புலர்கின்ற பொழுதில் -19

19 புலர்கின்ற பொழுதில்.. தளர்கின்ற என் மனது.. இமைக்கின்ற பொழுதில்.. இடம்மாறும் என் உணர்வு.. பாரதியிடம் ஹரிஷை நீட்டிவிட்டு எழு...


19
புலர்கின்ற பொழுதில்..
தளர்கின்ற என் மனது..
இமைக்கின்ற பொழுதில்..
இடம்மாறும் என் உணர்வு..

பாரதியிடம் ஹரிஷை நீட்டிவிட்டு எழுந்து கொண்ட பார்த்திபன்.. கைகளைக் கழுவிக் கொள்ள நீர் தேடிச் சென்றான்..
அடிக்கின்ற குழாய் அருகே சென்றவன்.. யாராவது தண்ணீரை அடித்துவிட அகப்பட மாட்டார்களா என்ற நினைவுடன் சுற்று முற்றும் பார்க்கும் போது..
"நான் அடித்து விடுகிறேன்.." என்று கூறியபடி.. சேலையின் முந்தானையையும்.. முன் கொசுவத்தையும்.. இழுத்துச் செறுகியபடி அர்ச்சனா அருகில் வந்தாள்..
"உங்களுக்கேன் வீண்சிரமம்..?" மனதில் எழுந்த உல்லாசத்தை மறைத்தபடி கூறினான் பார்த்திபன்..
"இதிலென்ன சிரமம்..?" அர்ச்சனா அடிகுழாயை அடிக்க ஆரம்பித்தாள்..
குனிந்து கைகளைக் கழுவியபடி அர்ச்சனாவை மேல் பார்வையாக பார்த்தான் பார்த்திபன்.. அவனது பார்வையை உணர்ந்தவளின் முகம் சிவந்தது..
அவன் கைகளை கழுவி முடித்த பின் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான்.. அவள் முகச்சிவப்பை மறைக்க வானத்தைப் பார்த்தாள்.. குழாயின் அருகே இருந்த பூச்செடியில் அமர்ந்திருந்த குருவி ஒன்று வாலை ஆட்டியபடி.. அவர்கள் இருவரையும் பார்த்தது..
"என்ன அங்கே பார்க்கறீங்க..?" பார்த்திபன் பேச்சை ஆரம்பித்தான்..
"அந்தக் குருவியைப் பார்த்தேன்.." அவள் மனதை மறைக்க பகீரதப் பிரயத்தனம் செய்தபடி பதில் சொன்னாள்..
"குருவியை ரசிக்கும்படி என்ன இருக்கிறது..?"
"அந்தக் குருவி.. வாலை ஆட்டி டான்ஸ் ஆடுவது.. ரசிக்கும்படி இல்லையா..?"
"குருவிக்கு வாலா..?"
பார்த்திபன் ஆச்சரியத்துடன் வினவியபடி குருவி யைப் பார்த்தான்.. 
"ஓ.. அது வாலாட்டிக் குருவி.."
"வாலாட்டிக் குருவியா..? அப்படியொரு குருவி யிருக்கா..?"
"இல்லாமலா இத்தனை நேரம் அதை ரசிச்சீங்க..?"
"தான் ரசித்ததினால் அந்தப் பெயரை வைத்தீங்களா..? இல்லை.. அதன் பெயரே அதுதானா..?"
"இரண்டும்தான்னு நினைத்துக்கோங்க.."
பார்த்திபன் சொன்னதைக் கேட்ட அர்ச்சனா உதட்டைச் சுழித்துச் சிரித்தாள்.. அவளது உதட்டுச் சுழிப்பை ரசித்துப் பார்த்தான் பார்த்திபன்.. வாலாட்டிக் குருவியின் அசைவை விட.. அவளது சுழித்தோடும் அருவி நீரைப் போன்ற சிரிப்பு ரசிக்கத்தக்கதாக இருக்கிறது என்று அவன் நினைத்துக் கொண்டான்..
இது அவனுக்குப் பிடித்திருந்தது.. அவனது மனதில் இருந்த அத்தனை அம்சங்களுடன் இருந்த பெண்.. அவன் முகம் பார்த்துச் சிரிப்பது அவனுக்கு பேரானந்தத்தைக் கொடுத்தது.. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவனது ஆண்மையின் கர்வம் அவனைத் தடுத்தது..
நந்தவனத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்த தாலோ என்னவோ.. அர்ச்சனா மெல்லிய குரலில் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தாள்..
"பாட்டுங்கிறது.. மத்தவங்க கேட்கிறதுக்காகத்தான்.." என்றான் பார்த்திபன்..
"இல்லைங்க.. எனக்குப் பாடத்தெரியாது.. சும்மா வாய்க்கு வந்த பாட்டை ஹம் பண்ணினேன்.." அர்ச்சனா முகம் சிவந்தாள்..
"உங்க வாய்க்கு வரும் பாட்டு.. என் காதுக்கு வந்தால் ஆகாதா..?" பார்த்திபன் அவளைப் பாடவைப்பதிலேயே குறியாக இருந்தான்..
"இப்ப என்னதான் சொல்றீங்க..?" அர்ச்சனா செல்லமாய் முறைத்தாள்..
"அடேங்கப்பா.. விட்டால் அடித்து விடுவீங்க போல.." பார்த்திபன் பயப்படுவதைப் போல நடித்தான்..
"பயப்படுகிற ஆளைப் பாரேன்.."
அர்ச்சனா இப்படிக் கூறியவுடன்.. பார்த்திபன் அவளுடைய முதுகிற்கு பின்னால்.. யாரையோ தேடுவதைப் போல நடித்தான்..
"யாரைத் தேடுகிறீங்க..?" அர்ச்சனா புரியாமல் வினவினாள்..
"நீங்க யாரிடமோ.. 'பாரேன்'னு சொன்னீங்களே.. அவங்க எங்கேன்னுதான் தேடுகிறேன்.."
அவன் கேலியாக கூறியதை ரசித்து.. அவள் மகிழ்ந்து சிரித்தாள்.. அந்தச் சிரிப்பில் வெளிப்பட்ட இளமையின் பிரவாகம் பார்த்திபனை ஆட்கொண்டு தனக்குள் இழுத்தது.. அந்தப் பிரவாகத்தில் மூழ்க விரும்பிய பார்த்திபன் சந்தோசமாய் அவளது சிரிப்பின் சாரலில் நனைந்தான்..
"இப்படி சிரிச்சே ஏமாத்திரலாமுன்னு நினைக்கறீங்க போல.."
அவன் விளையாட்டாய் கூற.. அவள் துணுக்குற்றாள்..
"அப்படி யாரை நான் ஏமாத்தினேன்..?"
"சரியாப் போச்சு போங்க.. சாதாரணமாய் ஒரு வார்த்தை சொல்லிவிடக் கூடாது போல.."
"அதையும் தான் ஏன் சொல்றீங்க..?"
"நீங்க பாட்டுப் பாடாமல் ஏமாத்தறீங்கன்னு சொன்னேன்.."
"ஓ.. நீங்க அதைச் சொன்னீங்களா..?"
"வேறு எதைச் சொல்றேன்னு நினைத்தீங்க..?"
"ஒன்னுமில்லை.."
"அப்போ.. பாட்டுமில்லையா..?"
"பாட்டுப் பாடாமல் நீங்க விடவே மாட்டிங்களா..?"
"ஆமாமுன்னுதான் வைச்சுக்கங்களேன்.."
அர்ச்சனா மீண்டும் சிரித்தாள்.. அவள் அழைத்தவுடன் எப்படித்தான் அப்படி ஒரு சிரிப்பு அவளிடம் ஓடி வருகின்றதோ என்று மனதிற்குள் அதிசயப்பட்டுப் போனான் பார்த்திபன்..
"நிஜமாவே நான் பாடனுமா..?" அவள் சன்னக் குரலில் வினவிய விதம் அவனை காந்தமாய் அவள் பக்கம் கவர்ந்திழுத்தது..
"ம்ம்ம்.." அவன் அவளையே ஊடுருவிப் பார்த்தான்.
"இந்த மனம்தான் - என் மன்னவனும்
             வந்துலவும் நந்தவனம் தான்
                 அன்பே வா.."
நந்திவனத்தின் பூச்செடியில் கை வீசி.. அவள் பாடினாள்.. அவன் மெய்மறந்தான்..
"மெய்யானது.. உயிர் மெய்யானது..
             துணை நீயே.."
அவள் கண்மூடிப் பாடலில் கரைந்தாள்..
"நீ பாதி.. நான் பாதி கண்ணா..!
             அருகில் நீயின்றி
                 தூங்காது கண்ணே..!
    நீயில்லையேல் இங்கு நானில்லையே..
             துணை நீயே.."
இந்தப் பாடலை.. இதற்கு முன்னால் பல தடவை பார்த்திபன் கேட்டிருக்கிறான்.. ஆனால் இன்று இனித்ததைப் போல.. இதற்கு முன்னால் இந்தப் பாடல் இந்த அளவுக்கு இனிக்கவில்லை என்று அவனுக்குத் தோன்றியது..
"அர்ச்சனா.." அம்பிகா அழைக்கும் குரல் கேட்டது..
"அம்மா கூப்பிடறாங்க.." அவள் போக முனைந்தாள்.
"ஒரு நிமிடம் அர்ச்சனா.." பார்த்திபனின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.
"என்ன..?" அவள் போக வேண்டுமே என்ற பதட்டத்தோடு நின்று அவன் முகம் பார்த்தாள்..
"நான் உன்னைக் காதலிக்கிறேன்.." பார்த்திபன் ஆழ்ந்த குரலில் அவளைப் பார்த்துச் சொன்னான்..
"காதலிக்கிறீங்களா..?" அவள் குரலில் திகைப்பு தென்பட்டது..
"ஆமாம்.." அவன் புருவங்கள் முடிச்சிட அவளை உற்றுப்பார்த்தான்..
அவ்வளவு நேரமும் அவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தவள்.. அவன் கேட்பதற்காக பாட்டுப் பாடியவள் இவ்வாறு கேள்வி கேட்டது அவனுக்குள் ஆச்சரியத்தை விதைத்தது..
"என்ன இப்படி பட்டுன்னு சொல்லிட்டிங்க..?"
"வேற எப்படிச் சொல்றது..? எனக்கு இந்த மரத்தைச் சுத்திவந்து டூயட் பாடுறதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க.. வெட்டு ஒன்னு.. துண்டு ரெண்டுதான்.. உங்களைப் பார்த்த நொடியிலேயே.. கட்டிக்கிட்டா உங்களைத்தான் கட்டிக்கிரனும்னு மனதுக்குள்ள முடிவு பண்ணிட்டேன்.. முடிவு பண்ணினப்புறம் அதையேன் மூடிமறைக்கனும்..? தேங்காயை போட்டு உடைப்பதைப்போல.. மனதில் இருக்கிறதை போட்டு உடைச்சிற வேண்டியதுதானே.."
ஆண்களுக்கு எல்லாமே வேகம்தான் என்று அர்ச்சனாவிற்குத் தோன்றியது.. அவன் காட்டும் வேகத்தை அவள் காட்ட முடியுமா..?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -19
புலர்கின்ற பொழுதில் -19
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy