வந்தாள் மகாலட்சுமியே..-6

6 கண்முன் நடப்பது போன்ற அந்தக் கனவில் அன்று மீரா திடுக்கிட்டு விழித்தாள்.. அறையில் படர்ந்திருந்த மெலிதான வெளிச்சத்தின் நடுவே வெண்ணிற ...


6

கண்முன் நடப்பது போன்ற அந்தக் கனவில் அன்று மீரா திடுக்கிட்டு விழித்தாள்.. அறையில் படர்ந்திருந்த மெலிதான வெளிச்சத்தின் நடுவே வெண்ணிற புரவியைத் தேடினாள்.. அவளைக் கவர்ந்து சென்ற வாலிபனின் கரம் அவளின் இடையைப் பற்றி அழுத்தித் தூக்குவதைப் போன்ற இன்பமான வலியை உணர்ந்தாள்.
வெகுநாள்கள் வரை அந்தக் கனவு அவளை அலைக்கழித்தது..
வாகீசனின் வீட்டு ஆல்பத்தில் பார்த்த வசீகரமான இளைஞனின் உருவத்தை அவள் ரசித்ததென்னவோ உண்மைதான்..
அதற்காகவா அப்படியொரு கனவு அவளுக்கு வந்தது..? அந்த அளவுக்கு தீவிரமாக அவள் அந்த யது நந்தனை ரசிக்கவில்லையே...
'வாவ்.. வாட் எ ஹேண்ட்சம் மேன்..'
இதைப் போன்ற ஒரு எண்ணத்திற்காகவா.. அந்த போட்டோவில் இருந்த வாலிபன் அவள் கனவில் வெள்ளைக் குதிரையில் வந்து அவளைத் தூக்கிக் கொண்டு போனான்..?
வாகீசனின் வீட்டு போட்டோ ஆல்பத்தில் பார்த்த யதுநந்தனின் உருவத்தை சற்று நேரத்திற்குள்ளாகவே மீரா மறந்து விட்டாள்..
ஆனால்.. அவள் கனவில் வந்த புரவி வீரனான யது நந்தனின் முகத்தை அவள் மறக்கவே இல்லை.. அவளால் மறக்கவும் முடியவில்லை.. நாளாக.. நாளாக.. அவள் மனதின் ஆழத்தில் அவன் நினைவும் முகமும் அமிழ்ந்து விட்டன.. அதனால்தான் அவன் நிஜத்தில் எதிரில் வந்து நின்றபோது மீரா திகைத்து விட்டாள்.. அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம் அவளை அலைக்கழிக்க ஆரம்பித்து விட்டது..
மீராவின் திகைத்த பார்வையில் யதுநந்தனின் புருவங்கள் முடிச்சிட்டன... அதை உணர்ந்தவளாக அவசரமாக பாகீரதியிடம் விடை பெற்றாள் மீரா..
"ஆண்ட்டி.. நான் கிளம்பறேன்.."
"கிளம்பும்மா.."
பாகீரதிக்குப் பதில் வாகீசன் விடைகொடுத்து விட்டு மனைவியின் முறைப்புக்கு ஆளானார்..
'வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்.. இப்ப இவ காலை டிபனை கண்ணில காட்டுவாளா.. மாட்டாளான்னே தெரியலையே..'
அப்போதுதான் காலை உணவுக்கான உத்திர வாதத்தை வாங்கியிருந்தவர் அதைக் கட்டிக் காப்பாற்றியிருக்க வேண்டாமா..?
'ஒரு வாய் சாப்பாட்டுக்காக எப்படியெல்லாம் அல்லாட வேண்டியிருக்கிறது..'
"இரும்மா மீரா.. இவன் யாரு தெரியுமா..?" பாகீரதியின் அறிமுகத்தில்..
'புரவி வீரன்..' என்ற வார்த்தை மீராவின் வாய் வரை வந்து விட்டது..
'என்ன இது..' என்று அரண்டு போனவளாக அந்த வார்த்தையை மென்று விழுங்கினாள்..
"உனக்கெங்கே தெரிந்திருக்கப் போகுது..? இவன் தான் யதுநந்தன்.. என் ஒரே அண்ணனின் ஒரே மகன்.. என் அண்ணன் எனக்கு அண்ணனா மட்டுமில்ல...  தகப்பன் போல என்னை வளர்த்தவர்.."
இதைச் சொல்லும் போது பாகீரதியின் குரல் எதற்காக கரகரக்க வேண்டும்.. அவள் கண்களில் எதற்காக கண்ணீர் அரும்ப வேண்டும் என்று மீராவுக்கு புரியவே இல்லை..
"அத்தை.."
யதுநந்தனின் பாசமான அதட்டலில் எதையோ வலியுறுத்தும் உள்பொருள் இருந்ததைப் போல மீராவுக்குத் தோன்றியது.. அது என்னவாக இருக்கக் கூடும் என்று அவளால் யூகிக்க முடியவில்லை..
"நான் இப்படித்தான்.. எதையோ சொல்ல வந்துட்டு.. வேற எதையோ சொல்லுவேன்.. இவன் சிவில் என்ஜினியருக்கு படிச்சுட்டு.. மும்பையிலே ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில வேலை பார்க்கிறான்.."
பாகீரதி ஒரு வழியாக அறிமுகப் படலத்தை முடித்து வைக்க.. யது நந்தனுக்கு 'ஹலோ..' சொல்ல முயன்றாள் மீரா.. தொண்டையில் சிக்கிக் கொண்ட ஹலோ வெளியே வரவில்லை.. லேசாக தலையை மட்டும் அசைத்து வைத்தவளுக்கு அந்த மழை நேரத்திலும் வியர்த்துத் தொலைத்தது..
அவளின் பதட்டத்தை அவன் வேடிக்கை பார்ப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது.. அதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டுமானால் அவனைப் பார்த்துத் தொலைக்க வேண்டும்..
அப்போதிருந்த மனநிலையில் அவளால் அது முடியாது போல இருந்தது.. அவன் முகத்தை நேருக்கு நேராக பார்க்க அவளால் முடியவில்லை..
"இவங்களுக்கு என்னை இண்ட்ரொடுயூஸ் பண்ணிட்டிங்க... இவங்க யாருன்னு எனக்கு இண்ட்ரொடுயூஸ் பண்ணலையே.."
இயல்பாக கேட்பதைப் போலக் கேட்டபடி அவளை பார்வையில் துளைத்தான் யதுநந்தன்.. அவனது துளைக்கும் பார்வையை உணர்ந்தவளுக்கு உடல் நடுங்கியது.. வீட்டைப் பார்த்து ஓடிவிட வேண்டும் போல இருந்தது..
'ஓடினா என்ன செய்வான்..? குதிரையிலே ஏறி பின்னால் துரத்திக்கிட்டே வருவானோ..?'
அவள் மனம் கனவை நினைத்துப் பார்த்துக் கேட்டது..
"இது மீராடா.." வாஞ்சையுடன் சொன்னாள் பாகீரதி..
"ஓ.. அதனால்தான் நான் வருகிறப்ப இவங்க காற்றினிலே வரும் கீதம்ன்னு பாட்டுப் பாடிக்கிட்டு இருந்தாங்களா..?"
யதுநந்தன் விசமத்துடன் கேட்டான்.. அவன் கண்களில் தெரிந்த கேலியில் உதட்டைக் கடித்தாள் மீரா.. அந்த நுணுக்கமான வார்த்தை விளையாட்டை உணர முடியாத வாகீசன்..
"காற்றினிலே வரும் கீதமா..? இல்லையே.. இதுகள்ளாம் சேர்ந்து.. குக்கூக்கூன்னுல்ல கூவிக்கிட்டு இருந்துச்சுக..?" என்று கேட்டு வைத்தார்..
"இவர் இருக்காரே.." அலுத்துக் கொண்டாள் பாகீரதி..
"எப்படியோ முக்கித்தக்கி ஆபிசர் போஸ்டில உக்காந்துட்டார்டா யது.. அது எப்படின்னுதான் எனக்கு இன்னைக்கு வரைக்கும் புரிய மாட்டேங்குது.. இவரை இண்டர்வியூ பண்ணினவங்க இவரை விட புத்தியில குறைஞ்சவங்களா இருந்திருப்பாங்க போல..."
"ஏண்டி..? இப்ப நான் என்ன சொல்லிட்டேன்..? உள்ளதைத்தானே சொன்னேன்..?"
"உள்ளதைத்தான் சொன்னீங்க.. யாரு இல்லேன்னது.."
அவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்க.. மீரா.. யதுநந்தனின் பார்வையில் சங்கடமடைந்தாள்..
"ஓகே மகேஷ், சுரேஷ்.. நாளைக்குப் பார்க்கலாம்.. பை.. ஆண்ட்டி பை.."
அவள் நடக்க முனைந்த போது..
"எனக்கு பை சொல்ல மாட்டிங்களா..?" என்று கேட்டான் யதுநந்தன்..
மீராவுக்குள் ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு வந்தது.. நூதனமான அந்த உணர்வு அவளை ஆட்டி வைத்தது.. அதுபோன்ற ஓர் உணர்வை அதற்கு முன்னால் அவள் அனுபவித்ததில்லை.. அவனுக்கு 'பை' சொல்ல முடியாமலும்.. பதில் சொல்ல முடியாமலும் அவள் திணறிப் போனாள்..
"எனக்குக் கூடத்தான் 'பை' சொல்லலை.. நான் ஏன்னு கேட்டேனா..? விடுப்பா.. அதுக்கு வீட்டுக்குப் போக நேரமாகுது.. விடிஞ்சதும் வந்தது.. இவ்வளவு நேரமும் சின்னப்பிள்ளைகளோட சின்னப் பிள்ளையா விளையாடிக்கிட்டு இருந்துச்சு.. அது வீட்டிலேயும் தேடுவாங்கள்ல.. நீ போம்மா.."
வாகீசன் குறுக்கிட்டதில் விடுதலை உணர்வு கிடைக்கப் பெற்றவளாக வீட்டை நோக்கிப் பறந்தாள் மீரா..
அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் யதுநந்தன்..
அவள் எதிர் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் அவனை திரும்பிப் பார்த்ததில் அவன் கண்களில் மின்னல் வந்தது..
பிரம்மாண்டமான எதிர் வீடெனப்படும் மாளிகையைப் பார்த்தவனின் முகம் மாறியது..
"அந்தப் பெண்.. எதிர் வீட்டுப் பெண்ணா அத்தை..?" பாகீரதியிடம் விசாரித்தான்..
"ஆமாம்பா.. ரொம்ப பெரிய இடத்துப் பொண்ணு.. அவங்கப்பா பரம்பரை கோடிஸ்வரர்.. கலெக்டரா வேற இருக்கார்.." பாகீரதிக்குப் பதில் வாகீசன் பேசினார்..
"இந்த டீடெயிலை எல்லாம் அவன் இப்பக் கேட்டானா..?" காட்டமாக கேட்டாள் பாகீரதி..
"கேட்டாத்தான் சொல்லனுமா..? சும்மா சொல்லக் கூடாதா..?" வாகீசன் வெள்ளைக் கொடியை பறக்க விட்டார்..
"இவருக்கு எந்த நேரம் எதைப் பேசனும்னு தெரியாது.. நீ வாடா.. வீட்டுக்குள்ள போகலாம்.."
பாகீரதி கணவரை முறைத்தபடி யதுநந்தனின் பெட்டியைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் போனாள்.. மகேஷம்.. சுரேஷீம் யதுநந்தனின் கைகளைப் பிடித்தபடி மும்பையைப் பற்றி எதையோ பேசியபடி பாகீரதியின் பின்னால் போய் விட்டார்கள்.. வாகீசன் மட்டும் தனித்து நின்றார்..
'எப்பவும் இப்படித்தான் செய்து வைப்பா..'
அவரை தனிமரமாக்கி விட்டு தான் மட்டும் தோப்பாகிவிடும் பாகீரதியின் வெற்றிகரமான செயல் பாடுகளில் மனம் புண்பட்டுப் போனவராக தனக்குள் பேசியபடி வாகீசனும் வீட்டுக்குள் போனார்..
மழை கொட்ட ஆரம்பித்து விட்டதால் அவருக்கு அதைவிட்டால் வேறு வழியிருக்கவில்லை..
ஹாலில் அவளுடைய குடும்பத்தார் யதுநந்தனைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள்.. அவன் பெட்டியைத் திறந்து அவனுடைய அத்தைக்கு வாங்கி வந்திருந்த புடவைப் பெட்டியையும் ஹேண்ட்பேகையும் கொடுத்தான்.. அதை விரித்துப் பார்த்து அதன் அழகை வெகுவாக புகழ்ந்து பாராட்டினாள் பாகீரதி..
'நானும்தான் வாங்கி வந்து கொடுக்கிறேன்.. ஒரு சேலையையாவது நல்லாயிருக்குன்னு இவ சொல்லி யிருப்பாளா..? அதைச் சொல்லலைன்னாக் கூட பரவாயில்லை.. நொட்டை சொல்லாமல் இருந்திருப் பாளா..?'
வெளியூருக்கு டிரெயினிங் போன போதெல்லாம் அவர் வாங்கிக் கொண்டு வந்த புடவைகளுக்கு கிடைத்த வரவேற்பை நினைத்து வாகீசன் மனம் வெதும்பினார்..
"இது உங்களுக்குடா.."
யதுநந்தன் சிறுவர்களுக்கு உடைகளுடன் புதிதாக சிரிக்கெட் பேட்களையும் வாங்கி வந்திருந்தான்.. அதில் அவர்கள் குதூகலித்ததில்..
'இந்த ஐடியாவெல்லாம் எனக்குத் தோணாம போச்சே..' என்று வெந்து போனார் வாகீசன்..
"அத்தான்னா.. அத்தான்தான்.." பொடியன்கள் சர்டிபிகேட் கொடுத்தார்கள்..
'ஒருநாளாவது.. அப்பான்னா.. அப்பாதான்னு இதுக சொல்லியிருக்கும்களா..?' அவருக்கு மனம் வெறுத்து விட்டது..
இப்படிப்பட்ட பெண்டு பிள்ளைகளோடு இருப்பதை விட கூறாமல் சன்யாசம் வாங்கிக் கொண்டு விடுவது சாலச்சிறந்தது என்ற வழக்கமான முடிவுக்கு அவர் வந்தார்..
"யது.. உனக்கு புரோட்டா பிடிக்கும்தானே..? காலை டிபனுக்கு இடியாப்பமும் தேங்காய் பாலும், புரோட்டாவும் குருமாவும்ன்னு இதுக மெனு கொடுத்திருக்குதுக.."
என்ற பாகீரதியின் கேள்வியில் வழக்கம் போல வாகீசன் சன்யாசியாகும் முடிவை மாற்றிக் கொண்டு குடும்பத் தலைவரனார்..
"மகேஷ்.. அத்தானை மாடி ரூமுக்கு கூப்பிட்டுக்கிட்டு போ.."
'இல்லேன்னா இவனுக்கு வழி தெரியாதா..?'
"சுரேஷ்.. அத்தானோட ரூமில பேஸ்ட், பிரஷ், சோப்புன்னு வேணும்கிற புது திங்ஸை ஸ்டோர் ரூமில இருந்து எடுத்துக்கிட்டுப் போய் வை.."
'இதையெல்லாம் இவன் கொண்டு வந்திருக்க மாட்டானா..?'
மனதிற்குள் நினைத்துக் கொண்டார் வாகீசன்.. இது போன்ற சந்தேகங்களையெல்லாம் அவர் வாய் விட்டுக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொள்ள முடியாது.. பாகீரதி அவரை உண்டு இல்லையென்று ஆக்கி விடுவாள்.. அவளுடைய அண்ணன் மகனென்பதால்தான் அவர் இப்படியாகப்பட்ட சந்தேகங்களை கேட்கிறார்.. இதுவே அவருடைய தம்பியின் பிள்ளைகள் என்றால் இப்படியாகப் பட்ட சந்தேகங்கள் அவர் மனதில் எழுந்திருக்குமா என்ற கேள்வியை எழுப்பி.. அந்த வீட்டில் அவள் யார்..? அவளுக்கென்று என்ன உரிமை இருக்கிறது என்று போராட்டத்தில் இறங்கி விடுவாள்..
'எதுக்கு வம்பு...?'
இப்படி வம்புகளுக்கு அஞ்சியே வாழ்கின்ற வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று அவருக்கு சலிப்பாக இருந்தது.. வீட்டுக்கு வெளியே வரும் வம்புகளுக்கு அஞ்சலாம்.. வீட்டுக்குள் வரும் வம்புகளுக்கு அஞ்சி வாழ்வதென்றால் எப்படி..?
பாகீரதியிடம் இதைச் சொன்னால் வம்பு வருதைப் போல ஏன் பேசிவைக்க வேண்டும் என்று கேட்பாள்..
'அதுக்காக ஒரு மனுசன் பேசாமடந்தையாக ஆகிடனுமா..?'
யாருமற்ற ஹாலில் உட்கார்ந்து டிவியை உயிர்ப்பித்து நியூஸ் சேனலில் ஆழ்ந்தார் வாகீசன்.. மகன்களின் குறுக்கீடு இல்லாததில் அதிசயத்தக்க விதமாக அவர் மனம் ஏங்கியது..
'மாமாமகனைக் கண்டதும் பெத்த தகப்பனை அம்போன்னு விட்டுட்டு அவன் பின்னாலே ஓடிட்டான்களே..'
யதுநந்தன் வரும் வரையிலும் அப்படித்தான் இருந்தது என்பதை அவர் மிக வசதியாக மறந்து விட்டார்.. என்றுமே அவர் பெற்ற பிள்ளைகள் அவர் பக்கத்தில் உட்கார்ந்து உரையாட மாட்டார்கள்.. அந்த வேலைகளை யெல்லாம் அவர்களைப் பெற்ற அம்மாவிடம்தான் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.. பள்ளியில் நடந்த நிகழ்வுகள்.. அவர்களின் நண்பர் குழாமுக்குள் நடக்கும் சண்டை, சச்சரவுகள் என்று பாகீரதியிடம் சொல்வதற்கு ஆயிரம் விவரங்களை வைத்திருப்பவர்களுக்கு அவரிடம் சொல்வதற்கு எந்த விவரமுமே இருக்காது..
"என்னடா மகேஷ்.. நான் வர்றப்ப உன் அம்மாகிட்ட ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தியே.." மனது தாங்காமல் வாகீசனாக வலியப் போய் விசாரிப்பார்..
"நத்திங்ப்பா.." ஒற்றை வார்த்தையில் பதில் வரும்..
பாகீரதியிடம் மெனி திங்காக இருப்பது வாகீசனைக் கண்டால் நத்திங்காக மாறுவது எப்படியென்று விந்தையை இன்றுவரை வாகீசனால் கண்டுணர முடியவில்லை..
மகேஷாவது அந்த ஒற்றை வார்த்தையைச் சொல்வான்.. சுரேஷோ அவர் கேள்விக்கே பதில் சொல்லாமல்...
"டென் ஸ்போர்ட்ஸைப் போடுங்கப்பா.." என்பான்..
'சின்னதுக்கு இருக்கிற தெனாவெட்டைப் பாரேன்..' வாகீசனுக்குத்தான் ரத்த அழுத்தம் எகிறும்..
பாகீரதியிடம் ஒட்டிக் கொள்ளும் வாண்டுகள் அவளுக்கு அடுத்தபடியாக அதிகத் தோழமையுடன் ஒட்டிக் கொண்டது மீராவிடம் தான்.. பள்ளிக்குச் சென்று வரும் நேரம் தவிர.. மற்ற நேரங்களில் எல்லாம் மீராவுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.. அப்போதெல்லாம் வராத தனிமையுணர்வு.. அவர் பெற்ற பிள்ளைகள் யதுநந்தனிடம் ஒட்டிக் கொண்டபோது அவருக்கு வந்ததற்கு காரணம் இருக்கிறது..
அது.. வாகீசனுக்கு யதுநந்தனின் தந்தையான வரதராஜனைப் பிடிக்காது.. என்பது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே..-6
வந்தாள் மகாலட்சுமியே..-6
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahaalakshmiye-6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahaalakshmiye-6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy