ராதையின் நெஞ்சமே -6

6 என்ன செய்வது.. ? அதுதான் அனுராதாவின் மனதை அல்லும் பகலும் துளைத்த கேள்வியாக இருந்தது.. அவள் மனது அலை மேல் துரும்பாக அலைக்கழிந்தது....


6

என்ன செய்வது..?
அதுதான் அனுராதாவின் மனதை அல்லும் பகலும் துளைத்த கேள்வியாக இருந்தது.. அவள் மனது அலை மேல் துரும்பாக அலைக்கழிந்தது..
'வேலைக்குப் போகலாமா.. வேண்டாமா..?'
இஸபெல்லாவின் பார்வையும் மறை முகப் பேச்சும்.. அந்த வேலை அவளுக்கான கல்வித்தகுதிக்காகவும்.. தனிப்பட்டத் திறமைக்காகவும் கிடைக்கவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டது..
"பாஸோட டேஸ்டே தனி.." அவள் வாய் விட்டேச் சொல்லிவிட்டாள்..
"நீங்க பூடகமாய் பேசறதைப் போல இருக்கு இஸபெல்லா.." அனுராதா படபடத்தாள்..
"வெயிட்.. வெயிட்.. எனக்கு மட்டும் இப்படிப் பேசனும்னு ஆசையா..? பார்த்தா அப்பாவியா இருக்கறிங்க.. பாஸ் ஒரு தினுசானவர்.. பார்த்து பத்திரமா இருந்துக்கங்க.."
"அப்படின்னா..?" முகம் வெளிறிப் போனாள் அனுராதா..
"பயப்பட வேணாம் அனு.. இதுநாள் வரைக்கும் விருப்பமில்லாத பெண்ணை பாஸ் டிஸ்டர்ப் பண்ணினதா நான் கேள்விப்பட்டதில்லை.. நீங்க.. விருப்பப்படாம இருந்துக்கனும்.. அதுதான் நான் சொல்ல வந்தது.. மத்தபடி.. பிடிக்கலைன்னு விலகிப் போறவங்களின் நிழலைக் கூட பாஸ் டச் பண்ண மாட்டார்.."
'இதில பெருமை வேறா..?' பற்றிக் கொண்டு வந்தது அனுராதாவிற்கு..
இன்டர்வியு பண்ணும் போதே அவன் முகத்தின் கம்பீரம் அவளை வசீகரித்ததில் அவளுக்குள் குளிர் காய்ச்சல் வந்தது..
'ச்சீ..' தன் மனதை கடிந்து கொண்டாள்..
'போயும்.. போயும்.. தறிகெட்ட வாழ்க்கை வாழ்பவனின் பின்னாலா என் மனம் போய் விடப் போகிறது..?'
அனுராதா நிமிர்வாக அமர்ந்தாள்.. இஸபெல்லாவைப் பார்த்தாள்..
"அப்பச்சரி.. எனக்குக் கவலையில்லை.. உங்க பாஸின் நிழலைக் கூட நான் திரும்பிப் பார்க்க மாட்டேன்.."
"வாட் எ கான்பிடென்ஸ்..! இது உங்க மனசில இருந்தாப் போதும்.. இங்கே வேலை கிடைச்சிருக்கிறது உங்களுக்கு ஜாக்பாட் அடிச்சது மாதிரி.."
"எனக்கு ஜாக்பாட்டெல்லாம் தேவையில்லை.. பிடிக்கலைன்னா உடனடியா வேலையை விட்டு விடுவேன்.. இதனால எத்தனை லாஸ் ஆனாலும் பரவாயில்லை.."
இஸபெல்லா அனுராதாவைப் பார்த்த பார்வையில் மெச்சுதலும் மரியாதையும் வந்திருந்தன..
"தட்'ஸ் கிரேட்.. வாங்க.. உங்களுக்கு வேலையைச் சொல்லிக் கொடுக்கிறேன்.."
"அதுக்கு முதல்ல இங்கே வேலை பார்க்கிற மனுசங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்.. ப்ளீஸ்.. நான் இப்பத்தான் வேலை பார்க்கன்னு வெளியே வந்திருக்கேன்.."
இஸபெல்லா நிதானித்தாள்.. கொஞ்சம் யோசித்தவள்.. பொதுவாக எல்லோரையும் பற்றிச் சொல்லி வைத்தாள்..
"பாக்கிற பார்வையிலே யாரையும் நல்லவங்க.. கெட்டவங்கன்னு கண்டு பிடிச்சிர முடியாது அனு.. பழகிப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கனும்.. போகப் போக நீங்களே எல்லோரையும் பற்றித் தெரிஞ்சுக்குவீங்க.. இப்ப நான் என் மனசில பட்ட பொதுவான கருத்தைத்தான் சொல்றேன்.."
"அது போதுங்க..."
"ஸ்ரீதர் சார் ரொம்ப நல்ல மனுசர்.. பெர்சனல் மேனேஜர்ங்கிற பந்தா இருக்காது.. எல்லோரிடமும் பிரண்ட்லியா பழகுவார்.. பெண்களிடம் மரியாதையா நடந்துக்குவார்.. முகம் பார்த்துக் கூடப் பேச மாட்டார்.."
அந்த ஸ்ரீதர்.. அனுராதாவை காருண்யப் பார்வை பார்த்து வைத்து..
"பாஸிடம் செக்கரட்டரியா இருக்கீங்க.. பத்திரமா இருந்துக்கங்க.." என்று சொன்னதில் அனுராதாவுக்குள் பயம் வந்தது..
வேலையை விட்டு ஓடி விடலாமா என்று கூட யோசித்தாள்.. அஜித்தின் உற்சாக முகம் நினைவுக்கு வந்து தடுத்தது..
"உனக்கு வேலை கிடைச்சிருக்கா..? கிரேட்.. எங்கே சி.ஏ படிக்க முடியாம வேலைக்குப் போக வேண்டியிருக்குமோன்னு கவலைப்பட்டுப் போனேன்.."
அவனின் அந்த உற்சாகத்தில் சுயநலமில்லை.. தங்கை வேலைக்குப் போய் சம்பாதிக்க.. அவளைக் காப்பாற்ற வேண்டிய அண்ணனாகப்பட்டவன்.. அவளின் சம்பாத்தியத்தில் படிக்கப் போவதாகச் சொல்கிறோமே என்ற தயக்கமில்லை..
அதனாலெல்லாம் அஜித்தைக் குறைசொல்லிவிட முடியாது.. அவன் ஒட்டுண்ணியல்ல.. அனுராதாவின் உழைப்பின் நிழலில் ஒண்டி வளர நினைப்பவனுமல்ல..
அவனைப் பொறுத்தவரை அவன் வேறு.. அவன் தங்கை வேறு அல்ல.. அண்ணா நான் வேலைக்குப் போக மாட்டேன் என்ற ஒரு வார்த்தை அனுராதாவின் வாயிலிருந்து வந்தால் போதும்.. அவளை உட்கார வைத்துச் சம்பாதித்துப் போட அவன் சித்தமாக இருப்பவன்.. சிஏ கனவை ஏறக்கட்டிவிட்டு அனுராதாவுக் காக மூட்டை தூக்கவும் தயாராக இருப்பவன் அவன்..
அனுராதாதான் அவனை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தாட் கொண்டிருந்தாள்..
"இப்ப என்ன ஆகிப் போச்சு.. என் படிப்புக்கேத்த வேலை எனக்குக் கிடைச்சிருக்கு.. நாளைக்கே நீ சி.ஏ முடிச்சு பெரிய ஆடிட்டராகிட்டேன்னு வைய்யி.. என்னை உட்கார வைச்சு சோறு போட மாட்டியா..?"
மறந்தும் அந்த அண்ணன் தங்கை இருவரின் வாயிலும் திருமணம் என்ற வார்த்தையே வராது.. அவர்கள் அப்படியொரு பந்தம் இருக்கிறது என்பதையே மறந்து போனவர்களாக.. படிப்பு உண்டு.. வீடு உண்டு என்று வாழ்க்கையின் ஓட்டத்தில் தங்களைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களுக்குத் திருமணமாகி.. அனுராதா கணவனுடன் போய்விட நேருமென்றோ.. அஜீத்துக்கு மனைவியாக ஒருத்தி அந்த மாடி வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பாளென்றோ அவர்கள் நினைத்தும் பார்த்ததில்லை.. கல்யாணக் கனவுகள் அவர்களிடமில்லை..
அஜித் அதைப்பற்றி நினைக்கப் பயப்படுகிறானென்று சிவராமனுக்குத் தோன்றியது.. அண்ணனும்.. தங்கையுமாக.. வாழும் அந்த வாழ்வில்.. அவர்களுக்-கென்று துணைகள் வந்து சேர்ந்தால் அவர்கள் பிரிந்து விடுவார்கள் என்று நினைக்கிறானோ என்று அவர் நினைத்தார்..
அஜித் இல்லாமல் அனுராதாவால் அந்த வீட்டில் இருந்துவிட முடியும்.. ஆனால் அனுராதா இல்லாமல் அஜித்தால் அந்த வீட்டில் ஒரு வினாடிகூட இருக்க முடியாது..
இதுபோன்ற துன்பத்தை மகனுக்குக் கொடுத்து விட்டோமே என்று அவர் மறுகிப் போனார்.. மனது சங்கடப்படும் போதெல்லாம் துக்கமின்றி அவர் வராண்டாவில் உலாத்துவார்.. விடியலின் கதிர்கள் தெரியும்.. கூடவே.. வீணையின் இசையும் எழுந்து விடும்..
"துன்பம் நேர்கையில்..
             யாழெடுத்து இன்பம்..
    சேர்க்க மாட்டாயா..?
             எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா..?"
அனுராதாவின் குரல் கொஞ்சிக் குழைந்து காற்றில் கலந்து தவழ்ந்து வரும்.. அந்தப் பாட்டின் லயத்தில் அவர் மெய்மறந்து கட்டுண்டு போனவராக நின்று விடுவார்..
அன்றும் அது போல அனுராதாவின் பாடலில் மெய் மறந்து ஊஞ்சலாடிக் கொண்டிருந்தவரைக் காபியைக் கொடுத்து அந்த சூழலின் தன்மையைக் கலைத்து புண்ணியத்தைக் கட்டிக் கொண்டாள் பிரேமா..
"கோப்பியக் குடிக்காம என்ன பகல் கனவு வேண்டிக் கிடக்கு..?"
"இது பகல்கனவு இல்லைடி.. விடியற்காலைக் கனவு.. காலையில் காணற கனவு பலிக்கும்.."
"அப்படின்னு அப்துல்கலாம் வந்து உங்க கிட்டச் சொன்னாரா..?"
"உலகத்துக்கே சொல்லியிருக்காரு.. உன் மரமண்டையில் தான் ஏறலை.."
"என்னது..?"
"கோப்பியைக் குடிச்சாச்சுன்னு சொன்னேன்.. உள்ளே டிபன்.. கிபன்னு எதையும் செய்யலையா..?"
"நானென்ன உங்க வீட்டுச் சமையல்காரியா..?"
"இல்லேங்கறியா..? அப்போச் சரி.. மாடியில என் பொண்ணு அனு மணமா.. குணமா.. ருசியா இப்ப டிபன் செய்யப் போறா.. அப்பாவுக்கும் சேர்த்துச் செய்டாம்மான்னு சொன்னா.. அதுக்கென்னப்பான்னு சேர்த்துச் செஞ்சுட்டுப் போறா.. உன்னை யாரும் சமையல்காரியாய் ஆக்கப் போறதில்லை.."
சிவராமன் போட்ட குண்டு மிகச் சரியாக வெடித்தது.. எங்கே கணவர் மாடியில் வசிக்கும் மூத்த தாரத்தின் பிள்ளைகளோடு ஐக்கியமாகி விடுவாரோ என்று பயந்து போனாள் பிரேமா..
தும்பை விட்டு வாலைப் பிடிக்க அவள் ஒன்றும் முட்டாளில்லையே...
"ஒரு பேச்சுக்குச் சொன்னா.. நீங்க சின்னப் பிள்ளைக தோளில ஏறி சவாரி பண்ணக் கிளம்பிருவீங்களா.. அதுகளே பாவம்.. இருக்கிறதை வைச்சு எதையோ கிண்டி.. வயித்தில போட்டுக்கிட்டு இருக்குது.. அதுக கூட நீங்களும் கூட்டுச் சேர்ந்தா விளங்கிரும்.. பெரிய மனுசனா லட்சணமா யோசிக்கவே மாட்டிங்களா..?"
"பெரிய மனுசனா..? நம்ம வீட்டிலயா..? யாருடி அது..?"
சிவராமன் மூலை முடுக்கெல்லாம் கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு தேட ஆரம்பித்தார்.. அவருக்கே பிரேமாவை வாரிவிட இது போன்ற அத்தி பூத்த தருணங்கள்தான் கிடைக்கின்றன.. இவற்றைப் பயன் படுத்திக் கொள்ளாவிட்டால் அடுத்த வாய்ப்பிற்கு அவர் எத்தனை நாள் காத்திருக்க வேண்டுமோ..
பொறுமை காக்க வேண்டிய அவசியத்திலிருந்த பிரேமா பல்லைக் கடித்தாலும்.. கணவனைக் கண்டு கொள்ளாத பாவனையுடன் சிரித்தபடி..
"உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான்.. சீக்கிரமா குளிச்சுட்டு வாங்க.. உங்களுக்குப் பிடிச்ச இடியாப்பமும்.. குழிப் பணியாரமும் செய்யப் போறேன்.." என்று அறிவித்து விட்டு சமையலறைக்குள் போய் விட்டாள்..
'கிடைச்சா விருந்து.. இல்லேன்னா மருந்துன்னு என்கதி ஆகிப்போயிருச்சே..'
நொந்தபடி குளிக்கப் போனார் சிவராமன்.. அலுவலகம் கிளம்பத் தயாராகி அவர் வாசலில் இறங்கிய போது.. அனுராதா மாடிப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள்..
"ஆபிஸீக்காம்மா..?" அன்புடன் அவர் வினவினார்..
"ஆமாம்ப்பா.."
"வாம்மா நான் டிராப் பண்றேன்.."
"உங்களுக்கு எதுக்குப்பா சிரமம்..? நான் பஸ் பிடிச்சுப் போய்க்கறேன்.."
"ஒரு சிரமமும் இல்ல.. நான் போகிற வழியிலதானே உன் ஆபிஸ்..? இதில எனக்கென்ன சிரமம் வரப் போகுது..?"
சிவராமனின் வற்புறுத்தலில் அவரின் ஹிரோ ஹோண்டாவில் அனுராதா ஏற முனையும் போது சட்டென்று ஊடே புகுந்து ஏறி அமர்ந்து விட்டாள் பிரேமா..
"ஏங்க.. எனக்கு மார்கெட் போகனும்.. போகிற வழியில இறக்கிவிட்டிருங்க..."




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே -6
ராதையின் நெஞ்சமே -6
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-6.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-6.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy