ஆசையா.. கோபமா...? -2

2 "ஹலோ.. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க..." "நான் என் வேலையைத்தான் பார்க்கிறேன்.. மத்தங்கதான் அப்படியில்லை..." &...

2

"ஹலோ.. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க..."
"நான் என் வேலையைத்தான் பார்க்கிறேன்.. மத்தங்கதான் அப்படியில்லை..."
"நீங்க ஏங்க மத்தவங்களைப் பார்க்கறிங்க...?"
'நான் சரளாவைப் பார்ப்பதை நீ ஏன் பார்க்கிறாய்..?' என்ற கோபத்தில்தான் அரவிந்தன் இந்தக் கேள்வியைக் கேட்டான்...
"அஃது..." என்றபடி சிரித்த குணசீலனின் பார்வையில் கேலி இருந்தது...
பூர்ணிமா.. அவனைப் பார்ப்பதை உணர்த்தும் கேலிச் சிரிப்பாக அது இருக்க.. அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
வார்த்தைகள் வராமல் தவித்துப் போனவள்.. பேச்சை நிறுத்திவிட்டு வேலையில் கவனமாகி விட.. அங்கே தற்காலிகமான அமைதி நிலவியது...
கடுப்புடன்.. மடமடவென்று வரிசையில் நின்றவர்களிடம் பாங்புக்கை வாங்கி.. வேலையை முடித்துக் கொண்டிருந்தவளை.. அவள் பார்க்காத போது.. பார்க்காததைப் போலப் பார்த்து வைத்தான் குணசீலன்...
லேசான புருவச்சுளிப்புடன் இருந்தவளின் புருவங்களை நீவிவிட வேண்டடும் போல அவனுக்கு இருந்தது..
'பிடிவாதக்காரி...'
அவன் பார்வையில் சுவராஸ்யம் வந்தது...
அவனுக்கு அவளின் அந்த பிடிவாதத்தைப் பிடிக்கும்.. கோபத்தைப் பிடிக்கும்.. அவளிடம் வாய் வளர்த்து வம்பிழுக்க பிடிக்கும்.. இவ்வளவு ஏன்...? அவளையே அவனுக்கு மிகவும் பிடிக்கும்...
ஆனால்.. அதை அவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தியதே இல்லை...
அவன் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மாறுதல் வாங்கி வந்தவன்.. வந்த முதல்நாளே.. பூர்ணிமாவுக்கும்.. அவனுக்கும் மோதல் ஏற்பட்டுவிட்டது.. ஆறு மாதங்களுக்கு முன்தான் வேலையில் சேர்ந்து.. அந்த வேலைக்காக ஊர்விட்டு ஊரும் வந்திருந்த பூர்ணிமாவுக்கு அலுவலக நிகழ்வுகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் இருந்தது...
சென்னையிலிருந்து மாறுதலாகித்தான் அவன் வந்திருக்கிறான் என்ற நினைவின்றி.. என்னவோ.. அவன் அன்றுதான் வேலைக்குச்சேர வந்திருக்கிறதைப் போல அவள் வேலைசொல்லி கொடுத்த விதத்தில்.. அவன் ஒரு கேலிப் பார்வையை பார்த்து வைத்தான்...
'எவ்வளவு இளப்பமாக பார்க்கிறான்..' அவள் வெகுண்டாள்...
அவனது பார்வை அவளை உசுப்பிவிட...
"ஹலோ.. வேலை கத்துக்கனும்கிற அக்கறையே இல்லையா..?" என்று முறைத்தாள்...
"அது இருக்கு நிறைய... ஆமாம்.. மேடத்துக்கு எத்தனைவருசம் சர்வீஸ் ஆகுது..?" அவன் போலிப் பணிவுடன் வினவினான்...
"ஆ...று... மாசமாகுது..." அவள் கெத்தாக பதிலளித்தாள்...
அவன் புருவங்களை உயர்த்தி.. பெரிதாக பிரமித்தான்...
"ஹப்பா.. ரொம்ப அதிகமான சர்வீஸ்தான்.. அதில பாருங்க மேடம்.. உங்க அளவுக்கு எனக்கு சர்வீஸ் இல்லிங்க.. ஏதோ ஐந்தே வருச சர்வீஸ்தாங்க ஆகுது..."
அவன் கண்களில் தெரிந்த அப்பட்டமான கேலியைக் கண்ட பூர்ணிமாவுக்கு வெட்கமாகி விட்டது...
'இதைச் சொல்லாமல் இவன் என்னிடம் வேலை சொல்லிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டு வேடிக்கை பார்த்திருக்கான்...'
அவளுக்குள் சினம் துளிர்க்க.. பட்டென்று எழுந்து போய்விட்டாள்...
"என்னடா.. வந்த அன்னைக்கே.. அந்தப் பெண்ணைக் கலாய்க்க ஆரம்பித்துட்டே..." அரவிந்தனின் கண்களில் விசமம் இருந்தது..
"நானெங்கேடா அதைச் செய்தேன்..? யதார்த்தமாக அந்தப் பிரான்சில் என்ன வேலைன்னு கேட்டுவைச்சேன்.. நீங்க பேங்குக்கு புதுசான்னு அந்தப் பொண்ணு கேட்டுச்சு.. இன்னைக்குத்தான் ஜாயின் பண்ணினேன்னு சொன்னேன்.. உடனே பாடம் எடுக்க ஆரம்பிச்சுருச்சு..." குணசீலன் சிரித்தான்....
"உன் கிட்ட இது ஒன்னு இருக்குடா குணா.. சிரிக்காம கலாய்ச்சு வைப்ப.. நல்ல வேளை.. என் ஆளை விட்டு வைச்சே..." நிம்மதியாகக் கூறினான் அரவிந்தன்...
"உன் ஆளா...? யாருடா அது..?"
"நீ கலாய்த்த பெண்கூட பேசிக்கிட்டிருக்காளே.. அவதான்..." அரவிந்தன் சுட்டிக்காட்டிய திசையில் சரளாவுடன் பூர்ணிமா பேசிக் கொண்டு நின்றிருந்தாள்...
சரளாவுடன் பேசியபடி.. அவனிருக்கும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமா.. அவன் பார்ப்பதைக் கண்டதும்.. அவசரமாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள்...
'என்னைத்தான் இவ்வளவு நேரமாக பார்த்துக்கிட்டு இருந்தாளா...?' குணசீலனின் பார்வையில் சுவராஸ்யம் வந்தது...
அவனது பார்வையைக் கண்ட அரவிந்தன் அரண்டு போனான்...
"டேய்.. டேய்.. என்னடா இப்படிப் பார்த்து வைக்கிற.. அவ என்னோட ஆள்டா..."
"அடச்சீ.. நான் அவளைப் பார்க்கலை.. பக்கத்திலிருக்கிறவளைப் பார்க்கிறேன்..."
அரவிந்தனுக்கு போன உயிர் திரும்பி வந்தது...
"உஸ்ஸ்... அப்பாடி.. இப்பவே கண்ணைக் கட்டுதே..." என்று இழுத்துப் பெருமூச்சு விட்டவன்...
"ஏண்டா.. சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிப் போனவன் அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானேடா.. எதுக்குடா திரும்பவும் திருநெல்வேலிக்கு வந்து என் பிபியை எகிற வைக்கிற.." என்று அலுத்துக் கொண்டான்...
"சென்னை யுளிவர்சிட்டியில் ஈவினிங் கிளாஸில் சேர்ந்து படிக்க வேண்டியிருந்தது.. படிக்கிறதுக்காக டிரான்ஸ்பர் வாங்கிக்கிட்டுப் போனேன்.. படிப்பு முடிஞ்சதும்.. திரும்பவும் என் சொந்த ஊருக்கே.. டிரான்ஸ்பர் வாங்கிக்கிட்டு வந்திட்டேன்.. இதில உனக்கு என்னடா வருத்தம்...?"
 "என்ன வருத்தமா..? நானே இருந்திருந்து.. இப்பத்தான் ரதியைப் போல ஒருத்தியை கண்ணில பார்த்திருக்கேன்.. அவளைக் கணக்குப் பண்ண ஆரம்பிக்கிறதுக்குள்ள நீ வந்து சேர்ந்துட்டியே..."
குணசீலனின் பார்வை சரளாவின் மேல் விழுந்தது... அவள் ரதியைப் போலத்தான் இருந்தாள்.. ஆனாலும்.. அவன் பார்வை அவள் மீது படிந்து நிற்காமல் பூர்ணிமாவின் மீதே மையம் கொண்டது...
நொடிக் கொரு தரம் அவனைப் பார்ப்பதும்.. அவன் பார்வையை உணர்ந்ததும்.. இமைகள் படபடக்க விழிகளைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தவளின் செய்கை அவளைப் பார்க்கத் தூண்டியது...
அவளிடம் தெரிந்த இனம் விளங்காத வசீகரம்.. அவன் மனதைச் சுண்டியிழுத்தது...
 "அவளைப் போய் ஏண்டா.. அப்படிப் பார்த்து வைக்கிற...?" அரவிந்தன் விளங்காமல் கேட்டு வைத்தான்...
குணசீலனுக்கு சுர்சென்று கோபம் வந்துவிட்டது...
"வேணும்ன்னா.. அவ பக்கத்திலிருக்கிறவளைப் பார்த்து வைக்கவா..?" என்று கேட்டான்...
"இப்பத்தானே அவைள என் ஆளுன்னு சொன்னேன்..?"
"எதை வைச்சு.. அவளை உன் ஆளுன்னு மூடிவு கட்டின..?"
"என்னடா கேள்வி இது...?"
"அதான் கேட்டுட்டேனில்ல... பதிலைச் சொல்லு..."
"அவளை எனக்குப் பிடிச்சிருக்குடா.."
"அவளுக்கு உன்னைப் பிடிக்க வேணாமா..?"
"பிடிக்க வைக்கத்தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்..."
"அப்ப.. அதில் மட்டும் நில்லு.. அதைவிட்டுட்டு தேவையில்லாம பேசிவைக்காதே.. மீறிப் பேசினேன்னு வைய்யி..."
"என்னடா செய்வ...?"
"உன் முயற்சியை சட்டை பண்ணாம.. நானும் முயற்சியில் இறங்கிடுவேன்..."
"என்னடா இப்படிப் போட்டுத் தாக்கற.. ஆயிரம்தான் இருந்தாலும் நீ என் நண்பேன்டா..."
"அஃது.. அதில மட்டும் நில்லு..."
"கோடு போட்டுட்டல்ல.. இனி அதை தாண்டினா.. ஏன்னு கேளு..."
"அப்படியே மெயின்டெயின் பண்ணு..."
குணசீலன் மீண்டும் பூர்ணிமாவைப் பார்த்து வைக்க.. அப்படி அவளிடம் என்னதான் வசீகரம் இருக்கிறது என்று புரியாமல் குழம்பிப் போனான் அரவிந்தன்...
அதை அவனிடம் கேட்டு வைக்கலாமென்றால்.. அப்படியா சொல்கிறாய்.. அதுவும் சரிதான்.. என்று அவன் பார்வை சரளாவின் பக்கம் திருப்பி விட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்து சேர...
'எனக்கென்ன வந்தது.. இவன் அந்த பூர்ணிமாவைப் பார்த்தால் எனக்கென்ன.. இல்லை சுகுணாவைப் பார்த்தால்தான் எனக்கென்ன... என் சரளாவைப் பார்க்காமல் இருந்தால் சரி...' என்ற முடிவிற்கு வந்து சேர்ந்தான் அரவிந்தன்..
அன்று மதிய உணவு வேளையில் பூர்ணிமா நடந்ததை விவரிக்க சரளா பொங்கிச் சிரித்தாள்...
"இப்படியாடி பண்ணி வைப்ப.. அவன் ஏற்கெனவே இந்த பிரான்சில் வேலை பார்த்தவன்தானாம்..
எம்.காம் படிச்சிருக்கானாம்.. ஆபிஸர் போஸ்டுக்கு எக்ஸாம் எழுதியிருக்கானாம்.. எம்.பி.ஏ ஈவினிங் காலேஜில் படிக்க அண்ணா யுனிவர்சிட்டியில் அப்ளை பண்ணியிருந்தானாம்.. கிடைச்சிருச்சாம்.. அதுக்கு சென்னையில் இருக்கிறதுதான் வசதின்னு சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டானாம்..."
"இப்ப எதுக்கு திரும்ப வந்து தொலைத்தானாம்...?"
"இதென்னடி வம்பாப் போச்சு.. இதுதான் அவனோட சொந்தஊர்... அப்hப.. அம்மா.. தம்பின்னு.. அவனோட குடும்பம் இங்கேதான் இருக்கு.. இங்கே திரும்பி வராம எங்கே போவான்..? ஆமாம்.. தெரியாமல்தான் கேட்கிறேன்.. அவன் வந்ததில உனக்கென்னடி இவ்வளவு கஷ்டம்..?"
"வந்த அன்னைக்கே என்கூட வம்புக்கு வருகிறானே..."
"அவனாடி வம்புக்கு வந்தான்..? ஐந்து வருசம் சர்வீஸ் போட்டுவிட்டு.. ஆபிசர் எக்ஸாம் எழுதியிருக் கிறவனுக்கு.. நேற்று இந்நேரம் வந்து ஜாயின் பண்ணினவ பாடம் எடுத்தா.. அவன் கேட்டுக்கிட்டு சும்மாவா இருப்பான்..?"
"நானாடி.. வலியப் போய் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்.. வான்னு கூப்பிட்டேன்..? அவனாத்தாண்டி என் சீட்டுக்கு வந்து.. என் பிரான்சில் என்ன வேலைன்னு கேட்டான்...?"
"யதார்த்தமா கேட்டிருப்பாண்டி.."
"எனக்கென்னவோ அப்படித் தோனலை..."
"வேற எப்படித் தோணுது..?"
"அவன் வேணும்ன்னே என்கிட்ட வம்புக்கு வருகிறான்னு தோணுது..." "சேச்சே... அப்படி இருக்காது... அதுக்கு "அரவிந்தனை சொல்லு.. என்னைக் கண்ட நாள்முதல்.. இந்த நாள் வரைக்கும்.. வழியறான்.. வழியறான்.. அப்படியொரு வழிசலை வழிகிறான்.. தினசரி அவன் விடுகிற ஜொள்ளிலேதான் இந்த ஆபிஸையே செங்கம்மா கழுவி விடறாளாம்..."
"ஆமாம்டி.. அவ உங்கிட்ட வந்து சொன்னா..."
"சொன்னான்னுதான் வைச்சுக்கயேன்..."
"அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாய் எதையும் வைத்துக்கமுடியாது... தீர விசாரிக்காம எதையும் என்னால் ஏத்துக்க முடியாது..."
"இப்ப மட்டும்.. இதை உணக்கையாய் சொல்லு.. என்னடா.. ஒருத்தன் தடிமாட்டுத் தாண்டவராயன் போல வாட்ட சாட்டமாய் வந்து நின்று வேலையைப் பத்திக் கேட்கிறானே.. அவன் யாரு.. எவருன்னு.. தீர விசாரிச்சுட்டு அதுக்கப்புறம் பாடம் எடுப்போம்ன்னு மட்டும் யோசிக்சுராதே..."
'ம்ஹீம்.. இனிமே.. என்வாயை அடக்கனும்னா.. இவ இதைச் சொல்லித்தான்... அடக்கப்போகிறா...'
பூர்ணிமா பயந்ததைப் போல்தான் நடந்தது...
அடுத்த வந்த நாள்களில் அவள் எதைச் சொன்னாலும்.. சரளா அன்று நடந்த நிகழ்வையே சொல்லிக் காண்பித்தாள்...
குணசீலன் வேறு.. பூர்ணிமாவைப் பார்த்தாலே ஒரு மாதிரியாக புன்னகைத்து வைத்தான்...
இவன் ஏன்.. ஒரு மார்க்கமா சிரிச்சு வைக்கிறான்..? இவனுக்கு என்னைக் கண்டாலே... அந்த நாளின் நினைப்புத்தான் வந்து தொலைக்குமா...?
பூர்ணிமா எரிச்சலுக்கு ஆளானாள்... இதெல்லாம் போதாதென்று.. அவன்.. அவளுக்கு 'டீச்சர்...' என்ற பட்டப்பெயரை வைத்திருப்பதாக சரளாவின் மூலம் கேள்விப்பட்டவளுக்கு.. கோபம் கொந்தளித்தது...
ஆனால்.. என்ன செய்து..?
அவனிடம் போய்.. 'நீ எனக்கு டீச்சர்ன்னு பட்டப் பெயரை வைத்திருக்கிறாயா..?' என்று எப்படி அளால் கேட்கு முடியும்...
வெகுநாள்வரை அவள் தலையைக் கண்டவுடன்.. அவன்
"பூப்பூவாய் பூத்திருக்கும்..
பூமியிலே ஆயிரம் பூ...
பூவிலே  சிறந்த பூ...
என்ன.. பூ..?"
என்று அரவிந்தனிடம் பாடிக் கேட்பான்...
அவனுக்கு ஒன்றும் புரியாது.. பூமியிலே தினமும் புதுப் பாடல்கள் ஆயிரமாயிரம் பூத்துக் கொண்டிருக்க.. குணசீலன் எதற்காக பாட்டிகாலத்துப் பாட்டைப் பாடி வைக்கிறான் என்று புரியாமல் அவன் தலைமுடியை பிய்த்துக் கொள்வான்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஆசையா.. கோபமா...? -2
ஆசையா.. கோபமா...? -2
https://1.bp.blogspot.com/-HW1j6639vCU/Xr0TTc7N4kI/AAAAAAAAA1k/KsXJuC2T-Q0owUdBH8BGj56IxhmETRsKgCPcBGAYYCw/s320/Asaiya%2BKovama.jpg
https://1.bp.blogspot.com/-HW1j6639vCU/Xr0TTc7N4kI/AAAAAAAAA1k/KsXJuC2T-Q0owUdBH8BGj56IxhmETRsKgCPcBGAYYCw/s72-c/Asaiya%2BKovama.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/aasaiyaakobamaa-2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/aasaiyaakobamaa-2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy