவாதமாக படியிறங்கி வந்தாள்.. வீட்டிலிலுள்ள வேலையாள்கள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.. அவர்கள் முகத்தில் நிலவிய உண்மையான சந்தோசத்தில் ராதிகாவின் மனதிலிருந்த சோர்வு பறந்தோடியது...
"அப்பவே நான் நினைச்சேன்ம்மா.. உங்க முகமெல்லாம் பளபளன்னு இருந்துச்சு.. அம்மாவுக்கு மசக்கையா இருக்குமோன்னு மனசுக்குள்ள நினைப்பு வந்துச்சு.." என்று காவேரி சொல்ல.. மீனாட்சி நொடித்தாள்..
"அடேங்கப்பா.. இவங்க பாட்டி வைத்தியம் சொல்கிறவங்க.. உடனே கண்டுபிடிச்சிட்டாங்க.. போடி.. போ.. அம்மா மூஞ்சி எப்பயுமே பளபளன்னுதான் இருக்கும்.. உன்னப் போல அழுது வடிஞ்சுக்கிட்டா இருக்கும்..? நீங்க இங்க பாருங்கம்மா..."
காவேரியின் பேச்சை மீனாட்சி கிண்டல் பண்ணியதில் அவள் கொதித்த விட்டாள்..
"ஆமாம்மா.. இவ முகத்தையே பார்த்துக்கிட்டு இருங்க.. நீங்க மயக்கம் போட்டு விழுந்ததுக்கு காய்ச்சல்தான் காரணமாயிருக்கும்ன்னு சொன்ன அறிவுக்கடல்தான இவ.."
அவ்வளவுதான்.. மேகலாவின் வார்த்தையைக் கேட்டு விட்ட மனத்தாங்கலில் சற்று  வாய் மூடியிருந்த மீனாட்சி கச்சை கட்டிக் கொண்டு சண்டைக்கு கிளம்பி விட்டாள்...
"ஏண்டி.. என் அறிவுக்கென்ன குறைச்சல்..?"
"ஊம்..? அது இல்லாததுதான் குறைச்சல்.."
"உனக்கு மட்டும் அது ரொம்ப இருக்கோ.. கையெழுத்து போடத் தெரியாத அறிவுக்கடலெல்லாம் அறிவைப் பத்திப் போசுது.."
"ஆமாண்டி.. நான் கைநாட்டுத்தான்.. நீ என்ன நாட்டு..? பெரிசா பட்டம் வாங்கி கலெக்டர் வேலை பார்க்கறியோ.. நீ ஒன்னாங்கிளாசிலேயே ஓடி வந்தவ.. உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா..?"
"நான் கலெக்டர் வேலை பார்க்கலைதான்..அம்மா என்ன வேலை பார்க்கறிங்களாம்..? கலெக்டர் வேலையா.. இல்ல.. கரண்டி பிடிக்கிற வேலையா..?"
"எதப் பத்தி வேணும்னாலும் பேசு.. ஆனா கரண்டியப் பத்தி மட்டும் பேசாதே.."
"அது எதுக்காம்..? பேசினா.. கரண்டியிலேயே மண்டையில ஒரு போடு போட்டிருவயோ..?"
"உன் வயித்திலே போட்டிருவேன்.. பாருங்கம்மா.. இவளுக்கு இனிமே தண்ணியும் கஞ்சியும்தான் ஆக்கிப் போடப் போறேன்.. நீங்க யாரும் என்னக் குத்தம் சொல்லக் கூடாது.."
காவேரியின் திடீர் முடிவைக் கேட்ட ராதிகா சிரித்தாள்..
"அவரசப் பட்டு எந்த முடிவுக்கும் வந்துராதே காவேரி.. பாவம்.. மீனாட்சிக்கு வகை தொகையாய் சாப்பிட்டுப் பழக்கம்.. அவ வயிற்றைக் காயப் போட்டிராதே.."
"அப்படின்னா வாயை அடக்கிக்கிட்டில்ல இருக்கனும்..?"
"அவளாலே  அது முடியுமா..? நீயும்தான் அவளால செய்ய முடிஞ்ச காரியத்தைச் சொல்ல வேணாமோ.. ஆமா.. அத்தையை எங்கே காணோம்.."
ராதிகா கேட்டவுடன் காவேரியை முறைத்துக் கொண்டிருந்த மீனாட்சி.. உற்சாகமாக பதில் சொல்ல ஆரம்பித்தாள்..
"ஏம்மா.. இத்தன நாளா.. கோவிலுக்கு சாமி கும்பிடப் போனவங்கள சாமியக் கும்பிட விடாம கேள்வி கேட்டு நோகடிச்சவங்களுக்கு பதிலச் சொல்ல வேணாமா..? அதுக்காகத்தான் அம்மா பொழுதிருக்கப்பவே கோவில் பக்கம் போயிட்டாங்க.."
"என்ன கேள்வி..? என்ன பதில்..?"
"என்னாம்மா.. இப்படிக் கேட்டுப்புட்டிங்க.. எனக்குப் பேரன் பிறந்தாச்சு.. மகளுக்குப் பேரன் பிறந்தாச்சு.. உனக்கு இன்னும் பேரப்புள்ள வரலையான்னு கேள்வி கேட்ட வித்தாரக்கள்ளிகளோட வாயை அடைக்க வேணாமா..?"
மீனாட்சியின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாத சங்கடத்தோடு ராதிகா மௌனமானாள்..
"அதான்.. கேட்டுக்கங்கடி பெண்ணரசிகளா.. எனக்குப் பேரப்புள்ள வரப்போகுதுன்னு அத்தனை பொம்பளைககிட்டயும் சொல்லிட்டு வர அம்மா போயிருக்காங்க.."
மீனாட்சியின் வாய் மொழிப்படி.. உற்சாகமாக திரும்பிவந்தாள் மேகலா.. மருமகளைக் கண்டதும்.. அவள் நெற்றியில் குங்குமப் பிரசாதத்தை இட்டு விட்டாள்.. கோவிலில் வந்திருந்த பெண்களிடம் இந்த சந்தோசத்தை சொல்லி விட்ட சந்தோசத்தை மீனாட்சியிடம் பகிர்ந்து கொண்டாள்.. வளைகாப்பிற்கு யார்.. யாரை அழைக்கலாம் என்ற ஆலோசனையை அப்போதே மகனிடம் கேட்டாள்.
தாயினும் சாலப் பரியும் மாமியாரின் அந்த அதீத உற்சாகத்தில் ராதிகாவின் மனதிலிருந்த கொஞ்ச நஞ்ச மனத்தாங்கலும் மறைந்து விட்டது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி..-157
அம்மம்மா.. கேளடி தோழி..-157
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-157.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-157.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy