புலர்கின்ற பொழுதில் -13

13 புலர்கின்ற பொழுதில்.. தேவதையைக் கண்டேன்.. பின்னாலே சென்றேன்.. நொடிப்பொழுதில் அவள் மறைந்தாள்.. இமைக்க மறந்த விழிகளுடன்.. வை...


13
புலர்கின்ற பொழுதில்..
தேவதையைக் கண்டேன்..
பின்னாலே சென்றேன்..
நொடிப்பொழுதில் அவள் மறைந்தாள்..

இமைக்க மறந்த விழிகளுடன்.. வைத்த பார்வையை விலக்காமல் மாடிப்படியில் ஏறி வந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தான் பார்த்திபன்.. எப்படிப்பட்ட சாமுத்ரிகா லட்சணங்களுடன் அவனுக்கு பெண் வேண்டும் என்று குணவதியிடம் சொன்னானோ.. அந்த அனைத்து அம்சங்களையும்.. தன்னிடத்தில் கொண்டவளாய் அவள் கண்ணெதிரே வந்து நின்றாள்..
'ஏன்.. பயல் இப்படி முறைச்சுப் பார்க்கிறான்..?'
மகனின் வெறித்த பார்வையைக் கண்டு.. அவனது பார்வை சென்றதிக்கில்.. தன் பார்வையையும் ஓடவிட்ட சுந்தரமூர்த்தி.. ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார்..
"என்னப்பா இது..?" பக்கத்திலிருந்த துளசிராமனிடம் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய போது.. மகனுக்கு குறையாத ஆச்சரியத்தை அவரும் வெளிப்படுத்தினார்..
"ஆமாண்டா மகனே.. அதே சிரிவித்யா போல கண்ணு.. தேவிகா போல முகம்.. சரோஜாதேவியைப் போல.. ஒல்லியாய்.. உயரமாய் உடல்வாகு.. நீட்ட தலைமுடி.. எப்படிடா.. என் பேராண்டியின் கற்பனையில நினைச்சது போலவே ஒரு பொண்ணு இந்த தஞ்சாவூரு சீமையில இருக்கா..?"
"அதுதான்ப்பா எனக்குப் புரியல.."
"நமக்குத் தெரியலன்னு சொல்லு.. ஆனா.. உம் பொண்டாட்டிக்கும்.. எம் பொண்டாட்டிக்கும்.. இது நல்லா தெரிஞ்சிருக்கு.."
"அதுக்குத்தான் நம்ம சொந்த பந்தத்தை கழட்டி விட்டுட்டு.. தனி ஆவர்த்தனம் வாசிக்க நம்மள கூப்பிட்டுக் கிட்டு வந்திருக்கிறாங்க போல இருக்குப்பா.."
"மூணு நாளு இங்கே டேரா போடனும்னு ஒத்தக் காலில நின்னதுக்கு இதுதான் காரணமா..?"
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே.. அந்தப் பெண் அவர்கள் அருகில் வந்து விட்டாள்.. வந்தது மட்டுமில்லாமல் குணவதியையும்.. வேதநாயகியையும் பார்த்து அழகாக சிரித்தாள் ..சிரித்ததோடு மட்டுமில்லாமல்.
"வாங்க பாட்டி.. வாங்க அத்தை.. எப்போ வந்தீங்க..?" என்று விசாரிக்க வேறு செய்தாள்..
"அத்தையாம்டா.. நம்ம பார்த்திபனுக்கு கட்டுகிற முறைதான்.." துளசிராமன் சுந்தரமூர்த்தியின் காதைக் கடித்தார்..
பார்த்திபனும் அதைக் கவனித்துவிட்டான் என்பது.. அவனுடைய கண்களில் வெட்டிய மின்னளல் இருந்து தெரிந்தது..
'ம்ஹீம்.. பய விழுந்துட்டான்..' சுந்தரமூர்த்தி மனைவியைப் பார்த்தார்.. அவள் இளநகையோடு.. அவரைப் பார்த்து புருவத்தை உயர்த்தினாள்..
குணவதியோ.. அந்தப் பெண்ணின் கையை பாசமாக  பிடித்து அருகே அமரவைத்துக் கொண்டாள்..
'பேரனின் மனமறிந்து நடக்கும் பாட்டி..
வேதநாயகியின் புன்னகை விரிந்தது.. அவள் மகனைப் பார்த்தாள்.. அவனோ விழுங்கி விடுவதைப் போல.. அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தான்..
"காலையில்தான் வந்தோம் அர்ச்சனா.. நீ எப்படி இருக்கம்மா.."
குணவதி.. அர்ச்சனாவிடம் பேசியபடி.. பேரனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டாள்.. அந்தப் பெண்ணின் பெயரை.. பேரனுக்கு தெரிவித்துவிட்ட சந்தோசம் அவளுக்கு..
"நல்லா இருக்கேன் பாட்டி.."
"படிச்சுக்கிட்டு இருந்தயே.. முடிச்சிட்டயா..?"
"முடிச்சிட்டேன் பாட்டி.."
"என்ன படிப்பு படிச்ச..?"
"பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ்.."
அவள் ஒயிலாக கூறியபடி.. பின்னலை எடுத்து.. முன்னால் போட்டுக் கொள்ள.. பார்த்திபன்.. குணவதியை முறைத்தான்.. அந்த முறைப்பிற்கு அர்த்தம்..
'ஏய்ய் கிழவி.. வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டாமல்.. படிப்பைப் பத்தியா பேசற..? அவ என்ன படிப்பை படிச்சிருந்தா உனக்கென்ன.. நான் உன்கிட்ட இதைப் பத்திக் கேட்டேனா..?' என்பதாகும்..
பேரனின் பொசுக்கும் பார்வையைக் கண்ட குணவதி சுதாரித்துக் கொண்டாள்..
'அடடா.. ஆர்வக் கோளாறில.. படிப்பைப் பத்தி வாயை விட்டுட்டேனே.. என் பேராண்டி.. அவனைவிட குறைச்சுப் படிச்ச படிப்பைப் பத்தி மட்டும்தானே காது கொடுத்து கேட்பான்.. இந்தப் பொண்ணு.. பட்டம் வாங்கித் தொலைச்சிருக்கே..'
பேச்சை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான குணவதி..
"உன் அப்பாம்மா வரலையாம்மா..?" என்று கேட்டு.. பேச்சின் போக்கை மாற்றினாள்..
"ஈவினிங் வருவாங்க.. பாட்டி.."
குணவதியின் கேள்விக்கு பதிலைச் சொன்ன அர்ச்சனா.. கொடி போன்ற உடலோடு.. வட்ட முகத்தோடு.. அகன்ற பெரிய கண்களோடு.. நீண்ட கூந்தலோடு..சிவந்த நிறத்தில் இருந்தாள்.. மயில் கழுத்தின் நிறத்தில்.. அரக்கு நிறக் கரையிட்ட மைசூர் பட்டு சேலையைக் கட்டி யிருந்தாள்.. அவள் பேசும்போது.. காதுகளில் ஆடிய ஜிமிக்கி.. அவளது அழகுக்கு அழகு சேர்த்தது.. வலது கையில் பொன் வளையல்களையும்.. இடது கையில் கைக்கடிகாரத்தையும் அணிந்திருந்தாள்.. கழுத்தில்.. கல் வைத்த மாலை..
அவளது கண்கள்.. வேதநாயகியின் கழுத்தில் இருந்த வைர அட்டிகையில் பதிந்து மீண்டன..
அவள் தன் நகையின் மேல் ஆசைப்படுவதை உணர்ந்து கொண்ட வேதநாயகி.. தன் அட்டிகையை கழட்டி.. அர்ச்சனாவின் கையில் கொடுத்தாள்..
"என்ன அத்தை.. வைரத்தைப் போய்.. என் கையில் கொடுக்கறீங்க..?" அர்ச்சனா.. பதட்டமாகக் கேட்டாள்..
"உனக்கு இந்த டிசைன் பிடிச்சிருக்கா..?"
"பிடிச்சிருக்குதான் அத்தை.. இருந்தாலும்.."
"என்ன..? இருந்தாலும்ன்னு ராகம் இழுக்கறே.. போட்டுப்பாரு.." வேதநாயகி உரிமையாக அதட்டினாள்..
"நான் போட்டுப் பார்க்கவா..?" அர்ச்சனா நம்ப முடியாமல் கேட்டாள்..
"ஆமாம்.. நீதான் போட்டுப் பார்க்கனும்.. நீதானே இதைப் போட்டுப் பார்க்கனும்னு மனசுக்குள்ள ஆசைப் பட்ட..? போட்டுப் பாரு.."
"வேணாம் அத்தை.. இது வைர அட்டிகை.."
"இருக்கட்டுமே.. வைரமாக இருந்தால் ஆசைப்படக் கூடாதா..?"
அர்ச்சனா தயங்கினாள்.. ஆனாலும்.. கையிலிருந்த வைரத்தின் ஒளி.. கழுத்தைக் கவர.. அந்த அட்டிகையின் அமைப்பில் மனதை பறிகொடுத்தவள்.. சங்கடத்துடன்.. அதைத் தன் கழுத்தில் போட்டும் பார்த்தாள்..
"இப்பத்தான் இந்த அட்டிகைக்கே ஒரு அழகு வந்திருக்கு..." தன்னையறியாமல் பாராட்டிவிட்ட குணவதி.. மருமகள் கோவித்துக் கொள்வாளோ என்ற எண்ணம் மனதில் தோன்ற.. நாக்கைக் கடித்துக் கொண்டாள்..
'சும்மாவே என் மருமக.. சுத்திவிட்ட பம்பரம் கணக்கா ஆடுவா.. இதில இதை வேற சொல்லி வைச்சிட்டேனே.. இவ கழுத்துக்கு இந்த அட்டிகை நல்லாயில்ல.. அர்ச்சனா கழுத்துக்குத்தான் நல்லா யிருக்குன்னு.. அர்த்தப்படுத்திக் கிட்டா.. என்ன செய்யுது..?'
குணவதி திகிலுடன் வேதநாயகியை பார்க்க.. அவளோ..
 "சரியாச் சொன்னீங்க அத்தை." என்று மலர்ந்து சிரித்தாள்..
தான் காண்பது.. கனவா.. இல்லை நனவா.. என்று குணவதிக்கு சந்தேகம் வந்துவிட்டது.. இமைகளைக் கொட்டி.. மருமகளை பார்த்தவள்..
'தாய் பாசம்தான் ஒருத்தியோட குணத்தை எப்படி யெல்லாம் மாத்தது..' என்று மனதிற்குள் வியந்து கொண்டாள்.
"இந்தாங்க அத்தை.." 
அர்ச்சனா மனமில்லாமல் வைர அட்டிகையை கழட்டி வேதநாயகியிடம் நீட்டினாள்..
அவளுக்கோ அதை வாங்கிக் கொள்ள.. சிறிதளவு கூட மனமில்லை.. அர்ச்சனாவின் முகத்தை பாசத்துடன் பார்த்தபடி..
"நீயே போட்டிரும்மா.." என்று சொல்லிவிட்டாள்..
"என்னது..?" அர்ச்சனா ஆச்சரியத்துடன் கண்களை அகலவிரித்தாள்..
"இது வைர அட்டிகை அத்தை.."
"இதையே எத்தனை தடவைதான் சொல்லுவ..? ஆமாம்.. இது வைர அட்டிகைதான்.. அதுக்கு என்ன இப்ப..?"
"இது உங்களுடையது அத்தை.. என்னுடையது இல்லை.."
அர்ச்சனா தெளிவான குரலில்... கண்டிப்பான தொனியில் கூறிக் கொண்டே வைர அட்டிகையை வேதநாயகியிடம் நீட்டினாள்..
அந்த நொடியில்.. அவளிடம் மாறுபட்ட இரு பரிணாமங்களை பார்த்திபனால் பார்க்க முடிந்தது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -13
புலர்கின்ற பொழுதில் -13
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy