அம்மம்மா.. கேளடி தோழி.-150

150 இரவலில்லா கற்பனை எனது... இதைத்திருடும் களவு உனது... மற்றவர்களின் கற்பனையையும்.. பேச்சுத் திறனையும் தனதாக எப்படிக் கூற முடிகிறத...

150
இரவலில்லா கற்பனை எனது...
இதைத்திருடும் களவு உனது...

மற்றவர்களின் கற்பனையையும்.. பேச்சுத் திறனையும் தனதாக எப்படிக் கூற முடிகிறது என்று ராதிகாவிற்குப் புரியவில்லை...
சொத்தைத் திருடுவதும்... மற்றவர்களின் கற்பனையைத் திருடுவதும் ஒன்றுதானே... இரண்டுக்கும் வித்தியாசம் எதுவுமில்லையே...
அறிவு என்பது மிகப் பெரிய செல்வம்.. அதைப் பெற்றவர்கள் சொல்வதை... மற்றவர்கள்.. கவர்ந்து கொள்தல் முறையான செயலில்லையே...
"இவ பெரியஆளுக்கா... இவ என்ன செய்தாலும்... நான் தட்டிக்கேட்க முடியாதுங்கிற தைரியம்... இப்படித்தான் நான் அப்பாகிட்ட பாசமலரை வளர்க்கறீங்களான்னு வேடிக்கையா கேட்டுக் கிட்டு இருக்கேன்.. பத்தே நிமிசத்தில.. பக்கத்து விட்டு சரவணன் கிட்ட இந்தக் கேள்வியை இவ கேட்கிறா..."
"ஏண்டா.. நீ நினைச்சதை இவளும் நினைச்சிருக்கலாமில்லையா...?"
"அப்படித்தான்க்கா... முதலில் நானும் நினைச்சேன்.. ஆனா.. நான் நினைக்கிற அத்தனை நினைப்பையுமா இவ நினைப்பா..? அப்படி நினைக்கிறவ.. எனக்கு முதல்ல... அந்த நினைப்பை வெளியில் சொல்லியிருக்கலா-மில்லையா.. அதை விட்டுட்டு.. போன வாரம் நான் பேசிவைக்கிற பேச்சை... அடுத்த வாரம் அப்படியே பேசிவைச்சா என்னக்கா அர்த்தம்...?"
"அது தப்புத்தாண்டா..."
"அதை இவகிட்ட யார் சொல்றது..? நான் ஒரு பாதை போட்டு நடந்தா.. அதில இவ உரிமை கொண்டாடிக்கிட்டு கூட வர்றா.."
"வந்தா.. வந்துட்டுப் போகட்டும்டா... நீ உன் வழியில போ..."
"நான் அப்படித்தான்க்கா இருக்கேன்.. என்வழி தனிவழின்னு யார் பேச்சுக்கும் போகாம.. நான் உண்டு.. என் வேலை உண்டுன்னு இருக்கேன்.. இவளுக்குத்தான் என்னை காப்பியடிக்கிறதே பிழைப்பாய் இருக்கு..."
"அது எத்தனைநாள் நிலைக்கும்டா சுந்தர்..? ஒரிஜினாலிட்டி தான் நிலைச்சு நிற்கும்..."
"இதைச் சொல்லி மனதை ஆற்றிக்க வேண்டியது தான்.. இப்படியாப்பட்ட பிறவிகளுக்கு மத்தியிலே இருந்து தொலைக்கிறோமே... வேற என்னதான் செய்கிறது..? நான் பேசற ஒவ்வொரு வார்த்தையையும் அட்சர சுத்தமாய் அப்படியே காப்பியடிக்கிறாக்கா.. இதில.. இவ பேசறதை ரசிக்க ஒரு கூட்டமே இருக்கு.. என்ன ஒன்னு.. இவ பேசறதைக் கேட்டுட்டு அவங்க எனக்கு போன் பண்ணிச் சொல்லுவாங்க..."
"என்னன்னு..?"
"அவபேசறது அப்படியே நீ பேசறதைப் போலவே இருக்குடாம்பாங்க..."
"இதுதாண்டா சுந்தர்... இந்த வார்த்தை உன்னை நிருபிக்கும்.. அவ பேசற பேச்சில அவளைப் பார்க்காம.. உன்னைப் பார்த்தாங்கன்னா.. அதுதாண்டா உன் ஒரிஜினிலாட்டியோட வெற்றி..."
"அப்படியா சொல்ற...?"
"ஆமாண்டா சுந்தர்... எதைச் செய்தாலும்... அதில வேலை செய்கிறவங்களோட முகம் தெரியனும்.. அவங்களோட திறமை தெரியனும்.. அதை விட்டுட்டு.. அடுத்தவங்களோட முகத்தைப் போல முகமூடியைப் போட்டுக்கிட்டு அதுக்குப் பின்னால ஒளிஞ்சு நின்னு வேலை செஞ்சா.. பணம் கிடைக்கலாம்... மனத்திருப்தி கிடைக்காது.. ஆயிரம் தான் நாம இதை உருவாக்கியிருந்தாலும்... இதில் மத்தவங்களோட கற்பனையையும்.. பேச்சுத் திறமையையும் களவாடி கலந்திருக்கோம்ன்னு அவங்க மனச்சாட்சி அவங்களை உறுத்தும்.. அந்த வெற்றியெல்லாம் ஒரு வெற்றியாடா..? அது அடுத்தவங்களின் யுக்தியையும்.. கற்பனையையும்.. களவாடி.. கலந்து பெற்ற வெற்றி..."
"மனச்சாட்சி இருந்தாத்தானேக்கா அது உறுத்தப் போகுது..? இப்படியாப்பட்ட ஆளுகளுக்கெல்லாம் மனச்சாட்சி இருக்கும்கிற..?"
"அது இருக்காதுதான்..." என்று ஒப்புக் கொண்டாள் ராதிகா...
"அது இருந்தா இப்படிச் செய்வாங்களா..?"
"அதைச்சொல்லு... இதெல்லாம் பேசித் தீர்க்கிற விசயமேயில்லை..."
"பார்த்துக்கிட்டே இருக்கா.. ஒருநாள் இல்லைன்னா.. ஒருநாள் இப்படிக் காப்பியடிச்சு பொழைப்பு நடத்தறவங்க மேல கேஸைப் போட்டு கூண்டில ஏத்தத்தான் போறேன்..."
"அதை அப்பப் பார்க்கலாம்.. இப்ப டென்சன் ஆகாம சாப்பாட்டைக் கவனி..."
சாப்பிட்டு முடித்த பாலமுரளியிடம் வெற்றிலைத் தட்டை நீட்டினாள் ராதிகா...
"அம்மா கொடுத்தாங்க.."
அவன் முகம் பார்க்காமல் சொன்னவளின் கையைப் பிடித்து இழுத்து அருகில் அமர வைத்துக் கொண்டான் பாலமுரளி...
"அதையேண்டி விரோதிகிட்டக் கொடுக்கிறதைப் போலக் கொடுக்கிற...?"
"யாரும் என்னிடம் பேச வேணாம்..."
"ஏய்ய்.. வேற யாரும் உன்கிட்டப் பேசிற முடியுமா..? கையைக் காலை முறிச்சிற மாட்டேன்...?"
கோபப்பட்டவனை... ஊன்றிப் பார்த்தாள் ராதிகா.. அவள் பார்வையில் தெரிந்த கொதிப்பில் முரளி புருவங்களை உயர்த்தினான்...
"என்கிட்ட மட்டும் யாரும் பேசிற முடியாது.. ஐயா.. கையைக் காலை முறிச்சிருவீங்க... ஆனா.. என் கண்முன்னாலேயே.. மச்சினிகிட்ட கடலை போடுவீங்க... அவளும் உங்ககிட்ட சரசமாப் பேசுவா... நான் ஏன்னு கேட்காம.. உத்தம பத்தினியைப் போல வாயை மூடிக்கிட்டு இருக்கனும்... என்னே உங்க நியாயம்... புல்லரிக்குது போங்க..."
"போர்வையால போர்த்திக்க.. ஆடுவந்து மேய்ஞ்சிரப் போகுது... யாருடி இவ..."
"அது தெரியாதுதான்... இப்ப மச்சினிதானே உங்க கண்ணுக்குத் தெரிவா..? நான் யாருன்னுதான் கேட்பீங்க.."
"இந்தக் கோபத்திலதான் சுந்தர்கூடச் சேர்ந்துக் கிட்டு.. உன்தங்கையை அப்படித்தாளிச்சியா..?"
"இல்லேன்னாலும் அவ பண்ற காரியத்துக்கு மெச்சிக்கனும்தான்... சுந்தர் எதைக் கேட்டாலும்.. குருவி தூக்கிட்டுப் போயிருச்சுன்னு சொல்லி வைப்பான்.. இதை இவ அப்படியே எதுத்த வீட்டில ஏழாம் கிளாஸ் படிக்கிற பையன்கிட்ட குரங்கு தூக்கிட்டுப் போயிருச்சுன்னு சொல்லி வைக்கிறா.."
"ஏழாம் கிளாஸ் பையன் கிட்டக்கூட இவ கலாய்ப்பாளா... ஹா... ஹா..."
"போதும்.. அவன்கிட்ட சுந்தர் சொல்ற இன்னொரு டயலாக்கையும் சேர்த்துச் சொன்னா..."
"அது என்னவாம்..."
"யாராச்சும் என் வாயாலே இதை எப்படி சொல்வேன்னு சொன்னா... சுந்தர் உடனே... யோவ்.. உன் வாயாலேதான்ய்யா.. நீ சொல்ல முடியும்... என் வாயாலேயா சொல்ல முடியும்ன்னு கலாய்ச்சு வைப்பான்.. இவ.. அதை இவளோட சொந்தக் கலாய்ப்பா.. அந்தப் பையன்கிட்ட அள்ளி விடறா..."
"விடுடி... தம்பியோட டயலாக்கை... தன் டயலாக்கா அவ நினைச்சிருப்பா..."
"ஹலோ.. என்ன பாஸ்... மச்சினிமேல இரக்கம் பொங்கி வழியுது..."
"ஆயிரம்தான் இருந்தாலும் அவ என் மச்சினி..!"
"அதை ஜொள்ளுங்க.. என்னதான் இருந்தாலும்.. மச்சினி மச்சினிதான்.. பெண்டாட்டி... பெண்டாட்டிதான்.."
இதைச் சொன்னவளின் இதழ்மீது அழுத்தமான முத்தமொன்றைப் பதித்து... தன்னோடு இறுக்கிக் கொண்டான் முரளி...
"ஒன்னும் வேணாம்..."
மனச் சிணுங்கலுடன் முகம் திருப்பிக் கொண்டாள் ராதிகா... அவளின் அந்தக் கோபத்தில் அவன் மனதில் சாரல் அடித்தது... அவளை விலக விடாமல் அவன் இறுக்கிப் பற்றிக் கொள்ள... அவள் திமிறினாள்...
"விடுங்க என்னை..."
"அடி என் முட்டாள் பெண்டாட்டியே...! அவ சின்னக் குழந்தைடி... அவ நோக்கமே உன்னை வம்புக்கு இழுக்கனும்கிறதுதான்... அதைப் புரிஞ்சுக்கிட்டு நானும் உன்னை கடுப்பேத்திப் பார்த்தேன்..."
"அதுக்காக இப்படியா..?"
ராதிகா அழுதுவிட்டாள்... அவள் கண்கள் உதிர்த்த கண்ணீரை கைகளில் ஏந்திக் கொண்ட பாலமுரளி... அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்...
"ராது.." அவன் குரல் ஆழ்ந்து ஒலித்தது...
"ம்ம்ம்..."
"என் மனசைத் தட்டியெழுப்ப உன்னால் மட்டுமே முடியும்... நான் பெண்டாளனும்னு நினைச்சா.. உன்னைத் தான் ஆள முடியும்.. மத்தவங்க மேல அந்த நினைப்பு கூட எனக்குள் வராது... நான் உனக்கு மட்டும்தாண்டி புருசன்.."
மாடியறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த தென்னங்கீற்று... பாலமுரளியின் பேச்சுக்கு சாட்சியாக நின்றது.. பிற்பகல் நேரத்தின் காற்று... வெப்பம் குறைந்ததாக அவர்களின் உடல் தழுவிச் சென்றது... பாலமுரளியின் பேச்சு அவளைத் தாலாட்டி சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல... அவள் கண்மூடி அவன் மார்பில் முகம் புதைத்தாள்...
மாலையில் அவளை கோவிலுக்கு அழைத்துச் சென்றான் முரளி... பிரகாரத்தை சுற்றி வரும்போது...
"இந்தக் கோவிலுக்குத்தான் நீ அடிக்கடி வருவ... இங்க வைச்சு உன்னிடம் காதல் சொல்லனும்னு தொடுத்து வந்தேன்.." என்று அந்த நாள்களை நினைவு கூர்ந்தான்...
அவன் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போனதை அவன் நினைவு படுத்தாததில் ராதிகாவின் மனதில் சந்தோசப்பூ பூத்தது...
திரும்பி வரும்போது... ராதிகாவிற்கு முதல் முத்தத்தை அவன் தந்த பூங்காவிற்குள் நுழைந்து விட்டான் முரளி...
அவனைப் பின் தொடர்ந்த ராதிகாவிற்குள்ளும் அந்த நாளின் அந்தத் தருணம் எழுந்து நின்றது...
"இந்த பெஞ்சிலதான் நீ உட்கார்ந்திருந்த... நான் உன் முன்னாலே வந்து நின்னேன்..."
அவன் பேசப்பேச... அந்த முதல் முத்தத்தின் நினைவுக்கு அவள் போனாள்...
"அப்ப நீ விலகவே இல்லைடி.. ரொம்ப நாளா அதுதான் என் மனசில நின்னுச்சு..."
அப்படிப்பட்டவள் எதற்காக... சங்கரைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்தாள் என்ற கேள்வியைக் கேட்காமல் அவன் மௌனித்து விட... அந்த பெஞ்சை கனிவுடன் தடவிப் பார்த்த ராதிகா மிருதுவான குரலில் வினவினாள்...
"அதுக்கப்புறமா நீங்க எங்கே போனீங்க..?"
அந்தக் கேள்வியில் பாலமுரளியின் கண்கள் ஜ்வலித்தன...
"நீ என்னைத் தேடினயா..?" பரபரப்பான குரலில் கேட்டான்...
'ஆமாம்' என்று ராதிகா சொல்லியிருக்கலாம்... அனைத்து உண்மைகளையும் அவனிடம் கொட்டியிருக்கலாம்..
இருள் கவிய ஆரம்பித்திருந்த அந்த ஏகாந்த வேளையில் அவளின் கடந்த காலக் காதல் கதையைப் பிட்டுப்பிட்டு வைத்திருக்கலாம்...
அவனைத் தேடித்தேடி ஓய்ந்து போன அவளின் அவல நிலையை அழுது புலம்பியிருக்கலாம்...
ஆனால்.. அதை அவள் செய்யவில்லை... அவற்றைச் சொன்னால் அவன் நம்புவானோ... மாட்டானோ என்ற சஞ்சலம் அவளைச் சொல்ல விடாமல் வாயைக் கட்டிப் போட்டு காவல் காத்து வைத்தது...
அவனுக்கு மனைவியாகி விட்டதினால்.. அவன் மனதை அவள் பக்கமாகத் திருப்ப... அவள் கதை சொல்கிறாள் என்று அவன் நினைத்து விட்டால்.. அதை ஒரு பேச்சில் வெளிப்படுத்தி விட்டால்... அவளால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது...
அவளின் காதல் ஆத்மார்த்தமானது... அவனை ஆராதிக்கும் தன்மையுடையது... அவள்.. அவனை மட்டுமே நினைத்தாள்... அதை என்று அவன் உணர்கிறானோ.. அன்று அவள் தன் காதலை அவனிடம் வெளிப் படுத்துவாள்...
அதுவரை அதைச் செய்ய அவளால் முடியாது...
"தேடினேன்னு சொல்ல முடியாது... தினமும் தெரு முக்கில நிற்கிறவங்க மத்தியில நீங்க நிற்கிறிங்களான்னு பார்ப்பேன்..."
உண்மை சேர்ந்த பதிலை அவள் சொன்னாள்... அவனுக்கு அந்த பதிலே சந்தோசத்தைக் கொடுத்தது...
"நீ அப்படிப் பார்க்க மாட்டியே..."
"அங்கதான் நிற்பேன்னு நீங்க அன்னைக்கு சொன்னதால... அடுத்த நாளில இருந்து நீங்க இருக்கீங்களான்னு பார்க்க ஆரம்பிச்சேன்.." மெதுவான குரலில் அவள் சொல்ல...
"ஓ..." என்று பரவசப்பட்டுப் போனான் முரளி...
"நான் மறு நாளில் இருந்து உன் கண்ணில் பட்டிருந்தா.. ஒருவேளை... நீ என்னையே காதலிச்-சிருக்கலாம் இல்லையா ராதிகா... த்ச்சு.. அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு நடுராத்திரியில போன் வந்திருச்சுடி... உடனே ஊருக்கு ஓடிட்டேன்... இல்லேன்னா... உன்னைத் துரத்தித்துரத்தி என்னைக் காதலிக்க வைச்சுட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பேன்.."
அவனை மட்டும் காதலிப்பவளிடம்... அவளது காதலைப் பெறமுடியாத மன துயரத்தை வெளிப்படுத்தினான் முரளி... ராதிகாவின் கண்கள் கசிந்தன... 




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.-150
அம்மம்மா.. கேளடி தோழி.-150
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-150.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-150.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy