புலர்கின்ற பொழுதில் -21

21 புலர்கின்ற பொழுதில்.. புதுவானம் கண்டேன்.. கீழ்வானின் மீது.. கதிரவனே உதித்தான்.. அது உணர்த்திய செய்தி ஒன்றேதான்.. அர்ச்சனாவ...


21
புலர்கின்ற பொழுதில்..
புதுவானம் கண்டேன்..
கீழ்வானின் மீது..
கதிரவனே உதித்தான்..

அது உணர்த்திய செய்தி ஒன்றேதான்.. அர்ச்சனாவின் மனம் அவள் வசத்தில் இல்லை.. அவள் பார்த்திபனைக் காதலிக்கிறாள்..
உண்மை உணர்ந்தவளாக அர்ச்சனா முழங்கால் களில் இருந்து முகத்தை நிமிர்த்தினாள்.. அவள் முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்கள் பிரகாசித்தன..
'நான் உன்னைக் காதலிக்கிறேன்..'
எவ்வளவு தெளிவாகச் சொன்னான்.. அதுவரை 'நீங்க..' என்று மரியாதையுடன் அழைத்தவன்... எவ்வளவு உரிமையுடன் 'உன்னை..' என்று ஒருமையில் விளித்தான்..
அவனுடைய அந்த தைரியமும்.. ஆண்மையின் ஆளுமையும் அவளை ஆகர்ஷித்தன.. அவளுக்கு உடனே அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.. அவள் மனம் அவனை நினைத்துக் கொண்டது..
"உன்னை நினைக்கவே..
             நொடிகள் போதுமே..
    உன்னை மறக்கவே..
             யுகங்கள் ஆகுமே..
    நீ கேட்கையில் சொல்லவே
             இல்லையே..
    நான் நினைக்கையில் ஓரமாய்
             ஒலிக்குதே..
    என் மார்பில் காதல் வந்து
             மையமிட்டதே..!"
அவள் மனம் பாடியது.. அவள் கட்டிலில் சரிந்து படுத்து கண்மூடிக் கொண்டாள்.. அபிநயா புரண்டு படுக்க அவளுக்கு முதுகுகாட்டி சுவர் பக்கம் திரும்பிக் கொண்டாள்..
காலையில் குளியலறையில் குளிக்கும் போது அவன் நினைவு ஏன் வந்து அவள் மனதில் ஓரத்தில் அமர்ந்து இன்பமான ஓர் இம்சையைக் கொடுத்தது என்று அவளுக்குப் புரியவில்லை..
"நான் உன்னை மறந்த செய்தி..
             மறந்து விட்டேன்..
    ஏனின்று குளிக்கும் போது
             நினைத்துக் கொண்டேன்..?"
வாய்விட்டுப் பாடினாள் அவள்.. மனதிற்குள் துளைக்கும் பார்வையுடன் பார்த்திபன் தோன்றினான் அவனது பார்வையை உணர்ந்தவளாக அவன் முன்னால் நிற்பதைப் போல முகம் சிவந்து போனாள் அர்ச்சனா..
"கண்மூடி சாயும் பொழுதிலும்..
             உன் கண்கள்..
    கண் முன்னே தோன்றி மறைவதேன்..?
             ஏன்..? ஏன்..? ஏன்..?"
பாடியபடியே உடையை மாற்றிவிட்டு.. ஜன்னலைத் திறந்தாள்.. புலர்கின்ற பொழுதில் வரும்.. அதிகாலை இளங்காற்று அவளது முகத்தின் மீது ஆசையுடன் படிய.. கண்மூடி அதை ரசித்தாள்..
அவன் காதலைச் சொல்லியபோது வராத காதல் உணர்வு.. இப்போது பேரலையாய் எழுந்து அவளை ஆக்ரமித்தது..
"நீ என்னைக் கேட்டபோது
             காதல் இல்லை..
    நான் காதலுற்ற போது
             நீயும் இல்லை..
    ஒற்றைக் கேள்வி உன்னைக் கேட்கிறேன்..
             இப்போதும்..
                   எந்தன் மீது காதல் உள்ளதா..?"
ஜன்னல் கம்பிகளின் முகம் புதைத்து.. என்னவோ.. அவன் எதிரில் நின்று கொண்டிருப்பதைப் போல.. பாடலில் கேள்வியைக் கேட்டாள்..
அவளது உடலில் 'ஜிவ்' வென்று அவள் இதுவரை உணராத பரவசம் எழும்பி அவளைக் காதல் கடலில் ஆழ்த்த.. ஆனந்தமாக.. அதில் மூழ்கியவள்.. கிறக்கத்துடன் தொடர்ந்த பாடினாள்.
"ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே..
             உன் காதிலே..
                என்று கேட்கும் இந்தச் சத்தம்..?"
பார்த்திபன் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான் என்ற நினைவலை அவளது நெஞ்சத்தில் எழுந்தது.. வீட்டிற்குள் நடமாடிக் கொண்டிருந்த மற்றவர்கள் யாரும் அவள் மனதில் பதியவில்லை.. அபிநயா சுடிதாரைப் பற்றிக் கேள்வி கேட்டதோ.. சங்கரன் பேப்பரைப் பார்த்துக் கருத்தைக் கூறியதோ.. அம்பிகா சாப்பிட அழைத்ததோ.. எதுவுமே அவளின் காதுகளில் ஏறாமல்.. அவள் மனம் பார்த்திபனிடம் சிக்கியிருந்தது..
"என் சாலை எங்கும்.. எங்கும்..
             ஆள்கள் கூட்டம்..
    என் கண்கள் சாய்ந்து..
             எதையும் ஏற்கவில்லை..
    காட்சியாவும் புதைந்து போனதே..
             என் நெஞ்சம்..
    உன்னை மட்டும் தோண்டிப்
             பார்க்குதே.."
அவள் அறையை விட்டு வெளியேற மனமில்லாமல் கட்டிலின் மீது படுத்துக் கொண்டாள்.. அவளை விழுங்கி விடுவதைப் போலப் பார்த்த.. பார்த்திபன் மட்டுமே மனதில் தோன்றினான்..
"உன்னோடு அன்று கண்ட..
             காதல் வேகம்..
    என்னோடு எட்டி நின்ற
             நாகரிகம்..
    கண்ணில்.. கண்ணில்.. வந்து போகுதே..
             என் நெஞ்சம்..
                 கட்டில் மீது திட்டுகின்றதே.."
கோவிலில்.. மடியில் பாரதியின் குழந்தையை வைத்துக் கொண்டு கூட்டத்தில் அர்ச்சனாவின் முகம் தென்படுகிறதா என்று பார்த்த பார்த்திபனின் செய்கை அவளுக்கு நினைவுக்கு வந்தது..
"உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
             என் தேடலோ..
    கடவுள் தேடும் பக்தன் போல.."
தலையணையில் முகம் புதைத்திருந்தவளின் விழியோரம் ஏன் நீர் வழிகின்றது என்று அவளுக்குப் புரியவில்லை..
ஏனோ.. அர்ச்சனாவிற்கு உடனடியாக பார்த்திபனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.. அவள் எழுந்து.. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.. உடையை சீர்திருத்திக் கொண்டாள்.. அறையை விட்டு வெளியே வந்தாள்..
"எங்கேடி போற..?" அம்பிகா சந்தேகமாக மகளைப் பார்த்தாள்..
இந்த அதிகாலையில் குளித்து.. பளிச்சென்று உடை மாற்றி வெளியே கிளம்பிய மகளைப் பார்த்த அவள் மனதிற்குள் நெருடல் எழுந்தது..
"பெரியப்பா வீட்டுக்குப் போகிறேன்ம்மா."
"அங்கே உனக்கு என்ன வேலை..?"
"என்னம்மா இது..? வேலையிருந்தால்தான் பெரியப்பா வீட்டுக்குப் போகனுமா..?"
"ஆமாம்.. நேற்றைக்கு ஹரிஷிக்கு மொட்டை யெடுத்தாங்க.. நாம போக வேண்டியிருந்தது.. போனோம்.. இன்றைக்கு அங்கே போகனும்ன்னு அவசியம் இல்லை.."
"நான் அண்ணியைப் பார்த்துவிட்டு வருகிறேன்ம்மா.."
"இன்றைக்கு வேண்டாம் அர்ச்சனா.."
"ஏன் அம்மா..?"
"பாரதியின் பிறந்த வீட்டு ஜனங்கள் வந்திருக் கிறாங்க.. அவங்க ஊருக்குப் போகட்டும்.. அதுக்கப்புறம் நீ போகலாம்.."
அதற்குப் பின்னால் பாரதியின் வீட்டில் அவளுக்கு என்ன வேலை..?
அர்ச்சனாவிற்கு வாய்விட்டு அழவேண்டும் போல இருந்தது.. அடக்கிக் கொண்டு.. அவள் வீட்டுக்குள் போனாள்..
"அர்ச்சனா சாப்பிடவா.."
அம்பிகா அழைக்கும் குரல் கேட்டவுடன் இயந்திரம் போல எழுந்து டைனிங் டேபிளுக்கு முன்னால் வந்து அமர்ந்தாள்..
"ஏம்மா.. என்னவோ போல இருக்கிற..?" சங்கரன் கனிவாக வினவினார்..
"அவ.. ராத்திரி பூராவும் தூங்கவே இல்லைப்பா.." அபிநயா நேரம் பார்த்து போட்டுக் கொடுத்தாள்..
"நைட் பூராவும் தூங்கலையா..? ஏம்மா.. உடம்புக்கு சரியில்லையா..?" சங்கரன் கவலையுடன் அர்ச்சனாவின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தார்..
சில்லென்று நெற்றி இருக்க.. புரியாமல் மகளைப் பார்த்தார்.. அவளோ புது மலரைப் போல.. பொலிவாக இருந்தாள்.. அந்தப் பொலிவையும் மீறிய ஒரு சோர்வு அவளிடம் தெரிந்தது..
"அவளுக்கு ஒன்றுமில்லை.. பேசாமல் சாப்பிடுங்க.." அம்பிகா கணவரை அதட்டினாள்..
அவள் பார்வையில் ஏதோ செய்தியிருப்பதைப் புரிந்தவராக.. அவர் சாப்பிட்டுவிட்டு எழுந்து கை கழுவப் போனார்.. அவர் பின்னாலேயே போன.. அம்பிகா சன்னக் குரலில் அவரிடம் ரகசியமாக..
"நேற்றைக்கு அவள் கல்யாணத்தைப் பற்றிப் பேசினோமில்லையா..? அதை நினைத்துக் கொண்டே படுத்திருப்பாள்.. கல்யாண வயதில் இருக்கும் பெண்ணிற்கு தூக்கம் எப்படி வரும்..?" என்று சொன்னாள்..
சங்கரனின் பின்னாலேயே கைகழுவ வந்த அர்ச்சனா விற்கு அதைக் கேட்டு.. சிரிப்பதா.. இல்லை.. அழுவதா.. என்று புரியவில்லை..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -21
புலர்கின்ற பொழுதில் -21
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-21.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-21.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy