புலர்கின்ற பொழுதில் -24

24 புலர்கின்ற பொழுதில்.. என் கரம் தொட்டு நின்றாய்.. கண்மூடி சிலிர்த்தேன்.. என் முகம் தொட்டுச் சென்றாய்.. சங்கரனும்.. அம்பிகாவ...


24
புலர்கின்ற பொழுதில்..
என் கரம் தொட்டு நின்றாய்..
கண்மூடி சிலிர்த்தேன்..
என் முகம் தொட்டுச் சென்றாய்..

சங்கரனும்.. அம்பிகாவும் திகைத்து விட்டனர்.. வந்த வேலையை முடிக்காமல் விட மாட்டேனென்று கங்கணம் கட்டிக் கொண்ட விதத்தில் குணவதி பேசிய பேச்சிற்கு என்ன பதிலைச் சொல்வது என்று அவர்கள் இருவருக்கும் யோசனையாக இருந்தது..
வந்திருப்பது ஈஸ்வரனின் சம்பந்தக்காரர்கள்.. பெண் கேட்பதோ ஈசுவரனின் மருமகளின் அண்ணனுக்கு.. அதை மறுப்பதற்கு சங்கரன் யோசித்துத்தான் பேச வேண்டியிருந்தது..
அவர்களது உறவினர் வட்டாரத்திலேயே ஈஸ்வரன் தான் பணத்திலும்.. வசதியிலும்.. பெயரிலும்.. புகழிலும்.. மிகப் பெரிய உயரத்தில் இருக்கின்ற ஆள்.. அவரது சித்தப்பாவின் மகன் என்ற அடையாளத்தை சங்கரனால் ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது..
என்னதான்.. அர்ச்சனா அழகியாக இருந்தாலும்.. வைசாலி அவர்கள் வீட்டில் பெண் கேட்டு வருவதற்கு.. அர்ச்சனா.. ஈஸ்வரனின் தம்பி மகள் என்ற உறவுமுறை யோடு இருப்பதுதான் முக்கிய காரணம்..
இப்படி இருக்கையில்.. ஈசுவரனின் மருமகளின் அண்ணனுக்கு பெண் கொடுக்க முடியாதென்று சங்கரனால் முகம் முறித்துப் பேச முடியாமல் போனது..
எனவே.. கவனமாக வார்த்தைகளைக் கோர்த்துப் பேச ஆரம்பித்தார் சங்கரன்..
"ரொம்ப சந்தோஷம் அத்தை.. நீங்க பெரியவங்க.. எதையும் மனதுக்குள் வைக்காம வெளிப்படையா பேசிட்டிங்க.."
"இதில மனசுக்குள்ள வைச்சுக்க என்ன இருக்கு..?"
"நிறைய இருக்கு அத்தை.."
"எனக்கு ஒன்னுமே தெரியலை.."
'உனக்கா ஒன்னும் தெரியாது.. நீ உலகத்தை விற்று விட்டு வருகிற ஆளாச்சே..சங்கரன் மனதிற்குள் திட்டித் தீர்த்தார்..
"அது என்னவோ நிஜம்தான் அத்தை.. உங்களுக்கு எங்கள் நிலைமை தெரியவில்லைதான்.."
"ஏன்.. உங்கள் நிலைமைக்கு என்ன குறை..?"
"நீங்க ஈஸியா சொல்லிட்டிங்க.. எங்க நிலையில் இருந்து பார்த்தாத்தான் தெரியும்.."
"அவங்கவங்க நிலைமையிலேயே.. அவங்கவங்க நிப்போம்.. நீங்க உங்க நிலைமையைச் சொல்லுங்க தம்பி.."
"எங்க வீட்டில் எல்லோருமே படித்தவங்கதான் அத்தை.."
குணவதியின் இடக்குப் பேச்சைத் தாங்கிக் கொள்ள முடியாத சங்கரன் பட்டென்று சொல்லிவிட.. பாரதியின் முகம் மாறிவிட்டது.. அவள் ரோசத்துடன் சின்ன மாமனாரின் முகம் பார்த்தாள்..
"எங்க வீட்டில் இருக்கிறவங்களும் படித்தவங்கதான் மாமா.. யாரும் கைரேகை வைக்கிறவங்க இல்லை.."
"எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமா பாரதி.. பட்டம் வாங்கி உத்தியோகம் பார்க்க வேண்டாமா..?"
"அதுக்கான அவசியம் என் பிறந்த வீட்டுக்கு இல்லை.. என் அண்ணன்.. நூற்றுக்கணக்கான பட்டதாரிகளுக்கு சம்பளம் கொடுக்கிறான்.."
"ஆனால்.. நாங்கள்.. சம்பளம் வாங்கிப் பழக்கப் பட்டவங்க பாரதி.. சம்பளம் கொடுக்கிற இடத்தில்.. சம்பந்தம் பண்ணிக்க எங்களால் முடியுமா..?"
பாரதியின் பேச்சு சுருக்கென்று சங்கரனின் மனதில் தைத்ததால்.. அவர் ஈஸ்வரனின் கோபத்திற்கு ஆளானாலும் பரவாயில்லை என்று பட்டென்று சொல்லிவிட்டார்..
அதற்கு மேல் பேச விருப்பப்படாத பாரதி எழுந்து கொள்ள முயல.. குணவதி பார்வையால் அதைத் தடுத்தாள்.. அதே நேரத்தில்.. இதம்.. பதமாய் பாரதியிடம் பேசாமல் பட்டென்று பேசிவிட்ட கணவரை அம்பிகா பார்வையால் அதட்டினாள்..
இப்போது பாரதியைத் தவிர்த்து.. குணவதி பேச்சு வார்த்தையில் இறங்க.. சங்கரனைப் பதில் சொல்ல விடாமல்.. அம்பிகா அதை எதிர்கொண்டாள்..
"சம்பளம் வாங்கித்தான் எங்களுக்கு பழக்கம்ன்னு அடம்பிடிச்சா எப்படித் தம்பி..உங்க வீட்டில நாங்க பெண்கேட்டு வந்திருக்கிறதுக்கு... உங்க பெண் அர்ச்சனாவை எங்க பேரன் பார்த்திபனுக்கு பிடிச்சுப் போனதுதான் காரணம்.. அதை மனசில் வைச்சிக்கிட்டு நீங்க பேசினா நல்லது தம்பி.."
"அவருக்கு இதைப் பற்றி என்ன தெரியும் பெரியம்மா..இப்படித்தான்.. எந்த நேரம் எதைப் பேசணும்னு தெரியாமல் பேசி வைப்பார்.."
"அதுக்கென்ன மகளே.. நீதான் நாலும் தெரிஞ்சவளாய் இருக்கயே.. நீயே பேசு.."
"பாருங்க பெரியம்மா.. எங்க பாரதியின் அண்ணனுக்கு பெண் கொடுக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும்.."
"அப்புறம் என்னம்மா.. தட்டை மாற்றிக்கலாமா..?"
"எனக்கும் ஆசைதான் பெரியம்மா.. ஆனா.. எங்க அர்ச்சனாவிற்கு வேறு இடத்தில் கல்யாணம் பேசி முடிவாகிருச்சே.."
"இன்னும் நிச்சயம் பண்ணவில்லையே.. அதை நாங்க செய்து விட்டுப் போகிறோம்.."
"நீங்க பெரியவங்க.. இப்படிச் சொல்லலாமா..?"
"ஏம்மா.. நான் சொன்னதில் என்ன தப்பு..நாங்க உலக நடப்பைத்தான் சொல்றோம்.."
"அதில்லை பெரியம்மா.. அர்ச்சனாவிற்கு.. இந்த மாப்பிள்ளையை ரொம்ப பிடித்து விட்டது.. அவங்க பெண் கேட்டு விட்டுப் போனதிலிருந்து.. தரையில் கால் பாவாம சந்தோசமா இருக்கிறாள்.. எங்களுக்கு பணம்.. காசு பெரிதில்லை பெரியம்மா.. எங்க மகள் ஆசைப்பட்ட மாப்பிள்ளையை அவ கல்யாணம் செஞ்சுக்கணும்.. அதுதான் எங்களுக்கு முக்கியம்.. அர்ச்சனா.. வைசாலியம்மாவின் மகன் மேல் ஆசைப்படுகிறாள்.. அதனால எங்களை மன்னிச்சுருங்க.. எங்க மகளுக்கு விருப்பமில்லாததால.. உங்க பேரனுக்கு பெண் கொடுக்க எங்களால் முடியாது.."
அம்பிகா நாசுக்காக.. அர்ச்சனா ஐ.பி.எஸ் மாப்பிள்ளை யைத்தான் விரும்புகிறாள்.. பார்த்திபனை விரும்பவில்லை என்று சொல்லிவிட.. பார்த்திபனின் முகம் பயங்கரமாக மாறியது.. அவன் சட்டென்று திரும்பி.. அறைக்குள் இருந்து.. அவனை கள்ளப்பார்வை பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவை திரும்பிப் பார்த்தான்..
அவனது பார்வையில் தெரிந்த தீயின் ஜூவாலையைக் கண்டு அர்ச்சனா திடுக்கிட்டுப் போனாள்.. காதலுடன் பார்க்கும் பார்த்திபனின் பார்வையைச் சந்தித்தே பழக்கப் பட்டிருந்தவளுக்கு அவனது இந்த வெறுப்பும்.. கோபமும் கலந்த பார்வையை சந்திக்க முடியாமல் போனது..
அர்ச்சனா சட்டென்று அறைக்குள் மறைந்து கொள்ள கூட நின்று கொண்டிருந்த அபிநயா ஆச்சரியப்பட்டுப் போனாள்..
"என்ன அக்கா.. அம்மா இப்படி பிளேட்டை மாற்றிப் போட்டு விட்டாங்க.. உன்மேல சட்டுன்னு பழியை தூக்கிப் போட்டுவிட்டாங்களே.. நீ எப்போ.. அந்த மாப்பிள்ளையை பிடிக்குதுன்னு சொன்ன..?"
"அதுதான் எனக்கும் புரியலை அபி.."
"வந்தவங்களை தட்டிக் கழிக்க.. இதுதான் வழின்னு முடிவு பண்ணிட்டாங்க போல.."
"அதுக்காக இப்படிச் சொல்லலாமா..?"
அர்ச்சனாவின் விழிகளில் நீர் கோர்த்துக் கொண்டது.. அபிநயா தமக்கையை இரக்கத்துடன் பார்த்தாள்.. அவளும் இளம் வயதுப் பெண்தானே.. அவளுக்கு அர்ச்சனாவின் மனநிலை மிக நன்றாகப் புரிந்தது..
"அழாதே.. நீ பாரதி அண்ணியின் அண்ணனைத் தானே விரும்புகிற..?"
"ம்ம்ம்.."
"அதைப் போய்.. இப்போதே அவங்க எல்லோரின் முன்னாலேயும் சொல்லிவிடு.. அப்புறம் நம்ம அம்மா.. அப்பாவால் என்ன செய்ய முடியும்..?"
"அபி.."
"போக்கா.. போய் நேரம் கடத்தாமல் பட்டுன்னு உன் மனதில் இருப்பதை எல்லோர் முன்னாலயும் சொல்லிவிடு.."
"அம்மா.. அப்பா கோபப்படுவாங்களோ.."
"அதைப் பார்த்தால் முடியுமா..உன்னால் இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்டி.. அவனுடன் வாழ முடியுமா..?"
முடியுமா..அது அர்ச்சனாவினால் முடியுமா..இரவும்.. பகலும் மனதிற்குள் அச்சு வெல்லமாக இனிக்கும் பார்த்திபனின் நினைவுகளுடன் இருப்பவளால்.. அவனை விட்டுவிட்டு இன்னொருவனை நினைக்க முடியுமா..?
முடியாது.. அது அர்ச்சனாவினால் ஒருபோதும் முடியாது.. பார்த்திபனைத் தவிர.. வேறொரு ஆணின் நிழல் கூட அவள் மேல் படிவதை அவளால் அனுமதிக்க முடியாது..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -24
புலர்கின்ற பொழுதில் -24
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil24.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil24.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy