ராதையின் நெஞ்சமே. -3

3 அனுராதா தெளிவாக இருந்தாள்.. அஜித்துக்கு அன்னையாக இருந்தாள்... அவளின் ஆதரவும்.. பாசமும் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் அஜீத் வீட்டை ...


3

அனுராதா தெளிவாக இருந்தாள்.. அஜித்துக்கு அன்னையாக இருந்தாள்... அவளின் ஆதரவும்.. பாசமும் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் அஜீத் வீட்டை விட்டு வெளியேறி ஒரு ரௌடியாக உருமாறியிருப்பான்..
அப்படி நடக்க விடாமல் தமையனை அரவணைத்துக் கொண்டவள் அனுராதா..
மாடி ஹாலின் மூலையில் சின்னதாக டேபிள்.. அதில் கேஸ்ஸ்டவ்.. சுவர் அலமாரியில் சின்னச் சின்ன டப்பாக்களில் மளிகை ஜாமான்கள்.. பாத்திரங்கள்..
அடுத்த அலமாரியில் அவளுடைய பாடப் புத்தகங்கள்.. மறுமூலையில் பூஜை அலமாரி.. அதில் சாமி படங்கள்.. குத்து விளக்கு.. வீணை...
ஹாலை ஒட்டியிருந்த அறை குளியலறை வசதியுடன் இருந்தது... பகல்பொழுதில் அவளும் அஜித்தும் பொதுவாக அந்த அறையைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.. இரவில் தங்கையை அறையில் படுக்க விட்டு.. ஹாலில் பெட்சீட்டை விரித்துப் படுத்து உறங்கி விடுவான் அஜித்..
"ஏண்ணா.. நான் ஹாலில் படுத்துக்க மாட்டேனா..?"
அனுராதா அவளுடைய பெட்சீட்iத் தூக்குவாள்.. அஜித் அதட்டி விடுவான்.. தமையனின் பாதுகாவலில் நிம்மதியாக உறங்கிப் போகும் போது அனுராதாவின் மனதில் நெகிழ்வு ஏற்படும்..
அவர்களுக்கு உறங்குவதற்காக கட்டில்கள் இல்லை.. உட்கார்ந்து படிக்க மேஜை.. நாற்காலிகள் இல்லை.. பொழுது போக்க டிவி இல்லை.. இரண்டு ஜமுக்காளங்கள்.. இரண்டு போர்வைகள்.. இரண்டு தலையணைகள்.. இவையே அவர்களிடம் இருந்த அதிக பட்ச வசதிகளாக இருந்தன..
ஆனாலும் அந்த அண்ணனும் தங்கையும் அதைப் பற்றிக் கவலை கொள்ளவே இல்லை.. சுயமரியாதையுடன் ஒருவாய் சோற்றைச் சாப்பிட முடிந்ததில் அவர்கள் சந்தோசமாகவே இருந்தார்கள்..
அஜித் ஆடிட்டராகும் கனவில் இருந்ததால் பி.காம் படிக்க ஆரம்பித்தான்.. அனுரேகா பிளஸ்ஒன் படிப்பில் காலடி வைத்தாள்.. கம்யூட்டரில் தேர்ந்தவளாக இருந்தவளுக்கு அதன் மூலம் வருமானத்திற்கான புதிய வழியொன்று திறந்தது..
"ஜாப் டைபிங்ன்னு வந்த.. உன் வேலை சுத்தமாயிருக்கு.. ஏதாவது ஒரு பதிப்பகத்தில உன் வேலைத் திறமையைச் சொல்லு.. அவங்க வொர்க் தருவாங்க.."
சிவராமனின் நண்பரொருவர் வழிகாட்டியதில் அனுராதா 'தமிழ் களஞ்சியம்' என்ற பதிப்பகத்திற்குச் சென்றாள்.. அவர்கள் ஒரு புத்தகத்திற்கான எழுத்துப் பிரதிகளைக் கொடுத்தார்கள்.. அதிவிரைவில் அவள் அதை அடித்துக் கொடுத்ததில் ஆச்சரியப்பட்டுப் போனவர்கள்.. அவளுக்கு அடுத்தடுத்த வேலைகளைக் கொடுத்ததில் அனுராதாவுக்கான நிலையான வருமானம் கிடைத்து விட்டது..
ஆரம்பத்தில் தோழியின் வீட்டிலிருந்த கம்யூட்டரை உபயோகப்படுத்தியவள்.. மெதுவாக சொந்தமாக ஒரு கம்யூட்டரை வாங்கிக் கொண்டாள்.. அதைப் பார்த்து விட்டு பிரேமா.. சிவராமன்தான் அதை வாங்கிக் கொடுத்து விட்டாரோ என்ற காய்ச்சலில் அவரைக் காய்ச்சு.. காய்ச்சென்று காய்ச்சி விட்டாள்.. அன்றுதான் அவர் ருத்ர அவதாரம் எடுத்தார்..
"வாங்கிக் கொடுத்திருக்கனும்டி.. உனக்கும்.. உன் பிள்ளைகளுக்கும் இத்தனை வசதிகளை வாங்கிக் குமுச்சிருக்கேனே.. அதைப்போல நான் பெத்த என் பிள்ளைகளுக்கும் வாங்கிக் கொடுத்திருக்கனும்டி.. நான் அதைச் செய்யலை.. உன் வாயில் விழுகனுமேன்னு பேசாம இருந்தேனில்ல.. அதனாலதான் நீ இந்தக் குதி குதிக்கிற.. என் பிள்ளைகளுக்கு நான் வாங்கிக் கொடுக்கிறதுக்கு நீ என்னடி சொல்றது..?"
அவ்வபோது அவர் அப்படி ஆண்பிள்ளை சிங்கமாக ஆவார்தான்.. அப்போதெல்லாம் அதிசயத்திலும் அதிசயமாக பிரேமா தழைந்து போய் விடுவாள்.. அடுத்த இரண்டு நாள்களுக்கு அவள் கவனிக்கும் அபரித கவனிப்பில் சிவராமனின் ரௌத்ரம் குறைந்து காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமல் போய் விடும்.. அவர் பழையபடி அடிமையாகி விட்டதை உறுதி படுத்திக் கொண்டதும் பிரேமா பழைய பிரேமாவாக மாறிவிடுவாள்.. சிவராமனின் சிண்டும் அவள் கைக்கு வந்து விடும்..
அதுவரைக்கும் அதுதான் நடந்தது.. அதை அறிந்து வைத்திருந்ததால் அஜித்தும் அனுராதாவும் அவருடைய ருத்ர அவதாரத்தில் பெரிதாக மகிழ்ந்து போய் விடவில்லை.. அனுராதாவாவது தகப்பனாரை காருண்யத்துடன் பார்த்து வைத்தாள்.. அஜித் அந்த வேலையை எல்லாம் வைத்துக் கொள்ளவில்லை.. உன்னிடம் யாராவது இதைச் செய் என்று சொன்னார்களா என்ற ரீதியில் ஒரு முறைப்பு முறைத்து விட்டுப் போய் விட்டான்...
"அப்பா இதை வாங்கிக் கொடுக்கலை சித்தி.."
"எனக்கு என் புருசனைப் பத்தித் தெரியாதா..? நீ சொல்லித்தான் தெரிஞ்சுக்கனுமா..? உன் வேலை எதுவோ.. அதை மட்டும் பாரு.. புருசன் பொண்டாட்டி சண்டைக்குள்ள மூக்கை நீட்டாதே.. இங்கே தலை கொடுக்க வான்னு யாராவது உன்னை வெத்திலை பாக்கு வைச்சு அழைச்சாங்களா..?"
பிரேமா பொங்கிய பொங்கலை தெரியாதவர்கள் யாராவது கேட்டு வைத்தால் அனுராதாவை தேவைதானா உனக்கு இந்த வேலை என்ற ரீதியில் முறைத்திருப்பார்கள்.. கணவன் மனைவி சண்டைக்குள் தலையை நுழைக்கும் அநாகரிக வாதியாக அவளை நினைத்திருப்பார்கள்.. அந்த அளவுக்கு சிவராமன் பெற்ற மகளையே மூன்றாவது மனுஷியாக தள்ளி நிறுத்தி விடும் சாமர்த்தியம் பிரேமாவுக்கு மட்டுமே உண்டு..
"அழைக்கலைதான் சித்தி.. ஆனா வந்திருக்கிற சண்டை நான் வைச்சிருக்கிற கம்யூட்டரைப் பத்தித்தானே.."
அனுராதா மடக்கினாலும் பிரேமா அசரவில்லை.. யார் அவள்..? மலையை மடுவாகவும்.. மடுவை மலையாகவும் மாற்றும் வித்தை தெரிந்தவள்.. அவளாவது.. அனுராதா கேட்ட கேள்விக்கு அலட்டிக் கொள்வதாவது..
"எதை வைச்சு வந்தா உனக்கு என்ன..? எங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.."
'லட்சம் கூட இருக்கட்டும்.. நான் கேட்டேனா..?'
"இந்த நிமிசம் அடிச்சுக்குவோம்.. அடுத்த நிமிசம் கூடிக்குவோம்.."
'எந்த நிமிசத்தில எதை செய்து தொலைக்கிறேன்னு யாருக்குத் தெரியுது..?'
"சண்டை சச்சரவு இல்லாத சம்சாரி இந்த உலகத்திலேயே இல்லை.."
'ஆமாமாம்.. நீ போய் கணக்கெடுத்திட்டு வந்த..'
"''ன்னு பல்லைக் காட்டிக்கிட்டே இருக்கிற புருசன்.. பெண்டாட்டிய சினிமாவிலயும்.. சீரியல்லயும் மட்டும்தான் பார்க்க முடியும்.."
'ஆக மொத்தம் இந்த வீட்டில பார்க்க முடியாதுங்கிற.. அதுசரி.. உனக்கு வாழ்க்கைப்பட்ட பின்னாலதான் எங்கப்பா சிரிப்பைத் தொலைச்சிட்டு அதைத் தேடிக்கிட்டு இருக்கிறதையே பிழைப்பா வைச்சிருக்காரே..'
"ஏங்க.. நீங்க வாங்க.."
'கூப்பிடறப்பவே போயிருங்கப்பா.. இல்லைன்னா மறுபடியும் பாட்டுக் கிளம்பிரப் போகுது..'
அனுராதாவின் கண் சமிக்ஞையை புரிந்து கொண்ட சிவராமன் பேசாமல் போய் விட்டார்.. புயலடித்து ஓய்ந்ததைப் போன்ற நிம்மதியுடன் அனுராதா வேலையைப் பார்க்கப் போனாள்...
இதுபோன்ற இடையூறுகளால் அண்ணன்.. தங்கையின் படிப்பு தடைபடவில்லை.. சிவராமனின் உதவிகளை அஜித் மறுத்தான்.. அனுராதா மறுக்கவில்லை.. அதே சமயத்தில் அவர் உதவி செய்வார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கவுமில்லை..
"அண்ணனுக்கு காலேஜ் பீஸா..? அதை நேத்தே கட்டியாச்சேப்பா.."
"ஏம்மா.. நான் கொடுக்க மாட்டேன்னு நினைச்சிட்டியா..?"
சிவராமனின் கண்கள் கலங்கும் போது அனுராதாவுக்கு சங்கடமாகத்தான் இருக்கும்.. மறுமணம் செய்து கொண்ட தந்தையிடம் எந்த நிச்சயத்தில் உதவியை எதிர்பார்ப்பது என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மென்மையாக புன்னகைப்பாள்..
"அப்படியில்லைப்பா.. கையில பணம் இருந்தது.. கட்டிட்டேன்.. இப்ப என்ன..? பணத்தைக் கொடுங்க.. என் ஸ்கூல் பீஸிக்கு உதவும்.."
"அதையும் சேர்த்துத்தான் வைச்சிருக்கேன்ம்மா.. நான் உங்க அப்பன்.."
அந்த நினைவு உங்களுக்கு இருக்கிறதா என்ற கேள்வி வாய்வரை வந்தாலும் அதை தடுத்து நிறுத்தி விட்டு தலையை அசைப்பாள் அனுராதா..
"என்னை ஒதுக்கி வைச்சிராதேம்மா.."
"சேச்சே.. என்னப்பா இப்படியெல்லாம் பேசறிங்க.. எனக்கும் அண்ணனுக்கும் உங்களை விட்டா யாரிருக்கா..?"
சிவராமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலும்.. அந்த அண்ணனுக்கும் தங்கைக்கும் அவர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பதை அனுராதா நன்கு அறிவாள்..
சிவராமனின் பாசத்தில் பொய்யில்லைதான்.. ஆனால் அந்தப் பாசத்தை பிரேமாவின் முன்னால் வெளிப்படையாகக் காண்பிக்க மாட்டார்.. பெற்ற தந்தையிடம் ஒளிந்து மறைந்து உதவியையும்.. பாசத்தையும் பெற்றுக் கொள்வதை அஜித் துளியளவு கூட விரும்பவில்லை..
அனுராதாவுக்கும் அதில் உடன்பாடு உண்டென்றாலும்.. சிவராமன் கண்கலங்கி.. அவர்களின் பாசத்தை யாசிப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.. மனம் இளகி.. அஜித்திற்குத் தெரியாமல் அவர் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்வாள்..
அஜீத் பி.காம் மூன்றாம் ஆண்டில் படிக்க ஆரம்பித்த போது.. அனுராதா பி.சி.ஏ முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தாள்..
"என்னம்மா.. அண்ணனும் தங்கையும் ஆளுக்கொரு டிகிரியை சூஸ் பண்ணிட்டீங்க..? ஊரெல்லாம் என்ஜினியருக்குப் படிக்கிறாங்க.. நீங்க என்னடான்னா வேற திசையில பயணம் கிளம்பிட்டீங்க..?"
சிவராமன் அலுத்துக் கொண்டபோது அனுராதா சிரித்தாள்.. வழக்கம் போல மகன் இல்லாத போதுதான் அவர் மகளிடம் பேச வந்திருந்தார்.. அஜித் இருக்கும் போது அவர் வரமாட்டார்..
"அப்பா.. ஊரெல்லாம் படிக்கிற படிப்பை நாமளும் படிச்சா வேலை வாய்ப்புக்கு எங்கே போறது..? அதுவே டிகிரின்னா டி.என்.பி.எஸ்.ஸி எழுதி கவர்ண்மென்ட் ஜாப் போகலாம்.. பிரைவேட் கம்பெனியில நுழையலாம்.. இத்தனைக்கும் மேலா.. ஐந்து வருசம் காத்திருக்காம மூணே வருசத்தில படிப்பை முடிச்சிட்டு நாங்களும் டிகிரி ஹோல்டர்ன்னு சொல்லிக்கலாம்.. ஐந்து வருசத்தில பி.ஜி யை படிச்சு மூடிச்சிருக்கலாம்.. இப்படி நிறைய இருக்குப்பா.."
"என்னவோ போம்மா.. நீ எது செய்தாலும் சரியாத்தான் செய்வ.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.."
சரியாகத்தான் செய்தாள்.. அஜித்தின் லட்சியத்தை மனதில் கொண்டு அனுராதா எடுத்து வைத்த அடிகளை யோசித்து எடுத்து வைத்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே. -3
ராதையின் நெஞ்சமே. -3
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-33.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-33.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy