புலர்கின்ற பொழுதில் -28

28 புலர்கின்ற பொழுதில்.. உனை சிறையெடுக்க வந்தேன்.. மலர் சிரிப்பு சிரித்து.. எனை நீ சிறையெடுத்து விட்டாய்.. "அவன் என்ன பெ...


28
புலர்கின்ற பொழுதில்..
உனை சிறையெடுக்க வந்தேன்..
மலர் சிரிப்பு சிரித்து..
எனை நீ சிறையெடுத்து விட்டாய்..

"அவன் என்ன பெரிய இவனா..?"
மொட்டையாக பார்த்திபன் இப்படியொரு கேள்வியைக் கேட்டதும் அர்ச்சனா அவன் யாரைச் சொல்கிறான் என்று புரியாதவளாய் குழம்பி விட்டாள்..
"எவன்..?" என்று கேட்கவும் செய்தாள்..
"அதுதாண்டி.. நீ மயங்கிப் போய் நிற்கிறாயே.. அவனைத்தான் சொல்கிறேன்.." பார்த்திபன் கடுகடுத்தான்.
அர்ச்சனாவிற்கு சிரிப்பு வந்து விட்டது.. ஆனால்.. அவன் முன்னால் சிரித்தால் அவன் மலையேறிவிடுவான் என்பதால் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்..
பார்த்திபனிடம் தானே அவள் மயங்கிப் போய் நிற்கிறாள்.. அவனே தன்னைப் பற்றி இப்படிக் கேள்வி கேட்டால் அவளுக்குத்தான் சிரிப்பு வராதா..?
"ஆமாம்.. அவர் பெரிய இவர்தான்.." என்றாள் அவள்..
"என்னடி சொன்னே..?" அவன் கண்கள் தீகங்குகளாக ஜொலித்தன..
"அவரா..? ஓஹோ.. அந்த அளவுக்கு வந்து விட்டாயா..?"
அர்ச்சனா அவளுடைய பெற்றோர் பார்த்த ஐ.பி.எஸ் படித்த மாப்பிள்ளையைத்தான் விரும்புகிறாள் என்ற நினைவுடன் இருந்த பார்த்திபன்.. அதே போக்கிலேயே பேசிக் கொண்டிருந்தான்..
'அவன்' என்று சொல்லக்கூட அர்ச்சனாவிற்கு மனமில்லையா என்ற கோபம் அவனுக்குள் கிளர்ந்து எழுந்தது.. அந்த அளவுக்கு அர்ச்சனாவை பதவி மோகம் பிடித்து ஆட்டுகிறதா..
அவன் மனதிற்குள் கனன்று கொண்டிருந்த கனலைப் பற்றி அறியாதவளாக அர்ச்சனா உல்லாசமாக அவனுடன் உரையாட ஆரம்பித்தாள்..
"அந்த அளவுக்கு வந்துதானே ஆகனும்..."
"பேசாதே.. பல்லைக் கழட்டி விடுவேன்.. அவராமே.. அவர்.. குட்டிச்சுவர்.. அந்தக் குட்டிச் சுவரைத்தான் உனக்குப் பிடித்துத் தொலைத்திருக்கா..?"
"ஆமாம்.." பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்த்தபடி அவள் சொன்னாள்..
அடுத்த வினாடி.. அவள் கன்னத்தில் பார்த்திபன் ஓங்கி ஒரு அறை விட்டான்.. வலி தாங்க முடியாமல் துடித்துப் போன அர்ச்சனா கன்னத்தைப் பிடித்தபடி சிலையாய் சமைந்து விட்டாள்..
இப்போது அடர்த்தியான மரங்கள் அடர்ந்த தோப்புத் தெரிந்தது.. பார்த்திபன் வெறி கொண்டவனாக காரை அந்தத் தோப்பிற்குள் செலுத்தி ஒரு ஓரமாக கொண்டு சென்று நிறுத்தினான்..
அடர்ந்த தோப்பிற்குள் கார் நின்று கொண்டிருந்ததை சாலையில் போவோரால் பார்க்க முடியாதபடி கார் மறைவாக நின்று கொண்டிருந்தது.. சாலையில் ஆள் நடமாட்டம் இல்லை.. கார் தோப்பிற்குள் சென்று நின்றதை யாரும் பார்க்கவும் இல்லை..
பார்த்திபன் திரும்பி அமர்ந்து அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.. அவனது முகத்தில் தெரிந்த கடினத் தன்மை அர்ச்சனாவை அச்சுறுத்தியது..
"ஏன் அப்படிப் பார்க்கறீங்க..?" அவள் குரல் நடுங்க கேட்டாள்..
"நான் உன் கிட்ட நேற்று என்ன சொன்னேன்..?" அவன் இறுக்கமான குரலில் கேட்டான்..
அவனது கோபம் கண்டு ஏற்கெனவே அர்ச்சனா பயந்து போயிருந்தாள்.. அவளை அவளுடைய பெற்றோர் கூட கைநீட்டி செல்லமாக ஒரு அடி அடித்ததில்லை.. அவனோ காதின் ஜவ்வு கிழிந்து விடும் அளவிற்கு பேயறை அறைந்து விட்டான்.. அந்த அடி வாங்கியதிலேயே அவள் அதிர்ந்து கிடுகிடுத்துப் போய் அமர்ந்து விட்டாள்.. இப்போது அவன் கோபக்குரலில் பேச ஆரம்பிக்கவும் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அவன் முதல் நாள் என்ன சொன்னான் என்பது அவளுக்கு மறந்துபோனது.. அவனது கோபம் கலந்த ஆவேசத் தோற்றம் மட்டுமே நினைவில் நின்றது..
"என்ன சொன்னீங்க..?"
"ஓஹோ.. அதுகூட உனக்கு மறந்துபோய் விட்டதா..?"
"நீங்கதான் நினைவு படுத்துங்களேன்.."
"ஆமாண்டி.. அதுகூட உனக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது.. கேணையன் போலத் தெரியுதா..?"
அவன் அவளுக்கு ஹீரோவைப் போலத் தெரிந்தான்.. அதை உணராமல் பேசிக் கொண்டிருப்பவனிடம்..
தன் மனதை புரிய வைக்கும் வழி தெரியாமல் அவள் தவித்தாள்..
"தயவுசெய்து கோபப்படாதீங்க.. நிஜமாகவே நீங்க எதைச் சொன்னீங்கன்னு எனக்கு நினைவில்லை.."
அவனது முகம் மேலும் கடினமுற்றது.. இப்போது அவன் முகத்தைப் பார்க்கவே அர்ச்சனாவிற்கு பயமாக இருந்தது..
"வேண்டாம்.. அப்படிப் பார்க்காதீங்க.. எனக்கு பயமா யிருக்கு.."
"ஓ.. என்னைப் பார்த்தால் உனக்குப் பயம்தான் வருகிறது.. ஆனால் உன் வீட்டில் சொல்லும் மாப்பிள்ளையின் மேல் மட்டும் காதல் வருகிறது.. கெட்டிக்காரிடி நீ... நான் தான் கேணையன் போல உன்கிட்ட என் காதலை சொல்லி விட்டு.. மறுநாளே பெண் கேட்டு வந்து நிற்கிறேன்.."
அர்ச்சனா திகைத்து விழித்தாள்.. அவள் இதை எப்படி மறந்து போனாள்.. அவன் காதல் சொல்லிய வினாடியில் உயிர்த்தெழுந்தவளுக்கு.. அவன் காதல் சொன்ன விவரம் மட்டும் எப்படி மறந்து போனது..? அவன் அதைத்தானே கேட்டிருக்கிறான்.. அவள் அவன் எதிர் பார்த்த பதிலைச் சொல்லியிருந்தால் அமைதியடைந்திருப்பானே.. அதை விட்டு விட்டு அவளே தன் வாயால் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்து விட்டாளே...
மறக்கலாமா..? அவன் காதல் சொன்னதை அவள் மறக்காலாமா..? அதற்குப் பதிலைச் சொல்லாமல் அப்போது ஓடி வந்தவள்.. அதற்குப் பின்னால்.. ஒவ்வொரு நொடியிலும் அவனைத்தானே நினைத்துக் கொண்டிருந்தாள்..
'உன்னை நினைக்கவே..
             நொடிகள் போதுமே..
    உன்னை மறக்கவே
             யுகங்கள் ஆகுமே..'
நேற்று அவள் பாடிய பாடலின் பொருளை அவளே உடைத்து எறிந்தவிட்டாளா..? அவள் பதட்டத்துடன் அவனைப் பார்கையிலேயே அவன் நிதானமாக அவளை நெருங்கினான்..
'என்ன இது.. இவன் என்ன செய்கிறான்..?'
அர்ச்சனா.. அனுமானிக்கும் முன்னரே அவன் அவள் மேல் பாய்ந்து படர்ந்து விட்டான்..
அவன் அவளுடைய காதலன்தான்.. ஆனால் அர்ச்சனா அவனிடம் காதல் சொல்லத்தானே வந்தாள்.. கலப்பதற்கு வரவில்லையே..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -28
புலர்கின்ற பொழுதில் -28
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-28.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-28.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy