வந்தாள் மகாலட்சுமியே..-5

5        "சின்னக் குயில் பாடும்..              பாட்டுக் கேட்குதா.. ?     குக்கூ.. குக்கு.. கூ.. குக்குக்கூ..." மீரா பா...

5

      "சின்னக் குயில் பாடும்..
             பாட்டுக் கேட்குதா..?
    குக்கூ.. குக்கு.. கூ.. குக்குக்கூ..."
மீரா பாடியபடி ஊஞ்சலாட.. வாகீசனின் மகன்கள் இந்தப் பக்கமும்.. அந்தப் பக்கமுமாக நின்று ஊஞ்சலைத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள்.. இரண்டு பக்கமும் ஏறி இறங்கிய ஊஞ்சலின் வேகத்தில் மீரா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை.. அவள் தன்போக்கில் பாடிக் கொண்டிருந்தாள்..
மழை காலத்தின் காலை நேரங்கள் வெகு அழகானவை என்று அவளுக்குத் தோன்றியது.. இரவெல்லாம் பெய்த மழையினால் இலைகளில் மழைத்துளிகள் சொட்டச் சொட்ட... அப்போதுதான் குளித்து விட்டு வந்ததைப் போல பச்சைப் பசேலென கருத்தைத் கவரும் தளிர்செடிகள்.. கார்மேகம் சூழ்ந்த வானம்.. ஈரப்பசையுடன் கூடிய குளிர் காற்று என அந்த இதமான மழை நேரத்தின் காலை வேளையை அவள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்தாள்..
அவள் வீட்டின் தோட்டத்தின் பரப்பளவைக் கணக்கிட்டால்.. அதில் கால்வாசி பரப்பளவில்கூட வாகீசனின் மொத்த வீடும் இருக்காது.. சின்ன காம்பவுண்டு.. அதற்குள் சின்னதாக ஒரு தோட்டம்.. அந்தச் சின்னத் தோட்டத்தில் சின்ன ஊஞ்சல் என்று கச்சிதமாக அமைந்திருந்த அந்த வீட்டில்தான் மீரா ஒருநாளின் பெரும்பான்மையான நேரத்தைக் கழித்தாள்.. ஒற்றைப் பெண்ணாக பிறந்து வளர்ந்தவளுக்கு அவளுடைய மாளிகை போன்ற வீட்டில் கிடைக்காத உயிர்ப்பும் சந்தோசமும்.. வாகீசன் பெற்ற இரு புதல்வர்கள் இருக்கும் அந்த சின்னஞ்சிறிய வீட்டில் கிடைத்தது.. பிள்ளைகளோடு பிள்ளையாக விளையாடும் அவளைப் பார்ப்பவர்களுக்கு அவள்தான் பரம்பரை கோடிஸ்வரரான கலெக்டர் சடகோபனின் ஆசைப் புதல்வி என்று தெரியவே தெரியாது.. அந்த அளவுக்கு குழந்தைத்தனத்தோடு அவள் வாகீசனின் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பாள்..
"இந்தப் பொண்ணு காலேஜில் படிக்குதுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கடி.." என்று வாகீசன் அதிசயப் பட்டபோது..
"கோடிஸ்வரர் வீட்டுப் பொண்ணுன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்கதான்.. கொஞ்சம் கூட கர்வமில்லாம எவ்வளவு எளிமையா இருக்குது.." பாந்தமாக பதில் சொன்னாள் பாகீரதி..
மீராவைப் பற்றிய பேச்சு என்றால் இப்படித்தான்.. 'இவளா என் தர்ம பத்தினி பாகீரதி..?' என்று வாகீசனே ஆச்சரியப்பட்டுப் போகுமளவிற்கு அவள் பாந்தமாகத்தான் பதில் சொல்வாள்.. அந்த அளவுக்கு பாகீரதியின் மனதில் இடம் பிடித்திருந்தாள் மீரா..
வாகீசன் பெற்ற வாண்டுகள் மட்டும் குறைந்தவர்களா என்ன..யார் என்ன சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டுப் போகிற பிரகிருதிகள்.. மீரா சொன்னால் மட்டும் இரண்டு காதுகளிலும் வாங்கி அப்படியே கேட்டுக் கொள்ளுவார்கள்.. அவள் எள் என்றால் எண்ணையைக் கொண்டு வந்து டின்டின்னாக அவள் காலடியில் குவிப்பார்கள்..
"பெத்தவன் நானுடி.." வாகீசனுக்கு ஆற்றாமையாக வரும்..
"அதுக்கென்ன இப்ப..?" பாகீரதியிடமிருந்து கேள்விக்கணை பாய்ந்து வரும்..
"பிறந்ததிலே இருந்து ஒருநாள் ஒரு பொழுதாவது இந்தப் பசங்க ரெண்டு பேரும் என் பேச்சைக் கேட்டிருப் பானுகளா..?"
"இதை எதுக்கு இப்ப வந்து சொல்கிறீங்க..?"
"இந்த மீராப் பொண்ணு சொன்னா மட்டும் அப்ஜெக்சனே இல்லாம மண்டையை ஆட்டுதுக பாரேன்.."
"போதும்.. சின்னப் பொண்ணு மேலே பொறாமைப் பட்டுக்கிட்டு.. உங்களைப் பாத்தா மெச்சூரிட்டியான ஆபிசர் மாதிரியா இருக்கு..?"
'பின்னே இல்லையா..?'
வாகீசனுக்கு கவலை பிடித்துக் கொண்டது.. எதிர் வீட்டுப் பெண் அவர் பெற்ற பிள்ளைகளின் மீது செழுத்தும் ஆளுமையைப் பற்றிச் சொன்னால் அவர் மெச்சூரிட்டி இல்லாத ஆபிசராகி விடுவாரா..?
அதற்குப் பின்னால் வாகீசன் அடிக்கடி அந்தப் புலம்பலை புலம்புவதே இல்லை.. எப்போதாவது ஒரு தடவை.. பாகீரதியின் செவிகளை எட்டி விடாத அளவுக்கு  மிக.. மிக.. தாழ்ந்த குரலில் வாய்க்குள் முணுமுணுத்துக் கொள்வார்..
'எதுக்கு வம்பு..மெச்சூரிட்டியான ஆபிசர்ங்கிற பெயர் நிலைக்கனும்னா எதிர் வீட்டுப் பெண்ணைப் பற்றி இவகாதுபட பேசி விடக் கூடாது..'
இவ்வாறு வாகீசனை பொறாமைப் படவைத்துக் கொண்டிருந்த மீராவைத்தான் வாகீசன் பெற்ற பிள்ளைகள் ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள்..
மீராவுக்கு ஏனோ மனதுக்குள் குதூகலம் கொட்டிக் கொண்டிருந்தது.. அது எதனால் என்று அவளுக்குத் தெரியவில்லை.. அவள் ஊஞ்சாலாடிக் கொண்டிருந்த இடம் வாகீசனின் வீட்டுத் தோட்டம் என்பதே அவளுக்கு மறந்து போய்விட்டது.. அருவிக் கரையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதைப் போல அவள் உணர்ந்தாள்.. பச்சைப் பசேலென்ற புல்வெளிகளில் சொட்டிய மழைநீரின் துளிகள் அவளை எங்கேயோ அழைத்துக் கொண்டு போயின..
"ஏன்க்கா பாட்டை நிப்பாட்டிட்டீங்க..."
நேயர் விருப்பம் ஆரம்பமானது.. வாகீசனின் பிள்ளைகளின் வேண்டு கோளுக்கிணங்க மீரா பாட ஆரம்பித்தாள்..
      "சின்னக்குயில் பாடும்
             பாட்டுக் கேட்குதா..?
    குக்கூக்கூ..! குக்குக்கூ...!"
அவள் உதட்டைக் குவித்து ஒலியெழுப்பியதில் மகேஷம்சுரேஷீம் இணைந்து கொண்டார்கள் ஒட்டு மொத்த 'குக்கூக்குதோட்டத்தைத் தாண்டி வாகீசனின் வீட்டுக்குள் எட்டிப் பார்த்ததில் வாகீசன் அரண்டு போனார்..
"என்னடி பாகீ.. நம்ம தோட்டத்த குயில் கூட்டம் குத்தகைக்கு எடுத்திருச்சா..?" அவர் பதற..
"உஸ்ஸ்ஸ்.." என்று வாயில் ஆட்காட்டி விரலை வைத்து அடக்கினாள் பாகீரதி..
"ஞான சூன்யம்.."
மனதுக்குள் முணுமுணுப்பதைப் போல அவள் வாய் விட்டுச் சொல்ல.. யாரைச் சொல்கிறாய் என்று கேட்க முடியாமல் அமைதியானார் வாகீசன்..
"குயில்தான் கூவுது..உங்க தம்பி வீட்டில மாதிரி கோட்டான் கூவலையே.." பாகீரதி அம்பை எய்தாள்..
அரளாமல் பேசாமல் இருந்திருந்தால் அவரின் தம்பி வீடு கோட்டான் வீடாய் ஆகியிருக்குமா.. என்று வாகீசனின் மனச்சாட்சி அவரைக் கடுமையாக கண்டனம் செய்தது..
தோட்டத்தில் குயில் கூட்டம் கூவிக் கொண்டிருந்தது...
     "எங்கும் மழை மேகம்..
             தன்னந் தனியா..?
    கங்கை நதிக் கென்ன
             கட்டுத் தறியா..?
    அட வானம் எங்கு போகும்
             அங்கு நானும் போவேனே..."
கானக்குயிலென இசைத்துக் கொண்டிருந்தாள் மீரா.. வாகீசனின் புதல்வர்கள் கைதட்டி அவளின் பாடலுக்கு தாளம் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களைப் பார்த்துத் தலையை ஆட்டியபடி உற்சாகத்துடன் பாடலைத் தொடர்ந்தாள் அவள்..
     "ஏப்பம் விடும் ஓடையை..
             இப்போதுதான் பார்க்கிறேன்..
    மைனாக்களின் பாசையை
             இப்போதுதான் கேட்கிறேன்..
    பிருந்தாவனம் இங்கே பார்த்தேனே..."
என்றவளுடன்..
"ல லல்லலா.." என்று வாகீசனின் புதல்வர்கள் இணைந்து கொண்டார்கள்..
மீண்டும் சின்னக்குயிலுடன் பிள்ளைக் குயில்கள் சேர்ந்து கொண்டன.. இந்த முறை வந்த 'குக்கூ..'வின் ஒலி பலமாக இருந்த போதிலும் வாகீசன் வாயில்மேல் வைத்த விரலை எடுக்காமல் அமைதி காத்தார்.. அவர் வாயைத் திறந்து அவருடைய தம்பியின் வீட்டை கோட்டான் வீடாக ஆக்க வேண்டுமா..?
'தேவையா..?'
வீட்டுக்குள்ளிருந்த வாகீசனின் நிலையைப் பற்றிக் கவலைப் படாமல் தோட்டத்தில் கச்சேரிகளை கட்டிக் கொண்டிருந்தது..
      "ஆஹா.. இந்த பூமி..
             புத்தம் புதுசு..
    பாசம் வந்ததாலே
             பொங்கும் மனசு..
    இனி வாசம் வீசும் பூவில்
             நானும் வாசம் செய்வேனே.."
மீராவின் பாடல் தோட்டத்திலிருந்த செடிகளையும்.. புல்வெளியையும் கடந்து.. அப்போதுதான் காம்பவுண்டு கேட்டைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்த அந்த வாலிபனின் காதுகளிலும் நுழைந்தது.. அவன் புருவங்கள் உயர்ந்தன..
'அட்ரஸ் மாறி வந்துட்டேனா..?'
அவசரமாக அவன் வீட்டு எண்ணைப் பார்த்தான்..
'சரியாத்தானே இருக்கு..'
தாடையைத் தடவியபடி பாட்டு வந்த திசைப் பக்கம் பார்த்தான்.. மீராவை ஊஞ்சலில் உட்கார வைத்து ஆட்டி விட்டுக்கொண்டிருந்த வாகீசனின் மகன்களைப் பார்த்ததும்..
'இந்த வாலுக இங்கேதான் இருக்கானுக.. நான் கரெக்டான அட்ரஸீக்குத்தான் வந்திருக்கேன்.. ஆனா.. ஊஞ்சலாடிக்கிட்டு இருக்கிற அந்தப் பொண்ணு யாரு..இவ பாட்டுத்தானா இது..?' என்ற நினைவுடன் உற்றுப் பார்த்தான்..
அவளை ஒரு வாலிபன் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாத மீரா.. தன் போக்கில் இசை வெள்ளத்தில் மூழ்கி லயித்துப் பாடிக் கொண்டிருந்தாள்..
     "தாவி எங்கும் ஓடினேன்..
             தாயின்மடி தேடினேன்..
    பூவனங்கள் எங்கிலும்..
             பூஜை செய்யப் போகிறேன்..
    என் சோலையில் நானும் பூவவேன்.."
"ல லல்லா.. கூவ்கூ..."
கோரஸாக ஒலித்த கூக்கூவில் கவரப்பட்ட அந்த வாலிபன்.. வீட்டை விட்டு விட்டு தோட்டத்தை நோக்கி நடந்தான்.. அவன் வருவதைக் கவனிக்காத சின்னக்குயில் மீராவும்.. அவளின் துணைக்குயில்களான வாகீசனின் புதல்வர்களும் 'கூக்கூவை இசைத்துக் கொண்டிருந்தார்கள்..
            "சின்னக்குயில் பாடும்..
             பாட்டுக் கேட்குதா..?"
என்றபடி திரும்பிய மீரா..
"கேட்டுத்தானே வீட்டுப் பக்கம் போகாம தோட்டத்துப் பக்கம் வந்திருக்கேன்..." என்று சொன்ன வனைப் பார்த்ததும் திகைத்துப் போனவளாக ஊஞ்சலை விட்டுக் குதித்து விட்டாள்..
அவளையே பார்த்தபடி நின்றிருந்தவனின் கம்பீரமான முகத்தில் கவரப்பட்டவளுக்கு அவனை எங்கேயோ பார்த்ததைப் போல இருந்தது..
'யாரிவன்..?'
அவன் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக இருந்தான்.. லேசாக உதட்டை வளைத்திருந்தாலும் அது சிரிப்பாக வெளிப்படாத கண்டிப்பான முகத் தோற்றத்துடன் இருந்தான்..
தீட்சண்யமான அந்தக் கண்களையும்.. அளவான அழகான அந்த பெரிய மீசையையும்.. தீர்க்கமான அந்த மூக்கையும்.. செதுக்கி வைத்ததைப் போன்ற அந்த வடிவான முக அமைப்பையும் பரிச்சயமானவளைப் போல மீரா உற்றுப் பார்த்து வைத்தாள்..
'இவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே..'
எங்கே என்று நினைவுக் குவியலில் அவள் தேடிக் கொண்டிருக்க.. அவள் பார்வையில் அவன் புருவங்கள் உயர்ந்து இறங்கின..
'என்னடா இது..'
அவள் அவசரமாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.. அதில் அவன் இதழ்களில் கேலிப் புன்னகை வந்தது..
"அத்தான்.." என்றான் மகேஷ்..
"எங்கே எனக்கு சாக்லெட்.." என்றான் சுரேஷ்..
'இவனுகளுக்கு இவன் அத்தானா..?'
இந்த உறவுமுறையும் மீராவுக்கு பரிச்சயமானதைப் போலதான் இருந்தது.. வாகீசன் பெற்ற பிள்ளைகளுக்கு அத்தானாக இருப்பவனை அவளுக்கு எப்படித் தெரியும்..?
மீராவுக்கு தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.. அவனை அறிந்தும் அறியாததைப் போன்ற ஓர் பிரமை அவளுக்குள் ஏன் வருகிறது..
விருந்தாளி வந்திருக்கும் செய்தியை அறிவிக்க வாகீசனின் பிள்ளைகள் வீட்டுக்குள் ஓடிவிட்டார்கள்.. மீரா நகர மறந்தவளாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அதில் அவன் முகத்தில் வியப்பு வந்தது.. அந்த வியப்புடன் அவனும் அவளையே பார்த்தபடி அங்கேயே தேங்கி நின்று விட்டான்..
"யது நந்தா..! நீயேதானா..என் கண்ணை என்னாலேயே நம்ப முடியலையேடா.." பாகீரதி வீட்டுக்குள் இருந்து ஏறக்குறைய ஓடி வந்தாள்..
'யது நந்தன்..!'
அந்தப் பெயரும் மீராவுக்கு அறிமுகமான பெயரைப் போலிருந்ததில் அவளுக்கு தலையை வலித்தது..
பாகீரதியின் பின்னால் வந்த வாகீசன் ஓடியெல்லாம் வரவில்லை.. மெதுவாக ஆடி அசைந்து வந்தார்..
"வாப்பா.." என்றார்..
சப்தமில்லாத அந்த வரவேற்பில் பாகீரதி அவரை உக்கிரமாக பார்த்தாள்.. வாகீசனுக்கு காலை உணவைப் பற்றிய கவலை வந்தது..
'கொஞ்சம் வேகம் காட்டியிருக்கனுமோ..'
விட்டதைப் பிடித்து காலை உணவுக்கான உறுதியை பெற்றுவிட முனைந்தவராக..
"என்னப்பா இப்படி இளைச்சுப் போயிட்ட..." என்று கேட்டபடி பாகீரதியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தார்..
"சரியாச் சொன்னிங்க..."
பாகீரதியின் வார்த்தைகளில் வாகீசனின் காலை உணவுக்கான வாக்குறுதி கிடைத்து விட்டது..
'அப்பாடி..அவர் நிம்மதியாக மூச்சு விட்டார்..
அவனை எங்கே பார்த்தோம் என்ற ஞாபகம் வராதவளாக மீரா குழம்பியபடியே நின்றிருந்தாள்.. பாகீரதியின் வரவேற்புக்கும்.. வாகீசனின் ஒப்புக்கு வரவேற்ப்புக்கும் பதில்களைச் சொல்லியபடி ஊடும் பாடும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த யது நந்தனாகப்பட்ட அந்த வாலிபனின் முகத்தில் யோசனைவந்தது..
'இந்தப் பெண் ஏன் இப்படி முழிக்குது..?'
"யது.. எதிலடா வந்த..?"
"ஆட்டோவில வந்திருப்பான் பாகீ..."
"சத்தமே கேட்கலை.."
"எங்கே..இங்கேதான் குயிலு சத்தம் கூக்கூன்னு வீட்டை ரொப்பிக்கிட்டு இருந்துச்சே.. அந்தச் சத்தத்தில் இந்தச் சத்தம் அமுங்கியிருக்கும்.."
"எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு.."
"யாருடி இவ.. ஆட்டோவில வராம உன் அண்ணன் மகன் என்ன குதிரையிலா வந்திருக்கப் போகிறான்..?"
வாகீசனின் கேள்வியில் பொட்டில் அடித்ததைப் போல மீராவுக்கு அவனை எங்கே பார்த்தோம் என்ற நினைவு வந்து விட்டது..
'இவன்.. என் கனவிலே குதிரையிலே வந்தவன் தானே..'
மீரா விழிவிரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவள் மனக்கண்ணில் கனவு வந்தது.. அதில் வெள்ளைக் குதிரை ஒன்று விரைந்து வந்து முன்னங்கால்களைத் தூக்கிக் கனைத்து நின்றது.. அந்தப் புரவிமீது ஆரோகணித்திருந்த யதுநந்தன் அவளைக் கம்பீரமாக பார்த்து விட்டுக் குனிந்து அவளைத் தூக்கி குதிரையில் வைத்துக் கொண்டு பறந்தான்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே..-5
வந்தாள் மகாலட்சுமியே..-5
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahalakshmiye-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahalakshmiye-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy