ராதையின் நெஞ்சமே -8

8 குனிந்த தலை நிமிராமல் குறிப்பேடில் விழி பதித்து அமர்ந்திருந்த அனுராதாவை ஊன்றிப் பார்த்தான் முரளிதரன்.. அப்போது மட்டும்தான் என்றில்லை...

8

குனிந்த தலை நிமிராமல் குறிப்பேடில் விழி பதித்து அமர்ந்திருந்த அனுராதாவை ஊன்றிப் பார்த்தான் முரளிதரன்.. அப்போது மட்டும்தான் என்றில்லை.. எப்போதுமே அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க மாட்டாள்.. பார்வையைத் தழைத்தபடியே பதில் சொல்லி விட்டு குறிப்பெடுக்க ஆரம்பித்து விடுவாள்..
'ஏனாம்..? என் முகத்தைப் பார்க்க மாட்டாளா..?' அவனுக்குச் சினம் வந்தது..
"என்னைப் பார்த்தா பூச்சாண்டியைப் பாக்கிறதைப் போல இருக்கா..?" கண்டனக் குரலில் கேட்டான்..
நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் வந்து போன மின்னலில் அப்படி இல்லையென்ற அறிகுறி தெரிந்ததில் அவனது சினம் கொஞ்சமாக இறங்கியது.. லேசாக முகம் கனிந்தான்..
அனுராதா சீட்டின் முனையில் அமர்ந்திருந்தாள்.. அவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.. அது ஆபிஸ்.. அவனோ எம்.டி. அவள் அவனுடைய செக்ரட்டரி.. வேலையைக் கவனிக்க அவன் அறைக்குள் வந்திருக்கிறாள்.. இதில் எழுந்து ஓடப் போவதைப் போல உட்கார வேண்டிய அவசியம் என்ன வந்தது..?
"இது தரன் குருப் ஆஃப் கம்பெனிஸின் ஹெட் ஆபிஸ் தானே..?" அமர்த்தலாக வினவினான்..
'ஏன் இப்படிக் கேட்கிறான்..?' அவள் புரியாதவளாக விழியுயர்த்தி அவனைப் பார்த்தாள்..
குடைபோல கவிழ்ந்த அவளது இமைகளின் வடிவம் பட்டாம்பூச்சியைப் போல படபடத்ததில் அவனது மனதில் மென்மை குடி கொண்டது... அவனது அனைத்து டென்சனும் அவளின் அந்த ஒற்றைப் பார்வையில் இற்று விழுவதை அவன் உணர்ந்தான்..
அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் அவன் மனதில் விரவும் மென்மையின் தன்மையினை அவள் உணர்வாளா என்ற ஆதங்கம் அவன் நெஞ்சில் எழுந்தது.. அவள்தான் அவனைப் பார்ப்பதைக் கூடத் தவிர்க்கிறாளே..
"என்னவோ ரன்னிங் ரேஸில கலந்துக்க வந்திருக்கிறதைப் போல ஓடத் தயாரா உட்கார்ந்திருக் கறிங்களே.. அதைத்தான் சொன்னேன்.."
அவள் நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.. அவன் கேள்விக்கு பதில் தரவில்லை.. இவ்வளவுதானே.. வேலை முடிந்து விட்டது.. நீ சொன்னபடி நகர்ந்து உட்கார்ந்து விட்டேன்.. நீ சொல்ல வேண்டியதைச் சொல் என்ற ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டவளின் செய்கையில் அவனுக்கு புருவங்களின் மத்தியில் சுளிப்பு வந்தது..
'இவ என்னதான் நினைத்துக்கிட்டு இருக்கா..?'
அதைத்தான் அவனால் கண்டு பிடிக்க முடிய வில்லையே.. அவனும் தான் அவளைப் பார்த்த முதல் தினத்திலிருந்து அவள் மனதைப் படிக்க முயன்று கொண்டிருக்கிறான்.. முடியவில்லையே...
தலை நிமிராத அனுராதா.. அவள் மனதை இறுக்கி மூடித் தாழ்போட்டு வைத்திருந்தாளே..
"ராதா.."
அவன் அப்படித்தான் அவளை அழைத்தான்.. முதல் நாளில் அவன் அப்படி அழைத்த போது..
"என் பெயர் அனுராதா சார்.." என்று பிழை திருத்தம் செய்தாள் அவள்..
"எனக்கு இப்படிக் கூப்பிடத்தான் பிடிச்சிருக்கு.." துளைக்கும் பார்வையுடன் அவன் சொன்னதும் அவள் முகம் மாறிவிட்டது.. அதை ஆட்சேபிப்தைப் போன்ற லேசான முகச் சுளிப்புடன் தலையைக் குனிந்து கொண்டவள்தான்.. அதன் பின்னால் அவன் முகம் பார்த்து.. அவள் பேசியதே இல்லை..
"சார்.." அவள் குறிப்பெடுக்கத் தயாரானாள்..
"கர்ணனுக்கு கவச குண்டலம் போல உங்களுக்கு இந்தப் பேனாவும் நோட்டுமா..? கொஞ்சம் அதை அந்தப் பக்கமா வைச்சுட்டு நான் சொல்கிறதைக் காது கொடுத்துக் கேட்கறிங்களா..?"
"சார்..?" அவள் பேனாவையும் குறிப்பேடையும் வைக்கவில்லை..
"அதை வையுங்கன்னு சொன்னேன்.."
"இருக்கட்டும் சார்.. இது ஒன்னும் அத்தனை கனமாயில்லை.. அதோட நான் லேடி கர்ணனும் இல்லை.. தனக்கு மிஞ்சித்தான் தான.. தர்மம்ன்னு நினைக்கிறவ நான்.. எனக்கு மிஞ்சி எதுவும் இல்லையே.."
முதல் முறையாக நீளமான வாக்கியங்களுடன் அவள் பேசியதில் அவனது புருவங்கள் உயர்ந்தன..
"அட..! உங்களுக்கு இத்தனை நீளமா பேசக்கூடத் தெரியுமா..? வாய் பேசாதவங்கன்னுல்ல நினைச்சிருந்தேன்..?"
"இது ஆபிஸ் சார்.. பட்டிமன்ற மேடையில்லை.. அங்கேதான் பேசனும்.. இங்கே வேலையை மட்டும் பார்த்தாப் போதும்.."
"ஓ..! நீங்க சின்சியர் சிகாமணிங்கறிங்க.." அவன் கீழுதுட்டைப் பிதுக்கி புருவங்களை உயர்த்தி வியப்படைந்ததைப் போல பாவனை செய்தான்..
'இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்கிறான்..'
வேலை செய்ய முடியாத எரிச்சல் அவளுக்கு வந்தது.. முரளிதரனின் ஆர்வப் பார்வைகளை அவள் அறியாமல் இல்லை.. அதனால்தான் அவனிடம் அவள் வேலையைத்தாண்டி ஒற்றைச் சொல்லைக் கூட உதிர்ப்பதில்லை.. கயிற்றின் மேல் நடப்பதைப் போல வெகு கவனமாக நடந்தாள்..
இருந்தும் இது போன்ற சில தருணங்கள் வந்து அவளது பொறுமையைச் சோதித்தன.. போடா நீயுமாச்சு.. உன் வேலையுமாச்சு என்று எழுந்து போய் விடலாமா என்று கூட அவள் யோசித்தாள்.. அஜித்தின் சி.ஏ கனவு மனதில் வர.. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தாள்..
"ஆக்சுவலா இப்படி இருக்கறதுல நீங்க சந்தோசம் தான் சார் படனும்.. சின்சியரான வொர்க்கர் கிடைக்கனும்னு தான எல்லா எம்.டிக்களும் நினைப்பாங்க..?" குத்தலாகச் சொன்னாள் அனுராதா..
"இந்த எம்.டி சந்தோசப்பட மாட்டான்.. அதனால கொஞ்ச நேரத்துக்கு உன் கவச குண்டலத்தை மற.."
ஆணையிடுவதைப் போல அவன் சொன்னதில்.. 'அது என்ன தேவைக்கு' என்று அவளுக்கு கோபம்.. கோபமாக வந்தது..
அவன் சம்பளம் கொடுக்கும் முதலாளி என்பதற்காக அவன் பேசும் பேச்சுக்களைக் கட்டாயம் அவள் செவி மடுத்துத்தான் ஆக வேண்டுமா..?
முகத்தை ஒரு முழ நீளத்திற்கு தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை என்ன செய்தால் தேவலாம் என்ற கோபம் அவனுக்குள் கிளர்ந்தது..
அவன் என்ன பேச முனைகிறான்..? அவள் என்ன செய்து வைக்கிறார்..?
அன்றுதான் அவளிடம் காதல் சொல்ல நினைத்-திருந்தவனின் தலை காய்ந்து போனது.. இப்படிப்பட்ட சூழலில் எந்த மடையனாவது காதல் சொல்லியிருப்பானா என்று யோசித்துப் பார்த்தான் முரளிதரன். இல்லை யென்றுதான் அவனுக்குத் தோன்றியது..
இதமான பொன் மாலைப் பொழுதில்.. பூங்காவிலோ.. இல்லை.. யாருமற்ற கடலோரத்திலோ.. சில்லென்று வீசும் மாலை நேரக் காற்று உடலைத் தழுவ.. காதலியின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து அவள் விரல் பற்றி முத்தமிட்டு.. காதலின் அடையாளமான சிகப்பு ரோஜாவை எடுத்து நீட்டி..
'அன்பே..! நான் உன்னைக் காதலிக்கிறேன்..' என்று சொல்லியிருப்பான்..
இங்கேதான் அதற்கெல்லாம் வழியில்லையே.. வேலை செய்ய வந்தாலே அவன் முகம் பார்த்துப் பேச மாட்டாள்.. இந்த லட்சணத்தில் 'என்னோடு கடற்கரைக்கு வருகிறாயா..' என்று முரளிதரன் கேட்டு விட்டால் அனுராதா.. 'ஆஹா.. அதற்கென்ன..' என்று வந்து விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பாளா..? அவளைப் பற்றி அவனுக்குத் தெரியாதா..?
'வேற வினையே வேண்டாம்..'
நினைவே பதட்டம் தர தோளைக் குலுக்கிக் கொண்டான் முரளிதரன்...
'உடனடியா வேலையை ரிசைன் பண்ணிட்டுத்தான் மறு வேலையைப் பார்ப்பா.. ரொம்ப நாளா அதுக்குத்தான பிளான் பண்ணிக்கிட்டு இருக்கிறா..'
அதனால்தான் அவன் பார்க்கையும்.. பீச்சையும் தியாகம் செய்து விட்டு.. அவனுடைய அலுவலக அறையிலேயே காதல் சொல்லும் முடிவுக்கு வந்திருந்தான்.. அவளோ அதற்கும் வழி விடாமல்.. என்னவோ யுத்த களத்தில் எதிர் நாட்டுப் படைக்கு சேனாதிபதியாக தலைமை தாங்கியிருப்பதைப்போல அவனை முறைத்தபடி அமர்ந்திருந்தாள்..
'இப்படியா ஒருத்தி எதிரியைப் பாக்கிறதைப் போல பார்த்து வைப்பா..?'
அப்படியே அவள் கன்னத்தில் இரண்டு அப்பு.. அப்பினால் என்ன என்ற ஆத்திரம் அவனுக்குள் அலையடித்தது.. அடக்கிக் கொண்டான்...
'இவ சிரிச்ச முகமா இருக்கிறப்பதான் காதலைச் சொல்லியாகனும்னா இந்த ஜென்மத்தில் அது முடியாது.. எப்ப சூரியன் மேற்கே உதிக்கிறது..? நானும் என் காதலை இவகிட்டச் சொல்றது..?'
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் மட்டுமே.. பொன் மாலைப் பொழுதில்.. முகத்தில் மந்தஹாசம் தழுவ நின்றிருக்கும் அனுராதாவிடம் கடலோரமாக கைபிடித்து.. பட்டு ரோஜாவைத்தந்து.. அவளைக் காதலிப்பதாக சொல்ல முடியும் என்பதினால் அந்த ஆசையை அடியோடு துரத்தி விட்டிருந்தான் முரளிதரன்...
வேறு வழியே இல்லை என்பதினால்தான் வேலை நேரத்தில் அவன் காதலைச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு அவன் ஆளாகி இருந்தான்.. மற்ற நேரங்களில்தான் அவள் அவன் முன்னால் வரமாட்டாளே..
"ராதா.."
"என் பெயர் அனுராதா சார்.."
"இப்ப இது ரொம்ப அவசியம் பாருங்க.."
"எனக்கு அவசியம் சார்.."
"ஜாக்கிரதையா இருக்கிறதும்.. பேசிப் பழகறதும் நல்லதுதான்.. அதுக்காக எப்போதுமே கேடயமும்.. கத்தியுமா இருக்க வேண்டியதில்லை ராதா.."
"அதை அவங்கவங்க வாழ்வின் சூழல் தீர்மானிக்கும் சார்.."
"நீங்க இன்னைக்கு அதிகமாவே பேசறிங்க.."
"அதுக்குத்தானே சார் நீங்க ஆசைப்பட்டிங்க..?"
"நீங்க பேசனும்னு ஆசைப்பட்டேன்.. இப்படிப் பேசனும்னு ஆசைப்படலை.."
"மத்தவங்க நினைக்கிறதைப் போல நான் பேச முடியாது சார்.. என் மனசுக்கு என்ன தோணுதோ அதை மட்டும்தான் பேச முடியும்.."
"வெல்.. இப்ப பேச்சு.. உங்க பேச்சைப் பத்தினதில்லை.."
"வேலையைப் பத்தித்தான பேசப் போறிங்க..?"
"பொறுங்க.. உடனே நோட்ஸ் எடுக்க ஆரம்பிச்சிராதீங்க.."
"வேண்டாம்ன்னா நான் என் சீட்டுக்குப் போகலாமா சார்..?"
"நீங்க ஓடறதிலேயே குறியாய் இருங்க.."
"இல்லையே சார்.. வேலை செய்கிறதிலதான் குறியாய் இருக்கேன்.."
"ராதா.."
"சார்..?"
"ஐ லவ் யு.."
"என்னது..? ? ?"
அனுராதாவின் கையிலிருந்த குறிபேடும்.. பேனாவும் நழுவிவிழப் பார்த்தன.. நடுங்கும் விரல்களுக்கு பலம் தேவைப் பட்டதில் அதைக் கெட்டியாக அவள் பிடித்துக் கொண்டாள்.. சட்டென்று எழுந்து கொண்டவளை.. அவளை விடச் சடுதியில் எழுந்து விரைந்து வந்து.. கதவை மறைத்து நின்று வழி மறித்தான் முரளிதரன்..
"இந்த எண்ணம் இப்ப வந்ததில்லை ராதா.. உங்களை முதன் முதலாப் பார்த்தப்பவே வந்து விட்டது.. உங்களிடம் சொல்லத்தான் இத்தனை நாளாகி விட்டது.."
"வழியை விடுங்க சார்.."
"உடனே பதில் சொல்லனும்னு இல்லை.. யோசிச்சுச் சொல்லுங்க.."
"இதில் யோசிக்க என்ன இருக்கு..?"
கனல் தெறிக்கும் பார்வையோடு நிமிர்ந்தாள் அனுராதா


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே -8
ராதையின் நெஞ்சமே -8
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy