ராதையின் நெஞ்சமே. -5

5 முரளிதரன் களைத்திருந்தான்.. பகல் முழுவதும் வெளிநாட்டு விருந்தினருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்து விட்டு.. ஆபிஸீக்கு வந்தவனைக...


5

முரளிதரன் களைத்திருந்தான்.. பகல் முழுவதும் வெளிநாட்டு விருந்தினருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்து விட்டு.. ஆபிஸீக்கு வந்தவனைக் குவிந்து கிடந்த வேலைகள் வரவேற்றன..
செக்ரட்டரி என்ற ஒரு நபர் இல்லாத குறையை அப்போது உணர்ந்தான் அவன்..
"வாட் இஸ் திஸ் ஸ்ரீதர்..? மித்ரா ரிசைன் பண்ணினா இந்த இடத்துக்கு ஏதாவது ஒரு உத்ராவையோ.. ருத்ராவையோ அப்பாயிண்ட் பண்ணித் தொலைக்கிறதுக் கென்ன..?"
"சார்.. எது இம்பார்டண்ட்.. எது இம்பார்டண்ட் இல்லைன்னு உங்களுக்குத்தான் தெரியும்.. ஸோ.. நான் அப்பாயிண்ட் பண்ணி.. அதில நீங்க குறை கண்டு பிடிச்சிட்டா.. எல்லாமே வேஸ்டாப் போயிருமில்லையா..?"
பவ்யமாக சொன்ன ஸ்ரீதரின் பதிலில் இருந்த உண்மையில்..
"எப்படியோ தொலைங்க.. எல்லாத்துக்கும் ஒரு ரெடிமேட் ஆன்ஸரை வைச்சிருப்பீங்க.." என்றதோடு நிறுத்திக் கொண்டான் முரளிதரன்..
மலைபோல குவிந்திருந்த வேலைகளை சடுதியில் முடித்துக் கொடுத்தவனின் வேகத்தில் திகைத்துப் போன ஸ்ரீதருக்கு.. அதனால்தான் முரளிதரன் அவ்வளவு உயரத்தில் இருக்கிறான் என்று தோன்றியது..
"நௌ.. வந்திருக்கிற அப்ளிகேசன்ஸை பார்த்து விடலாம்.."
கை நீட்டிய முரளிதரனிடம்.. கவர்கள் பிரிக்கப் பட்டு.. பெயர்கள் வரிசைக்கிரமமாக அடுக்கப் பட்டிருந்த ஃபைல் நீட்டப் பட்டது..
'இனி இதைவேற கவனித்து முடிக்கனும்..' அவனுக்கு அலுப்பு வந்தது..
காலையிலிருந்து ஓடிக் கொண்டிருந்தவனின் உடல் ஓய்வுக்காக கெஞ்சியதில் களைப்பாக உணர்ந்தவன்.. அந்த அதீத களைப்போடு ஃபைலைப் பிரித்தான்.. முதல் பெயராக 'அனுராதா' என்று இருந்தது.. விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டிருந்த படத்தில் இதழ் பிரியாத புன்னகையோடு இருந்தவளின் பாந்தமான தோற்றத்தில் அவன் களைப்பு பறந்தது.. அந்தப் பக்கத்தை புரட்ட மறந்து அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்..
'என்ன.. பாஸ் அந்தப் பக்கத்தை விட்டு நகராம வெறிச்சு.. வெறிச்சு பாக்கிறாரு..' ஸ்ரீதர் எட்டிப் பார்த்தான்..
பார்த்தவனுக்கு 'கெதுக்' என்று இருந்தது.. கவர்களை உடைத்து அடுக்கும் போதே அந்தப் பெண்ணின் புகைப்படத்தை பார்த்து விட்டான்..
'என்னமா அழகா இருக்கா..'
அவளின் எளிமையான அழகு முகம் அவன் மனதைக் கவர்ந்து விட்டது.. அதில் தெரிந்த சாந்தத்தில்.. மனம் லயித்திருந்தான்.. அதே படத்தை முரளிதரனும் வைத்த கண் வாங்காமல் பார்த்தது அவனுக்கு உவப்பானதாக இல்லை...
'இந்தப் பெண்ணை என்ன அலுவலுக்கு இந்தப் பார்வை பார்க்கிறாரு..?'
ஒரு பக்கம் எரிச்சலாகவும்.. மறுபக்கம் பொறாமையாகவும் உணர்ந்தான் ஸ்ரீதர்.. அவன் பார்த்த பெண்ணை அவனுடைய முதலாளியும் பார்த்து வைப்பதில் அவனுக்குள் மலையளவுக்கு மனத்தாங்கல் வந்தது..
முரளிதரன் அடுத்தடுத்த பக்கங்களுக்கு தாவியதில் அவனுக்குள் ஓர் ஆறுதல் வந்தது.. இனியாவது முதல் பக்கத்தில் பார்த்த பெண்ணை மறந்து விடுவான் என்று அவன் ஆறுதல்பட.. அடுத்த நொடியில் அந்த ஆறுதலில் ஒரு லாரி மண்ணைக் கொட்டினான் முரளிதரன்..
ஃபைலின் முதல் பக்கத்தில் வந்தவன்.. அதிலிருந்த விவரங்களை விட்டுவிட்டு.. புகைப்படத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து வைக்க.. ஸ்ரீதர் நிலை கொள்ளாமல் தவித்தான்..
'இந்தப் பொண்ண யாரு அனுராதான்னு பெயர் வைத்துக்கச் சொன்னது..?' மனதுக்குள் திட்டித் தீர்த்தான்..
'ஒரு வைஷ்ணவி.. அதுவும் இல்லைன்னா யாழினின்னு எத்தனை அழகான பெயர்கள் உலகத்தில் இருக்கு.. இவளுக்கு அதெல்லாம் கண்ணுக்குத் தெரியலையா..?'
என்னவோ.. அனுராதா அந்தப் பெயர்தான் தனக்கு வேண்டும் என்று அடம் பிடித்து வைத்துக் கொண்டதைப் போல தனக்குள் அங்கலாய்த்துக் கொண்டான் ஸ்ரீதர்..
அப்படியொன்றும் அனுராதா என்ற பெயரின் மீது அவனுக்கு எரிச்சல் இல்லை.. வைஷ்ணவியும்.. யாழினியும் அவனுக்கு வேண்டப்பட்ட பெயர்களாகவும் இல்லை..
ஆங்கில எழுத்துக்களின் வரிசைக் கிரமப்படி அனுராதா என்ற பெயர் முன்னால் வந்து தொலைத்தது.. அதுவே வைஷ்ணவியாகவும்.. யாழினியாகவும் இருந்திருந்தால் கடைசிப் பெயர்களாக இடம் பெயர்ந்து முரளிதரனின் தீவிரப் பார்வையிலிருந்து தப்பித்திருக்கும் அல்லவா..? அதனால்தான் அந்தக் காண்டு..
"ராதா..! பெயரே அழகாயிருக்கில்ல..?" முரளிதரன் அனுராதாவின் போட்டோவை ரசித்தபடி சொன்னான்..
"சார்.. நல்லாப்பாருங்க.. இவங்களோட முழுப்பெயர் அனுராதா.. வெறும் ராதா இல்ல.." பிழை திருத்தம் செய்தான் ஸ்ரீதர்..
"எனக்கு ராதான்னுதான் சொல்ல வருது.."
பட்டுக் கத்தரித்த முரளிதரன்.. அனுராதா உட்பட சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு இன்டர்வியு லெட்டரை அனுப்பச் சொல்லி விட்டு எழுந்தான்..
ஸ்ரீதருக்கு அப்போதே இன்டர்வியுவின் முடிவு என்னவாக இருக்கக் கூடும் என்று தெரிந்து விட்டது.. அவன் தேர்வு செய்திருந்தாலும் அனுராதாவைத்தான் தேர்வு செய்வான் என்றிருந்தாலும்.. அந்தத் தேர்வை அவன் செய்யப் போவதில்லையென்பதில் அவன் மனம் வலித்தது..
'பாவம்.. பார்த்தா நல்ல குடும்பத்துப் பொண்ணு போல.. குணவதியாத் தெரியறா..'
அவளைக் காப்பாற்ற முடியுமா என்று ஸ்ரீதரின் மனம் அடித்துக் கொண்டது.. அவனுக்கு முரளிதரனைத் தெரியும். பெண்களை மயக்குவதில் வல்லவன்.. அவனுடன் சுற்றித் திரிந்த பெண்களின் பெயர்களையும்.. எண்ணிக்கையையும் முரளிதரனிடம் கேட்டால் அவனாலேயே அவற்றைச் சொல்ல முடியாது..
அந்த அளவுக்கு மன்மத லீலையில் பெயர் பெற்றவன் அவன்..
இலை மறைவு காய் மறைவாக இது பற்றிய ஆட்சேபனைகளை பலமுறை கங்காதரன் மகனிடம் வெளிப் படுத்தியிருக்கிறார்.. அவர் சொன்ன வார்த்தைக்காக சிலகாலம் அடக்கி வாசிக்கும் முரளிதரன்.. திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறிவிடுவான்...
தேவகியின் காதுகளுக்கு இவை போகாமல் பார்த்துக் கொள்ளும் தலை வேதனை கங்காதரனைச் சேர்ந்ததாக இருந்தது...
வைத்ரேயி இது எதைப்பற்றியும் அறியாதவளாக அண்ணனின் பராக்கிரமத்தைப் பற்றி அவளுடைய கல்லூரி தோழிகளிடம் பெருமையடித்து அங்கும் முரளிதரனுக்கு ஒரு ரசிகையர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தாள்..
"என் பிரெண்ட் என்ன சொல்றான்னு தெரியுமாண்ணா..?"
"நீ சொன்னாத்தானே தெரியும்.."
"வாவ்.. உன் அண்ணன் நிஜமாவே ஒரு ஹீரோதாண்டின்னு சொன்னா.."
"இதைப் பாருடா.. இப்படியெல்லாம்கூட உன் பிரண்ட்ஸ் ஜொள்ளுவாங்களா..? ஆமா.. அந்தப் பிரண்டோட பெயர் என்ன..?"
மைத்ரேயி வாய் திறப்பதற்குள் கங்காதரனின் மௌனப் பார்வை மகனைக் கண்டனமாக நோக்கிவிடும்..
அந்த ஒரு பார்வைக்குத்தான் எத்தனை சக்தி..!
அடங்காத காட்டாற்று வெள்ளமான முரளிதரனை அடக்கும் மாயசக்தி அந்த மௌனப் பார்வைக்கு மட்டும் தான் இருந்தது..
முரளிதரனுக்கு கங்காதரனிடம் இருப்பது பயமல்ல.. மரியாதை.. அவர் தனிமனித வாழ்க்கையின் ஒழுக்கத்-திற்கான மிகச்சிறந்த உதாரணம்.. தேவகியை விரும்பித் திருமணம் செய்து கொண்டவர்.. மனைவியைத் தவிர வேறு பெண்கள் பக்கம் அவர் பார்வை சென்றதில்லை..
அப்படிப்பட்ட கங்காதரனுக்குத்தான் கன்னியரின் மனதை மயக்கும் முரளிதரன் மகனாகப் பிறந்திருந்தான்..
அந்த வார இறுதியின் விடியலில் இன்டர்வியுவுக்காக வந்திருந்தவர்களில் ஏக மனதாக அனுராதா தேர்வு செய்யப்பட்டாள்.. இன்டர்வியு செய்தது முரளிதரன்தான் எனும் போது ஏகமனதாக அவள் தேர்வு செய்யப் பட்டதில் ஸ்ரீதருக்கு ஆச்சரியமேதும் இருக்கவில்லை..
இப்படியாகத்தானே.. 'தரன் குருப் ஆஃப் கம்பெனி'ஸின் ஹெட் ஆபிசில் எம்.டி முரளிதரனின் செக்ரட்டரியாக வேலைக்குச் சேர்ந்தாள் அனுராதா..
அவளுக்கு வேலை கற்றுக் கொடுக்க வந்த இஸபெல்லா.. அவளின் கல்வித் தகுதிகளைக் கேட்டு விட்டு ஆச்சரியப் பட்டுப் போனாள்..
"வெறும் பி.சி.ஏ மட்டும்தானா..?"
"எம்.சி.ஏ கரெஸ்பாண்டென்ஸில் படிக்கப் போறேங்க.."
"இனித்தானே படிக்கனும்..? ஓகே.. எக்ஸ்ட்ரா குவாலிபிகேசன் என்ன இருக்கு..?"
"அப்படின்னா..?"
அந்த ஒரு கேள்வியிலேயே அப்படி எதுவும் இல்லையென்பது நிருபணமாகிவிட.. இஸபெல்லா அவளை ஒரு தினுசாக பார்த்து வைத்தாள்..
"இது கூடத் தெரியாதா..? தரன் குருப் ஆஃப் கம்பெனின்னா ஈஸின்னு நினைச்சியா..? இங்கே செக்யூரிட்டி வேலைக்குக்கூட அத்தனை டிமாண்ட் இருக்கும்.. இங்கே கிடைக்கிற வேல்யூவும் சேலரியும் அப்படிப்பட்டது.. இந்தக் கம்பெனியில வொர்க் பண்றோம்ன்னு சொன்னாலே எல்லோரும் ''ன்னு பார்ப்பாங்க.. உனக்கு செகரட்டரி போஸ்டே கிடைச்சிருக்கு.. நீயானா அதுக்கான கோர்ஸைக் கூட முடிக்காம வந்திருக்கேன்கிற.."
"என் நிலைமை அப்படி இஸபெல்லா.. டிகிரி முடிச்சதும் வேலை தேடிக்க வேண்டிய கட்டாயம்.. கரெஸ்ஸில் பி.ஜி பண்ணிக்கலாம்ன்னு நினைச்சேன்.. லாஸ்ட் மன்த்தான் ரிசல்ட் வந்தது.. கண்ணில் பட்ட முதல் அட்வெர்டைஸ்மெண்டுக்கு அப்ளை பண்ணினேன்.. வேலை கிடைச்சிருச்சு.. மத்தபடி.. இதுக்காக எக்ஸ்ட்ரா கோர்ஸெல்லாம் படித்திருக்கனும்னு எனக்குத் தெரியாது.."
"இன்டர்வியூவில கேட்டிருப்பாங்களே.."
"என்கிட்டக் கேட்கலையே.."
"உன்னை எந்த டீம் இன்டர்வியு பண்ணினாங்க..?"
"டீமெல்லாம் இல்லை.. எம்.டி மட்டும்தான் இன்டர்வியு பண்ணினார்.. ஒன் அவர்லயே நான் செலக்ட்ன்னு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கொடுத்து அன்னைக்கே ஜாயின் பண்ணச் சொல்லிட்டாங்க.."
"என்னது..? எம்.டியே உன்னை இன்டர்வியு பண்ணினாரா..?"
இஸபெல்லா அனுராதாவைப் பார்த்த அர்த்தம் பொதிந்த பார்வையை ஆயுளுக்கும் அனுராதா மறக்க மாட்டாள்.. அவள் பார்வையில் தெரிந்த அந்த அர்த்தத்தில் அனுராதாவின் உடல் கூசிப்போனது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே. -5
ராதையின் நெஞ்சமே. -5
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy