அம்மம்மா.. கேளடி தோழி..-153

153 திரை மறைவினில் இருப்பதை.. இவ்வுலகில் யாரறிவார்...? கீதா இரண்டே நிமிடத்தில் சமாதானமாகி விட்டாள்... காரில் ஏறிய மைத்துனியின் பக்கம் ...

153
திரை மறைவினில் இருப்பதை..
இவ்வுலகில் யாரறிவார்...?


கீதா இரண்டே நிமிடத்தில் சமாதானமாகி விட்டாள்... காரில் ஏறிய மைத்துனியின் பக்கம் திரும்பிய முரளி...
"கடை வீதிப் பக்கம் போய் வரலாமா...?" என்று கேட்டான்...
"அதை உங்க பெண்டாட்டி கிட்ட கேளுங்க அத்தான்...", என்றாள் கீதா...
"ஏன்.. உன்னிடம் கேட்டா ஆகாதா..?"
"எனக்கெதுக்கு அத்தான் பொல்லாப்பு...?"
"நீ கூடப் பயப்படுவியா..? காத்து கருப்புக்கே பயப்படாத ஆளு நீ..."
"இப்படிச் சொல்லிச் சொல்லியே.. காத்து கருப்பு கையில என்னைப் பிடிச்சுக் கொடுத்துடுவீங்க போல இருக்கே..."
"என்ன ராதிகா... வரப் போற புருசனை காத்து கருப்புன்னு உன் தங்கை சொல்கிறதைப் போல இருக்கில்ல...?"
அவன் உற்சாகமாகப் பேசியபடி நகைக் கடையின் முன்னால் காரை நிறுத்தினான்... ராதிகா அவளுக்குப் பிடித்த நகைகளை எடுத்துக் கொண்டு.. அழகான நகைசெட் ஒன்றை வாங்கி கீதாவுக்கு பரிசளித்தாள்...
"எனக்கே.. எனக்காடி.." கீதா விழிகளை விரித்தாள்..
சுந்தருக்காக விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை வாங்கிக் கொண்டாள் ராதிகா... அவர்கள் வீடு திரும்பிய போது ராஜேஸ்வரி கவலை படர்ந்த முகத்துடன் வாசலிலேயே காத்திருந்தாள்.. இளைய மகளுக்கும்.. மகனுக்கும் மருமகன் பரிசுகளை வாங்கித்தந்ததில் அவளுக்குள் ஒரு நிறைவு ஏற்பட்டது...
அன்றை இரவில்... பாலமுரளி என்றையும் விட அதிகமான நெருக்கத்தை ராதிகாவிடம் காண்பித்தான்.. கூடி முடித்த களைப்பில் ராதிகா கண்மூடிக் கிடந்த போது... மெதுவான குரலில் வினவினான்...
"எனக்குப் புரியலை ராதிகா..."
"எது..?" அவள் கண்திறவாமல் கேட்டாள்...
"உன் தங்கையோட வார்த்தைக்கும்.. நீ பேசினதா ஷோபா ரெகார்டு பண்ணி அனுப்பின உன் வார்த்தைகளுக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கே.. உன் தங்கை என்னடான்னா... உனக்கு சங்கர் பெண் கேட்டு வந்ததில இஷ்டமே இல்லைங்கிறா.. நீ என்னடான்னா.. சங்கர் உன்னைப் பெண் கேட்டு வந்தது நீ செய்த புண்ணியம்ன்னு பேசி வைச்சிருக்கே.. இரண்டும் இடிக்குதேடி.."
ராதிகா பதில் சொல்லவில்லை.. அவனும் அவளுடைய பதிலை எதிர்பார்க்கவில்லை.. என்ன நினைத்தானோ... ராதிகாவை அனைத்து அவள் நெற்றியில் மிருதுவான முத்தமொன்றைப் பதித்தான்.. அப்படியே தூங்கி விட்டான்.. அந்த ஒரு செய்கையில் ராதிகாவின் கண்நிறைந்து விட்டது.. எத்தனையோ தினங்களுக்கு பின்னர் இனம் புரியாத அமைதி அவள் நெஞ்சில் வியாபித்தது...
மறுநாள் அவர்கள் கிளம்பிய போது... ஆயிரம் முறை "பத்திரம்.." என்று எச்சரித்தாள் ராஜேஸ்வரி...
"என்ஜாய் பண்ணிட்டு வாங்க...", என்றார் கிருஷ்ணமூர்த்தி...
கீதாவும்.. சுந்தரும்.. அவர்களுக்கு வாங்கி வரவேண்டிய பொருள்களை பட்டியலிட்டு அவர்கள் கையில் கொடுத்தார்கள்...
"கீதா.." ராஜேஸ்வரி ஆட்சேபக்குரல் எழுப்பினாள்..
"என்னம்மா இது... என்கிட்டத்தானே கேட்கிறாங்க..", ராதிகா பதிலுக்கு ஆட்சேபித்தாள்..
எல்லோரும் கையாட்ட.. விமானத்தில் ஏறி அமர்ந்த போது.. இது கனவா.. இல்லை நனவா என்ற பிரமிப்பு அவள் நெஞ்சில் எழுந்தது..
முதல் முறை விமானத்தில் பயணம் செய்கிறாள் என்பதால் முரளி அவளுக்கு சீட்பெல்டைப் போடச் சொல்லிக் கொடுத்தான்.. விமானம் எழும்பி வானில் பறந்தது...
வெளிநாட்டில் இருந்த நாள்களில் முரளி கேட்ட அந்தத் தனிமை அவர்களைச் சுற்றிப் பரவிப் படர்ந்திருந்தது.. அவனின் வேட்கை மிகுந்த ஆக்ரமிப்பில் தன்னை ஆழ்த்திக் கொண்டாள் ராதிகா.. முதல் ஒரு வாரம் முழுவதும்.. சாப்பாடு.. தூக்கத்தை மறந்து.. அவளில் மூழ்கி முத்தெடுப்பதே குறியாக இருந்தான் முரளி... மறு வாரத்தில் ஊரைச் சுற்றிக் காட்ட அவளை வெளியே அழைத்துப் போனான்... அவளின் இடையோடு அவன் கை இறுக்கிக் கொள்ள.. நெருக்கத்தை விடாமல் அவன் ஊர் சுற்றியதில் அவள் சங்கோஜப் பட்டுப் போனாள்..
"இது தேனூத்தில்லைடி..." அவன் கண்சிமிட்டி.. சுற்றிலும் காட்டினான்...
இயல்பான முத்தப் பரிமாற்றங்களுடன்.. ஒருவரோடு ஒருவர் பசைபோட்டு ஒட்டிக் கொண்டதைப் போல ஆணும் பெண்ணும் அங்கே நடமாடிக் கொண்டிருந்ததில் ராதிகாவின் சங்கோஜம் சற்றே அகன்றது...
பாலமுரளிக்கு அங்கே வியாபார நிமித்தமான வேலைகள் சில இருந்தன... அவற்றைக் கவனிக்க அவன் போகும்போது ராதிகா தனியாக அறையில் இருப்பாள்.. சிலசமயம் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நீண்ட நடைபாதையில்.. புல்வெளியின் மத்தியில் நடந்து கொண்டிருப்பாள்...
அப்படியொரு நாள் நடந்து கொண்டிருந்த போது...
"ராதிகா..." என்று யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது...
நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.. அங்கே சங்கர் நின்று கொண்டிருந்தான்...
'இவனா...'
பதட்டத்துடன் சுற்று முற்றும் பார்த்தாள் ராதிகா.. அதைக் கவனித்த சங்கரின் கண்களில் இரக்கம் மிதந்தது..
"ஏன் பயப்படறிங்க ராதிகா..? முரளி இங்கேயில்லை.."
'அதைக் கவனிச்சுட்டுத்தான் நீ இங்கே வந்தயா..? ஏண்டா என்னைப் பாடாய் படுத்தற..? வெளிநாட்டுக்கு வந்தாலும்  நீ விடமாட்டியா..? இங்கேயும் தொடுத்துக்கிட்டு வருவியா...?'
"இது பிஸினெஸ் டிரிப் ராதிகா... இந்த ஹோட்டலில் தான் தங்கியிருக்கேன்..."
அவன் எதுவுமே நடக்காததைப் போல இயல்பாக பேச.. ராதிகா குற்ற உணர்வுடன் உதட்டைக் கடித்தாள்...
அவளது புறக்கணிப்பை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே...
எதையாவது கேட்க வேண்டுமே என்பதற்காக...
"நித்யா வரலையா..?" என்று விசாரித்தாள் ராதிகா..
அந்தக் கேள்வியை அவன் விரும்பவில்லையோ.. என்னவோ.. சட்டென்று முகம் மாறினான் அவன்...
"அவ எதுக்கு...?"
"என் ஹஸ்பெண்டும் பிஸினெஸ் டிரிப்பாத்தான் வந்திருக்கார்.. ஆனா.. என்னையும் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்காரே.. அதனாலேதான் நான் கேட்டேன்..."
ராதிகாவின் வார்த்தைகளில் தொனித்த மறைமுகக் குத்தலில் அவன் அவளையே உறுத்துப் பார்த்தான்... பின் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்..
"முரளிகூட நீங்க வந்திருக்கீங்களே..."
ராதிகா மீண்டும் அதிர்ந்தாள்.. அவன் பேச்சில் வெளிப்பட்ட அப்பட்டமான பொருமலை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை...
அவளுடைய கணவனுடன் அவள் வந்திருக்கிறாள்.. அதை சங்கர் பேசிய விதத்தில் அவள் அருவெறுப்படைந்தாள்...
"உங்க கூட நித்யா வந்திருக்கனுமே..." அழுத்தமான குரலில் கூறினாள்...
அவளின் குரல் அழுத்தத்தை சங்கர் உணர்ந்து கொண்டதாகவே தெரியவில்லை... தன் போக்கிலேயே அவன் பேசினான்...
"கடமைக்காக செய்த கல்யாணம்... தென்காசியில தான் அவ முகத்தைப் பார்க்கனும்னா.. இங்கேயும் அவளை கூப்பிட்டுக்கிட்டு வரச் சொல்றிங்களா..?"
ராதிகா சட்டென்று அறைக்குத் திரும்பி விட்டாள்.. முரளி வந்து கதவைத் தட்டியபோது... பயத்துடன் கதவிலிருந்து பாதுகாப்பு வளையத்தைப் பொருத்தி யாரென்று பார்த்த பின்பு திறந்து விட்டாள்.. அவளது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்ட பாலமுரளியின் புருவங்கள் முடிச்சிட்டன..
"என்னடி..?"
விவரத்தைச் சொன்னால் அந்த வினாடியிலேயே அவன் தேனூத்துக்குக் கிளம்பச் சொல்லி விடுவான் என்பதை அறிந்திருந்தவள் தேநிலவு பாதியிலயே முடியப் போகும் ஏக்கத்தில் பெருமூச்சு விட்டாள்...
"என்னன்னு கேட்டேன் ராதிகா..?" பாலமுரளி அதட்டினான்..
சொல்லாமல் இருக்கவும் முடியாது.. அதன் பின் விளைவுகள் மிக விபரீதமாக அமைந்து விடக் கூடும் என்ற அச்சத்தில் ராதிகா தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள்...
தேநிலவைக் கொண்டாட முடியாமல் போனாலும் பரவாயில்லை... என்ற முடிவிற்கு வந்தவளாக...
"அவனைப் பார்த்தேன்..." என்று சொல்லி விட்டாள் ராதிகா...
"எவனை..?"
"அதான்.. அந்த சங்கரைப் பார்த்தேன்... இந்த ஹோட்டலில்தான் தங்கியிருக்கானாம்..."
"எப்பப் பார்த்த...?"
"நீங்க வருகிறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதான்..."
முரளியின் முகச்சுளிப்பு மறைந்து.. அவன் முகத்தில் மெலிதான ஆச்சரியம் படர்ந்தது...
"ஓ..! அதனாலதான் நீ கதவைத் திறக்கப் பயந்தியா..?"
ராதிகா பதில் சொல்ல முடியாத சங்கடத்துடன் மௌனித்தாள்... முரளி உடையை மாற்றிக் கொண்டு.. அவளைப் பார்த்தான்...
"சாப்பிடப் போகலாமா...?"
ராதிகாவின் விழிகள் விரிந்தன... இவ்வளவு தானா..? இதற்குமேல் சங்கரைப் பற்றிக் கேட்க எதுவுமேயில்லையா..?
"நாம ரூமிலயே சாப்பிட்டுக்கலாமா..?" தயக்கத்துடன் கேட்டாள்...
"ஏன்..? இன்னைக்கு முழுவதும் நானில்லாம நீ ரூமிலேயே சாப்பிட்டுட்டு அடைஞ்சு கிடந்திருப்ப.. இப்பவாவது வெளிக் காற்றை சுவாசிக்க வா..." அவன் வற்புறுத்தினான்...
"அதில்லைங்க.." ராதிகா சங்கடப்பட்டாள்...
"ராது..." அழுத்தத்துடன் அழைத்தான் பாலமுரளி..
அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு... எதுவோ புரிவதைப் போல இருந்தது...
"வான்னு சொல்றேனில்ல..."
அதற்கு மேல் வாதாடாமல் அவனுடன் இணைந்து வெளியே நடந்தாள் ராதிகா.. வழக்கம் போல முரளியின் கரங்கள் அவளின் இடைமீது படிய.. மனதிலிருந்த சஞ்சலங்கள் விலகி விட்டதை உணர்ந்தாள் அவள்...
அன்றைய இரவில்.. அவன் நெருங்கிய போது.. அவளுக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச மனக்கிலேசமும் விலகி ஓடிவிட்டது.. அவனின் அருகாமையைத் தவிர வேறு எதுவும் அவள் நினைவில் நிற்கவில்லை... அவன் கைகளுக்குள் உருகிக் கரைந்து கலந்து விட்டாள்..
மறுநாள் காலையில் அவன் முகத்தைப் பார்த்தபோது... அவன் முகத்தில் எதுவோ தெரிந்தது... இனம் விளங்காத பார்வையுடன் முரளி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அந்தப் பார்வை சொல்வது எதை..? படபடக்கும் நெஞ்சத்துடன் அவன் பார்வையை எதிர்கொண்டாள் ராதிகா.. ஒரு புன்னகையுடன் அவளை அவன் இழுத்துக் கொண்டபோதுதான் அவளுக்கு சீரான சுவாசமே வந்தது..
'அப்பாடி.. எதுவும் சிக்கலில்ல..'
முரளி வெளியே கிளம்பலாம் என்று சொன்னபோது ராதிகாவுக்கு ஆச்சரியமாகி விட்டது...
'இவன் தேனூத்துக்கு கிளம்பச் சொல்வான்னு பார்த்தா... ஊரைச் சுற்றலாம்.. வாடின்னு கூப்பிடறான்..'
"என்னாச்சு ராது...?"
விழிவிரிய நின்று கொண்டிருந்தவளை விரல் சொடுக்கி தன்னுணர்விற்கு கொண்டு வந்தான் முரளி..
இப்போதெல்லாம் அடிக்கடி அவன் 'ராது' என்று தான் அழைக்கிறான் என்ற நினைவில் வெட்கப் புன்முறுவலைப் பூத்தாள் ராதிகா..
"ஒன்னுமில்ல..."
"ஒன்னுமில்லாததுக்கா அப்படி நின்ன..?"
அவளால் என்ன சொல்ல முடியும்..?
'அடேய் புருசா..! நீ மூட் அவுட் ஆகி தேனூத்துக்கு என்னைக் கிளம்பச் சொல்லிவியோன்னு நினைச்சிருந்-தேண்டா.. அது மாறிவிட்டதில மயக்கமே வந்திருச்சுடா..' என்றா சொல்ல முடியும்..?
அவள் மீண்டும் ஒரு சிரிப்பைச் சிந்த.. அவன் மயங்கிப் போனான்...
"ஏய்ய்... தேனூத்தை விட்டு வந்ததில இருந்தே... நீ ஒரு மார்க்கமாத்தாண்டி இருக்கிற... எள்ளுன்னு நான் நினைச்சு முடிக்கிறதுக்குள்ள எண்ணையா நிற்கிற.. இதையெல்லாம் தேனூத்தில ஏண்டி ஒளிச்சு வைச்சிருந்த..?" என்றபடி அவளைக் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான்...
அவன் கழுத்தில கைகளை மாலையாக்கி... சூரியனை சூரியகாந்திப் பூ பார்ப்பதைப் போல...
அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தவளின் முகம் அந்தப் பூவைப் போலவே மலர்ந்து விகசித்திருந்தது...
இது போன்ற ஒருநாள் இனியும் வருமா என்று அவள் நெஞ்சம் கேட்டுக் கொண்டது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி..-153
அம்மம்மா.. கேளடி தோழி..-153
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-153.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-153.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy