அம்மம்மா.. கேளடி தோழி..-156

156 ஊரெல்லாம் ஜனமிருக்க.. உன்னைச் சுத்தி என் மனசிருக்கு... மேகலா எதிர்பார்த்த பதிலைத்தான் சொன்னாள் டாக்டர் மாலதி... ராதிகாவை பரிசோதித்த...

156
ஊரெல்லாம் ஜனமிருக்க..
உன்னைச் சுத்தி என் மனசிருக்கு...

மேகலா எதிர்பார்த்த பதிலைத்தான் சொன்னாள் டாக்டர் மாலதி... ராதிகாவை பரிசோதித்து விட்டு முன்னறைக்கு வந்தவள் சிரித்த முகத்துடன் பால முரளியைப் பார்த்தபோதே மேகலாவிற்கு என்ன செய்தி வரப் போகிறது என்று தெரிந்து விட்டது...
ராதிகாவின் உடல்நிலையைக் குறித்த கவலையுடன் இருந்த முரளி ஆச்சரியமானான்.. எப்போதும் அவனை மனைவியைக் கொடுமை செய்யும் கொடுமைக்காரக் கணவனாகவே பார்க்கும் மாலதி அன்று சிரித்த முகத்துடன் பார்த்ததும் அவன் தாயைப் பார்த்தான்.. மேகலாவும் சிரித்த முகத்துடன் தான் இருந்தாள்..
'இங்கே என்னதான் நடக்குது..?'
அவனுக்கு ராதிகாவிடம் போக வேண்டுமென்ற துடிப்பு.. ஆனால் முன்னறையில் மேகலாவும்.. மாலதியும் இருக்கும் போது... அவர்களைக் கடந்து.. அடுத்த பகுதிக்குள் நுழைய அவனால் முடியவில்லை.. அந்த ஒரு காரணத்தினாலேயே பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்...
"கங்கிராஜீலேசன்ஸ் சார்..."
'இது எதுக்காம்..?'
"நீங்க அப்பாவாகப் போறிங்க.."
அவன் மீது பூச்சாரல் பொழிந்தது.. சிறு வயதிலேயே குடும்பபாரத்தை ஏற்று.. அனேக வெற்றிகளை ஈட்டிய அந்தச் சாதனையாளன்.. அவற்றில் பெற்ற சந்தோசத்தை விட அதிகமான சந்தோசத்தை அன்று பெற்றான்...
"தேங்க் யு டாக்டர்.. தேங்க் யு வெரிமச்.."
என்னவோ.. மாலதிதான் மந்திரத்தை போட்டு ராதிகாவின் வயிற்றுக்குள் வாரிசைக் கொண்டு வந்து விட்டதைப் போல முரளி மகிழ்ந்து போய் அவளுக்கு நன்றி சொன்னான்
"கண் திறந்திட்ட பெருமாளே..!"
மேகலாதான் சரியான மார்க்கமாக கடவுளுக்கு நன்றி சொல்லி இரு கைகளையும் குவித்தாள்..
ஆனந்தப் பரவசத்துடன் இருந்த முரளி.. சட்டென்று தன் முன்னாலிருந்த செக் புக்கை எடுத்தான்.. மாலதி மயக்கம் போட்டு விழும்படியான தொகையொன்றை எழுதிக் கையெழுத்துப் போட்டு அவளிடம் நீட்டினான்..
"வாட் இஸ் திஸ்..!"
மாலதியின் அகன்ற விழிகளில் மயக்கம் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தன.. சுதாரித்துக் கொண்ட மேகலா.. அவள் கைகளை நன்றி சொல்வதைப் போல இறுக்கிப் பிடித்து.. அவளை மயக்கத்திலிருந்து தப்பிக்க வைத்தாள்..
"உங்க ஹாஸ்பிடலுக்கான என்னோட டொனேசன்.."
"ஆனாலும் இது அதிகம் சார்.."
"இருக்கட்டும்.."
"நான் என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தேன்னு இவ்வளவு பெரிய தொகையை எனக்குக் கொடுக்கறிங்க.. சார்..?"
"என் சந்தோசத்தைப் பகிர்ந்துக்கறேன் மேடம்.."
அவன் மிகப்பெரிய உயரத்தில் இருப்பவன்.. கோடிஸ்வரன்.. தென்காசி வட்டாரத்திலேயே பெரிய புள்ளி.. தேனூத்து என்றாலே அவன் பிறந்த ஊர் என்று பிறந்த குழந்தை கூடச் சொல்லும்.. என்பது போன்ற.. இத்யாதி.. இத்யாதி விவரங்களை அறிந்தவள்தான் டாக்டர் மாலதி..
ஆனால் சந்தோசமான செய்தியைச் சொன்னால் இவன் இவ்வளவு பெரிய தொகையை வழங்குவான் என்று அவள் நினைத்தும் பார்த்ததில்லை..
அந்த பிரமிப்புடன் அவள் மாடியிறாங்கினாள்..
"என்னடி இது..? சின்னம்மா மயக்கம் போட்டதுக்காக வந்த டாக்டரம்மா.. மயக்கம் போடறதைப் போலவே முகத்தை வைச்சுக்கிட்டுப் போறாங்களே.. என்னவாய் இருக்கும்..?"
சற்று முன்தான் ஜாடை பேசிய நினைவு மறந்தவளாக பக்கத்தில் நின்ற மீனாட்சியிடம் விசாரித்தாள் காவேரி.. அழுது வீங்கியிருந்த முகத்துடன் நின்றிருந்த மீனாட்சி பதில் சொல்லவில்லை.. அந்தப் பதிலை.. முகம் மலர இறங்கி வந்த மேகலாதான் சொன்னாள்..
"காவேரி.. இனிப்பாய் எத்தனை வகை பலகாரம் பண்ண முடியுமோ அது அத்தனையையும் பண்ணுடி.."
"என்னங்கம்மா விசேசம்..?"
எப்போதும் வாயைத்திறந்து எதையும் கேட்காமல் மீனாட்சி மூலமாகவே விசயத்தை கறந்து விடும் காவேரியே.. மேகலாவின் உற்சாகத்தற்கான காரணத்தை அறியும் ஆவலில் வாயைத்த திறந்து கேட்டு விட்டாள்...
எந்த விவரமும் இல்லாத போதே தூண்டித்துருவிக் கேள்விகளைக் கேட்டு.. தொண்டைக்குள் இருக்கும் வார்த்தைகளை தோண்டியெடுத்த விடும் வல்லமை படைத்த மீனாட்சி மட்டும் அசையாமல் பேசாமடந்தையாக நின்றாள்..
அதீத உற்சாகத்திலிருந்த மேகலா அதைக் கவனிக்கவில்லை..
"எனக்குப் பேரப்புள்ள பிறக்கப் போகுதுடி.."
அவளின் சந்தோசம் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது...
"அடியாத்தி.. அதனாலதான் சின்னம்மா மயக்கம் போட்டு விழுந்தாங்களா..?"
"ஆமாம் காவேரி.."
"ரெண்டு நாளா வாயில எதையும் வைக்க முடியாம வாந்தியெடுத்துக்கிட்டு இருக்கிறப்பவே நினைச்சேன்.."
"எனக்கும் அதே நினைவுதான்.."
அவர்கள் பேசியப்படியே உள்ளே சென்றுவிட.. மீனாட்சி மெதுவாக மாடிப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்..
'அதனாலதான் பெரியம்மா என்ன அதட்டினாங்களா..? நான் ஒரு கூறு கெட்டவ.. விவரமில்லாம பேசிவைச்- சுட்டேன்.. அம்மா சொன்னதைப் போல.. காலாகாலத்தில என் கழுத்திலயும் ஒரு மூணு முடிச்சு விழுந்திருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.. சும்மா வெறும் வாயை அடிச்சுக்கிட்டு இருந்தா என்னத்தை தெரியும்..? ம்ஹீம்.. அதையெல்லாம் செஞ்சு வைக்க.. எனக்குன்னு யாரு இருக்கா..?'
ஊமைச் சோகத்துடன் அவள் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.. காவேரியிடம் உத்தரவுகளை பிறப்பித்து விட்ட வந்த மேகலா அப்போதுதான் மீனாட்சியைப் பார்த்தாள்..
"ஏண்டி.. நீ இங்கேதான் இருக்கியா..?" ஆச்சரியத்துடன் வினவினாள்..
"ஆமாம்.. பெரியம்மா.." தீனமான குரலில் சொன்னாள் மீனாட்சி..
"வெறும் பேச்சுக்கு எட்டூரைக் கூட்டுவ.. இப்ப.. இவ்வளவு பெரிய விசயம் நடந்திருக்கு.. நீ வாயைத் திறக்காம கூட்டி மெழுகிக்கிட்டு இருக்க.. என்னடி ஆச்சு..?"
"ஒண்ணுமில்ல பெரியம்மா.."
அப்போதுதான் மீனாட்சி.. முகம் பார்க்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள் மேகலா.. அவள் முகம் மாறியது...
'இவளுக்கு என்ன ஆச்சு..?' புருவங்களை உயர்த்தியவள்...
"இங்கே வாடி.." என்று அதட்டல் போட்டாள்..
"என்னங்கம்மா.." குனிந்த தலை நிமிராமல் விளக்குமாறும்.. கையுமாக வந்து நின்றாள் மீனாட்சி.
"ஏண்டி.. தலையைக் குனிஞ்சுக்கிட்டு நிற்கிற..? என் முகத்தைப் பார்க்க மாட்டியோ.. நானென்ன உன்னப் பொண்ணுப் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையா..? எதுக்காக இப்படி மண்ணுக்குள்ள புதையலைத் தேடற..?"
மேகலா கேலி பேசினாள்.. அப்போதும் மீனாட்சி முகத்தை நிமிர்த்தாமல் நிற்க.. அவளுக்கு கோபம் வந்து விட்டது...
"அடச்சீ.. நிமிர்ந்து பாரு.."
மெதுவாக மீனாட்சி முகத்தை உயர்த்த.. மேகலா பதறிப் போனாள்...
"என்னடி முகமெல்லாம் வீங்கிக்கிடக்கு..?"
அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல் மீனாட்சி நிற்க.. கிடைத்தது வாய்ப்பென்று.. போட்டுக் கொடுத்தாள் காவேரி...
"வேற ஒன்னுமில்லைம்மா.. நீங்க சும்மா பேசின ஒத்தைப் பேச்சுக்கு.. இம்புட்டு நேரமும் இவ அழுது தீர்த்தா.."
"அவ சொல்றது நிசமா மீனாட்சி..? நான் பேசின பேச்சுக்கா இப்படி முகம் வீங்க அழுது வைச்ச..?"
மேகலா அதட்டிய அதட்டலில் மீனாட்சிக்கு மீண்டும் அழுகை வந்து விட்டது...
"நீயாடி அழுகிறது..?" மேகலா அதிசயப் பட்டுப் போனாள் ....
"அதைத்தான்ம்மா நானும் கேட்டேன்.. இவ ஊரையே அழுக வைப்பா.. இவ அழுது வைக்கிறதை இப்பத்தான் நானும் பார்க்கிறேன்.."
அப்படியொரு காட்சியைக் காண.. ஆண்டாண்டு காலமாக ஆவலுடன் தவமிருந்த காவேரி மகா சந்தோசமாக கூறினாள்..
"இங்கே வா மீனாட்சி.."
மேகலா அன்புடன் மீனாட்சியை அருகே அழைத்து.. தன் முந்தானையால் அவளது கண்ணீரைத் துடைத்து விட.. காவேரி 'ஆ' வென்று வாய் பிளந்தாள்..
'பெரிய வீட்டம்மா சேலை முந்தாணையில இவ கண்ணீரை துடைச்சு விடறாங்களே..' அவளுக்குள் பொறாமை கனன்றது..
அவளது எரிகின்ற பொறாமைத்தீயால் இன்னும் கொஞ்சம் எண்ணையை ஊற்றும் விதமாக.. மீனாட்சியின் தலை கோதி விட்டாள் மேகலா..
"நான் பேசினதுக்கா இம்புட்டுக் கண்ணீரை விட்ட..?"
அவளது பாசத்தில் உருகி விட்டாள் மீனாட்சி..
"இல்ல பெரியம்மா.. நீங்க பேசறதைப் போல நான் விவரம் கெட்டத்தனமா பேசிப் புட்டேன்.."
"போடி பைத்தியம்.. முரளி பதறிப் போயிருந்தான்.. எனக்கு மனசில ராதிகா பிள்ளையாண்டிருக்காளோன்னு ஒரு நினைப்பு.. அதுதான்னு நிச்சயமாகத் தெரியாம எதையும் வெளியே சொல்லவும் முடியல.. அப்படியில்லன்னு ஆகிப்போனா.. ராதிகாவின் மனசு சங்கடப்படாதா..? அதனால்தான் டாக்டரம்மாவை வரச் சொன்னேன்.. அந்த விவரம் தெரியாம நீ பேசிவைச்சா.. நானும்தான் என்ன பண்ணுவேன்..? நீயே சொல்லு.."
அவ்வளவு பெரிய மனுஷி.. அந்த வீட்டுக்கு எஜமானி.. தேனூத்து பெரியதனக்காரான மாணிக்க வாசகத்தின் மனைவி.. தென்காசி வட்டாரத்தின் பெரிய புள்ளியான பால முரளியைப் பெற்றெடுத்த அம்மா.. ஒரு சாதாரண வேலையாளிடம் தனது பேச்சிற்கான விளக்கத்தைக் கூறியதில் மீனாட்சிக்கு திரும்பவும் கண்ணீர் வந்து விட்டது..
"என்கிட்டப்  போயி இந்த அளவுக்கு விளக்கம் சொல்லுனுமாம்மா.."
"சொன்னா என்ன தப்பு..? ஏண்டி.. எனக்கு உன்னைப் பேச உரிமையில்லையா..? நீ இத்தணூண்டாய் இருக்கிறப்ப தாய்.. தகப்பனில்லாத பொண்ணுன்னு உங்க பெரியாத்தா கிழவி கூப்பிட்டுக்கிட்டு வந்து என் பொறுப்பில் விட்டுட்டுப் போனா.. போனவளும் மேலே போய் சேர்ந்துட்டா.. நீ இங்கேதானடி வளர்ந்த..?"
"பெரியம்மா.."
"அழுகாதே மீனாட்சி.. ஏழுகழுதை வயசாகியும் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம நிற்கிறேங்கிற கோபத்தில பேசிட்டேன்.. ஊரில பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க..? இந்தா பாரு.. சின்னப்புள்ளயா இருக்கிறப்பவே.. பெரிய வீட்டில வேலைசெய்ய மீனாட்சி வந்திட்டா.. இன்னமும் அவகிட்ட வேலையை மட்டும் வாங்கிக்கிட்டு.. அவ கழுத்தில தாலி ஏற வகை செய்யாம பெரிய வீட்டம்மா இருக்கிறாங்களேன்னு பேசமாட்டாங்களா..?"
நாதியில்லாமல் போய் விட்டோமே என்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மீனாட்சி.. கண்ணீரை மறந்தவளாக.. மேகலாவை பிரமிப்புடன் பார்த்தாள்..
'பெரிய வீட்டம்மா மனசில இப்படியும் ஒரு நினைப்பிருக்கா..'
"என்னடி அப்படிப் பார்க்கிற..? அடைக்கலம்ன்னு எங்க வீட்டில நீ வந்து சேர்ந்திட்ட.. உனக்கு நாங்கதானடி எல்லாத்தையும் செஞ்சு வைக்கனும்..? வெளியிடத்தில மாப்பிள்ளை தேடலாமுன்னா.. நாச்சியப்பன் குறுக்க வந்து நிக்கிறான்.. அவனப் பத்தி உங்கிட்டப் பேசலாமுன்னு பார்த்தா.. நீ அவனைக் கண்டால பத்ரகாளியாய் மாறி வைக்கிற... உங்க ரெண்டு பேத்தையும் ஒருநா சேர்ந்தாப்புல உட்கார வைச்சு இதையெல்லாம் விலாவரியாக பேசி முடிக்கனுமுன்னு இருந்தேன்.. அதைச் செய்ய முடியாம.. ராதிகாவோட கவலை என் மனசைப் போட்டு அரிச்சிக்கிட்டு இருந்துச்சு.. இப்பத்தான் அந்தக் கவலை தீர்ந்துருச்சே.. அடுத்த கவலையான உன் கல்யாணத்தையும் பேசி முடிச்சிர வேண்டியதுதான்.."
'எனக்குக் கல்யாணத்தை செய்து வைக்க.. எனக்குன்ன யாரு இருக்கா..'
தன் மனதில் ஓடிய நினைவுகளுக்கு பதில் கிடைத்து விட்டதில் மீனாட்சியின் சோர்வும்.. சோகமும்.. பறந்தோடி விட்டது.. மேகலா.. ஆதுரத்துடன் பேசுவதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த காவேரியை வெற்றிப் பார்வை பார்த்தாள் அவள்..
"இனிமே அழுகாதேடி மீனாட்சி.."
"நீங்க இருக்கிறப்ப நான் எதுக்காக அழுகப் போறேன் பெரியம்மா..? ஏன் காவேரி.. இப்படி வாயைப் பார்த்துக்கிட்டு நிக்கறியே.. அம்மா சொன்ன இனிப்புப் பலகாரத்தை ஆக்கி வைக்க யாரு வருவா..? போ.. போயி வேலையைப் பாரு.. வந்துட்டா.. வாயைப் பார்க்க.. போயி அடுப்படியைப் பாரு.."
மீனாட்சி.. பழைய மீனாட்சியாகி விட்டாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி..-156
அம்மம்மா.. கேளடி தோழி..-156
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-156.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-156.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy