புலர்கின்ற பொழுதில் -18

18 புலர்கின்ற பொழுதில்.. கொடியொன்றைக் கண்டேன்.. மலர்சூடி நின்றாள்.. என் மனம் பறித்துச் சென்றாள்.. கோவில் வாசலில் கார்களின் அண...


18
புலர்கின்ற பொழுதில்..
கொடியொன்றைக் கண்டேன்..
மலர்சூடி நின்றாள்..
என் மனம் பறித்துச் சென்றாள்..

கோவில் வாசலில் கார்களின் அணிவகுப்பு சென்று நின்றது.. வரிசையாக வந்து நின்ற கார்களில் இருந்து இறங்கியவர்களை.. கோவிலின் முன்னால்.. பெட்டிக் கடைகளை வைத்திருந்தவர்களும்.. அந்தக் கடைகளில் நின்று கொண்டிருந்தவர்களும் ஆச்சரியமாக பார்த்தனர்..
"என்ன வரதா.. இத்தனை கார் வந்து நிற்குது..?"
"அட.. தஞ்சாவூரு பெரிய வக்கீலு ஈஸ்வரனின் குடும்பத்து ஆளுக போல இருக்கே.."
"ஆமாம்.. இது அவரோட குலசாமி கோவிலாச்சே.."
கடையில் இருந்தவர்களை மிதப்பாக பார்த்தபடி.. கோவிலுக்குள் சென்றவர்களை பார்த்தவாறே.. அவர்கள் கிசுகிசுத்துக் கொண்டனர்..
பார்த்திபன் கோவிலைச் சுற்றி நடந்து வந்தபோது.. அர்ச்சனா எதிரே வந்தாள்.. நாவல் பழக்கலரில் மைசூர் கிரேப் சேலையுடுத்தி.. விழா நாளுக்கே உரிய தனிக்களையுடன் இருந்தவளைப் பார்த்து அவன் மனம் அலைபாய்ந்தது.. அதை மறைத்துக் கொண்டு.. அவளை சாதாரணமாகப் பார்ப்பதைப் போலப் பார்த்தான்..
அவனது பார்வையை சந்தித்தவள் தடுமாறினாள்.. அந்த தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டே..
"என்ன.. எங்க கோவில் எப்படியிருக்கு..?" என்று கேட்டாள்..
"இது உங்கள் கோவிலா..?" என்று அவன் பதிலுக்கு கேட்டான்..
"ஆமாம்.. இது எங்கள் கோவில்தான்.. என் அப்பாவின் குலதெய்வத்தின் கோவில் இது.."
"பெண்களுக்கு பிறந்த வீடு என்னைக்குமே சொந்தமில்லை.."
பார்த்திபனின் பேச்சில் இருந்த ஏதோ ஒன்றை அர்ச்சனாவினால் உணர முடிந்தது.. அவனது பார்வை அவளை ஊடுறுவியது..
"எனக்குப் புரியவில்லை.."
"ஒருநாள் புரியும்.."
அவன் நகர்ந்து விட்டான்.. மூடுபனியைப் போல.. இந்த மூடுமந்திரப் பேச்சு.. அவள் மனதை ஜில்லென்று தொட்டுச் சென்றது..
"அர்ச்சனா.. உன்னிடம் நான் என்ன சொன்னேன்..? நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்..?"
அம்பிகா வேகமாக வந்து அதட்டினாள்.. கையில் குடத்துடன் நின்று கொண்டிருந்த அர்ச்சனா விழித்தாள்..
"எதுக்கெடுத்தாலும்.. இந்த பேந்தப் பேந்த விழித்து விடு.. போனால் போன இடம்.. நின்னால் நின்ன இடம்ன்னு ஒரு பொண்ணு இருந்தால் அவளை யாரும் குறை சொல்லமாட்டாங்க.. அவளைப் பெத்தவங்களைத் தான் குறை சொல்வாங்க.."
"இப்ப எதுக்கும்மா இப்படித்திட்டுகிறீங்க..?"
"உன்னைக் குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வரத்தானே சொன்னேன்..? நீயேன் இங்கே அசையாமல் நிற்கிற..?"
"தண்ணீர் பிடிக்கத்தானே போகிறேன்.."
"அதை முதலில் செய்.. போ.. சொந்த பந்தம் இருக்கிற இடத்தில் கொஞ்சம் பார்த்துப் பேசிப்பழகு.."
"எதுக்கும்மா இந்த வார்த்தையைச் சொல்கிறீங்க..?"
"நம்மை யாரும் கவனிக்கலைன்னு.. நாமா நினைச் சுக்கிட்டு இருப்போம்.. ஆனா.. ஊரு கண்ணெல்லாம்.. நம்ம பக்கம்தான் இருக்கும்.. அது நமக்குத் தெரிந்து தொலைக்காது.. நீ கல்யாணத்துக்கு நிற்கிற பெண்.. இதுபோல விசேசத்தில் உன்னைப் பார்ப்பவங்க நல்ல விதமா நினைத்தால்.. நாளைக்கே நம்ம வீட்டுக்கு உன்னைப் பெண் கேட்டு வருவாங்க.. அதை மனதில் வைத்துக் கொண்டு எதையும் செய்.."
அம்பிகா எந்த அர்த்தத்தில் இதைச் சொன்னாள் என்று அர்ச்சனா யோசிக்கவில்லை.. அவள் மனதில் பார்த்திபனின் வீட்டிலிருந்து அவளைப் பெண் கேட்டு வருவதைப் போல ஒரு நினைவு எழுந்தது..
அந்த நினைவு தந்த சுகத்தோடு அவள் கோவில் வளாகத்தில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு திரும்பினாள்..
பார்த்திபனின் மடியில் அமர வைத்து.. பாரதியின் மகன் ஹரிஷிற்கு மொட்டை எடுத்தார்கள்.. மொட்டை யெடுத்து முடிந்ததும்.. பிறந்த வீட்டுச் சீராக குழந்தையின் கழுத்தில் ஆறு பவுனுக்கு தடிமனான தங்கச் சங்கிலியை போட்டுவிட்டான் பார்த்திபன்..
"ம்ஹூம்.. பாரதி கொடுத்து வச்சவ.. வருசத்தில் எத்தனை தடவை அவ விசேசம் வைச்சாலும் தாய்வீட்டுச் சீதனம் அயரமல் வந்து குவியும்.."
ஈஸ்வரனின் தங்கை பெண் பொறாமையாகச் சொல்லவும் பாரதியின் மனதில் பெருமை வந்தது.. அவள் நிறைவுடன் வேதநாயகியைப் பார்த்துச் சிரித்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -18
புலர்கின்ற பொழுதில் -18
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-18.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-18.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy