புலர்கின்ற பொழுதில் -30

30 புலர்கின்ற பொழுதில்.. பூங்காலை மயக்கம்.. எனக்கென்று நீ கொடுக்கும்.. உன்னுடைய நெருக்கம்.. கண்களில் நீர் வழிய தேம்பிக் கொண்ட...


30
புலர்கின்ற பொழுதில்..
பூங்காலை மயக்கம்..
எனக்கென்று நீ கொடுக்கும்..
உன்னுடைய நெருக்கம்..

கண்களில் நீர் வழிய தேம்பிக் கொண்டிருந்தவளின் அருகே நெருங்கி அமர்ந்தான் பார்த்திபன்.. காரின் கதவோரமாக ஒன்றிக் கொண்டிருந்தவளுக்கு விலக வழியில்லாமல் போய் விட.. அவள் அவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள்..
"ஹா.. ஹா.." 
அவன் பலமாக சிரித்துக் கொண்டே.. அவளது கையைப் பிடித்து அதில் முத்தம் கொடுத்தான்..
அவளது கை உணர்ந்த அவனது இதழில் ஸ்பரிசம் அவளை என்னவோ செய்தது.. அவனது மீசையின் முடிகளின் உராய்வு அவளுக்குள் ஒரு இன்ப அவஸ்தையை உண்டாக்கியது.. கரம் பற்றிக் கொண்டிருப்பவனின் மார்பில் முகம் புதைக்க அவளது இதயம் விரும்பியதை ஓர் அதிர்வுடன் அவள் உணர்ந்தாள்..
அவன் செய்து முடித்திருந்த செயலுக்கு அவள் அவனை வேம்பாக நினைத்து வெறுத்திருக்க வேண்டாமா..? நீ எனக்கு வேண்டாம் என்று விலக்கி வைத்திருக்க வேண்டாமா..? இத்தனைக்கு பின்னாலும் அவன் சிரிக்கும் சிரிப்பு.. வில்லனின் சிரிப்பைப் போல அவளுக்கு தோன்றாமல் போவது ஏன் என்றுதான் அவளுக்கு புரியவில்லை..
"தள்ளி போங்க.."
அவள் இயலாமையுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசினாள்.. பார்த்திபனுக்கு போன கோபம் திரும்பிவிட்டது.. அவன் விழிகள் இடுங்க அவளை முறைத்துப் பார்த்தான்.. முகம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தவளை பலவந்தமாக முகத்தைப் பற்றி.. முரட்டுத்தனத்துடன் தன் பக்கம் திருப்பினான்..
"ஏண்டி.. என்னைப் பார்க்க பிடிக்கவில்லையா..?"
அவன் விரல்கள் முகத்தை அழுந்தப் பற்றியிருந்த தால் உண்டான வலி மீண்டும் அவளுக்குள் இன்பத்தை கிளறிவிட.. அவள் தன்னோடே போராட வேண்டிய நிலைமைக்கு ஆளானாள்.. அவளுடைய அந்த நிலையை அவன் உணர்ந்து கொண்டு விடக்கூடாதே என்ற பரிதவிப்பு அவள் மனதில் எழுந்தது..
மனமெல்லாம் அவன் மேல் காதல் பொங்கித் தளும்பிக் கொண்டிருக்க.. அவனுடன் போராடுவது எப்படி என்று அவள் திகைத்துத் திணறினாள்.. அதேசமயத்தில் அவன் செய்த செயலை சாதாரண நிகழ்வாக எண்ணி ஏற்றுக் கொள்ளவும் அவளால் முடியவில்லை.. பார்த்திபன் இப்படிச் செய்திருக்கக் கூடாது என்று தான் அவள் மனம் குமுறினாள்..
இதை அவன் செய்திருக்கலாமா..? இது எங்கே.. எப்படி நடந்திருக்க வேண்டும்..? அவனது தாலியை கழுத்தில் வாங்கிக் கொண்டு ஊர்.. உலகம் அறிய.. அவனுக்கு உரிமையுள்ள மனைவியாக.. தனியறையில் அவனை உரிமையுள்ள கணவனாக அவள் சந்தித்திருக்க வேண்டாமா..?
அவனது சிறு தொடுகையில் அவள் கிளர்ந்து அவனது கைகளில் சரிந்து.. மெல்ல.. மெல்ல.. அவனுடன் ஐக்கியமாகியிருக்க வேண்டாமா..?
அதை விட்டு விட்டு.. இப்படி ஆளரவமில்லாத அத்துவானக் காட்டிற்குள்.. பூட்டிய காருக்குள் அவனுடன் பேராடித் தோற்றிருக்க வேண்டுமா..?
வேட்டையாடும் புலியாக அவனும்.. வேட்டையாடப் படும் மானாக அவளும் இருந்திருக்க வேண்டுமா..?
இந்த நினைவு காலம்.. காலத்திற்கும் நிலைத் திருக்குமே என்று அவள் மனம் நொந்தாள்..
அவன் அவளை நெருங்கும் போதெல்லாம் இந்த நினைவு வந்து விடப் போகிறது.. அவன் அவளை ஆக்ரமிக்கும் போதெல்லாம் இன்றைய ஆக்ரமிப்பே மனதில் ஆடப்போகிறது..
'நான் என்ன செய்யப் போகிறேன்..
அர்ச்சனாவின் மனம் தவித்தது..
அவளது தவிப்பை உணராதவனாக பார்த்திபன் மீண்டும் அவளை அதட்டினான்..
"சொல்லுடி.. என் முகத்தைப் பார்க்க உனக்குப் பிடிக்கலையா..?"
'இல்லையே..' அவள் மனதிற்குள் கதறினாள்..
'உன் முகத்தைப் பார்க்க எனக்குப் பிடிக்குமே.. உன் முகத்தைப் பார்க்க மட்டும்தானே பிடிக்கும்.. அதை நீ உணராமல் போனாயே.. ஒரு நிமிடம் என்னோடு பேசிப் பார்த்திருக்க கூடாதா..? நீ சொன்னது போல உன்னை சிரித்து மயக்கியவள்.. ஏன் மௌனமாக நின்றேன் என்ற கேள்வியை பொறுமையாக கேட்டிருக்கக் கூடாதா..? அச்சம்.. மடம்.. நாணம்.. பயிர்ப்பு எல்லாம் படித்த பெண்களுக்கும் உண்டு என்பதை நீ ஏன் அறியாமல் போனாய்..? நீ அழைத்தவுடன் உன் பின்னால் வந்தேனே.. அது உன் முரட்டுத்தனத்திற்கு பயந்து என்று நீ ஏன் நினைத்து விட்டாய்..? உன் மேலுள்ள காதலினால் தான் உன் பின்னால் வந்தேன் என்பதை ஏன் நீ உணராமல் போனாய்..? நீ அழைத்தால் இந்த உலகத்தின் மறுமுனைக்குக் கூட கேள்வியே கேட்காமல் உன் பின்னால் நான் வருவேன்.. இதை என்றாவது நீ இனி உணர்வாயா..?'
அவள் சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள்.. ஒரு பிரளயத்தை சந்தித்து முடித்த வேதனை அவள் முகத்தில் தெரிந்தது..
'என் சஞ்சலமும்.. நிம்மதியும்..
             உங்கள் சொல்லிலே..
    வாழ்கவென்று நீங்கள் சொன்னால்
             வாழும் என் மனம்..
    இல்லை.. மறைகவென்று
             வரம் கொடுத்தால்..
    மறையச் சம்மதம்..'
அன்று காலையில் அவள் கேட்ட பழைய பாடலை மனம் பாடிப் பார்த்தது.. இது போலத்தானே அவளும் இருந்தாள்..? இந்த அவளின் நிலையை அவன் உணராமல் போனானே..
இனி அவனிடம் அதை உணர்த்த அவளால் முடியாது.. இன்றைய நிகழ்வினால் அவளை அடிமைப் படுத்தி விட்டதாக அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்.. ஆனால்.. அது இல்லை என்பதை அவனிடம் அவளால் இனிச் சொல்ல முடியாது..
பார்த்திபன் நினைப்பதைப் போல.. ஒரு பெண்ணின் உடலை வெல்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.. தனக்குப் பிடிக்காதவனின் விரல் உடல் மேல் பட.. எந்தப் பெண்ணும் அவ்வளவு சுலபமாக சம்மதிக்க மாட்டாள்.. சகித்துக் கொள்ள மாட்டாள்.. தன் உயிரைக் கொடுத்துப் போராடுவாள்.. முடியாவிட்டால்.. தன் உயிரை விட்டு விடுவாள்..
அர்ச்சனா.. இந்த இரண்டையும் செய்யவில்லை.. பார்த்திபனின் மூச்சுக்காற்று அவள் மேல் பட்டதுமே.. அவள் தன்வசம் இழந்து சொக்கி விட்டாளே.. அதை பார்த்திபன் உணராமல் போனதுதான் கொடுமை..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -30
புலர்கின்ற பொழுதில் -30
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-30.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-30.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy