புலர்கின்ற பொழுதில் -22

22 புலர்கின்ற பொழுதில்.. பொன் வானம் தன்னில்.. வானவில்லைக் கண்டேன்.. வைகறையில் இன்பம் கொண்டேன்.. அர்ச்சனா திருமண வயதில் இருப்ப...


22
புலர்கின்ற பொழுதில்..
பொன் வானம் தன்னில்..
வானவில்லைக் கண்டேன்..
வைகறையில் இன்பம் கொண்டேன்..

அர்ச்சனா திருமண வயதில் இருப்பது உண்மை தான்.. அந்த இளம் வயதுக்கே உரிய காதல் உணர்வுகளால் அவளது இரவுத் தூக்கம் கெட்டதும் உண்மைதான்..
ஆனால் அப்படி உறக்கத்தைக் கெடுத்தது பார்த்திபனின் நினைவுகள்தான்.. அதை உணராதவளாக அம்பிகா.. அவள் பார்த்த மாப்பிள்ளையை நினைத்து அர்ச்சனா.. தூக்கம் கெட்டு தவிப்பதாக சங்கரனிடம் கூறியதுதான் வேடிக்கை..
"ஆனானப்பட்ட ஆளுகளுக்கே ஆப்பை.. சாப்பை யாகத்தான் மாப்பிள்ளை கிடைக்குது.. நமக்கு ஐ.பி.எஸ் மாப்பிள்ளையே கிடைக்குதுன்னு சொன்னால் அது கடவுளின் அருள்தான்.." அம்பிகா உணர்ச்சிவசப்பட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டாள்..
'அட போம்மா.. நீயும் உன் ஐ.பி.எஸ் மாப்பிள்ளை யின் பெருமையும்.. என் பார்த்திபனின் கம்பீரத்துக்கு முன்னால்.. அந்த ஐ.பி.எஸ் மாப்பிள்ளையால் நிற்க முடியுமா..?' அர்ச்சனா கர்வத்துடன் நினைத்துக் கொண்டாள்..
எப்படியாவது பார்த்திபனை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் அவளுக்குள் கிளர்ந்தது.. அதுவும்.. அவன் அன்று ஊருக்குக் கிளம்பப் போகிறான்..
காதலைச் சொன்னவன் தன் செல்போன் நம்பரைச் சொல்லித் தொலைத்தானா என்று மனதிற்குள் எரிச்சலுற்றாள் அர்ச்சனா..
'உணக்கையாய் பேசினானே.. உன்னை நான் காதலிக்கிறேன்னு..! இதுதான் அவன் காதல் செய்யும் லட்சணமா..' அர்ச்சனா பல்லைக் கடித்துக் கொண்டாள்..
'ம்ஹூம்.. ஊருக்குள் அவனவன் காதல் செய்கிறேன் பேர்வழின்னு சுவரேறிக் குதிக்கிறானுக.. எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கிறானே.. இந்நேரம்.. இருநூறு தடவையாவது.. இந்தத் தெருவை அளந்திருக்க வேண்டாமா..? எதுவும் செய்யாமல் தங்கையின் வீட்டில் விருந்து சாப்பாட்டை வெட்டிக் கொண்டிருக்கும் பிரகிருதியை என்னன்னு சொல்வது..? மடச்சாம்பிராணி..'
அர்ச்சனா மனதிற்குள் அர்ச்சனை செய்து கொண்டிருந்த போது அந்த மடச்சாம்பிராணி.. குடும்பத்துடன் அவள் வீட்டு வாசலில்.. காரில் வந்து இறங்கினான்..
வாசலில் கார் சத்தம் கேட்கும் உணர்வில்லாமல் அர்ச்சனா.. தனக்குள் சிருஷ்டித்த மாய உலகிற்குள் பிரவேசித்திருக்க.. அபிநயா அவளை யோசனையுடன் பார்த்தபடி தாயிடம் சொன்னாள்..
"இவ முழியே சரியில்லைம்மா.."
"போடி.. பொறாமையில் பேசாதே.. அவளுக்குத்தான் அழகான கண்ணாச்சே.."
"நான் அதைச் சொல்லலைம்மா.."
"இவ பார்வையே சரியில்லைன்னு சொன்னேன்.."
"ஏன்.. அவ பார்வைக்கென்ன குறைச்சல்..?"
"ஒரு மார்க்கமாய் பார்த்துத் தொலைக்கிறாம்மா.."
"அது உன் பிரமையாய் இருக்கும்.. போ.. போய் வாசலில் கார் சத்தம் கேட்டதே.. யாருன்னு பாரு.."
"அது எனக்கு மட்டும்தான் கேட்குமா..? உங்க பெரிய மகளுக்கு கேட்காதா..?"
அப்போதுதான் அம்பிகா.. சின்ன மகளின் கேள்வியில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்டவளாக பெரிய மகளைத் திரும்பிப் பார்த்தாள்.. அவளோ விட்டத்திலிருந்த பல்லியை சுவாரஸ்யமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
"அர்ச்சனா.." அம்பிகா புருவங்கள் மேலேற அழைத்தாள்..
"...." அர்ச்சனாவிடம் பதிலில்லை..
"அர்ச்சனா.." அம்பிகா பலமான குரலில் அதட்டவும்.. அர்ச்சனா.. உலுக்குப் போட்டவளாக தந்நிலைக்கு வந்தாள்..
"என்.. என்னம்மா..?"
"ஏண்டி.. இப்படித் தடுமாறிப் பேசறே..?"
"ஒன்.. ஒன்னுமில்லையே.."
"அம்மா.. அக்கா, வார்த்தையிலேயே தந்தியடிக்கிறா.."
"ஏய்ய்.. குரங்கு.. உன் வேலையைப் பாரு.."
"நான் குரங்குன்னா.. என் கூடப் பிறந்த நீ யாரு..?"
"உன் கூடப் பிறந்ததினாலேயே.. நானும் உன் போல இருக்கணுமுன்னு ஒன்னும் அவசியமில்லை.."
"வேண்டவே வேண்டாம்.. என்னைப் போல நீ இருந்து வைத்தால்.. உன்னைப் போல நானும் இருந்து தொலைக்கணுமே.. நீயே இரண்டு நாளாய்.. பைத்தியம் போல இருக்கே.."
"அம்மா.. இவளைப் பாருங்களேன்.. என்கூட வம்புக்கு வருகிறா.."
"அடச்சீ.. அக்கா.. தங்கைகளாடி நீங்க..? ஐந்து நிமிசம் கூட மல்லுக்கு நிற்காம பேச முடியாதா உங்களுக்கு..? வாசலில் போய் வந்திருக்கிறது யாருன்னு பாருங்க.."
தாயின் கோபத்திற்கு பயந்து.. சகோதரிகள் இருவரும்.. ஒருவரை ஒருவர் முறைத்தபடி வாசலுக்குப் போனார்கள்.. அர்ச்சனா வந்தவர்களைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சியை வாங்கினாள்..
"அத்தையும்.. மாமாவும் வீட்டில் இருக்கிறாங்களா அர்ச்சனா.."
பெரிய தாம்பாலத் தட்டை ஏந்தியிருந்த பாரதி கேட்டாள்.. அவள் கையில் வைத்திருந்த தட்டில்.. பூப்பந்து.. பழங்கள்.. வெற்றிலைப் பாக்கு.. இனிப்பு வகைகள்.. புதுப்புடவை.. முதலியவை இருந்தன..
அர்ச்சனா வாயடைத்துப் போனாள்.. பாரதியின் கையிலிருந்த தட்டு அவளுக்கு உணர்த்திய செய்தி அவளுக்கு உவப்பை அளித்தது..
எவனைப் பார்க்க வேண்டும் என்று அவள் துடித்துக் கொண்டிருந்தாளோ.. அவன்.. அவள் கண்ணெதிரே.. வழக்கமான விழுங்கும் பார்வையோடு நின்று கொண்டிருந்தான்..
பார்க்கத் துடித்தவன் எதிரே வந்து நிற்கும்போது.. நிமிர்ந்து அவனை முழுவதுமாக பார்க்க முடியாமல் வெட்கம் வந்து தடுக்க.. அர்ச்சனா தலை கவிழ்ந்தாள்..
"இருக்காங்க அண்ணி.. உள்ளே வாங்க.."
"என்ன பாரதி.. உன் நாத்தனார் உன்னை மட்டும் தான் உள்ளே கூப்படுவாளா..? என்னைக் கூப்பிட மாட்டாளா..?"
பார்த்திபனின் குரலில் கேலி இருந்தது.. அர்ச்சனா திணறிப் போனாள்..
"எல்லோரும் வாங்க.." என்று சொல்லிவிட்டு.. வெட்கத்துடன் உள்ளே ஓடியவள்.. அம்பிகாவின் மீது மோதி நின்றாள்..
"ஏன் இப்படி ஓடி வருகிற..?" அம்பிகா கோபத்துடன் கேட்டாள்..
"அம்மா.. அண்ணியும்.. அவங்க வீட்டு ஆளுகளும் வந்திருக்காங்கம்மா.." அர்ச்சனா சந்தோசமாகக் கூறினாள்.
"தெரியும்.. அதுக்காகவா இப்படி ஓடி வருகிற..? பொண்ணாய் லட்சணமாய் உள்ளே போய் இரு.. பாரதி கையில்.. பூ பழத் தட்டோடு வந்திருக்கிறாளாமே..அபிநயா சொன்னாள்.. நான் போய் என்ன விசயம்ன்னு விசாரிக்கறேன்.."
அம்பிகாவின் முகம் கருத்திருந்தது.. சங்கரனின் முகமும் இறுகியிருந்தது.. தாய்.. தந்தையின் முகத்தைப் பார்த்த அர்ச்சனா துணுக்குற்றாள்..
'இந்தக் கல்யாணப் பேச்சு நடக்காதோ..' அவள் மனம் தவித்தது..
"வா பாரதி.. வாங்க.. வாங்க.."
ஒப்புக்கு சங்கரன் ஒன்றுவிட்ட அண்ணனின் மருமகளை வரவேற்க.. அம்பிகா அதையும் செய்யாமல் வெறுமனே தலையை மட்டும் அசைத்து வைத்தாள்..
ஈஸ்வரனும்.. கங்காவும்.. ஏன்.. பாரதியின் கணவன் கார்த்திக்கும்கூட அவர்களுடன் வரவில்லை என்பதை சங்கரன் மனதிற்குள் குறித்துக் கொண்டார்.. மனைவியைப் பார்த்த போது.. அவளும் அதே நினைவில் இருப்பது அவருக்குப் புலப்பட்டது..
"உட்காருங்க.."
எல்லோரும் அமர்ந்தார்கள்.. சங்கரன்.. ஓர் வித எச்சரிக்கை உணர்வுடன் எதிரில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார்..
"என்ன சாப்பிடுகிறீங்க..? அம்பிகா.. சீக்கிரமாய் ஒரு இனிப்பையும்.. காரத்தையும் பண்ணு.. நம்ம பாரதியின் சொந்தக்காரங்க வந்திருக்கிறாங்க.. ஸ்பெசலாய் தயார் செய்.."
"அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க.." குணவதி மறுத்தாள்..
"அப்படி நீங்க சொல்லக்கூடாது.. வராத விருந்தாளிக வந்திருக்கிறீங்க.. காபியாவது சாப்பிடணும்.." சங்கரன் உபசாரமாக கூறினார்..
"காபி மட்டும் கொடுங்க மாமா.. போதும்.." பாரதி அவர்களின் முகத்தை ஆராய்ந்தபடி கூறினாள்..
அம்பிகா காபி போட உள்ளே போக.. அவர்கள் பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள்.. சீக்கிரமாகவே அம்பிகா காபி டிரேயுடன் வந்தாள்.. எல்லோரும் காபியை அருந்திக் கொண்டிருக்கும் போதே.. பாரதி நிமிர்ந்து பேச்சை ஆரம்பித்தாள்..
"நாங்க ஒரு முக்கியமான விசயமா வந்திருக்கிறோம் மாமா.."
பூ.. பழம்.. வெற்றிலையோடு.. திருமண வயதில் இருக்கும் இளைஞனுடன்.. அவனைப் பெற்றவர்களும்.. கூடப் பிறந்தவளும்.. சொந்தங்களும்.. திருமண வயதில் இருக்கும் பெண் வீட்டுக்கு வந்தால்.. அது என்ன விசயமாக இருக்கும் என்று சங்கரனுக்கும்.. அம்பிகாவுக்கும் தெரியாதா.. என்ன..?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -22
புலர்கின்ற பொழுதில் -22
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy