புலர்கின்ற பொழுதில் -26

26 புலர்கின்ற பொழுதில்.. வருகின்ற கவியாய்.. வளர்பிறையின் நிலவாய்.. என்னருகில் வந்தாய்.. தாகத்தில் தொண்டை வறண்டு போயிருக்கிறவள...


26
புலர்கின்ற பொழுதில்..
வருகின்ற கவியாய்..
வளர்பிறையின் நிலவாய்..
என்னருகில் வந்தாய்..

தாகத்தில் தொண்டை வறண்டு போயிருக்கிறவளின் முன்னால் கொட்டும் அருவி தோன்றினால்.. அவளது மனநிலை எப்படியிருக்கும்..?
அதே மனநிலையில்தான் அர்ச்சனாவும் இருந்தாள்..
கை நழுவிப் போன காதல் மீண்டும் கைகூடி விடக் கூடும் அன்று அபிநயா நம்பிக்கையூட்டியதும் அவளது உடலில் புத்துணர்வு திரும்பியது.. அவள் கண்கள் எதிர்பார்ப்புடன் ஒளிர்ந்தன..
"நடக்குமா அபி.."
"நிச்சயம் நடக்கும்.. நீ மட்டும் அவரிடம் சொதப்பி விடாமல் உன் காதலைச் சொல்லு.."
"அவர் என்னை நம்புவாரா..?"
"நீ போய் சொன்னால் நிச்சயம் நம்புவார்.. ஆனால்.. நீ இங்கேயே நேரத்தைக் கடத்திக் கொண்டு இருந்தாயானால் அவர் பாட்டுக்கு சோழவந்தானுக்கு பறந்து விடுவார்.. நீ அம்மாவின் ஆசைப்படி.. வேறு ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட வேண்டியது தான்.."
"சொல்லாதே அபி.."
"நான் சொல்லாம இருக்கணும்னா.. நீ போய் உன்னவரிடம் உன் காதலைச் சொல்லு..."
"சொல்லத்தான் போகிறேன்.."
"எனக்கென்னவோ.. நீ சொல்லத்தான் நினைக்கிறேன் கேசுன்னு தோணுதுக்கா.."
"என்னடி இப்படிச் சொல்கிற..?"
"வேற எப்படிச் சொல்லச் சொல்ற..? இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்கேயே நின்னு நேரத்தைக் கடத்தினேன்னு வை.. மாடியிலிருந்து அம்மாவும்.. அப்பாவும் இறங்கி வந்துடுவாங்க.. உன்னவரும்.. ஊருக்குப் போய்விடுவார்.. அப்புறம்.. நீ நிஜமாவே.. பாட்டுப் பாடிக்கிட்டுத்தான் உட்காரனும்.."
"பாட்டா..?"
"தோடா.. பாட்டுன்னா என்னன்னே உனக்குத் தெரியாதாக்கும்.. இன்னைக்கு காலைலே கூட ஒரு பாட்டைப் பாடித் தூள் கிளப்பிக்கிட்டு இருந்தயே.. நான் கவனிக்கலைன்னு நினைக்கறியாக்கும்.."
"போடி நீவேற.. நான் இருக்கிற நிலைமையில.. பாட்டு ஒன்னுதான் எனக்குக் குறைச்சலாக்கும்.."
"நிலைமைக்கு ஏத்த மாதிரி.. பாட்டை மாத்திப்பாடு.."
அர்ச்சனா முறைப்பதை பொருட்படுத்தாமல் அபிநயா பாடிக் காட்ட ஆரம்பித்து விட்டாள்..
"சொல்லத்தான் நினைக்கிறேன்..
             உள்ளத்தால் துடிக்கிறேன்..
    வாயிருந்தும் சொல்வதற்கு..
             வார்த்தையின்றி தவிக்கிறேன்.."
"ஏண்டி.. என் நிலைமையைப் பார்த்தால் உனக்கு கேலியா இருக்கா..?"
"அதோ.. அம்மா வருகிறாங்க.."
"அபி.. நான் கோவிலுக்குப் போயிருக்கேன்னு அம்மாவிடம் சொல்லி விடு.."
அர்ச்சனா வாசலுக்குப் பாய்ந்தாள்.. வராத தாயை.. வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி.. அர்ச்சனாவை கிளப்பி விட்டுவிட்ட அபிநயா தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்..
'எனக்கு உன்னைத் தெரியாதா அக்கா.. நீ காதலை வெளியே சொல்லும் தைரியமில்லாத கோழை.. பேசிப் பேசியே நேரத்தை வீணடிப்பாயே தவிர.. சட்டென்று கிளம்பிப் போய் பார்த்திபனிடம் பேசும் துணிச்சல் உனக்கு அவ்வளவு சீக்கிரத்தில் வராது.. உன்னைகிளப்பி விடத்தான் நான் அம்மா வருவதாக புருடா விட்டேன்.. இப்போது இந்த ஓட்டம் ஓடுகிறாயே.. இதே ஓட்டத்தை கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நீ ஓடியிருந்தால்தான் என்ன..?'
வீட்டை விட்டு.. ஓட்டமும் நடையுமாக வெளியே வந்த அர்ச்சனா.. தெரு முனையைத் தாண்டியதும் தான் வேகத்தை குறைத்து மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்..
'ஆட்டோ ஏதாச்சும் கிடைக்குமா..?' என்ற யோசனையுடன் தெருவை பார்வையால் துழாவிய வளுக்கு... அப்போதுதான் தான் வெறுங்கையுடன் கிளம்பி வந்திருக்கிறோமென்ற எண்ணமே வந்தது..
'அடடா.. கையில் பணமே இல்லையே...' மலைத்து நின்றவளுக்கு.. பணம் எடுப்பதற்காக வீட்டுக்குப் போக மனமில்லை..
அவள் பணத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது.. அம்பிகாவின் பார்வையில் பட்டுவிட்டால் வேறு வினையே வேண்டாம்.. அவள் எங்கே போகிறாள்.. எதற்குப் போகிறாள்.. என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு அவளை ஓர்வழி பண்ணிவிடுவாள்.. உண்மை அவளுக்கு தெரிந்துவிட்டால் பெரிய ரகளையே வீட்டில் நடந்து விடும்..
அர்ச்சனா ரகளையை நினைத்து பயப்படவில்லை.. ஆனால் பார்த்திபனை சந்தித்து அவளுடைய காதலைi சொல்வதற்கு முன்னாலேயே அவள் வீட்டில் சிறைபட்டு விடக்கூடாது என்ற பயம்தான் அவளுக்கு..
வீட்டுக்குத் திரும்பிப் போய் பணத்தை எடுக்கும் எண்ணத்தை ஒதுக்கி விட்டு.. பாரதியின் வீட்டுக்குப் போக வேறு வழி என்ன என்று யோசிக்க ஆரம்பித்தாள் அர்ச்சனா..
'பேசாமல் ஆட்டோ பிடித்து.. பெரியப்பாவின் வீட்டிற்குப் போய் விடலாம்.. அங்கே பணம் வாங்கி ஆட்டோவுக்கு கொடுத்து விடலாம்..'
இந்த யோசனை உசிதமாக அவளுக்குப் பட்டது.. இதுவரை இதைப் போல அவள் செய்ததில்லை என்றாலும்.. இன்று அவளுக்கு வேறு வழி இல்லையே..
துரத்தில் போய் கொண்டிருந்த ஆட்டோவை..
"ஆட்டோ.." என்று கூவி அழைத்தாள் அர்ச்சனா..
விர்ரென்று ஒரு கார் வந்து அவள் பக்கத்தில் நின்றது..
'ஆட்டோவைக் கூப்பிட்டால் கார் வந்து நிற்குதே..' அர்ச்சனா சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தாள்..
" ஏறு.." என்று காரின் முன் பக்க கதவை அவளுக்காக திறந்து விட்டபடி.. காரின் டிரைவர் சீட்டிலிருந்த பார்த்திபன் கூறினான்...
'நீங்களா..' வாய்விட்டு சொல்ல நினைத்த வார்த்தை தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள.. பேச்சு வராமல் திணறி நின்றாள் அர்ச்சனா..
அதை அவளது தயக்கமாக எடுத்துக் கொண்ட பார்த்திபன் அனல் பறக்க அவளைப் பார்த்தான்..
"நான் உன்னிடம் பேசணும்.. நீ காருக்குள் ஏறிவிட்டால் நாலுபேர் பார்க்காமல் ரகசியமாக நம் பேச்சை பேசி முடித்து விடலாம்.. இல்லை.. நான் பெரிய இவளாக்கும்.. உன்கூட காரில் ஏறி தனியாப் பேச மாட்டேனாக்கும்ன்னு.. வழக்கடிச்சேன்னு வைய்யி.. தெருவில் இறங்கி.. உன்னைக் காரில் தூக்கிப் போட்டுக் கிட்டுப் போக நான் யோசிக்க மாட்டேன்.. அதனால.. நீயே காரில் ஏறி விடு.."
பார்த்திபன் அவளை மிரட்டுவதாக நினைத்துக் கொண்டு பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் செவியில் தேனாக இறங்கியது..
மழைக்கு ஏங்கும் சாதகப் பட்சிக்கு கொட்டும் மழையைக் கண்டால் ஏற்படும் ஆனந்தம் அவளுக்குள்ளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உணராதவனாய் பார்த்திபன் அவளை கனல் கக்கும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான்..
அர்ச்சனா தயங்குவதாக நினைத்து அவன் கொந்தளித்துக் கொண்டிருக்க.. அவளோ கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் காரில் ஏறி அவனருகில் அமர்ந்து கொண்டாள்..
கும்பிடப் போன தெய்வம்.. குறுக்கே வந்து விட்ட பேரானந்தம் அவளுக்கு..
மயிலே.. மயிலே யென்றால் இறகு போடாது.. அடி உதவுவதைப் போல.. அண்ணன், தம்பி கூட உதவ மாட்டான் என்ற எண்ணம் அவனுக்கு..
கார் கிளம்பியது.. சாலைப் போக்குவரத்தில் கலந்தது.. தஞ்சாவூரை விட்டு வெளியேறியது..
அர்ச்சனா சலனமில்லாமல்.. அமைதியாக வந்தாள்.. எங்கே போகிறோமென்று கேட்கவில்லை.. ஏன் கார் தஞ்சையை விட்டு வெளியே செல்கிறது என்று பதறவில்லை..
அவளது அந்த அமைதியையும் அவன் தவறான கோணத்தில்தான் எடுத்துக் கொண்டான்..
"தெரியும்டி எனக்கு.. உன்னை மாதிரி எத்தனை பேரை நான் பார்த்திருப்பேன்.. விழுந்து விழுந்து சைட் அடிக்க வேண்டியது.. வேணும்னே வலிய வந்து பேசுவது.. கண்ணில் படுகிறது போல இங்கிட்டும்.. அங்கிட்டும் நடக்க வேண்டியது.. காதலிக்கிறேன்னு ஒருத்தனை வாயைத் திறந்து சொல்ல வைச்சுட்டு... அதுக்கு முடியாதுன்னு பதிலைச் சொல்லாம.. வெட்கப்படுவதைப் போல போக்குக் காட்டி ஓடி விட வேண்டியது.. எவனாவது வகைதொகையாய் மாப்பிள்ளை அமைந்துட்டான்னா.. ஒன்றும் தெரியாத குழந்தையைப் போல கழுத்தை நீட்டிவிட்டு.. அவனுடன் குடும்பம் நடத்த கிளம்பிவிட வேண்டியது.. இதெல்லாம் தெரியாத பாப்பான்னு என்னை நினைச்சுட்டியா..? நான் பார்த்திபன் டி.. ஒன்றை அவ்வளவு சீக்கிரமாக நினைத்து விடமாட்டேன்.. நினைத்து விட்டால் அதை அடையாமல் விடமாட்டேன்.."
அவனது வார்த்தைகளில் தெரிந்த உறுதியைக் கண்டு கண்கள் மின்ன அர்ச்சனா அவனை திரும்பிப் பார்த்தாள்.. அந்தப் பார்வையில் அவன் அவளை விட்டுக் கொடுத்து விடமாட்டான் என்ற நம்பிக்கை தெரிந்தது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -26
புலர்கின்ற பொழுதில் -26
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-26.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-26.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy