ராதையின் நெஞ்சமே..-1

முத்துலட்சுமி ராகவன் எழுதிய ' ராதையின் நெஞ்சமே... ' 1       "தாமரைப் பூவில் அமர்ந்தவளே...              ச...


முத்துலட்சுமி ராகவன் எழுதிய
'ராதையின் நெஞ்சமே...'




1


      "தாமரைப் பூவில் அமர்ந்தவளே...
             செந்தூர திலகம் அணிந்தவளே..
    ஸ்ரீதேவி..! செந்தாமரைப் பூவில்..
             அமர்ந்தவளே..."
இனிமையான குரலில் வந்த அந்த தெய்வீக கானத்தில் மனம் நனைந்தார் சிவராமன்.. வெறும் கானமா அது..? பக்திப் பரவசத்தில் மனம் குழைந்த யாழின் நாதமல்லவா அது..!
'என்ன குரல்..! என்ன அருமையான நாதம்...'
எப்போதும் போல அப்போதும் மகளின் குரல் வளத்தை மனதுக்குள் சிலாகித்துப் போனார் அவர்.. அந்த பனி பொழியும் அதிகாலை நேரத்தை அந்தப் பாடல் அழகான காலை நேரமாக மாற்றி விட்டதைப் போன்ற உணர்வு அவருக்கு..
 "ஆழியிலே உருவான ஆதிலட்சுமித்தாயே..!
             அமரர்கள் கொண்டாட எழுந்து வந்தாயே..
    செல்வமெல்லாம் பெருகும் உனதருளாலே..
              உலகமெல்லாம் உய்யும் உன்னாலே..
    செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே..!"
மகள் பாடிய பாடலைக் கேட்கும் அந்த மகாலட்சுமி பாற்கடலை விட்டு எழுந்து வந்து விடுவாள் என்று அவருக்குத் தோன்றியது.. அதுபோன்ற மனமுருக்கும் பாடல்கள் தெய்வங்களைக் கட்டிப் போடும் அன்புக் கயிறல்லவா..?
கண்மூடி பரவச நிலைக்குப் போனவராக பாடலை ரசித்துக கொண்டிருந்தவரை.. அந்த கர்ண கடூரமான குரல் மோன நிலையைக் கலைத்து இருப்பு நிலைக்கு அழைத்து வந்தது..
"இந்தாங்க.. கோப்பி.."
'ணங்'கென்ற சப்தத்துடன் அவரருகில் வைக்கப் பட்ட தம்ளரில் நிறைந்திருந்த 'காபி' எனச் சொல்லப்பட்ட அந்தத் திரவம் வைக்கப்பட்ட வேகத்தில் அதிர்ந்து.. தளும்பி.. சிவராமன் அமர்ந்திருந்த ஊஞ்சல் பலகையை நனைத்து வழிந்தோடியது..
இனிய கனவு கலைந்த எரிச்சலுடன் கண்விழித்துப் பார்த்தார் அவர்.. எதிரே நின்றிருந்த பிரேமாவின் முகத்தில் எள்ளும்.. கொள்ளும் போட்டி போட்டுக் கொண்டு பொரிந்து கொண்டிருந்தன..
'விட்ட விடிகாலையில இவ முகத்திலதான் முழிக்கனும்.. விளங்கிரும்..'
பல்லைக் கடித்துக் கொண்டவரால் அதை மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது.. வெளியில் சொல்லும தைரியமெல்லாம் அவருக்கு இல்லை.. அந்த வீராதி வீரன் சிவராமன்தான் பிரேமாவுக்கு தாலி கட்டிய அன்றே தொலைந்து போய் விட்டாரே..
இப்போதிருக்கும் சிவராமன் ஓர் அடிமை.. கண்ணுக்குத் தெரியாத விலங்கு அவரைப் பிணைத்-திருந்தது.. மனைவியை இழந்த மனிதர் குழந்தைகளை வளர்த்துக் கொண்டு மீதமிருக்கும் வாழ்வை வாழ்ந்து முடித்திருக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு.. பத்து வயது மகனையும்.. எட்டு வயது மகளையும் வளர்க்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி பிரேமாவின் கழுத்தில் தாலியைக் கட்டினால் இந்தக் கதி அவருக்கு வராதா..?
காபியை 'கோப்பி..' என்று சொன்ன பிரேமா ஒன்றும் யாழ்ப்பாணத்து தமிழ்மகளல்ல.. தென்தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தமிழ்மகள்தான்.. இருந்தும் அவள் காபியை 'கோப்பி' என்று விளித்தாளென்றால் அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன...
ஏழ்மையைக் காரணம் காட்டி.. மனைவியை இழந்து இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக நிற்கும் நடுத்தர வயதைத் தாண்டிய மனிதனுக்கு இளைய தாரமாக அவளைப் பிடித்துத் தள்ளி விட்ட பெற்றவர்களுக்கு மகளாகப் பிறந்த துர்பாக்கியசாலி அவள்..
அவளுடைய கோபத்தை யாரிடம் அவள் காண்பிப்பாள்..?
மனச்சாட்சியே இல்லாமல் அவளுடைய கன்னி மனதின் கனவுகளைச் சிதிலமடையச் செய்த அந்த மனிதனிடமும்.. அவர் பெற்ற பிள்ளைகளிடமும்தானே காண்பிப்பாள்..?
பிரேமாவும் அதைத்தான் செய்தாள். சிவராமனைப் பார்க்கும் போதெல்லாம் எதிரியைப் பார்ப்பது போன்ற வன்மம்தான் அவளுக்கு வரும்.. அவளைப் போன்ற சின்னப் பெண்ணை இளைய தாரமாக்கிய அவரின் படுபாதகச் செயல்தான் மனதில் தோன்றும்.. அந்த வன்மமும்.. கோபமும் ஒன்று சேர்ந்து.. சாப்பாடை.. 'கூப்பாடு' என்று சொல்ல வைக்கும்.. தண்ணீரை.. 'கிண்ணீர்..' என்பாள்.. குழம்பை.. 'கொளம்பு..' என்று சொ(கொ)ல்லுவாள்..
அதைப் போலதான்.. காபியும் 'கோப்பி'யாக உருமாறியது.. சிவராமனுக்கே அந்தப் போடு என்றால்.. அவர் பெற்ற பிள்ளைகளான அஜித்துக்கும்.. அனுராதாவுக்கும் எந்த அளவுக்கு போடு கிடைக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை..
கனல் வீசும் பார்வை என்றால் என்னவென்பதை மூத்த தாரத்தின் பிள்ளைகளை அவள் பார்க்கும் பார்வையிலிருந்து கண்டு கொள்ளலாம்..
அது எப்படித்தான் பிடிக்காத வாழ்க்கையிலும்.. வன்மம் வைக்கும் கணவரிடமும் அவள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாளோ.. அதை அவளிடம்தான் கேட்க வேண்டும்..
அவள் பெற்ற இரண்டும் பெண் குழந்தைகள் என்பதில் அவளது வன்மம் மேலும் அதிகரித்துத் தொலைத்தது.. சிவராமன் பாவம்.. பெற்ற குழந்தைகளுக்கு இடையில் ஆண் குழந்தை உயர்வு.. பெண் குழந்தை கம்மியென்ற பேதம் பாராட்ட மாட்டார்.. ஆனால் பிரேமாவின் மனதில் அந்த எண்ணம் இருந்தது.. அந்தக் குடும்பத்தின் மகனாக மூத்த தாரத்தின் மகனான அஜித் மட்டுமே இருப்பதில் அவளுக்கு கழுத்தளவிற்கு 'காண்டு' இருந்தது..
ஆண்குழந்தைக்காக அடுத்தடுத்துக் குழந்தைகளைப் பெற்றுத் தள்ள அவள் தயாராகத்தான் இருந்தாள்.. அவளது கர்ப்பப்பை அதற்கு தயாராக இல்லை.. மூத்தவளான சிவரஞ்சனிக்கு அடுத்த கலாரஞ்சனி பிறக்கும் போது கர்ப்பப்பை பலவீனமாக இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றி விட்டார்கள்..
அவளொன்று நினைக்க.. அந்த அறுவை சிகிச்சை வேறு ஒன்றை விதித்து விட்டதில் அவளின் வன்மும் கோபமும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன.. போதாக்குறைக்கு.. மூத்த தாரத்தின் குழந்தைகள் அவர்களுடைய அம்மாவின் சாயலில் அழகாக இருந்து வைக்க.. அவளுடைய குழந்தைகள் மட்டும் சிவராமனை சாயலில் கொண்டு.. பார்க்கும்படி மட்டுமே இருந்ததில் அவளுக்கு வெறி பிடித்ததைப் போலவே ஆகிவிட்டது..
"இப்ப இதுக ரெண்டுக்கும் உங்க ஜாடை வேணும்ன்னு யாரும் அழுதாங்களா..?"
"நானும்தான் அழலை பிரேமா.."
"பதிலுக்குப் பதிலா..? இதில மட்டும் கரெக்டா இருங்க.. மத்ததில மூத்தவ பிள்ளைகளுக்கு ஒரு நியாயம்.. என் பிள்ளைகளுக்கு ஒரு நியாயம்ன்னு வஞ்சனையா இருங்க.."
"நான் என்னடி வஞ்சனை வைச்சேன்..? என் பிள்ளைகள் நான்கு பேரும் எனக்கு ஒன்னுதாண்டி.."
"ஏன் ஒன்னா இருக்க மாட்டாங்க..? உங்க முததாரம் என்ன.. என்னைப் போல பொண்டாட்டி இல்லாம ரெண்டு பிள்ளைகளோட நின்ன கிழவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாளா..? அவளும் நானும் ஒன்னா..? என் பிள்ளைகளும் அவபிள்ளைகளும் ஒன்னா..?"
"பிரேமா.."
இந்த ஒரு கேள்வியிலேயே சிவராமனை விக்கித்துப் போக வைத்து விடுவாள் பிரேமா.. அது அவளுக்கு கை வந்த கலையாக இருந்தது.. அவ்வாறு பேசிப்பேசியே சிவராமனின் பேச்சைக் குறைத்தாள் அவள்.. அவர் வாயிருந்தும் ஊமையானார்.. எப்படி பிரேமாவும்.. அவரின் முதல் மனைவியான அவந்திகாவும் ஒன்றில்லையென்று அவள் சொன்னாளோ.. அதைப் போல பிரேமா பெற்ற பிள்ளைகளும்.. அவந்திகா பெற்ற பிள்ளைகளும் சிவராமன் பெற்ற பிள்ளைகளாக ஒன்றுபட்டு நிற்க முடியாமல் வெவ்வேறாக ஆகிப் போனார்கள்...
அந்த வீட்டில் உரிமையுள்ள பிள்ளைகளாக சிவரஞ்சனியும்.. கலாரஞ்சினியும் வளர்ந்தார்கள்.. உரிமையிழந்த அகதிகளாக அஜீத்தும்.. அனுராதாவும்.. அந்த வீட்டின் மூலையிலே ஒதுக்கப்பட்டு வளர்ந்தார்கள்..
அஜித்தையும்.. அனுராதாவையும் பார்க்கும் போதெல்லாம் சிவராமனின் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.. பிரேமாவிற்குத் தெரியாமல் அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பார்.. அவள் இல்லாத தருணங்களில் பாசம் காட்ட முனைவார்..
அனுராதா அதை புன்னகையுடன் ஏற்றுக் கொள்வாள்.. அஜித் மட்டும் அவரிடம் முகம் கொடுத்துப் பேச மாட்டான்.. அவனுடைய அத்தியாவசியத் தேவையைத் தவிர.. மற்றவைகளை நிராகரித்து விடுவான்..
"அஜித்.." என்ற அவரின் அழைப்பில் திரும்பிப் பார்த்து.. முறைப்பவனின் கண்களில் தீ எரியும்.. அதன் ஜ்வாலையில் அவர் பேச முடியாமல் வாயடைத்துப் போய் விடுவார்..
அஜித்.. அவரிடம் பேசியதில்லை.. என்று அவர் மாலையும் கழுத்துமாக பிரேமாவுடன் அந்த வீட்டுக்குள் வந்து நின்றாரோ.. அன்று அவன் அவரிடம் பேச்சை நிறுத்தியதுதான்.. அதற்குப் பின்னால் அவன் அவருடன் பேசியதே இல்லை..
அவனையும் சிவராமனையும் இணைக்கும் பாலமாக அனுராதா மட்டுமே இருந்தாள்.. தமையனின் மறுப்பை தகப்பனின் மனம் வலிக்காமல் எடுத்துச் சொல்லும் திறமை அவளுக்கு இருந்தது..
"விடுங்கப்பா.. அண்ணனுக்கு என்னவோ அதிகமா டிரெஸ் வேணாம்ங்கிற எண்ணமிருக்கு.. அவன் மனசு போல இருக்கட்டுமே.."
வலிக்காத இதம் தரும் வார்த்தைகளைப் பேசும் அவளிடம் சிவராமன் அவந்திகாவைக் காண்பார்..
அதற்குத்தான் அவருக்கு அப்படிப்பட்ட தண்டனை கிடைத்திருக்கிறதோ..? மனம் நிறைந்த வாழ்வை வாழும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்..? அவளுக்கு அது கிடைத்தது.. அது பாதியிலேயே முடிந்து போனால் அந்த வாழ்வின் இனிய நினைவுகளோடு.. அந்த வாழ்வு தந்த வரங்களான அந்தப் பிள்ளைகளோடு அவர் நிம்மதியாக வாழ்ந்திருக்கக் கூடாதா..? அதை விட்டு விட்டு அவந்திகாவின் இடத்தில் வேறு ஒருத்தியைக் கொண்டு வர அவருக்கு மனம் துணிந்ததே.. அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டாமா..?
சிவராமன் மனதுக்குள் புழுங்கிப் போனார்.. மகன் அவரை விட்டு விலகி தொலைதூரமாக போய் விட்டதில் அவருக்கு மனம் ரணமானது.. அனுராதா அதற்கான மருந்தாக இருந்தாள்.. அந்த வீட்டின் கடுஞ்சூழலிலும் சிரித்த முகமாக இருக்கக் கற்றுக் கொண்டிருந்தாள்..
அவள் அதை மட்டுமா கற்றுக் கொண்டிருந்தாள்..? அவந்திகாவின் அத்தனை திறமைகளும் அவளிடம் மையம் கொண்டிருந்தன.. அழகாக வீணைவாசிப்பாள்.. பாடுவாள்.. கோலம் போடுவாள்.. பூத்தொடுப்பாள்..
அழகியலாக வாழ்வை மாற்ற யாரால் முடியும்..? அனுராதாவால் அது முடியும்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே..-1
ராதையின் நெஞ்சமே..-1
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA00/Qw0-PaXwDCgRji1U_kpASTHSBNh0zUuSgCLcBGAsYHQ/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA00/Qw0-PaXwDCgRji1U_kpASTHSBNh0zUuSgCLcBGAsYHQ/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-1.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-1.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy