வந்தாள் மகாலட்சுமியே...-1

முத்துலட்சுமி ராகவன் எழுதிய வந்தாள் மகாலட்சுமியே... 1 "தாமரைப் பூவில் அமர்ந்தவளே..!              செந்தூர திலகம் அணிந்தவள...


முத்துலட்சுமி ராகவன் எழுதிய
வந்தாள் மகாலட்சுமியே...

1

"தாமரைப் பூவில் அமர்ந்தவளே..!
             செந்தூர திலகம் அணிந்தவளே..!
    தேவி.. செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே..!"
கண்மூடி.. கை குவித்து.. பக்திபரவசத்துடன் பாடிக் கொண்டிருந்தாள் மீரா.. ஹாலில் இருந்த சடகோபனின் காதுகளில் நுழைந்தது தேன் தமிழில் தோய்த்தெடுத்து தீந்தமிழில் வந்த பாடல்.. பேப்பரில் மூழ்கியிருந்தவரை மீராவின் லட்சுமிகானம் அசைத்துப் பார்த்தது, அவர் பேப்பரை மறந்து கண்மூடி பாடலில் லயித்து ரசிக்க ஆரம்பித்தார்..
"வணக்கம்.." என்ற குரலில் கண்விழித்தவர் எதிரே நின்றிருந்த எதிர் வீட்டுக்காரரை பார்த்ததும் பதில் வணக்கம் வைத்து உட்காரச் சொன்னார்..
"என் பெயர் வாகீசன்.. எதிர் வீட்டுக்குப் புதுசா குடி வந்திருக்கிறேன்.." வந்தவர் அறிமுகப்படுத்திக் கொள்ள..
"தெரியுமே.." என்றார் சடகோபன்..
"இன்னைக்குப் பால் காய்ச்சறோம்.."
"அதுவும் தெரியும்.."
"எப்படி..? இப்பத்தானே நான் வந்து சொல்றேன்..?"
"ஆனா பாருங்க சார்.. உங்க வீட்டுக்காரம்மா.. என் வீட்டுக்காரிகிட்ட நேற்றைக்கு சாயங்காலமே இதைச் சொல்லிட்டாங்களே.. நீங்கதான் லேட்.."
"நான் லேட்டா..?"
திகைத்துப் போனார் அந்த வாகீசன்.. முதல் நாள் மாலையில்தான் எதிர் வீட்டில் அவருடைய குடும்பம் கால் வைத்தது.. லாரியில் வந்து இறங்கிய பொருள்களை ஒழுங்கு படுத்தி.. வீட்டைத்துடைத்து ஹோட்டலில் வாங்கிய சாப்பாட்டை உண்டு விட்டு அவர்கள் தூங்க ஆரம்பித்போது இரவு மணி பதினொன்று..
'அதுக்குப் பின்னாலேயா இவர் வீட்டம்மாகிட்ட என் வீட்டுக்காரி விசயத்தைச் சொல்லியிருப்பா..?'
இல்லையென்றார் சடகோபன்..
"ஆக்சுவலா சார்.. லாரியில உங்க சாமன்கள் முன்னே வந்ததா..?"
"ஆமாம் சார்.."
"நீங்க குடும்பத்தோட காரில் பின்னால் வந்தீங்களா..?"
"இதுவும் ஆமாம்தான் சார்.."
"அப்ப வந்து காலை தரையில் வைச்சு உங்க வீட்டுக்காரம்மா இறங்கின அடுத்த வினாடியே அவங்களுக்குத் தண்ணீர் தாகம் வந்து என் வீட்டுக் காரியிடம்தான் தண்ணீர் வாங்கிக் குடித்திருக்காங்க.. அப்பத்தான் நீங்க டிரான்ஸ்பர்ல இந்த ஊருக்கு வந்திருக்கீங்கன்னும் உங்களுக்கு ரெண்டே பசங்கன்னும்.. ரெண்டுமே ரெட்டை வால்கள்ன்னும்.. அவங்களுக்கு ஸ்கூலில் இனிமேல்தான் இடம் வாங்கனும்னும் பல்வேறு விவரங்களை உங்க வீட்டுக்காரம்மா சொன்னாங்களாம்.. அதில ஒன்னுதான் இன்னைக்கு காலையிலே நீங்க பால் காய்ச்சப் போகிற விவரம்..."
தண்ணீர் குடிக்கும் நேரத்திற்குள் இத்தனை விவரங்களை ஒலிபரப்பி விட முடியுமா..? மலைத்தார் வாகீசன்.. அவருடைய மனையாட்டி பாகீரதியினால் எதுதான் முடியாமலிருந்திருக்கிறது..?
எந்த ஊருக்குப் போனாலும்.. அந்த ஊரில் கால் பதித்த மறு நிமிடமே.. எதிர்வீடு.. பக்கத்து வீடு.. என்று அனைத்து வீடுகளிலும் தோழமை பூண்டு ஐக்கியமாகி விடும் அசாத்திய திறமை பாகீரதியிடம் உண்டு.. அது அவளிடம் உள்ள சிறப்பம்சம்.. வாகீசன் அப்படியல்ல.. தேவையில்லாமல் யாரிடமும் வாயைத் திறந்து பேச மாட்டார்..
"உன் கூடவாவது பேசுவாரா இல்லையா..?"
பாகிரதியின் தோழிப் பெண்கள் ரகசியமாய் அவளிடம் கேலி பண்ணச் சிரிப்பது உண்டு..
"ரெண்டு பிள்ளைகளை பெத்திருக்கா.. பேசாமலா பெத்துப் போட்டிருப்பா.." வேண்டுமென்றே அவர்களில் பாதிப்பேர் கேள்வி கேட்டவளைத் தூண்டி விடுவார்கள்..
கேட்டவளுக்கும் தெரியும்.. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரியும்.. வரப் போகும் பதில் என்னவாக இருக்குமென்று..
அதை செவி மடுக்கும் ரகசிய உற்சாகம் அவர்களது விழிகளில் கரை புரண்டோடும்..
"ஏண்டி.. பேச்சுக்கும்.. பிள்ளை பெறுகிறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்காடி..?"
விசமத்துடன் வரும் பதிலில் அங்கே வெடிச்சிரிப்பு புறப்படும்.. இப்படிப்பட்ட குழுக்களில் ஐக்கியமாகாமல் கணவரைப் போல பேசுவதற்கு கூலி கேட்க பாகிரதி தயாராக இருப்பதில்லை..
வாகீசன் காரணமில்லாமல் யாரிடமும் பேச மாட்டார்.. அப்போது கூட சடகோபனைத் தேடி அவர் வீட்டுக்கு வந்து  எதிர்வீட்டில் தான் பால்காய்ச்சப் போகும் விவரத்தினை எதற்காக அவர் சொல்லி வைத்தார் என்றால்.. அவர் விவரம் சொல்ல வந்த சடகோபன் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதினால்தான்..
"யோவ்..! வெண்ணையை கையில் வைத்துக்கிட்டு நெய்க்கு அலைகிறவனைத் தான் நான் பார்த்திருக்கேன்.. நீ என்னடாவென்றால் நெய் கிணறையே எதிரில் வைத்துக்கிட்டு சொட்டு நெய்க்கு லோ.. லோன்னு அலைகிறயே..."
அவருடைய மகன்களின் ஸ்கூல் அட்மிசனுக்காக அவரது நண்பர் ஒருவரிடம் உதவி கேட்டபோது அவர் சொன்ன வார்த்தைகள்தான் இவை..
"நெய் கிணறா..?"
"ஆமாய்யா.. நீ குடி போகப் போகிறது எந்த வீடுன்னு நினைக்கிற..?"
"தனிகாசலத்தோட வீடுன்னு நினைக்கிறேன்.."
வாகீசனுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுத்திருந்த ஹவுஸ்ஓனரின் பெயர் தணிகாசலம்.. அதைக் குழப்பத்துடன் வாகீசன் சொன்ன போது..
"நீ சரியான டியூப் லைட்டுய்யா.." என்று திட்டித் தீர்த்தார் அந்த நண்பர்..
செல்போனின் மறுமுனையில் கேட்ட சப்தத்தில் அவர் தலையில் அடித்துக் கொண்டிருப்பாரோ என்ற சம்சயத்திற்கு ஆளானார் வாகீசன்..
'இவதான் இப்படிச் சொல்றான்னா.. கூடப் பழகுகிறவன்களும் இதையே சொல்கிறான்களே..' அவருக்கு ஆற்றாமையாக இருந்தது..
"உன் வீட்டுக்கு எதிர் வீட்டை பார்த்தியா..?"
நண்பர் சொன்ன பின்புதான் எதிர் வீட்டையே ஏறெடுத்துப் பார்த்தார் வாகீசன்.. அந்தத் தெருவில் இருந்த வீடுகளிலேயே தனித்தும்.. வெகு பிரம்மாண்டமாகவும்.. செல்வச் செழிப்புடனும் தெருவில் பாதியை அடைத்துக் கொண்டிருந்த வீட்டைப் பார்த்ததும்..
'அப்பாடி..' என்ற மலைப்புடன் பார்வையைத் தழைத்துக் கொண்டார்..
"இப்பத்தான் பார்த்தேன்ப்பா.."
"இப்போதாவது பார்த்து வைச்சியே.. அது யாரோட வீடு தெரியுமா..?"
"யார் வீடுப்பா.."
"கலெக்டர் சடகோபனோட வீடுய்யா.."
"அப்படியா..?"
வாகீசன் இதில் என்ன இருக்கிறது என்ற நினைவுடன் சுரத்தில்லாமல் அசுவராஸ்யமாக கொட்டாவியை அடக்கியபடி பதில் சொன்னதில் அந்த நண்பருக்கு கோபம் வந்து விட்டது..
"என்ன நொப்புடியா..? ஏன்ய்யா இப்படி இருக்க..? கலெக்டர் சடகோபனுக்கு இந்த ஊரில செல்வாக்கு ஜாஸ்திய்யா.. அவர் பரம்பரை கோடிஸ்வரர்.. அவர் குடும்பத்திலே மூத்த தலைமுறையினர் வியாபாரத்திலே கொழிக்க.. இவர் மட்டும் கலெக்டராகியே தீருவேன்னு அடம் பிடிச்சு பரிட்சை எழுதி கலெக்டர் ஆனாராம்.. அப்பேற்பட்டவர்.."
"அதுக்கு இப்ப என்னங்கிற..?"
"உன்னை என்னதான்ய்யா செய்கிறது..? அவர்கிட்ட நீ ஒரு வார்த்தை கேட்டா.. அவரும் ஒருவார்த்தை சொல்வாரில்ல..?"
"எதுக்கு..?"
இன்னும் விடுபட முடியாத குழப்பத்தில்தான் இருந்தார் வாகீசன்.. அவர் காதுகளில்..
           'ஒரு வார்த்தை கேட்க..
             ஒரு வருசம் காத்திருந்தேன்..'
என்ற பாடல் ஒலித்தது..
அந்த வார்த்தை கதாநாயகி எதிர்பார்த்த காதல் வார்த்தை.. இந்த வார்த்தை என்ன வார்த்தை..?
"உன்னோட நிஜமாவே முடியலைய்யா.. எப்படித்தான் உன் வீட்டுக்காரம்மா பிளட்பிரசர் எகிறாம உன்கூட குடும்பம் நடத்தறாங்களோ.."
'அதைப்பத்தி இவனுக்கென்ன கவலை..'
வாகீசனுக்கு கோபம் பொத்துக் கொண்டுதான் வந்தது.. ஆனாலும் அவர் அதை வெளிவிடவில்லை..
அவருக்கிருப்பதே அத்தி பூத்தாற்போல சில நண்பர்கள்தான்.. அதிலும் பேசிக் கொண்டிருந்த நண்பர் கொஞ்சம் நெருக்கமானவர்.. மற்றவர்களைப் போல வாகீசனின் உம்மணாம் மூஞ்சியைப் பொருட்படுத்தாமல் மனம் விட்டுப் பேசிப் பழகக் கூடியவர்..
இருக்கிற ஒன்றிரண்டு நட்புக்களையும் முறித்துக் கொள்ள வேண்டுமா என்ற ஞானோதயத்துடன் வாகீசன் பேசாமல் இருந்துவிட்டார்..
"நல்லாக் கேட்டுக்க வாகீசா.. கலெக்டர் மனசு வைத்து ஒரு வார்த்தை சொன்னா நீ கேட்கிற ஸ்கூலில உன் பிள்ளைகளுக்கு சீட் கிடைத்து விடும்.. அதிலும் உன் பெரிய மகன் இந்த வருசம் டென்த் படிக்கப் போகிறான்னு சொல்கிற..."
அப்போதுதான் அந்த ஒரு வார்த்தை எந்த வார்த்தை என்பது வாகீசனுக்கு பிடிபட்டது..
'இதுதான் அந்த ஒரு வார்த்தையா..?'
அவர் முக்தியடைந்து விட்டதைப் போல மகிழ்ந்து போனாலும்.. எப்படி அறிமுகமில்லாத எதிர் வீட்டு கலெக்டரிடம் ஒரு வார்த்தை பேசுவது என்று அடுத்து மலைத்தார்..
"பால் காய்ச்சப் போகிறேன்னு சொல்லிக்கிட்டுப் போய்யா.."
நண்பர்தான் திட்டம் வகுத்துக் கொடுத்தார்.. அதை செயல் படுத்த வந்தால் பாகீரதி அவரை முந்திக் கொண்டாளா..?
"ஜானகி.. காபி கொண்டா.."
சடகோபன் குரல் கொடுத்துவிட்டு வாகீசனைப் பார்த்தார்.. உடனே வாகீசன் சோபாவின் நுனிக்கு வந்து விட்டார்..
"நல்லா உட்காருங்க.." சடகோபன் சொல்லிப் பார்த்தார்..
"இருக்கட்டும் சார்.." வாகீசனால் நிமிர்ந்து உட்கார முடியவில்லை..
அதற்குள் காபிக் கோப்பைகளுடன் ஜானகி வந்து விட்டாள்..
"ஜானு.. சார் யாரு தெரியுமா..?" சடகோபன் அறிமுகப் படுத்தி வைக்க வாய் திறந்த போதே..
"தெரியுமே.. எதிர் வீட்டு பாகீரதியோட வீட்டுக்காரர்.." என்றாள் ஜானகி..
"நான் சொல்லலை..?" சடகோபன் சிரித்தார்..
அது எப்படித்தான் வாகீசனாலேயே சகஜமாக பேசிப் பழக முடியாத உயரத்தில் இருப்பவர்களிடம் கூட பாகீரதி இயல்பாக பேசிப் பழகி விடுகிறாளோ என்ற பொறாமை வாகீசனின் இதயத்தில் வந்தது..
"பிள்ளைகளுக்கு ஸ்கூலில் இடம் கிடைக்கனு மேன்னு பாகிரதி வருத்தப் பட்டா.. நான் இவரிடம் சொல்லியிருக்கேன்.. கவலையே படாதீங்க.. உங்க பிள்ளைகள் நாளைக்கே ஸ்கூலில் ஜாயின் பண்ணிருவாங்க.. அதுக்கு நான் கேரண்டி.." ஜானகி அபயம் கொடுத்தாள்..
"எப்படி ஆர்டர் போடுகிறா பாருங்க.. வீட்டுக்காரியோட ரெக்கமென்டேசன்.. மீற முடியாது.. நீங்க இன்னைக்கே போய் ஸ்கூல் பிரின்ஸிபாலைப் பாருங்க.." என்றார் சடகோபன்..
வந்த வேலை இவ்வளவு எளிதாக முடியக்கூடும் என்று எதிர் பார்க்கவில்லையாதலால் வாகீசனுக்கு மயக்கம் வருவதைப் போல இருந்தது..
'என் பொண்டாட்டிக்கு இவ்வளவு பவரா..?'
"பின்னே..?" என்றாள் பவர் ஸ்டாரான பாகீரதி..
"உங்களைப் போல ஒரு உம்மணாம் மூஞ்சிக்கு வாழ்க்கைப்பட்டு ஒன்றுக்கு இரண்டாய் பிள்ளைகளைப் பெற்றுப் போட்டு வைத்திருக்கிறேனே.. நாலு மக்க மனுசங்க துண கிடைச்சாத்தானே அதுகளையும் வளர்த்து ஆளாக்க முடியும்..?"
"என்னவோ போடி.. வரவர உன் பவரைப் பார்த்து எனக்கே மலைப்பா இருக்கு.."
பவர் ஸ்டாருக்கு கணவரான மலைப்பு வாகீசனுக்கு..
வீட்டுக்குப் பால் காய்ச்சிய போது சடகோபன் மனைவியுடன் வந்து ஒரு தம்ளர் பாலருந்தி வாகீசனுக்கு மீண்டும் மயக்கத்தை வரவழைத்தார்..
"காலையிலே உங்க வீட்டுக்கு வந்தப்ப பாடிக்கிட்டு இருந்தது யாருங்க..?" அப்போதுதான் ஞாபகம் வந்தவராக கேட்டார் வாகீசன்..
"யாரா இருக்கும்ன்னு நினைக்கறிங்க..?"
"கானக்குயிலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.."
வாகீசனுக்குப் பாவம் ஐஸ் வைக்கவெல்லாம் தெரியாது.. அது போன்ற ஆயகலைகளை அவர் அறிந்திராதவர்.. அப்பாவி.. முசுடு..
அவர் காதில் விழுந்த இனிமையான கானத்தில் கவரப்பட்டவராய் இயல்பாக அவர் சொன்ன சொல்லில் மகிழ்ந்து போனார் சடகோபன்..
"அது என் பொண்ணு மீரா.."
சடகோபன் போனதும் வாகீசனுக்கு அருகில் வந்த பாகீரதி..
"பரவாயில்லையே.. நீங்ககூட நல்லாப் பேசக் கத்துக்கிட்டிங்களே.. இப்படித்தான் இருக்கனும்.." என்று கணவருக்கு கை கொடுத்தாள்..
'நான் எப்போதும் போலதானடி இருக்கேன்..?'
ம்ஹீம்.. உண்மையைச் சொன்னால்கூட அதை புகழ்ச்சியாக இந்த உலகம் எடுத்துக் கொள்ளும் போது அப்பாவி வாகீசனால் என்ன பேச முடியும்..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே...-1
வந்தாள் மகாலட்சுமியே...-1
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0o/PNSzgvBmZUcv6AKweOsf-8eK9nyfQB5kgCLcBGAsYHQ/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0o/PNSzgvBmZUcv6AKweOsf-8eK9nyfQB5kgCLcBGAsYHQ/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahalakshmiye-1.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahalakshmiye-1.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy