புலர்கின்ற பொழுதில் -33

33 புலர்கின்ற பொழுதில்.. வான்மேகம் கண்டேன்.. உன்னிடத்தில் சொல்ல.. ஒருதூது சொன்னேன்.. "என்னைக் காதலிப்பதாகச் சொல்வது உனக்...


33
புலர்கின்ற பொழுதில்..
வான்மேகம் கண்டேன்..
உன்னிடத்தில் சொல்ல..
ஒருதூது சொன்னேன்..

"என்னைக் காதலிப்பதாகச் சொல்வது உனக்கு பழியை ஏற்றுக் கொள்வதைப் போலவா அர்ச்சனா.."
அவனது குரலில் தெரிந்த கோபத்தை அவளால் உணர முடிந்தது.. இருப்பினும் அவள் அவனைச் சமாதானப்படுத்த முனையாமல் வெறுமையுடன் அவனை நோக்கினாள்..
"இது வாக்குவாதம் செய்யும் நேரமில்லை.. உங்களுக்கு பதில் சொல்லும் பொறுமையும் எனக்கு இல்லை.. இது எனக்கு வாழ்வா.. சாவாங்கிற பிரச்சனை.. இதை உங்களால் ஒருநாளும் புரிந்து கொள்ள முடியாது.."
"ஏன் முடியாது..?"
"முடியாதுன்னா முடியாது.."
"சாவு என்ற வார்த்தை உன் வாயிலிருந்து வரலாமாடி.. இப்போதுதானே வாழ்வை ஆரம்பித்திருக்கிறோம்.."
"அதை முறைப்படி ஆரம்பிக்கவில்லையே.."
"அதனால் அது வாழ்வில்லைன்னு ஆகிவிடுமாடி..?"
"இந்த வாழ்வை ஆண்கள் அணுகும் முறை வேறு.. பெண்கள் அணுகும் முறை வேறு.. இந்த வாழ்வே இருவருக்கும் வேறு வேறு வகையில் அறிமுகம் ஆவது தானே.."
"நான் உன்னைப் போல பட்டம் வாங்கவில்லை.. அதனால் எதைச் சொல்ல நினைத்தாலும்.. சுற்றி வளைக்காமல் நேரடியாகவே சொல்லு.."
"இது நடந்து முடிந்துவிட்டது.. இப்போது எனக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டாலும் உங்களுக்கு அதனால் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.. நீங்கள் புது மாப்பிள்ளை போல.. கல்யாணம் பண்ணிக்கொண்டு செட்டில் ஆகிவிடலாம்.. ஆனால் எனக்கு அப்படியில்லை.."
"உன்னை அடித்தே கொன்றுவிடுவேன்.."
"ஸோ.. அடுத்த பெண்ணைப் பார்க்க நீங்க ரெடி.."
"ஏய்ய்.. போடி.. போ.. இன்றைக்கு ஒருநாள் பொறுத்துக் கொள்கிறேன்.. நாளைக்குக் காலையில் எனக்கு செய்தி வரனும்.. வரவில்லைன்னா.. உன்னை வீடு புகுந்து தூக்கிக் கொண்டு போய்விடுவேன்.."
"உங்க தங்கையின் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க மாட்டிங்க.."
"அவ வாழ்க்கைக்கென்னடி குறை வந்தவிடப் போகுது..? அவளுக்கு கல்யாணமாகி.. குழந்தையும் வந்து விட்டான்.. அவ புருசனுக்கு பெண்டாட்டியும்.. பிள்ளையும் வேணுமுன்னு நினைக்கிற அளவுக்குத்தான் குடித்தனம் பண்ணிக்கிட்டிருக்கா.. கார்த்திக் பெண்டாட்டி மேல உயிரையே வச்சிருக்கிறவன்.. மச்சினன் செய்யறது பிடிக்கலைன்னா மச்சினனை தள்ளி வைச்சிட்டுப் போறான்.. அதுக்காக பெண்டாட்டியை தள்ளி வைக்க அவன் என்ன முட்டாளா..?"
"எல்லாம் விவரமாத்தான் பேசறீங்க.."
"எனக்கு விவரம் பத்தலைன்னு இன்னும் உனக்கு நினைப்பிருக்கா..?"
'இவனுடன் பேசி ஜெயிக்க முடியாது..' என்ற அறிவுடன் அர்ச்சனா வாயை இறுக மூடிக்கொண்டாள்..
"இங்கேயே இறக்கிவிடவா.. இல்லை.. உன் வீட்டு வாசலில் இறக்கிவிடவா..?"
"வீட்டு வாசலில் இறக்கிவிடுங்க.."
பார்த்திபன் திருப்தியுடன் அவளைப் பார்த்தான். அவளது வீட்டின் முன்னால் கார் நின்றபோது.. காரின் சத்தத்தைக் கேட்டு அம்பிகா வாசலுக்கு வந்தாள்.
"உன் அம்மா வருகிறாங்க.."
"வரட்டும்.."
அர்ச்சனா பதட்டமில்லாமல் இறங்கி அவனுக்கு 'டாட்டா' காண்பித்தாள்.. அவளது தைரியத்தைக் கண்டு பார்த்திபன் வியந்தான்.. அவளுக்கு பதில் டாட்டா காண்பித்துவிட்டு காரைக் கிளப்பினான்.. கிளம்பும்போது அம்பிகாவின் மேல் ஒரு வெற்றிப் பார்வையை செலுத்தவும் அவன் மறக்கவில்லை..
கோவிலுக்கு போயிருப்பதாக அபிநயா கூறிய பெரிய மகள் பார்த்திபனின் காரில் வந்து இறங்கியதுமில்லாமல்.. அவனுக்கு தன் கண் முன்னாலேயே டாட்டா காண்பித்து வழியனுப்பி வைப்பதைக் கண்ட அம்பிகா அதிர்ந்து போனாள்.. அனல் பறக்க மகளைப் பார்த்தாள்.. தாயின் முகத்தைப் பார்த்தும் பாராதவள் போல அர்ச்சனா அவளைக் கடந்து வீட்டிற்குள் சென்றாள்.. பின்னாலேயே வேகமாய்ப் போன அம்பிகா கோபத்துடன்..
"நில்லுடி.." என்றாள்..
அர்ச்சனா நின்றாள்..
"எங்கேடி போயிருந்த..?" அம்பிகா துளைக்கும் பார்வையுடன் கேட்டாள்..
"பார்த்திபனைப் பார்க்க.." அர்ச்சனா நிதானத்துடன் பதில் சொன்னாள்..
அடுத்த வினாடி அம்பிகா அவளை அடிக்க கையை ஓங்கிவிட அபிநயா பாய்ந்து தாயின் கரத்தை பிடித்துக் கொண்டு அர்ச்சனாவைப் பார்த்து அதட்டினாள்..
"உள்ளே போ அக்கா.."
மறுத்துப் பேசாமல் அர்ச்சனா.. விர்ரென்று அவளது அறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.. தலையோடு தண்ணீரை ஊற்றிய போது.. தண்ணீரோடு அவளது கண்ணீரும் சேர்ந்து வழிந்தது..
குளித்து உடை மாற்றிக் கொண்டு அவள் ஈரத் துணிகளை உலர போட வீட்டின் பின்பக்கம் சென்றபோது அபிநயா அவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள்..
"என்ன அக்கா செய்துட்டு வருகிற..?"
"ஏண்டி.."
"நீ ரூமுக்குள்ள போய் கட்டிலில் குப்புற விழுந்து அழுதுக்கிட்டு இருப்பன்னு பார்த்தால் குளித்துவிட்டு வருகிற.. உனக்கு என்ன ஆச்சு..?"
அர்ச்சனா பதில் சொல்லாமல் கொடியில் துணிகளை காயப்போட ஆரம்பித்தாள்.. தங்கையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத தன் நிலைமையை நினைத்து மனதிற்குள் பாரம் அழுத்தியது..
"காலையில் குளிச்சேதான..?" அபிநயா விட வில்லை..
"ம்ம்ம்.." அர்ச்சனா பேச்சைக் கத்தரித்தாள்..
"அப்புறம் எதுக்கு இன்னுமொரு குளியல்..?"
"இது இப்போ தேவையான பேச்சா அபி..? கசகசன்னு இருந்தது.. குளித்தேன்.. விட்டுத்தள்ளு.."
"ஓகே.. விட்டுத் தள்ளிவிட்டேன்.. நீ போன  காரியம் என்னமாயிற்று..? உன்னவரிடம் பேசிவிட்டாயா..?"
"பேசிவிட்டேன்.."
"வெரிகுட்.. என்ன சொன்னார்..?"
"நாளைக்கு அவருடைய குடும்பத்தோடு வந்து கல்யாணத்தை நிச்சயம் பண்ணி கல்யாண தேதியை குறித்து விடுவதாகச் சொன்னார்.."
"நிஜமாகவா.. உன் ஆள் செம பாஸ்டுதான் போ.."
'அவன் வேகமானவன்தான் அபி.. அவனுடைய வேகத்தின் எல்லை எதுவரைக்கும் போய்விட்டதுன்னு உனக்குத் தெரியாது.. உன்னிடம் சொல்லவும் என்னால் முடியாது.. இந்தக் கல்யாணத்தை அவன் மேல் எனக்குள்ள காதலினால் தான் நான் நடத்த நினைத்தேன்.. ஆனால், அவன் என்னைத் தொட்டுவிட்ட நிர்ப்பந்தத்திற்காக நடத்த வைத்து விட்டான்..' அர்ச்சனா மனம் வெந்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -33
புலர்கின்ற பொழுதில் -33
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-33.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-33.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy