ஆசையா.. கோபமா...?, -9

9 "பயப்படாதீங்க... நான் சீக்கிரமாவே.. இடத்தை காலி பண்ணிடறேன்..." "அதை முதலில் செய்யுங்க... உங்களுக்கு கோடி புண்ணியமாய் போ...

9

"பயப்படாதீங்க... நான் சீக்கிரமாவே.. இடத்தை காலி பண்ணிடறேன்..."
"அதை முதலில் செய்யுங்க... உங்களுக்கு கோடி புண்ணியமாய் போய் விடும்..."
"சரளா.. இதைக் கேட்கிறதுக்காக.. என்னை நீங்க... தப்பா நினைத்திரக் கூடாது..."
சரளாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை...
"என்ன சார்... உங்களைப் பத்தி.. என் பிரண்டு என்னென்னவோ கற்பனையில இருக்கிறா... நீங்க வந்து என்கிட்ட இப்படிப் பேசி வைக்கிறிங்க..."
அவள் அப்படிக் கேட்டதும் இப்போது அரண்டு போவது குணசீலனின் முறையானது...
"ஏங்க.. நீங்க என் தங்கையைப் போலங்க..." அவன் அவசரமாகச் சொன்னான்...
"அப்பாடி.. என் பிரண்ட்ஷிப் பிழைச்சது.. எதுக்கும் இந்த டயலாக்கை... அவ காதுபட.. இரண்டொரு தடவை சொல்லி வைச்சீங்கன்னா தேவலாம்.." நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் சரளா...
சும்மா பக்கத்தில் நின்றதற்கே பூர்ணிமா படுத்தியபாட்டை அவள் மறக்கவில்லை....
"டிரை பண்றேன்..."
"இப்ப உங்க கேள்வியைக் கேளுங்க..."
"இந்த அரவிந்தன் பயலைப்பத்தி... பூர்ணிமா எதையாவது உங்களிடம் சொன்னாளா...?"
"நீங்க எதுக்கு இதைக் கேட்கறிங்க...?"
"காரணமாத்தான்... பதிலைச் சொல்லுங்க... ப்ளீஸ்.."
"ஆமாம்... சொன்னாள்..."
"நினைத்தேன்..."
குணசீலனின் மனம் நிம்மதியானது.. அவனுடைய பூர்ணிமா அடுத்தவர்களின் காதல் உணர்வோடு விளையாடிப் பார்க்கவில்லை... அரவிந்தன் சொன்னதை சரளாவிடம் சொல்லியிருக்கிறாள்...
"நீங்க என்ன சொன்னீங்க...?"
"உங்க பிரண்டுக்கெல்லாம் காதல் ஒரு கேடான்னு கேட்கச் சொன்னேன்..."
இதை எப்படி பூர்ணிமா அரவிந்தனிடம் கேட்பாள்..?
அரவிந்தனுக்கு பதில் சொல்லாமல் பூர்ணிமா ஏன் அலைக்கழித்தாள் என்ற விவரம் பிடிபட்டதில்... அவனது மனம் லேசானது...
"ஏங்க அப்படிச் சொன்னீங்க...?"
"பின்னே என்ன சார்... நான் என்ன ஏழுகடல்... ஏழுமலை தாண்டியா இருக்கேன்..? அவர் பக்கத்திலேதான் உட்கார்ந்திருக்கேன்..? என்கிட்ட நேரடியாக் காதலைச் சொல்கிறதை விட்டுவிட்டு தலையைச்சுற்றி மூக்கைத் தொட்டால்... ஒரு மனுஷிக்கு கடுப்பு வருமா.. வராதா...?"
"வரும்..."
"காதலைச் சொல்ல ஆயிரம் வழியிருக்கு சார்... அதில் ஒருவழிகூட உங்க பிரண்டின் மரமண்டைக்கு எட்டலையா...? போய் உங்க பிரண்டுகிட்டச் சொல்லுங்க... காதலைச் சொல்லக்கூட தைரியமில்லாத ஆள்.. எதுக்காக காதலிக்கனும்ன்னு... நான் கேட்டேன்னு சொல்லுங்க..."
"நீங்க முடியாதுன்னு சொல்லிருவீங்களோன்னு பயந்திருக்கலாம்..."
"அந்த பயமிருக்கிறவர் காதலித்திருக்கக் கூடாது.. காதலிக்கிறவளையே.. அவருடைய காதலை ஏற்றுக்க வைக்க முடியலைன்னா... இரண்டு சைடிலேயும் இருக்கிற... பெத்தவங்களை அவர் எப்படி கன்வின்ஸ் பண்ணப் போகிறார்...?"
"இதுக்காகவெல்லாம்... அவனுடைய காதலை ரிஜக்ட் பண்ணக்கூடாதுங்க..."
"ஊஹீம்... காதலில் இரக்கப் படுகிறதெல்லாம் வேலைக்கு ஆகாது சார்... மனசுக்குப் பிடித்திருந்தா காதலிக்கனும்.. இல்லையா... நோன்னு சொல்லிடனும்... அதுதான் என் பாலிஸி..."
அரவிந்தனை கேண்டினுக்கு அழைத்துப் போய் விவரம் சொன்னான் குணசீலன்...
"சும்மா.. பூர்ணிமாவையே கரித்துக் கொட்டாதே.. சரளா உன்மேலே ஏகக் கடுப்பில் இருக்கிறா... அவ சொன்னதைச் சொன்னா உன் மனசு கஷ்டப் படுமேன்னுதான் சரளா எதையும் சொல்லலைன்னு பூர்ணிமா உன்கிட்டச் சொல்லியிருக்கா..."
"என்னடா... குணா... என் ஆளுக்கு என்னைப் பிடிக்கலையாடா...?"
அரவிந்தன் பரிதாபமாகக் கேட்டான்... குணசீலன்.. அவன் முகத்தையே பார்த்தபடி.. நிதானமாகக் கேட்டான்..
"கண்ணுக்கு அழகா ஒரு பெண்ணைப் பார்த்தவுடனே அவ என் ஆளுன்னு எந்த தைரியத்திலேடா ரிசர்வ் பண்ணிக்கிறீங்க..?"
"குணா..."
"என் ஆளு... என் ஆளுன்னு சொல்கிறீங்களே... அவ வேறு ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா.. அப்பவும் அவளை... என் ஆளுன்னுதான் சொல்லித் தொலைப்பீங்களா...?"
"காதலிக்கிறது... தப்பாடா...?"
"இரண்டு கையும் தட்டினாத்தான் சத்தம் வரும்... முதலில் அதைப் புரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஒரு வழியைப் பண்ணு..."
"நான் என்னடா பண்ண...?"
"யோசி... எத்தனையோ யோசிக்கிற.. நீயென்ன ஜீரோவா..? இதுக்கும் ஒரு வழி தெரியும்.."
அரவிந்தனை யோசிக்க வைத்துவிட்டு குணசீலன் கேண்டினை விட்டு வெளியேறினான்...
கம்யூட்டரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சரளா... பக்கத்தில் வேகமாக சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்த அரவிந்தனைத் திரும்பிப் பார்த்தாள்...
'இவனுக்கு மெதுவாய் சேரை இழுக்கத் தெரியாதா..?'
எப்போதுமே அவள் பார்த்தால்... அவன் அவசரமாக அவளது பார்வையை சந்திக்க முயல்வான்...
அன்று.. அவளது பார்வையைக் கவனிக்காமல் அவன் தன்போக்கில் வேலையைப் பார்க்க ஆரம்பிக்கவும்.. அவள் விழிகளில் ஆச்சரியம் வந்தது...
அலட்சியமாக தோளைக் குழுக்கி விட்டு.. கம்யூட்டரின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள் சரளா...
தொடர்ந்து வந்த நாள்களில்... அரவிந்தன் சரளாவைப் பார்க்க முயலவில்லை...
'என்னாச்சு.. ஆள் திருந்திட்டானா...?'
சரளாவின் மனதில் மெலிதான ஏமாற்றம் சூழ்ந்தது... அவள் அடிக்கடி கண்ணாடியைப் பார்க்க ஆரம்பித்தாள்...
'நல்லாத்தானே இருக்கேன்.. அப்புறம் எதுக்காக முகத்தை திருப்பிக்கிறான்...?'
அவன் முகத்தைத் திருப்பிக் கொள்வதில்... அவள் மனம் எதற்காக அத்தனை கவலைகளைக் கொள்கிறது என்று அவளுக்கு விளங்கவில்லை...
அவளுடைய வேலை சம்பந்தமாக எதையாவது சரளா கேட்டால்... அவள் முகம் பார்க்காமல் பதில் சொல்ல... ஆரம்பித்தான் அரவிந்தன்...
'இவனுக்கு நானென்ன விரோதியா...?'
அவள் மனம் புகைந்தது... அவனது பாராமுகம் விளைவித்த இனம் விளங்காத எரிச்சலில்.. அவள் ஒருநாள்.. அவன் மேல் எரிந்து விழுந்தாள்...
"இப்ப.. உங்க சொத்தை எதுவும் நான் கொள்ளை அடிச்சிட்டேனா...?"
அவளது கடுகடுப்பில் சிறிதளவு கூட பாதிக்கப் படாதவனாக.. அவளது முகத்தை நிதானமாக நிமிர்ந்து பார்த்தான் அரவிந்தன்...
"எதுக்கு கோபப்படறீங்க..."
"புரியலையா...?"
"புரியலை..."
இப்படிச் சொல்கிறவனிடம் தேங்காயை உடைத்ததைப் போல... எப்படி உடைத்துப் பேசுவது என்று வழி தெரியாமல் திகைத்தாள் சரளா...
"பக்கத்து.. பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கிறோம்.."
"ஆமாம்... அதுக்கென்ன...?"
"இப்படி பகையாளியைப் போல பார்த்தால் எப்படி..?"
"வேற எப்படிப் பார்க்க..? சொந்தக்காரனைப் போல பார்த்தா நீங்க சும்மா விடுவீங்களா..? ஜொள்ளு விடறான்னு பட்டம் கட்டி விடமாட்டிங்க...?"
அவனுக்கு அப்படியெல்லாம் கூட பேச வரும்.. என்று அன்றுதான் முதன்முதலாக கண்டாள் சரளா...
'பின்னிப் பெடலெடுக்கிறானே...'
"ஒன்னு இந்தப் பக்கம்... இல்லேன்னா... அந்தப் பக்கம்தானா..? ஊடேயே ஒருநாளும் நிற்க மாட்டிங்களா..?"
"பாருங்க மேடம்..."
"மேடமா...?"
"ஆமாங்க.. உங்க பெயரைச் சொல்ல எனக்கு தைரியம் பத்தாதுங்க..."
"ஓஹோ..."
"நானே டியூப்லைட்.. நேராய் சொன்னாலே புரிஞ்சுக்காத மக்கு பிளாஸ்திரி..."
"அப்படி நான் சொன்னேனா..?"
"சொன்னால்தானா..? இதையெல்லாம் நானாய் புரிஞ்சுக்கிட்டு ஒதுங்கிக்கிறேன்ங்க..."
"என்ன ஒரு பெருமை...!"
"அப்படிப்பட்ட எனக்கு நீங்க மறைபொருளாய் என்ன சொல்லவர்றீங்கன்னு எப்படிங்க புரியும்..?"
"ஒன்னு காதல்ன்னு பினாத்தனும்..."
"உங்க அகராதியில்... காதல்ன்னா.. பினாத்தல்ன்னு அர்த்தம் போல..."
அரவிந்தனின் கூரிய பார்வை.. சரளாவின் பார்வையை ஊடுறிவியதில் அவள் உடலில் ஒர்விதமான சிலிர்ப்பை உணர்ந்தாள்...
"அது என்னமோ அப்படித்தான்.. இன்னொன்னு அண்ணன்.. தங்கை பாசம்..."
"அதாவது நீங்க தங்கை... நான் அண்ணன்...?"
சரளாவினால் அதற்கு ஆமென்று பதில் சொல்ல முடியவில்லை... அரவிந்தனின் தீர்க்கமான பார்வையில் உஷ்ணம் சேர்ந்திருந்தது...
"இந்த பாசமலரை வளர்க்கவெல்லாம் எனக்கு தோது படாதுங்க.. மேடம்.. ஊடேன்னு எதையோ சொன்னீங்களே..."
"நட்பு சார்..."
"எனக்கு ஆயிரம் நட்பு இருக்குதுங்க.. ஆயிரத்து ஒன்னாய் உங்க நட்பு தேவையில்லிங்க..."
"ஸோ..?"
"வி ஆர் ஜஸ்ட் கோ-வொர்க்கர்ஸ்.. தட்ஸ் ஆல்.."
அரவிந்தனின் குரலில் கம்பீரம் தொனித்தது... அதுவரை சரளா உணர்ந்தறியாத அந்தக் கம்பீரத்தில் அவள் ஈர்க்கப் பட்டாள்...
"அவன் ரொம்ப மாறிட்டாண்டி..." பூர்ணிமாவிடம் சொன்னாள்...
"எனக்கொன்னும் அப்படித் தெரியலை... அதே குரங்கு மூஞ்சி... ஜொள்ளு வாயனாத்தான் தெரியறான்.."
பூர்ணிமா அசட்டையாக பதிலளிக்க... சரளா பல்லைக் கடித்தாள்...
"மைன்ட் யுவர் வெர்ட்ஸ் பூர்ணி... யாரைப் பார்த்து குரங்கு மூஞ்சின்னு சொல்கிற..? உனக்குத்தான் குரங்கு மூஞ்சி... உன் குணாவுக்குத்தான் குரங்கு மூஞ்சி..."
"என் மூஞ்சியைப் பத்தி என்ன வேணும்னாலும் சொல்லு... கேட்டுக்கிறேன்.. நீ என் பிரண்ட்... அந்த குணாவைப் பத்தி என்கிட்ட ஏண்டி சொல்கிற...? அதிலும் என் குணாவாமே... அந்த குணா யாரோ... நான் யாரோ.. குணாவைப் பத்தி என்கிட்டச் சொல்லக் கூடாது..."
மூச்சுக்கு முந்நூறு தடவை... பூர்ணிமா 'குணா' என்று சொல்லி வைக்க.. சரளா ரௌத்திரம் கொண்டாள்...
"உனக்கு உன் பெருமைடி மகளே..."
"என்ன பெருமை..? எனக்கொன்னும் எதுவுமில்லை..."
"உன் மனசில் ஆயிரம் இருக்குடி... அதையெல்லாம் ஒப்புக்கிட்டா நீ எப்படி பூர்ணிமாகி விடுவே..."
"உன்னைப் போலவே என்னையும் நினைக்காதே.."
"என்னைப் போலவா..?"
"ஆமாம்... பின்னே.. என்ன..? அந்த அரவிந்தனைக் குரங்கு மூஞ்சி.. ஜொள்ளு வாயன்னு நான் சொல்லலை... நீதான் இதுக்கு முன்னாலே.. இந்தப் பட்டப் பெயர்களை யெல்லாம் அவனுக்கு வைத்திருந்த... நீ சொல்லித்தான் எனக்கே இது தெரியும்..."
"இப்போ எதுக்குடி அந்தக் கதையை இழுக்கிற...?"
"அப்புறம்.. எதுக்காகடி.. இப்போ என்னோடு சண்டைக்கு வருகிற...? என்ன ஆச்சு..? உன் மனசில் அவன் மேல்.. காதல்.. கீதல் வந்து விட்டதா...?"
பூர்ணிமாவின் கேள்வியில் சரளாவுக்கு தூக்கி வாரிப் போட்டது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஆசையா.. கோபமா...?, -9
ஆசையா.. கோபமா...?, -9
https://1.bp.blogspot.com/-HW1j6639vCU/Xr0TTc7N4kI/AAAAAAAAA1k/KsXJuC2T-Q0owUdBH8BGj56IxhmETRsKgCPcBGAYYCw/s320/Asaiya%2BKovama.jpg
https://1.bp.blogspot.com/-HW1j6639vCU/Xr0TTc7N4kI/AAAAAAAAA1k/KsXJuC2T-Q0owUdBH8BGj56IxhmETRsKgCPcBGAYYCw/s72-c/Asaiya%2BKovama.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/aasaiyaagobamaa-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/aasaiyaagobamaa-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy