வந்தாள் மகாலட்சுமியே..-4

4 மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல.. காலையில் கப்பலாகி விட்ட அன்றைய நாளிதழுக்காக மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ப...


4

மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல.. காலையில் கப்பலாகி விட்ட அன்றைய நாளிதழுக்காக மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பின்னாலும் வாகீசன் புலம்பிக் கொண்டிருந்தார்..
"அதில இருக்கிற ஒற்றை எழுத்தைப் படிச்சிருந்தாக் கூட மனசு ஆறியிருக்கும்டி.. படிக்கலையே.. என்னால படிக்க முடியலையே.. என்ன செய்வேன்.. நான் என்ன செய்வேன்.." என்று இரண்டு கைகளையும் விரித்து நடிகர் திலகம் போல பேசித் தள்ளினார்..
அவர் பண்ணிய கொடுமை தாங்காமல் பிள்ளைகளை முறைத்தாள் பாகீரதி.. அவள் கண்களில் கனல் பறந்தது.. அதில்..
'உங்களால்தானேடா நான் இந்த வன்கொடுமை ஆக்டிங்கையெல்லாம் கண்கொண்டு பார்க்க வேண்டியிருக் கிறது..?' என்ற கேள்வி இருந்தது..
மகேஷீம், சுரேஷீம்.. ஒருவரையொருவர் பார்த்து விட்டுத் தலையில் கை வைத்துக் கொண்டார்கள்..
"கழுகுக்குத்தான் மூக்கு வியர்க்கும்.. நான் பெத்த பிள்ளைகளுக்குமா மூக்கு வியர்க்கும்..? அது எப்படிடா.. கரெக்டா.. இன்னைக்குப் பேப்பராப் பாத்து கை வைச்சிருக்கீங்க..?"
"இந்தா பாருங்க.. எனக்கு கெட்ட கோபம் வந்திரும்.."
"உனக்கு என்னைக்குடி பாகீ நல்ல கோபம் வந்திருக்குது..?"
"அது உங்களைக் கட்டிக்கிட்ட நாளில இருந்து காணாமப் போயிருச்சு.. போதுமா..? அதென்ன.. பிள்ளைகளைப் போய் கழுகுக்கு இணை கூட்டறிங்க.. அது உங்களுக்குத்தான் இணை.. உங்களுக்கு மகன்களாப் பிறந்திட்டாங்கங்கிறதுக்காக நீங்க கழுகை கை காட்டு வீங்களா..? அதை உங்க தம்பி பிள்ளைகள் பக்கம் தாட்டி விடுங்க.. என்பிள்ளைகள் என்னைப் போல.. இதுகளுக்கு உவமானமாச் சொல்லனும்னா.. புறாவும், மயிலும்தான் தோதுப்படும்.."
பாகீரதி வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் போதே மகேஷ் கோட்டானைப்போல கூவி வைத்தான்..
"பார்த்தியா.." என்றார் வாகீசன்..
"கேட்டியான்னு சொல்லனும் அப்பா.." சுரேஷ் பிழைத் திருத்தம் செய்தான்..
"அப்பப்போ உங்க வம்சத்துக் காத்தும் அடிச்சுட்டுப் போகும்ல்ல.. அதான் இது.. சும்மாயிருக்காம உங்க தம்பி பிள்ளைகளைப் பத்திச் சொல்லி வைச்சேனில்ல.. என் பிள்ள கோட்டானப் போலக் கத்தாம என்ன செய்வான்..? அதுக கோட்டான்கதான..?"
எதைச் சொன்னாலும் அதற்கு இணையாக ஒன்றைச் சொல்லிக் கெட்டிக்காரத்தனமாக முடிச்சைப் போட்டு விடும் பாகீரதியின் வாக்குச் சாதுர்யத்திற்கு முன்னால்.. என்றும் போல அன்றும் தோற்றுப் போனார் வாகீசன்... எத்தனை முறை தோற்றாலும் திரும்பத் திரும்ப அவள் முன்னால் வாய் விடும் தனது முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டே வாயை மூடிக் கொண்டார் வாகீசன்..
"இதை அப்பவே பண்ணியிருக்கலாமில்ல..?" என்றான் மகேஷ்..
"யாரைடா சொல்கிற...?" வாகீசன் நெற்றிக் கண்ணைத் திறக்க யத்தனித்தார்..
"இந்த சுரேஷை சொல்கிறேனப்பா.. இந்தக் காயினை அடிக்கிறதுக்கு இவ்வளவு நேரம் எடுத்துக்கிறான்.. யூஸ்லெஸ் பெல்லோ.. இதுக்கெல்லாம் இவ்வளவு நேரமா..? ஸ்டிக்கரை கையில எடுத்தோமா.. காயினை கிளீன் போல்டா ஆக்கினோமான்னு இல்லாம என்னவோ காயினை கையில வைச்சுக்கிட்டு அழகு பார்த்துக்கிட்டு இருக்கான்.. அடிடா.. டேய்.."
உண்மையாகவே அவன் கேரம் போர்டின் காயினைத் தான் சொன்னானா என்று திகைத்துப் போனார் வாகீசன்.. அவன் சொன்னதை மறுத்துப் பேச முடியாமல் அவனும், சுரேஷீம்.. கேரம் விளையாட்டைத்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. அப்படியா என்று போக முடியாமல் அவர் பெற்ற அருந்தவப் புதழ்வர்களின் இதழ்களில் நெளிந்த விசமச்சிரிப்பு அவரைப் பாடாய் படுத்தி எடுத்தது..
பாகீரதி அவரைப் பார்த்து உதட்டை வளைத்துச் சுழித்து அழகு காட்டுவதைப் போல பாவனை செய்து விட்டு அடுக்களைக்குள் போய் விட்டாள்..
'கெட்டிக்கார பிள்ளைகளைப் பெத்தவ.. அந்த மமதையில அழகு காட்டிட்டுப் போறா..'
அந்தப் பிள்ளைகளுக்கு அப்பனான வாகீசன் ஆற்றாற்றுப் போனார்.. அந்தக் கெட்டிக்கார பிள்ளைகள் வைக்கிற செலவுகளையெல்லாம் அவர் தலையில் கட்டி விட்டு.. கூட்டணி போட மட்டும் அம்மாவைத் தேடிப் போவதில் அவருக்கு நெஞ்சுவலி வரும் போல இருந்தது..
"சுக்கு கசாயம் போட்டுக் கொடுக்கவா..?" சமையலறையிலிருந்து பாகீரதியின் குரல் கேட்டது..
'இவளென்ன யட்சிணியா..?' நெஞ்சை நீவிக் கொண்டார் வாகீசன்..
"இதுக்கு யட்சிணியா இருக்கனும்ங்கிற அவசிய மில்ல.. உங்களுக்கு பெண்டாட்டியா இருந்தாலே போதும்.." சமையலறையிலிருந்து சுக்கு கஷாயத் தம்ளருடன் வெளிப்பட்டாள் பாகீரதி..
நெஞ்சையும் வலிக்க வைத்து அதற்கு இதமாக சுக்குக் கசாயமும் போட்டுத்தரும் மனைவியின் சேவையில் நொந்து போனாலும் கிடைத்த சுக்குக் கசாயத்தை விட்டுக் கொடுக்காமல் கெட்டியாக கைப்பற்றி உள்ளே தள்ளி விட்டுத்தான் வேறு வேலை பார்த்தார் வாகீசன்..
"ஹாய் ஆண்ட்டி.."
மீரா வந்தாள்.. இவளுக்கு இவள் வீட்டில் வேலையே இருக்காதா என்ற நினைவுடன் அவளை முதன் முதலாகப் பார்ப்பதைப் போல உற்றுப் பார்த்தார் வாகீசன்...
"கனத்த மழையினால் இன்னைக்கும், நாளைக்கும் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் விடுமுறைன்னு டிவியில பிளாஷ் நியூஸ் வருதே அங்கிள்.. பார்க்கலையா..?" என்றாள் மீரா..
அவர் மனதைப் படிக்கும் வித்தையை அதற்குள்ளாகவா பாகீரதி மீராவுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டாள் என்ற அடுத்த அதிர்வு அவரது நெஞ்சைத் தாக்கியது..
வாகீசன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்..
"இனியெல்லாம் சுக்குக் கசாயம் போட முடியாது.." பாகீரதி அறிவித்தாள்..
"யாருக்கு ஆண்ட்டி சுக்குக் கஷாயம் போடப் போறிங்க..? எனக்கா..?" மீரா கேட்டாள்..
"சேச்சே..! அந்தக் கருமத்தையெல்லாம் உனக்குப் போட்டுக் கொடுப்பேனாம்மா..?" பாகீரதி அடுத்த அதிர்வை வாகீசனின் நெஞ்சுக்கு அனுப்பி வைத்தாள்..
"டோன்ட் வொர்ரிக்கா.. அது அப்பாவோட பேவரைட் டிரிங்க்.. நமக்கெல்லாம் கள்ளிச் சொட்டுக் காபிதான்.. இல்லேம்மா.." வாகீசன் பெற்ற மூத்த புதல்வன் மீராவுக்கு தைரியம் கொடுத்தான்..
வாகீசனின் நெஞ்சு வெடித்து விடும் போல ஆனது.. புண்ணான நெஞ்சை டிவியில் நியூஸ் பார்த்தாவது ஆற்றிக் கொள்ளலாம் என்று அவர் நியூஸ் சேனலை வைத்தார்..
"அப்பா.. வைச்சா டென் ஸ்போர்ட்ஸை வையுங்க.. இல்லேன்னா.. டிவியை டச் பண்ணாதீங்க.." கண்டிப்புடன் சொன்னான் அவரின் இளைய மகன்..
"அப்படியே ரிமோட்டால மண்டையில ஒரு போடு போட்டிருவேன்.. ஏண்டா.. இன்னைக்குத்தான் வந்த பேப்பரை மடிப்புக் கலையாம எடுத்துக்கிட்டுப் போயி கப்பல் செஞ்சு விட்டுட்டு இப்ப நியூஸைப் பாக்கறதுக்கும் 'தடா' போடறியா..? உன்னை.." வாகீசன் ரிமோட்டைத் தூக்கி சுரேஷின் தலையைத் தாக்கத் தோதாக குறி பார்த்தார்..
"அடங்குடா.. உனக்கு டென் ஸ்போர்ட்ஸ்தான் பெரிசா போயிருச்சா..?"
அவருடைய மூத்தமகன் இளையவனைக் கண்டித்தான்.. பொறுப்புள்ள அண்ணனாக அவன் செயல் பட்டதில் வாகீசன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்..
அந்த மகிழ்ச்சியை மறுநொடியில் அவன் தரை மட்டமாக்கினான்..
"வைச்சா கிரிக்கெட்டை வையுங்க.. இல்லேன்னா டிவியை ஆஃப் பண்ணிருங்க.." கட்டளையிட்டான்..
"பாகீ.."
வாகீசன் போட்ட அலறலுக்கு.. அடுப்பில் இருந்த குழம்பை மேலே ஊற்றிக் கொண்டு பாகீரதி ஓடி வந்து விடவில்லை.. மாறாக குழம்பை இறக்கிவைத்து மூடி போட்டு மூடி வைத்துவிட்டு.. அடுப்பையும் அணைத்து விட்டு சாவாதானமாக அன்னநடை போட்டு ஹாலுக்கு வந்தாள்.. வந்தவள் மூத்த மகனையும், இளைய மகனையும் பார்த்து மெச்சுதலாக புன்னகை செய்து விட்டு..
"என்ன..?" என்று எதிரிக்காரரிடம் கேட்பதைப் போல வாகீசனிடம் கேட்டு வைத்தாள்..
"டிவியை வாங்கிப் போட்டிருக்கிறது நானா.. இல்ல.. இவனுகளாடி..?" சத்தம் போட்டார் வாகீசன்..
"ஸ்ஸ்ஸ்.." வாயில் விரலை வைத்து அவரை அடக்கினாள் பாகீரதி..
"இப்ப எதுக்காக இப்படிச் சத்தம் போடறிங்க..? ஏற்கனெவே உங்களுக்கு பி.பி. எகிறிப் போய் கிடக்குது.. உங்க உடம்பப் பத்தி உங்களுக்குத்தான் நினைப் பிருக்கனும்.."
"அதுக்கு..?"
"சத்தத்தைக் குறையுங்கண்ணேன்.."
"ஏண்டி..? உனக்கே இது நல்லாயிருக்கா..? காலையிலேதான் நீங்க எல்லோரும் கூட்டணி போட்டுக்கிட்டு பேப்பரை படிக்க விடலை.. சாயங்கால மாவது நாட்டு நடப்பு என்னன்னு நியூஸைப் பாத்துத் தெரிஞ்சுக்க விடலாமில்ல..?"
"அரிசி விலை கூடிப் போயிருச்சு.. உங்களுக்குத் தெரியுமா..?"
"எப்ப...?"
"தக்காளியும் கத்தரிக்காயும் யானைவிலை, குதிரை விலை விற்குது.."
"அப்படியா..?"
"நம்ம பெட்ரூமில ஃபேன் ஓட மாட்டேங்குது.."
"கால் நொண்டிப் போச்சா..?"
"கிச்சனில் சின்ங் குழாய் உடைஞ்சு போச்சு.. பிளம்பரைக் கூப்பிட்டு சரி பண்ணனும்.. உங்களுக்கு அவரோட போன் நம்பர் தெரியுமா..?"
"தெரியாதே பாகி..."
"வீட்டுக்குள்ள இம்புட்டு வேலைக குமிஞ்சு கிடக்கு.. உங்களுக்கு அதைப் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது.. தெரிஞ்சுக்கவும் விரும்ப மாட்டிங்க.. நாட்டில மட்டும் என்ன நடக்குதுன்னு உடனுக்குடன் தெரிஞ்சாகனும்.. உங்கம்மா நல்லாத்தான் உங்களை வளர்த்து என் தலையில கட்டி விட்டிருக்காங்க..."
"இப்ப எதுக்குடி என் அம்மாவை இழுக்கற..?"
"வேண்டுதல்தாங்க.. வேற என்ன..? வீட்டு நடப்பைப் பத்தித் தெரிஞ்சுக்காத மனுசன் நாட்டு நடப்பைப் பத்தித் தெரிஞ்சுக்கப் போகிறாராம்.. உங்களைச் சொல்லிக் குத்தமில்லை.. உங்க ஆண்வர்க்கம் மொத்தமும் இப்படித்தான் இருக்கு..?"
பாகீரதி மாதர் சங்கத் தலைவி போல மைக் இல்லாமலே தாளித்துக் கொட்ட ஆரம்பித்தாள்.. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த நியூஸ் சேனலைப் பாருங்கள்.. அந்த நியூஸ் சேனலைப் போருங்கள் என்று டிவியில் அழைப்புக்கள் மிளிர்ந்தன...
'எந்த நியூஸ் சேனலையும் என்னை.. என் வீடு.. பார்க்க விடாதே.. இதில உடனுக்குடன் வர்ற செய்திகளை எங்கே போய் பார்க்கிறது..?' வாகீசன் ஏக்கப் பெருமூச்சு விட்டார்..
அதுவரை அந்த வீட்டின் களேபரங்களை படு சுவராஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மீராவுக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது..
"விடுங்க ஆண்ட்டி.. வெளியில போய் வேலை பார்க்கிறவர்.. நாட்டு நடப்பைப் பத்தித் தெரிஞ்சுக்க வேணாமா..?"
மீராவின் பரிந்துரையில் ஏதேனும் வில்லங்கம் ஒளிந்திருக்கக் கூடுமோ என்று சந்தேகப் பார்வை பார்த்தார் வாகீசன்..
அவள்தான் அவர் பெற்ற பிள்ளைகளை விட விசமத்தில் ஒருபடி மேலே இருக்கிறவளாயிற்றே...
"தெரிஞ்சுக்க வேண்டிய நேரத்திலே தெரிஞ்சிருந்தா உங்க அப்பாவைப் போல ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதி கலெக்டர் ஆகியிருப்பாரு.. காலம் போன கடைசியில தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறாரு..?"
பாகீரதி ஒரு கேள்வியைக் கேட்டாலும்.. அதை ஊசிமுனைகளின் கேள்விகளாகத்தான் கேட்டு வைப்பாள்..
"என்ன ஆண்ட்டி நீங்க.. போன காலத்தை இழுத்துப் பிடிச்சு நிப்பாட்டி மாற்றி அமைக்கவா முடியும்..?" மீரா தோளைக் குலுக்கினாள்..
"அதைச் சொல்லு.."
பாகீரதி விட்ட பெருமூச்சு வாகீசன் கலெக்டராக இல்லை என்பதற்காகவா.. இல்லை.. அவரைக் கணவனாக அடைந்து விட்டோமே என்பதற்காகவா என்று வாகீசனால் அளவிட முடியவில்லை..
"டேய் மகேஷ்.. சுரேஷ்.. வாங்கடா மாடிக்குப் போய் ஆல்பம் பார்க்கலாம்.."
மீரா வாகீசன் பெற்ற வால்களைக் கிளப்பிக் கொண்டு மாடிக்குப் போய் விட்டாள்.. இதற்காகவே அவளுக்குக் கள்ளிச் சொட்டைப் போல காபியை கொடுக்கலாம் என்று வாகீசனுக்குத் தோன்றி விட்டது..
"பாகீ.. மீராவுக்கு காபி குடுடி.." என்றார்..
"எனக்குத் தெரியும்.. நீங்க சொல்லித்தான் அவளுக்குக் காபி கொடுக்கனுமா..? சொல்லலைன்னா காபி குடுக்க மாட்டேனா..?" பாகீரதி நொடித்தாள்..
வாயை வைத்துக் கொண்டு சும்மா இருப்பதே சாலச் சிறந்தது என்று வாகீசன் தற்காலிகமாக கிடைத்திருந்த சுதந்திரத்தைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு டிவியின் ரிமோட்டைக் கைப்பற்றி நியூஸ் சேனலில் ஆழ்ந்தார்..
மாடி ஹாலில் ஆல்பங்களை பரத்திக் கொண்டு உட்கார்ந்த வாகீசன் பெற்ற வானரங்கள் மீராவுக்கு அவற்றை போட்டி போட்டுக் கொண்ட காண்பிக்க ஆரம்பித்தார்கள்..
"அக்கா.. இந்த போட்டோவைப் பாருங்க.. நாங்க கோவாவுக்கு டூர் போனப்ப எடுத்தது.."
"அக்கா இந்த போட்டோவைப் பாருங்க.. குற்றாலம் போனப்ப எடுத்தது.. ஃபால்ஸில குளிக்கப் போறப்ப அப்பா கால் வழுக்கி விழப் பார்த்தாரு.."
"அப்புறம்..?"
"அம்மா அவர் கையைப் பிடிச்சு இழுத்துக் காப்பாத்தினாங்க..."
சுரேஷின் பதிலில் அந்த வீட்டின் ஹீரோ வாகீசனா இல்லை பாகிரதியா என்ற நமட்டுச்சிரிப்பு வந்துது மீராவுக்கு..
நான்தான் காண்பிப்பேன்.. இல்லை நான்தான் காண்பிப்பேன் என்று அண்ணனும் தம்பியும் அடித்துக் கொண்டதில் ஒரு ஆல்பம் விரிந்து.. பறந்து வந்து வாகாக மீராவின் மடியில் அமர்ந்து கொண்டது..
"அடிச்சுக்காதீங்கடா..?"
அவர்களை அதட்டியபடியே இயல்பாகத்தான் மடியில் விழுந்த ஆல்பத்தை எடுத்தாள் மீரா.. எடுத்தவளின் பார்வை நகராமல் அப்படியே ஆல்பத்தின் அந்தப் பக்கத்திலிருந்த வாலிபனின் போட்டோவில் பதிந்து விட்டது..
தீட்சண்யமான கண்கள்.. சிரிப்பதற்கு சம்பளம் கேட்கும் கடுமையான முகம்.. அளவான, அழகான பெரிய மீசை.. தீர்க்கமான மூக்கு.. செதுக்கி வைத்ததைப் போல முக அமைப்பு..
கம்பீரமான ஆண்மை ததும்பும் அந்த வாலிபனின் போட்டோ ஏதோ ஒருவகையில் மீராவை ஈர்த்தது..
"யாருடா இது..?" என்றாள் மனம் குறுகுறுக்க..
"எங்க அத்தான்க்கா.." எட்டிப் பார்த்துவிட்டு பதில் சொன்ன மகேஷ் சுரேஷீடன் சண்டை போட போய் விட்டான்..
"அத்தான்னா.. இந்த பிரகிருதிக்குன்னு பெயரே இல்லையா..?" ஆர்வமில்லாததைப் போல கேட்டாள் மீரா.
"யது நந்தன்க்கா.." சண்டையிட்டபடியே சுரேஷ் சொன்னான்..
அன்றைய இரவில் மீராவின் கனவில் வெண்மைநிறப் புரவியில் வாளைச் சுழற்றியபடி அந்த யதுநந்தன் வந்து நின்றான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே..-4
வந்தாள் மகாலட்சுமியே..-4
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahalakshmiye-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahalakshmiye-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy