ராதையின் நெஞ்சமே.-7

7 "டிக்கெட்.. டிக்கெட்.." கண்டக்டரிடம் ரூபாயை நீட்டி டிக்கெட்டை வாங்கி ஹேண்ட் பேகில் திணித்துக் கொண்ட அனுராதாவிற்கு.. சிவ...


7

"டிக்கெட்.. டிக்கெட்.."
கண்டக்டரிடம் ரூபாயை நீட்டி டிக்கெட்டை வாங்கி ஹேண்ட் பேகில் திணித்துக் கொண்ட அனுராதாவிற்கு.. சிவராமனை நினைத்துப் பாவமாக இருந்தது.. ஜன்னலோரம் கடந்து சென்ற இருசக்கர வாகனங்களில் அவரின் வாகனமும் தென்படுகிறதா என்று விழிகளால் தேடினாள்..
மகள் ஏறப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவருக்கு பிரேமா ஏறியதும் முகம் மாறிப் போனது.. அனுராதா எதுவுமே நடக்காததைப் போன்ற பாவனையில்..
"ஓகேப்பா.. சித்திக்கு மார்க்கெட் போகனுமில்ல.. நீங்க சித்தியோட போங்க.. எனக்கு இன்னும் நேரமிருக்கு.. நான் ரிலாக்ஸா பஸ் பிடிச்சு வந்துக்கிறேன்.." என்று சொல்லி விட்டு நடந்து விட்டாள்..
பஸ் ஸ்டாப்பில் வந்து நின்று பஸ்ஸில் ஏறி அமர்ந்த பின்னாலும் சிவராமனின் அந்த அடிபட்ட முகத் தோற்றமே அவள் மனதில் வந்து நின்று தொலைத்தது..
அஜித்திடம் சொன்னால் 'தேவையா இந்த ஆளுக்கு..?' என்று கேட்பான்.. இவருக்கெல்லாம் பாவம் பார்க்கக் கூடாது அனு என்று தங்கைக்கு அறிவுரை சொல்வான்...
அவள் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்து விட்டது.. இறங்கி நடந்தாள்.. அவளை உரசுவதைப் போல அந்தக் கார் வந்து நின்றதில் பதறி விலகினாள்.. காரின் கண்ணாடி ஜன்னல்கள் இறங்கின...
'முரளிதரன்..!'
அனுராதாவின் முகம் வெளிறியது..
"காரில் ஏறுங்க.." என்றான் அவன்..
"நோ தேங்க்ஸ்.." மறுத்து விட்டு நடையைத் தொடர்ந்தாள் அனுராதா..
அவளைத் தொடர்ந்து கார்..
"ஆபிஸீக்குத்தானே..?" முரளிதரன் விடவில்லை..
"நானும் அங்கேதான் போறேன்.. வாங்க.. சேர்ந்தே போகலாம்.."
"எனக்குத் தனியாப் போனாத்தான் பிடிக்கும் சார்.."
அனுராதா நடையின் வேகத்தைக் கூட்டினாள்.. அவளை ஒட்டி கார் வந்ததால் பிளாட்பாரத்தின் அந்தக் கோடிக்குப் போய் விட்டாள்.. அவனிடம் அவள் பேசமாட்டாள்.. எதுவாக இருந்தாலும் சிறு தலையசைவுடன் நிறுத்திக் கொள்வாள்.. அதிகப் பட்சமாக 'யெஸ்..' அல்லது 'நோ..' என்ற வார்த்தைகளை வேண்டுமானால் உபயோகிப்பாள்..
முரளிதரனின் பார்வை அவள்மீது ஆர்வத்துடன் படிவதை அவள் உணர்ந்துதான் இருந்தாள்.. அதிக நாள்களுக்கு அந்த வேலையில் நீடிக்க முடியாதென்று அவளின் உள்ளுணர்வு சொல்லியது.. விருப்பமில்லாத பெண்ணின் நிழலைக்கூடத் தொடமாட்டான் என்ற இஸபெல்லாவின் வார்த்தைகள்தான் அவளுக்குத் தைரியத்தைத் தந்து கொண்டிருந்தது..
பிடிவாதமாக காரைப் பார்க்காமல் விலகி நடந்தவளை ஒரளவிற்கு மேல் தொடர முடியாமல் காரை வேகம் கூட்டிப் பறந்து விட்டான் முரளிதரன்.. அவனுடைய ஏஸி அறையின் சுழல் நாற்காலியில் உட்கார்ந்தவன் டேபிளில் இருந்த மணியை அழுத்தினான்..
"சார்.." சரவணன் ஓடி வந்தான்..
"ராதா வந்ததும் நான் கூப்பிட்டேன்னு வரச் சொல்லு.." உத்தரவிட்டான்..
"ராதாவா..?" சரவணன் விழித்தான்..
"யெஸ்.. ராதாதான்.. என் செகரட்டரி.."
"அவங்க பேரு அனுராதா சார்.."
"நான் ராதான்னுதான் கூப்பிடுவேன்.."
'நோட் திஸ் பாய்ண்ட் சரவணா..'
சரவணனின் மனம் அதைக் குறித்துக் கொண்டது.. சற்றுப் பொழுதிற்குள் அது அலுவலகம் முழுவதும் சிறகடித்துப் பறந்து விட்டதில்.. அனுராதா அங்கே நுழைந்த போது குறும்புச் சிரிப்புடன் எதிர்க கொண்டாள் ரிசப்சனிஸ்ட் நிஷா..
"நடத்து.. நடத்து.."
'இவ எதை நடத்தச் சொல்றா..?' அனுராதா குழம்பிப் போனாள்..
"என்ன நிஷா..?"
"ராதாவாமில்ல.. இது எத்தன நாளாய் நடக்குது..?"
"என்னதான் சொல்ல வர்ற..?"
"எனக்குப் பாரேன்.. நிஷான்னு இரண்டே எழுத்தில பெயரை வைச்சுட்டாங்க.. இதைச் சுருக்கி ஷார்ட்டாய் பெயரைச் சொல்ல முடியுதா..?"
'என்னவோ நடந்திருக்குது..'
பேச்சை வளர்த்தாமல் அவளைக் கடந்தாள் அனுராதா.. அடுத்து எதிர்பட்ட வத்சலா.. கண்சிமிட்டி..
"ராதா.." என்றாள்..
"யாரு ராதா..?"
"குட் ஜோக்.. உனக்கு இது தெரியாதாக்கும்.. நம்பிட்டேன்.."
'இவளுக்கு என்னவோ ஆகிருச்சு..'
அவளையும் கடந்தாள்.. அக்கவுண்ட் செக்சன் உமாசங்கர் செல்போனை காதுக்கு கொடுத்தபடி வந்தான்.. அனுராதாவைக் கண்டதும் லேசான சிரிப்புடன்..
"ராதாவா உங்க பெயர்..?" என்று கேட்டு விட்டுப் போனான்..
அனுராதா எப்போதிருந்து ராதாவாக மாறினாள் என்ற குழப்பத்துடன் சீட்டுக்குப் போன போது சரவணன் கள்ளச் சிரிப்புடன் தோன்றினான்..
'பேசாம இவன் மாயாஜால படத்தில நடிக்கப் போயிரலாம்..'
திடிரென்று முன்னால் தோன்றியவனைக் கண்டதும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டபடி நினைத்துக் கொண்டாள் அனுராதா..
"ராதாம்மா.. உங்களை சீட்டுக்கு வந்த அடுத்த செகண்டிலேயே எம்.டி வரச் சொன்னார்.."
"எப்போச் சொன்னார்..?"
"அவர் வந்ததும் சொன்னார்.. ஆமாம்.. உங்க பெயர் அனுராதாதானே..?"
"இன்னும் உனக்கு அது தெரியாதா..?"
"தெரியும்மா.. உங்க பிரண்ட்ஸெல்லாம்.. அனு.. அனுன்னுதான கூப்பிடுவாங்க...?"
'இப்ப இது ரொம்ம்..ப முக்கியம்..' பல்லைக் கடித்தாள் அனுராதா..
'இவனுக்கு இந்த விசாரிப்பெல்லாம் அவசியமா..?' அவனை முறைத்தபடி..
"இதைத் தெரிஞ்சுக்கிட்டு உனக்கென்ன ஆகப் போகுது..? ம்ம்ம்..?" என்று மிடுக்காக வினவினாள்..
"அதுக்கில்லம்மா.. உங்க பிரண்ட்ஸெல்லாம் அனுராதாம்மாவான உங்கள.. அனு.. அனுன்னு கூப்பிடறாங்க.. ஆனா.. நம்ம எம்.டி மட்டும்.. ராதா.. ராதாங்கிறாரு.."  சரவணனின் கண்களில் விசமம் கொட்டின..
'சுரீர்' என்று ஆகிவிட்டது அனுராதாவுக்கு.. நிஷாவின் குறும்புச் சிரிப்புக்கும்.. வத்சலாவின் கண்சிட்டலுக்கும்.. உமாசங்கரின் கேள்விக்கும்... சரவணனின் கள்ளச் சிரிப்புக்குமான காரணம் அவளுக்கு விளங்கி விட்டது..
'ராதாவா..? அவன்தான் பெயர் வைச்சானா..?'
இயலாமை கலந்த கோபத்துடன் பேனாவும்.. நோட்டுமாக முரளிதரனின் அறைக்கதவை விரலால் தட்டினாள்..
"கமின் ராதா.." குழைவாக முரளிதரன் அழைத்தான்..
முறைப்புடன் உள்ளே சென்று நின்றவளை சுவராஸ்யமாக உச்சிமுதல் உள்ளங்கால் வரை பார்வையிடவும் செய்தான்..
'பெண் பார்க்கிற மாப்பிள்ளை கெட்டான்..'
அனுராதாவின் பொறுமை பறந்து போக யத்தனித்தது.. அதன் யத்தனத்தை தட்டி வைத்து.. பேசாமல் நின்றாள் அனுராதா..
"அழகா இருக்கறிங்க.." ரசித்துச் சொன்னான் முரளிதரன்..
அனுராதாவின் பார்வை ஆட்சேபத்துடன் அவன் மீது படிந்து விலகியது.. அவனோ.. அதை கண்டு கொள்ளாதவனாக...
"யு லுக் லைக் எ ஏன்ஜல் ராதா.. இதை நீங்க ஃபீல் பண்ணியிருக்கீங்களா..?" என்று கேட்டான்..
அனுராதா தலையைக் கூட அசைக்கவில்லை.. செய்து வைத்த சிலைபோல அசையாமல் நின்றாள்..
"காரில வாங்கன்னு கூப்பிட்டா ரிப்யூஸ் பண்ணிட்டிங்களே.. என் கார் எத்தனை வருத்தப் பட்டுச்சுன்னு தெரியுமா..?"
"....."
"உலகத்திலேயே அழகான பெண்ணை ஏற்றிக் கொள்ளப் போகிறோம்கிற ஹெட்வெயிட்டோட இருந்துச்சு.. பாவம்.. என் காரை நீங்க ஏமாத்திட்டிங்க.."
"....."
"காரில நீங்க ஏறியிருந்தா காரை பீச் பக்கம் விட்டிருப்பேன்.. உங்க கூட கடலோரமா நடந்தபடி பேசனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசையிருக்கு.."
"......"
"நான் வலியப் போய் யாருக்கும் லிப்ட் கொடுக்கட்டுமான்னு கேட்டதில்லை.. என் காரில்தான் மத்தவங்க லிப்ட் கேட்டு ஏறுவாங்க.. முதல் முறையாக உங்க விசயத்தில அது தலைகீழா மாறியிருக்கு.. நானே லிப்ட் கொடுத்தும் நீங்க வேண்டாம்ன்னு சொல்லிட்டிங்க.."
'நானேங்கிறானே.. இவன் என்ன பெரிய இவனா..?'
மௌனமாக நின்றவள் மனதின் மௌனத்தைக் கலைத்து கேள்வி கேட்டுக் கொண்டாள்..
அதை உணராதவனாக முரளிதரன் சீட்டை விட்டு எழுந்து அவளருகில் வந்தான்.. அனுராதா இரண்டடி தள்ளி நின்றாள்.. அவள் முகம் கடுமையானதாக மாறியது..
"ஐ ஹேவ் சம் அர்ஜண்ட் வொர்க் சார்.."
அவள் கதவைத் திறந்து வெளியே போக முனைய.. தப்பி ஓடுகிறதைப் போல வேகமாக விரைந்தவளைப் பார்த்தபடி உள்ளே வந்தான் சரவணன்..
"உன்னை யாருடா அழைச்சது..?" முரளிதரன் எரிந்து விழுந்தான்..
'அதுசரி.. அந்தம்மா வந்தா இனிக்கும்.. நான் வந்தா கசக்குமா..?' சரவணன் அந்தச் செய்தியையும் பரப்பி விட்டு..
'ஏதோ.. நம்மால் ஆனது..' என்று நிம்மதியாக மூச்சுவிட்டான்..
அலுவலகத்தில் வதந்தி பரவியது.. போதாக்-குறைக்கு..  அந்த மாத இறுதியில் நடந்த அலுவலகப் பார்ட்டி ஒன்றில்..
"என் காதல் கண்மணி..!
             ஏதேதோ நினைத்தாளோ..
    சொல்ல நாணம் வந்ததோ..
             சொல்லாமல் மறைத்தாளோ..
    ராதா.. ராதா.. ராதா..."
என்று அனுராதாவைப் பார்த்தபடியே பாடி வைத்து அவளைச் சோதித்தான் முரளிதரன்.. அலுவலகம் மொத்தமும் முரளிதரனையும்.. அனுராதாவையும் இனைத்து கிசுகிசுக்க ஆரம்பித்தது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே.-7
ராதையின் நெஞ்சமே.-7
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy