ஆசையா.. கோபமா...? -6

6 பூர்ணிமாவிற்குள் பொசு... பொசுவென்று கோபம் புதைந்தது... நொடிக்கொருதரம்... அவள் சரளாவையும்.. குணசீலனையும் பார்த்தபடி... இருந்தாள்... வேலைய...

6
பூர்ணிமாவிற்குள் பொசு... பொசுவென்று கோபம் புதைந்தது... நொடிக்கொருதரம்... அவள் சரளாவையும்.. குணசீலனையும் பார்த்தபடி... இருந்தாள்... வேலையில் மூழ்க... அவளால் முடியவில்லை...
தற்செயலாக பூர்ணிமாவின் பக்கம் திரும்பிய சரளா.. அவளது முக மாற்றத்தை துல்லியமாகக் கணித்து விட்டாள்...
அவளுக்கு வேண்டிய விபரங்களை குறித்த  பின்னாலும் வேலையிருப்பதைப் போல... குணசீலனின் அருகே மீண்டும் குனிந்தாள்... குணசீலனுக்கு ஒன்றும் புரியவில்லை...
"என்ன சரளா..? அதுதான் நீங்க கேட்ட விவரத்தைக் கொடுத்துட்டேனே..."
"இது சும்மா சார்... வேற விவரம்..."
சரளாவின் கண்களில் சிரிப்பிருந்ததைக் கவனித்த குணசீலனின் மனதில் எதுவோ தோன்ற... அவசரமாக பூர்ணிமாவைப் பார்த்தான்... அவள்... அவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்...
'கதை அப்படிப் போகுதா...?'
குணசீலனுக்கு சரளாவும்... பூர்ணிமாவும் நெருங்கிய தோழிகள் என்பது தெரியும்...
சரளா.. பூர்ணிமாவை சீண்டி விளையாட நினைப்பதை அவன் புரிந்து கொண்டு விட்டான்...
அவன் கண்களில் வழக்கமான கேலியும்.. விசமமும் சேர்ந்து கொள்ள.. அவன் வேண்டுமென்றே சரளாவின் பக்கமாக சாய்ந்து...
"இது இல்லிங்க.. அது..." என்று சொல்ல ஆரம்பித்தான்...
பூர்ணிமாவுக்கு மூச்சையடைப்பதைப் போல இருந்தது... அவர்களின் நெருக்கம் அவள் மனதில் பூகம்பத்தை விதைத்துக் கொண்டிருந்தது...
'இவளெல்லாம் ஒரு தோழியா..?' அவள் மனம் கொதித்தாள்...
'இவன்தான் ஆகட்டும்... கொஞ்சமாவது தள்ளி உட்காருகிறானா..? கிடைச்சது சான்ஸீன்னு... ஒட்டி உராய்கிறானே...' பொருமினாள்...
உண்மையில் குணசீலனின் விரல்கூட சரளாவின் மீது படவில்லை... அதைப்போல.. சரளாவும் அவன்மீது சுடிதாரின் துப்பட்டாவின் முனைகூடப் பட்டுவிடாமல் சர்வஜாக்கிரதையாக விலகி நின்றாள்... ஆனால்.. பூர்ணிமா இருந்த இடத்திலிருந்து பார்த்தால்... அவர்கள் இருவரும் தொட்டுக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றி வைத்தது...
அவள் உன்மத்தம் பிடித்தவளைப் போல ஆனாள்...
'இந்த அரவிந்தன் எங்கே போய் தொலைஞ்சான்..?'
அவள் கண்கள் அரவிந்தனைத் தேடின... அவன் மேனேஜரின் அறைக்குள் நிற்பது.. கண்ணாடிச் சுவரின் வழியாக வெளியே தெரிந்தது...
'இப்பப் போய் அங்கே என்னத்தைத் கிழிக்கிறான்..?'
அரவிந்தன் வந்தால்தான் அவள் நிம்மதியாக வேலை பார்க்க முடியும் என்று ஆகிவிட.. அவள் செல்போனை எடுத்து.. அரவிந்தனின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தாள்...
மேனேஜரின் முன்னால் நின்று கொண்டிருந்த அரவிந்தனின் செல்போன் குறுஞ்செய்தியை அறிவுறுத்தி ஒலித்து வைக்க.. அவன் மேனேஜரிடம் பேசியபடியே செய்தியைப் படித்தான்...
'திரும்பிப் பார்...' என்றது செய்தி...
'என்னடா.. இது..?'
குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்து விட்டான்...
குணசீலனின் அருகே.. நெருக்கமாக நின்று கொண்டிருந்த சரளாவைக் கண்டதும்... மேனேஜரை மறந்து.. அவசரமாக வெளியே வந்தான் அவன்...
'காத்திருந்தவன் சைட்டை.. நேற்று வந்தவன் உஷார் படுத்திக்கிட்டுப் போவதா..?' அவனது ரத்தம் கொதித்தது...
"குணசீலா..."
அவன் போட்ட சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவனை...
'யு டூ புருட்டஸ்...?' என்று சீஸர் புருட்டஸை பார்த்த பார்வையை பார்த்து வைத்தான் அரவிந்தன்...
"என்னடா...?"
எதுவுமே நடக்காததைப் போல... அரவிந்தனின் பார்வையை பொருட்படுத்தாமல் குணசீலன் கேட்டு வைத்ததில் அரவிந்தனுக்கு நெஞ்சுவலி வந்து விடும்போல ஆகிப் போனது...
'இவன்கிட்டப் பேசினா வேலைக்கு ஆகாது...'
கணநேரத்தில் முடிவெடுத்த அரவிந்தன் சரளாவைப் பார்த்தான்...
"இங்கே என்ன பண்றீங்க...?"
நேருக்கு நேராக அவள் முகம் பார்த்து அவன் கேட்ட தைரியத்தில் சரளாவின் விழிகளில் ஆச்சரியம் தெரிந்தது...
'அட.. இவனுக்கு இத்தனை தைரியமா..?'
"பார்த்தாத் தெரியலையா..? என் ஸ்டேட்மென்டுக்கு குணசீலனின் பிரான்சில் இருக்கிற டோட்டல் நம்பரை குறிச்சுக்கிட்டு இருக்கேன்..."
"அதை ஒரு செகண்டில் நோட் பண்ணிடலாமே.."
அரவிந்தனின் குரலில் தெரிந்த ஆளுமையில் சரளா அயர்ந்து போனாள்...
'என்னடா இது.. பூனை கூட புலியைப் போல மாறுது...'
"எனக்கு ஒரு மணி நேரம் கூட ஆகும் சார்..."
"நீங்க நகர்ந்துக்கங்க.. நான் குறிச்சுத் தர்றேன்.."
"அது என்ன தேவைக்கு..? என் வேலையைப் பார்க்க எனக்குத் தெரியும்.."
"இப்ப நகரப் போறிங்களா இல்லையா...?"
அரவிந்தன் விடாமல் வழக்கடித்துக் கொண்டிருப்பதை நமட்டுச் சிரிப்புடன் ரசித்தாள் பூர்ணிமா... அதை குணசீலனும் கவனித்து விட்டான்...
'இது இவ வேலைதானா..?'
ஆனால்.. இருந்த இடத்திலிருந்து கொண்டு.. எப்படி அரவிந்தனை அங்கே வரவழைத்தாள் என்ற மர்மம் மட்டும் அவனுக்கு விளங்கவில்லை...
விளையாட்டை முடிக்க நினைத்தவளுடன் இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்க்க ஆசைப் பட்டான் குணசீலன்.. அதற்காக....
"எதுக்காகடா.. அவங்களை நகரச் சொல்கிற...?" என்று அரவிந்தனிடம் கேட்டு அவனது ரத்த அழுத்தத்தை எகிற வைத்தான்...
"ஏண்டா டேய்... உனக்கே இது நியாயமாய் இருக்காடா..?"
அரவிந்தன் நியாயம் கேட்ட விதத்தில்... குணசீலன்.. சரளா... இருவருக்குமே.. சிரிப்பு வந்தது... மனதிற்குள் சிரித்தபடி.. வெளியே அவர்கள் அரவிந்தனை முறைத்தார்கள்...
"ஹலோ சார்... என் வேலையை கெடுத்துக்கிட்டு... உங்க பிரண்டுகிட்ட நியாயம் கேட்கறிங்களே... உங்களுக்கே இது நியாயமாய் இருக்கா..?" சரளா அரவிந்தனுடன் சண்டைக்குப் போனாள்...
"அதானே... நல்லாக் கேளுங்க சரளா.. நாமளே மும்முரமாய் டோட்டலைப் பார்த்துக்கிட்டிருக்கோம்... இவன் ஊடே வந்து மூக்கை நீட்டி காரியத்தையே கெடுக்கிறானே..."
குணசீலன் பேசிய விதத்தில் சரளாவுக்கு சிரிப்பு.. சிரிப்பாய் வந்து தொலைத்தது.. அடக்கிக் கொண்டாள்...
"காரியத்தைக் கெடுக்கிறேனா.. எந்தக் காரியத்தைடா மச்சான்..." அரவிந்தன் வெந்தே போனான்..
"வேற எந்தக் காரியத்தைன்னு நினைச்சேடா அரவிந்தா...?" குணசீலனின் புருவங்கள் உயர்ந்தன...
'ஏண்டா... டேய்.. உனக்கா நான் சொல்கிற காரியம் எதுன்னு புரியாது...'
அரவிந்தனின் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால்... அவனின் கனல் கக்கிய பார்வையில் குணசீலன் அந்த இடத்திலேயே... பஸ்பமாகிப் போயிருப்பான்...
"குணா... நீ கொஞ்சம் எழுந்திரு..."
"இது என்னோட சீட்..."
"இருக்கட்டுமே.. என்னவோ.. மந்திரி சீட்டைப் போல... பில்ட் அப் கொடுக்கிற... ஆபிஸ் சீட்தானே..? அப்புறமாய் உட்கார்ந்துக்கலாம்... இப்ப எழுந்திரு..."
"அது என்ன தேவைக்கு...?"
அவன் சரளாவைப் பின்பற்றி... அவள் சொன்னதையே சொல்லி வைக்க...
'அது... என்ன... இவங்க ரெண்டு பேரும் ஒன்னு போலப் பேசிவைக்கிறாங்க...' என்று வெறியேறிப் போனான் அரவிந்தன்...
"குணா... நான் கொலைகாரனா ஆகிறதுக்குள்ள சீட்டை விட்டு எழுந்திரு..."
"அதெல்லாம் முடியாதுடா..."
"சரளா... நீங்களாவது நகர்ந்துக்கங்க..."
"வேலையைப் பார்க்க விடுங்க சார்..."
"இப்ப ரெண்டு பேரும் நான் சொன்னபடி செய்யப் போறிங்களா இல்லையா...?"
"இல்லைடா.. இப்ப என்ன செய்வ...?"
அரவிந்தன் டேபிளின் மீதிருந்த கத்தியை கையில் எடுத்துக் கொண்டான்...
"ஏய்ய்... அதையேண்டா எடுக்கிற...?"
"ஊம்..? என்ன செய்வன்னு கேட்டயில்ல... இதாலே... என் கையை கிழிச்சுக்குவேன்..."
"டேய்... டேய்... மடையா... கத்தியை கீழே போடுடா..."
சட்டென்று குணசீலன் எழுந்து கொள்ள.. சரளாவும் விலகி அவள் சீட்டில் போய் உட்கார்ந்தாள்...
"பைத்தியமாடா... நீ...?"
குணசீலன் அரவிந்தனைக் கடிந்தபடி பூர்ணிமாவை முறைத்தான்... அரவிந்தனின் குணம் தெரிந்தும்... அவனை அவள் கிளப்பி விட்டாளே என்ற கோபம் அவனுக்கு...
அதை பூர்ணிமா வேறு விதமாக புரிந்து கொண்டாள்...
'அவகூட ஒட்டி உராய்ந்ததை நான் தடுத்திட்டேனில்ல... அந்த கோபம்தான் இவனுக்கு...'
அவள் மனம் வலித்தது... அவன் பக்கம் திரும்பாமல் அவள் வேலை செய்ததில் குணசீலனின் புருவங்கள் முடிச்சிட்டன...
'இவளுக்குள்ளே இவ்வளவு பொறாமை குணமிருக்கா...? என்மேல் நல்ல எண்ணமே கிடையாதா..? இவளையும் சைட் அடித்துக்கிட்டு... சரளா கூடவும் பழகுவேன்னு என்னைப்பத்தி எடை போட்டு வைச்சிருக்காளா...'
அவன் அவள் பக்கமே திரும்பவில்லை...
சற்று நேரம் பொறுத்து... மனம் தாளாமல்... அவன் முகத்தைப் பார்த்த பூர்ணிமா... அதில் நிலவிய கடுமையைக் கண்டு நொந்து போனாள்...
'சரளா கூட நெருக்கமா பேச விடாததுக்கு இவ்வளவு கோபமா..? அப்படின்னா.. என்மேல இவனுக்கு கொஞ்சம் கூட எண்ணமில்லை போல இருக்கே...'
அவளது முகம் வாடிப் போனது... மதிய உணவு நேரத்தில் அவள் சரளாவுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை... வலியப் பேசுவதற்கு சரளா முயன்ற போது.. அவள் பக்கத்தில் உட்காராமல் வேறு இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள் பூர்ணிமா...
"பூர்ணி..." சரளா திகைத்துப் போனாள்...
'விளையாட்டு வினையாகி விட்டதா..?'
"ஏய்ய்... என்னைப் பாருடி.."
பூர்ணிமா அவளைப் பார்க்கவுமில்லை... சரியாகச் சாப்பிடவுமில்லை.. மதிய உணவைக் கொட்டி விட்டு கை கழுவினவளை பார்த்தபடி விக்கித்துப்போய் உட்கார்ந்து விட்டாள் சரளா...
"என்ன சரளா.. உனக்கும்.. பூர்ணிமாவுக்கும் இடையே ஏதும் பிரச்னையா...?"
எப்போதும் ஒட்டிக் கொண்டு இருக்கும் தோழிகள் பிரிந்து உட்கார்ந்து சாப்பிட்டதைக் கண்ட மற்ற பெண்கள் தூண்டித் துருவினார்கள்...
"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை சுகுணா..."
"அவ உன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடலையே.."
"அவ சாப்பாட்டையே.. சாப்பிடலையே.. அதை நீ கவனிக்கலையா..?"
"ஊஹீம்... நீ கூப்பிட்டதினாலதான்... அவ சாப்பிடாம போனா.. அதைக் கவனிச்சேன்..."
சுகுணா விடாக் கண்டியாய் இருந்தாள்...
'வேலையை உருப்படியாய் கவனிச்சிராதே.. இதை மட்டும் உணக்கையாய் கவனிச்சிரு...' சரளா பல்லைக் கடித்துக் கொண்டாள்...
"அவளுக்கு காலையிலேயே நல்ல ஜீரம்..."
"ஜீரமா..? அவ தலைக்கில்ல குளித்திருந்தா...?"
வெள்ளிக்கிழமை யென்பதால் பூர்ணிமா.. தலைக்கு குளித்து விட்டு ஈரமுடியை தளர விட்டுப் பின்னலிட்டு வந்திருந்தாள்...
அதைக் குறிப்பாக சுகுணா உணர்த்த சரளாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது... சுகுணாவை முறைத்தாள்...
"எனக்கும்.. அவளுக்கும் இடையே ஆயிரம் இருக்கும்.. உனக்கு அது எதுக்கு..?"
"அதானே... எனக்கு அது.. எதுக்கு..?"
சரளாவின் கோபத்திற்கு பயந்து.. இடத்தை காலி செய்தாள் சுகுணா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஆசையா.. கோபமா...? -6
ஆசையா.. கோபமா...? -6
https://1.bp.blogspot.com/-HW1j6639vCU/Xr0TTc7N4kI/AAAAAAAAA1k/KsXJuC2T-Q0owUdBH8BGj56IxhmETRsKgCPcBGAYYCw/s320/Asaiya%2BKovama.jpg
https://1.bp.blogspot.com/-HW1j6639vCU/Xr0TTc7N4kI/AAAAAAAAA1k/KsXJuC2T-Q0owUdBH8BGj56IxhmETRsKgCPcBGAYYCw/s72-c/Asaiya%2BKovama.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/aasaiyaagobamaa-6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/aasaiyaagobamaa-6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy