ராதையின் நெஞ்சமே. -4

4 செல்போன் ஒலித்தது.. கழுத்து டையை சரி செய்தபடி வந்த முரளிதரன் குனிந்து டீப்பாயிலிருந்த செல்போனை எடுத்துக் காதுக்கு கொடுத்தான்.. &q...


4

செல்போன் ஒலித்தது.. கழுத்து டையை சரி செய்தபடி வந்த முரளிதரன் குனிந்து டீப்பாயிலிருந்த செல்போனை எடுத்துக் காதுக்கு கொடுத்தான்..
"குட்மார்னிங் சார்.." என்றது மறுமுனை..
"சொல்லுங்க ஸ்ரீதர்.." என்றான் முரளிதரன்..
"நாளைக்கு வர வேண்டிய ஃபாரின் கிளையண்ட்ஸ் இன்னைக்கே வந்துட்டாங்க சார்.."
"வாட்..?"
"யெஸ் சார்.. அவங்களை ரிஸிவ் பண்ணி ஸ்டார் ஹோட்டலில் தங்க வைச்சிருக்கேன்.."
"பட்... அவங்களுக்கு நாளைக்குத்தானே ரூம் புக் பண்ணியிருந்தோம்..?"
"யெஸ் சார்.. அதை இன்னைக்கு தேதிக்கு மாத்தினேன்..."
"என்ன பிரச்னை பண்றாங்க.. ஷிட்..! நல்ல வேளையா இன்னைக்கு நான் சென்னையில இருக்கேன்.. சப்போஸ் அவுட் ஆஃப் ஸ்டேசன்னா என்ன பண்ணுவாங்க..?"
மறுமுனையில் 'யெஸ் சார்..' போட்டுக கொண்டிருந்த ஸ்ரீதர் பதில் பேசவில்லை.. இதற்கு என்ன பதிலைச் சொல்லுவான்..? அவன் ஒன்றும் ஃபாரின் கிளையண்ட்ஸை அன்றைக்கே வரச்சொல்லி அழைக்க வில்லையே.. அவர்கள் வந்து விட்டதை அவன் எம்.டிக்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.. சொல்வதற்கு முன்னால் வந்திருக்கும் விருந்தினரை தக்க முறையில் வரவேற்று உபசரித்து உயர்ந்த ரக நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து விட்டு அதற்குப் பின்னால்தான் இப்படியிப்படி என்ற விவரத்தை எடுத்துரைக்க வேண்டும்.. அவ்வாறு செய்யாமல் மொட்டையாக வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கும் முரளிதரன் சும்மா விடமாட்டான்.. மறுநாள் வரவேண்டிய வாடிக்கையாளர்கள் முதல்நாளே வந்து இறங்கி விட்டால் அவர்களை எதிர் கொண்டழைக்காமல் விரட்டி விட்டு விடலாமா என்று கேட்டு வைப்பான்..
அடுத்த நாளுக்கான தேதியை மாற்றி அன்றைய தினத்தில் ரூம் புக் பண்ணி அவர்களை நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்க வேண்டும் என்பதை முரளிதரன் தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்று கேட்பான்.. இத்தனைக்கும் மேலாக.. இதையெல்லாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய பெர்சனல் மேனேஜர் அவனுக்குத் தேவையே இல்லையென்று ஸ்ரீதரை வேலையை விட்டே அனுப்பி விடுவான்..
ஸ்ரீதர் ஒன்றும் இதையெல்லாம் அறியாத பாலகனில்லை.. முதலாளிகள் எப்போதும் முதலாளிகளாகத் தான் இருப்பார்கள் என்ற எம்.பி.ஏ பாடத்தை பயின்று வந்தவன்.. அதிலும் முரளிதரன் முன்னால் போனால் கடிப்பான் பின்னால் போனால் உதைப்பான் என்பதை மிகச் சரியாக தெரிந்து வைத்திருப்பவன்..
அவனாவது.. முரளிதரனின் தண்டனைக்கு ஆளாகிறதாவது.. முரளிதரன் 'எள்' என்பதற்குள் எண்ணையை டின்களில் நிறைத்து வைக்காவிட்டால் அவன் ஸ்ரீதருக்கு டின் கட்டி விடுவான் என்பதை அட்சர சுத்தமாக உணர்ந்து வைத்திருப்பனாயிற்றே.. முரளி தரனிடம் கடியும் வாங்காமல்.. உதையும் வாங்காமல்.. ஜெகஜால வேலை செய்து தப்பிக்கும் மார்க்கங்களை அறிந்த கில்லாடி அவன் ஒருவன்தான்..
அந்த ஒரு காரணத்தினாலேயே.. முரளிதரனிடம் அதிக நாள்களுக்கு குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் ஒரே பெர்சனல் மேனேஜர் என்ற சிறப்புப் பெயரை அவன் பெற்றிருந்தான்..
"ஓகே.. ஸ்ரீதர்.. என் செகரட்டரிக்கு போன் பண்ணி இன்னைக்கான எல்லா அப்பாயிண்ட்மென்டையும்
கேன்சல் பண்ணி நாளைக்கு டேட்டுக்கு அதை மாற்றச் சொல்லுங்க.. நான் ஃபாரின் கிளையண்ட்ஸை மீட் பண்ணப் போறேன்..."
இப்பத்தானே அவர்களை 'ஷிட்' என்று சொன்னீர்கள் என்று ஸ்ரீதர் கேட்கவில்லை.. அவனால் கேட்கவும் முடியாதே.. அதனால் அவன் போட வேண்டிய
"யெஸ் சார்.." ஐ கரெக்டாக போட்டான்..
"தென்.. செகரட்டரிகிட்டச் சொல்லி.. மெயிலை ஓப்பன் பண்ணி படிக்கச் சொல்லுங்க.. இம்பார்டண்ட் மெயிலுக்கான பதிலை ரெடி பண்ணி வைக்கச் சொல்லுங்க.."
"யெஸ் சார்.."
"ம்ம்ம்.. செகரட்டர்கிட்டச் சொல்லி.. எனக்கு வர்ற போன் கால்ஸை நோட் பண்ணி வைக்கச் சொல்லுங்க.. அர்ஜன்ட்ன்னா என் செல்லுக்கு மெஸேஜ் அனுப்பச் சொல்லுங்க..."
"யெஸ் சார்.."
"ஓகே ஸ்ரீதர்.. தட்ஸ் ஆல்.. தென்..?"
"சார்.." ஸ்ரீதர் தயக்கத்துடன் இழுத்தான்..
"வாட்'ஸ் த மேட்டர்..?"
"செக்கரட்டரி.. செக்கரட்டரிங்கறேங்களே.. உங்க செக்ரட்டரியாய் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்த மித்ரா மேரேஜ்ன்னு சொல்லி வேலையை ரிஸைன் பண்ணிட்டுப் போய் டூ வீக் ஆகுதே சார்.."
"இது வேறயா..? இந்த டூவீக்கா செக்கரட்டரி இல்லாம மேனேஜ் பண்ணியிருக்கேனா..?"
"நோ சார்.. நீங்களே.. ஃபாரின்ல இருந்து டூ டேஸீக்கு முன்னாலேதானே வந்தீங்க.."
"அப்படின்னா.. அந்த ஜாபுக்கு ஆள் தேவைன்னு அட்வெர்டைஸ்மென்ட் குடுக்க வேண்டியதுதானே..? இதைக்கூட நான் சொல்லனுமா..? இவ்வளவு பெரிய தரன் குருப் ஆஃப் கம்பெனிஸின் எம்.டி. செக்கரட்டரி இல்லாம வொர்க் பண்ணனுமா..?"
முரளிதரன் கடிக்க வாய் திறந்ததில் ஸ்ரீதர் அலறி விட்டான்..
"ஆல்ரெடி.. அட்வெர்டைஸ் மெண்ட்டைக் கொடுத்தாச்சு சார்.. வந்திருக்கிற ஆப்ளிகேசன்ஸை நீங்க ஒருதரம் செக் பண்ணி யார்.. யாருக்கு இன்டர்வியு லெட்டர் அனுப்பனுங்கிறதை சொல்லிட்டாத் தேவலாம்.."
கடிக்க வாய் திறப்பதற்குமுன்னால் ஸ்ரீதர் வெள்ளைக் கொடியை காட்டி விட்டதில் வேகம் குறைந்தான் முரளிதரன்..
"தட்ஸ் ஓகே.. ஈவினிங் வந்து பார்க்கிறேன்.. இப்ப நான் சொன்ன வேலைகளைச் செய்ய வேற யாரையாவது டெபுட் பண்ணுங்க.."
"நானே பார்க்கிறேன் சார்.."
அது எதற்கு என்று முரளிதரன் சொல்லவில்லை.. பெர்சனல் மேனேஜர் செக்கரட்டரி வேலையைச் செய்ய வேண்டுமா என்று கேட்கவில்லை..
"ஓகே.. டூ இட்.." என்று ஒப்புதல் அளித்து விட்டான்..
அவன் அதைத்தான் சொல்லுவான் என்பதை அறிந்து வைத்திருந்த ஸ்ரீதர்.. மறுமுனையில் மனதுக்குள் முரளிதரனை 'பச்சை நிறமே.. பச்சை நிறமே..' என்று வண்ணமயமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து திட்டிய வண்ணம் போனை அணைத்து விட்டான்..
கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தபடி அறையை விட்டு வெளியே வந்தான் முரளிதரன்.. சாம்பல் வண்ண கோட்.. சூட்டில் குவாலியர் விளம்பர மாடல்போல வலது கையில் ப்ரீட் கேஸ் வடிவத்தில் அமைந்திருந்த பையைப் பிடித்தபடி மாடிப் படிகளில் கம்பீரமாக இறங்கி வந்த மகனை நிமிர்ந்து பார்த்தார் கங்காதரன்..
"குட் மார்னிங் டாட்.."
"மார்னிங் மை டியர் சன்.. பிஸி மூடில இருக்க போல.."
"யெஸ் டாட்.. நாளைக்கு வர வேண்டிய ஃபாரின் கிளையண்ட்ஸ் இன்னைக்கே வந்துட்டாங்க.. அவங்களை மீட் பண்ணப் போகனும்.."
"ஈஸிட்..? அப்படின்னா வா.. சீக்கிரமா பிரேக் பாஸ்டை முடிச்சிரலாம்.. தேவகி.."
கங்காதரன் டிவியை அணைத்து விட்டு எழுந்தார்.. மகனுடன் பேசியபடி டைனிங் டேபிளுக்கு நடந்தார்.. தரன் குருப் ஆஃப் கம்பெனிஸின் ஸ்தாபகராக அவர் இருந்த போதும்.. மகன் வெளிநாட்டிலிருந்து படிப்பை முடித்து விட்டு வந்து மறுகணம் எம்.டி பதவியை அவனுக்கு கொடுத்து விட்டு.. ஜெனரல் மேனேஜராக ஒதுங்கிக் கொண்டவர் அவர்..
தரன் குரூப் ஆஃப் கம்பெனிஸில் பல பிஸினெஸிகள் இருந்தன.. அவை அத்தனையையும் பற்றிய விவரங்களை விரல் நுனியில் அவர் வைத்திருப்பார்.. முரளிதரனால் கவனிக்க முடியாத கம்பெனிகளை அவர்தான் கவனித்துக் கொண்டிருந்தார்.. அதைச் சொல்லிக் காட்டாமல் அமைதியாக அவர் காரியமாற்றியதுதான் வியக்கக் கூடிய ஒன்று..
மகனின் தலைமைப் பொறுப்பில் தலையிடுவதைப் போல இல்லாமல் பிஸினெஸ் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் வெகு இயல்பாக கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவர் வல்லவர்.. முரளிதரன் பொறுப்பிற்கு வந்த பின்னால் அவருடைய பிஸினெஸ்கள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்ததால் அவருக்கு மகனின் அசாத்தியமான தொழில் திறமையின் மீது ஒரு மரியாதை உண்டு..
அவர்களுக்காக டைனிங் டேபிளை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்த தேவகி.. கோடிஸ்வரக் குடும்பத்தில் பிறந்தவள்.. கங்காதரனைப் போன்ற கோடிஸ்வரரை மணந்தவள்.. இருந்தும் அந்த கர்வத்தின் சாயல் துளிக்கூட இல்லாமல் மங்களகரமான அழகோடு.. கனிந்த முகச் சிரிப்போடு இருப்பாள்..
"மைத்ரேயி எங்கேம்மா..?"
அந்த அவசரத்திலும் வினவிய மகனை வாத்சல்யத்துடன் பார்த்த தேவகியின் சிரிப்பில் பெருமிதம் இருந்தது...
"உன் தங்கையாச்சே.. உன்னைப் போல காலில் சக்கரம் கட்டிக்கிட்டு இப்ப ஓடி வந்திருவா.. பாரேன்.. ஆமாம்.. நீயே பிஸி ஷெட்யூலில் இருக்கிற.. இப்பவும் தங்கை நினைவுதானா..?"
"பிஸிக்கும்.. மைத்ரேயிக்கும் என்னம்மா சம்பந்தம்..? அவளிடம் ஒரு ஹலோ சொல்லிட்டா.. நிம்மதியா வேலையைப் பார்க்கப் போவேன்.."
"இதோ வந்திட்டா.. உன் அருமை தங்கை.. நீயே கொஞ்சு.."
வேகமாக ஓடி வந்து மூச்சிரைக்க நின்ற மைத்ரேயியைக் காட்டிச் சிரித்தாள் தேவகி.. முரளிதரனோ தண்ணீர் தம்ளரை தங்கையின் பக்கமாக நகர்த்தினான்..
"எதுக்கு இத்தனை வேகம்..? மெதுவா வரலாமில்ல..?"
"நேரமாச்சுண்ணா.. உனக்கென்ன.. நீதான் உன் கம்பெனிக்கு எம்.டி. எனக்கு அப்படியா..? கிளாஸீக்கு லேட்டாப் போனா.. அந்த லெக்சரர் கிளாஸ் வாசலிலேயே நிற்க வைச்சுக் கத்த ஆரம்பிச்சுருவாங்க.."
"சரிதான்னு கேட்டுக்க வேண்டியதுதானே.. போரடிக்கிற லெக்சரை கிளாஸ் ரூமுக்குள் உட்கார்ந்து கேட்டால் என்ன. கிளாஸ் வாசலில நின்னு கேட்டா என்ன..? ரெண்டும் ஒன்னுதான்.."
"ஏன் சொல்ல மாட்ட..? எம்.பி.ஏ படிச்சிருக்கிற நிம்மதியில சொல்ற.. என்னை மட்டும் இன்ஜினியரிங்கில மாட்டி விட்டிருக்க.."
"அதைத்தான எல்லாரும் படிக்கிறாங்க..?"
"நீ மட்டும் ஏன் அதைப் படிக்கல..?"
"நீ ஏன் அப்போ இந்தக் கேள்வியைக் கேக்கலை..?"
முரளிதரன் தங்கையின் தலையில் செல்லமாக குட்டி விட்டு எழுந்து காரை நோக்கி விரைந்தான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே. -4
ராதையின் நெஞ்சமே. -4
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy