புலர்கின்ற பொழுதில் -23

23 புலர்கின்ற பொழுதில்.. என் கண் பொத்தி நின்றாய்.. கரம் விலக்கிப் பார்த்தேன்.. கண்ணாமூச்சி விளையாட்டென்றாய் .. அறைக்குள் அர்ச...


23
புலர்கின்ற பொழுதில்..
என் கண் பொத்தி நின்றாய்..
கரம் விலக்கிப் பார்த்தேன்..
கண்ணாமூச்சி விளையாட்டென்றாய்..

அறைக்குள் அர்ச்சனா அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவளால் பார்த்திபனை நன்றாகப் பார்க்க முடிந்தது.. அவன் விழிகள் அவளை தேடுவதை உணர்ந்தவளின் மனதில் மெல்லிய காதலின் சாரல் அடித்தது.. வீடு பூராவும் சுற்றியலைந்த விழிகள்.. அறைப்பக்கம் திரும்பி அவளைக் கண்டுபிடித்துவிட்டன.. அவன் கண்களில் மின்னிய மின்னலைக் கண்டதும் அவளுக்குள் இனம் புரியாத இன்ப அலை தோன்றிப் பரவியது..
    "கண்ணோடு கண் நோக்கின் - வாய் சொல்லால்
      என்ன பயன்..?"
வள்ளுவரின் ஹைக்கூ கவிதை மனதில் தோன்ற.. அர்ச்சனா முகம் சிவந்தாள்.. அதை அபிநயா விசித்திரமாக பார்த்தாள்..
"ஏய்ய்.. லூசு.. அவங்க எதுக்கு வந்திருக்கிறாங்கன்னு தெரியுதா..?" என்று எரிச்சலுடன் அர்ச்சனாவைக் கேட்டாள்..
"லூசு.. கீசுன்ன.. பல்லை உடைச்சிருவேன்.. அவங்க எதுக்கு வந்திருந்தாலும்.. அதைப் பற்றி உனக்கு என்னடி வந்தது..?" அர்ச்சனா கோபமாக பதிலடி கொடுத்தாள்..
"எனக்கென்ன வந்ததா..? முட்டாளே.. அவங்க உன்னைப் பெண் கேட்டு வந்திருக்கிறதைப் போலத் தெரியுது.."
"வந்தால் வரட்டுமே.. அதுக்காக என்னை ஏண்டி முட்டாளாக்குற..?"
"வந்தால் வரட்டுமா..? இப்படிப் பேசினால் உன்னை முட்டாளுன்னு சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது..? உன்னைப் பெண் பார்க்க இந்த வாரம் யார் வரப் போறாங்கன்னு தெரியுமா..?"
"யார் வரப் போறாங்களாம்..? பெரிய மன்னாதி மன்னன் வரப் போகிறானா..?"
"ஆமாம் அக்கா.. உனக்கு ஐ.பி.எஸ். மாப்பிள்ளை மன்னாதி மன்னன் இல்லை.. இந்தப் படிக்காத மேதை தான் மன்னாதி மன்னன்.."
"அவர் படிக்கவில்லைன்னு நீ கண்டாயா..? அது எப்படி நீ அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லலாம்.."
"பத்தாவதெல்லாம் ஒரு படிப்பா..? இதை வெளியில் சொல்லிவிடாதே.. கைகொட்டி சிரிப்பார்கள்.."
"சிரித்தால் பல்லைத் தட்டி கையில் கொடுத்து விடுவேன்.."
"நீ யார் பல்லையாவது கழட்டி விடுவதுங்கிற குறிக்கோளோடு சுத்தியலும் கையுமாகவே அலை.. எனக்கென்ன வந்தது..? உன் மண்டையில் கொஞ்சமாவது மசாலா இருக்குமான்னு.. பார்த்தேன்.. அது இல்லை.."
"அதை.. நீ சொல்லக் கூடாது.. நீ எடுத்த மார்க்கின் லட்சணம் எனக்குத் தெரியாதா..?"
"எனக்கும்தான் தெரியலை.."
"எதுடி..?"
"நீ ஏன் இந்த ஆளுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகிறாய்ன்னு.."
"அது உன் கவலையில்லை அபி.."
"ச்சு.. உனக்குச் சொன்னால் புரியாது.. எல்லாத்தையும் விளக்கணும்.. அக்கா..! முன்னால் போகிற வண்டி ஒழுங்காகப் போனால்தான்.. என் வண்டியும் ஒழுங்காப் போகும்.."
"என்னடி.. எதையெதையோ சொல்கிற..?"
"அட என் மக்கு அக்காவே.. நீ ஒரு ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ்.. மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் தான் எனக்கும் அப்படி மாப்பிள்ளை கிடைக்கும்.. அதை விட்டுவிட்டு இப்படி படிக்காத மேதைக்கு கழுத்தை நீட்டினேன்னு வை.. எனக்கும் இதைப் போல ஒரு பேதை தான் வந்து வாய்த்து தொலைப்பான்.."
"பேதை.. கீதைன்னு சொன்னால் நடக்கிறதே வேறு அபி.."
"கீதைன்னு நான் எப்போ சொன்னேன்..? இந்த ஆளுக்கு கீதையைப் பற்றி என்ன தெரியும்..?"
"உன்னை விட இவருக்குத்தான் கீதையை நன்றாகத் தெரியும்... கடன்களைப் புரிந்து கவலை விடுன்னு கீதையில் சொல்லியிருக்கு.. அதுக்கு சரியான உதாரணம் இவர் தான்.."
"போதுமே.. இந்த ஆளைப் பற்றிய பெருமை.."
"உனக்கெல்லாம் இது எங்கே புரியப் போகுது.. கழுதைக்குத் தெரியுமா.. கற்பூரத்தின் வாசனை..?"
"நான் கழுதை.. உன் ஆள் கற்பூரமா..? உனக்கே இது ரொம்ப ஓவராகத் தெரியவில்லையா..?"
பேச்சுவாக்கில் அபிநயா பார்த்திபனை அர்ச்சனாவின் ஆள் என்று சொல்லிவிட.. அர்ச்சனா மகிழ்ந்து போனாள்.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்..
"எனக்கொன்னும் ஓவராய் தெரியவில்லை.. போடி.." என்று சொல்லிவிட்டு.. ஹாலில் நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தையில் கவனத்தைச் செலுத்தினாள்..
பாரதியின் முக பாவத்தை வைத்தே அவள் என்ன பேசப் போகிறாள் என்பதை யூகித்து விட சங்கரனும்.. அம்பிகாவும்.. ஒருவர் முகத்தை.. ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
"நான் கூட அண்ணனிடம் ஒரு முக்கியமான விசயத்தை சொல்ல வேண்டும் பாரதி.. இப்போதுதான் அண்ணனிடம் சொல்லிவிட்டு வரலாமென்று நினைத்துக் கிளம்பிக் கொண்டேயிருந்தேன்.. நல்லவேளையாக நீயே வந்துவிட்டாய்.." என்று பாரதியிடம் சொன்னார் சங்கரன்..
"அப்படியா.. என்ன விசயம் மாமா..?"
"நம்ம அர்ச்சனாவை வைசாலியம்மா மகனுக்கு கொடுக்கிறதாக இருக்கிறோம்.. இந்த வாரக் கடைசியில் அவர்கள் வீட்டிலிருந்து நிச்சயம் பண்ண வருகிறாங்க.. அண்ணன்தான் இந்த விசேசத்தை முன்னே நின்று நடத்தனும்.. இதை சொல்லத்தான் அண்ணன் வீட்டுக்கு கிளம்பிக்கிட்டு இருந்தேன்.. நீயே வந்துவிட்டாய்.. சொல்லும்மா.. என்ன விசயம்..?"
சங்கரன் இப்படிக் கேட்டால்.. பாரதி எப்படிப் பதில் சொல்வாள்..? என்ன பதிலைச் சொல்லுவாள்..?
அவள் முகத்தில் ஈயாடவில்லை.. செய்வதறியாதவளாக.. பெற்றவர்களின் முகத்தைப் பார்த்தாள்.. வேதநாயகியும்.. சுந்தரமூர்த்தியும்.. முகம் மாற.. துளசிராமனின் முகம் இருண்டே போனது.. இது எதுவுமே பாதிக்காமல்.. நிமிர்வாய் அமர்ந்திருந்தது.. குணவதியும்.. பார்த்திபனும் மட்டும்தான்..
"அதுக்கென்னய்யா.. பொண்ணுன்னு இருந்தால்.. ஆயிரம் பேர் கேட்டு வரத்தான் செய்வாங்க.. அதைப் பார்த்தால் முடியுமா..? முதல்ல பொண்ணு கேட்டு வாரவங்களுக்குத்தான் பொண்ணு கொடுக்கனும்னு சட்டம் எதுவும் இருக்கா..? அவங்களும் பொண்ணு கேட்டிருக்காங்க.. இப்போ நாங்களும் பொண்ணு கேட்டுத்தான் வந்திருக்கிகோம்.. இரண்டு சம்பந்தத்தில்.. எந்த சம்பந்தம் நல்ல சம்பந்தம்ன்னு பார்த்து நீங்களே முடிவு பண்ணுங்க.. என்ன அம்பிகா நான் சொல்றது சரிதானே.."
இப்படி ஆணித்தரமாக பேசும் பெரிய மனுஷியிடம் 'நீ பேசுவது சரியில்லை..'யென்றா அம்பிகாவால் சொல்ல முடியும்..?
அவள் வேறு வழியின்றி.. 'ஆமாம்..' என்ற பாவனையில் தலையை அசைத்து வைத்தாள்..
"அதானே பார்த்தேன்.. நீ நல்லது.. கெட்டது தெரிஞ்ச பொம்பளை.. சரின்னுதான் சொல்லுவ.. தப்புன்னு உன்னால் சொல்ல முடியுமோ..?"
'அது எப்படிச் சொல்ல முடியும்.. சொன்னால் சும்மா விட்டுவிடுவீங்களா..?'
"இப்ப.. எங்க பாரதியையே எடுத்துக்க.."
'அவள் என்ன கைப்பிள்ளையா.. நான் எடுத்துக் கொள்ள..?'
"அவகிட்ட ஒரு விசயத்தை சொன்னா.. அதை நல்லா.. அலசி.. ஆராய்ந்து.. அதுக்கப்புறம்தான் ஒரு முடிவுக்கு வருவா.."
'இதை எதுக்கு இந்தம்மா.. இப்பப் போய் என்கிட்ட சொல்கிறாங்க..'
"எடுத்த எடுப்பில் முடியாதுன்னு பதில் சொல்ல மாட்டா.."
'ஆக.. நான் உங்ககிட்ட பொண்ணைக் கொடுக்க முடியாதுன்னு உடனே சொல்லக்கூடாதுங்கறீங்க..'
"இதை எதுக்கு உன்கிட்ட சொல்கிறேன்னு தெரியுமா..?"
'தெரியவில்லையே.. அதையும் நீங்களே சொல்லிருங்க.. எனக்கு எதுக்கு வம்பு..'
"நீயும் உடனடியாக.. தடாலடியாக முடிவைச் சொல்லாம யோசிச்சு பதிலைச் சொல்லு.. அர்ச்சனாவை எங்களுக்கு பிடிச்சிருக்கு.. எங்க பார்த்திபனுக்கு அர்ச்சனாவை பெண் கேட்டு நாங்க வந்திருக்கிறோம்.. இதைச் சொல்லத் தான் நாங்க வந்திருக்கிறோமுன்னு உங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும்.. தெரிஞ்சதினாலதான்.. எடுத்து எடுப்பிலேயே அர்ச்சனாவை நிச்சயம் பண்ண மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வார சேதியை சொல்லுகிறீங்க.. இதைப் புரிஞ்சுக்காம இருக்கிறதுக்கு நாங்க முட்டாள் ஜனங்களும் இல்லை.. வந்த வேலையை முடிக்காமல் நாங்க கிளம்பினதா சரித்திரமும் இல்லை.. அதனால நாங்க வந்த நோக்கத்தை சொல்லிட்டேன்.. இப்ப.. புருசனும்.. பெண்டாட்டியும் எங்களுக்கு என்ன முடிவைச் சொல்கிறீங்க..?"



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -23
புலர்கின்ற பொழுதில் -23
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-23.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-23.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy