முகங்கள் -part -II,

சலூன் ராஜா அண்ணன் திருச்சியில் பள்ளிக்கூடம் செல்லும் காலத்தில் ரெகுலராக சென்று முடிவெட்டிக் கொள்ளும் கடைகளை மறக்கவே முடியாது. அந்த ...


சலூன் ராஜா அண்ணன்
திருச்சியில் பள்ளிக்கூடம் செல்லும் காலத்தில் ரெகுலராக சென்று முடிவெட்டிக் கொள்ளும் கடைகளை மறக்கவே முடியாது.

அந்த பருவத்தில் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு சலூன் கடைக்குப் போய், அது பழக்கமானது. ரங்கா அண்ணன் என்பவருடைய தந்தைக்கு சொந்தமான கடை அது. முதல் முறை ஒரு ஞாயிறு காலை ஐந்தரை மணிக்கு முடி வெட்டிக் கொள்ள போன போது பல ஆச்சரியங்களை காண முடிந்தது. வீட்டில் அப்பா பயன்படுத்தும் சாதனங்களைப் பார்த்து, ப்ளேடு என்றாலே அது 7’ O கிளாக் என நான் நினைத்திருக்க அவர் டோபாஸ், சூப்பர் மேக்ஸ் என வித விதமாக அடுக்கி இருந்தார். அதே போல் பால்மோலிவ் ஷேவிங் க்ரீம் மட்டுமே உலகத்தில் உண்டு என்ற என் உலகத்தை திருத்தி பல புதிய ஷேவிங் க்ரீம் பிராண்டுகளை பார்த்ததும் அங்கே தான்! நல்ல வேளை படிகாரத்தில் வேறுபாடில்லை.

ரங்கா அண்ணன் பிளஸ் டூ படிக்கும் வரை எங்களுடன் கிரிக்கெட் விளையாட வருவார். என் வயோதத்த நண்பன் விஜயராகவனின் அண்ணன் கண்ணன் என்பவரின் கிளாஸ் மேட். எங்களுக்கு சீனியர் செட்.  ப்ளஸ் டூ முடித்து கடைக்குள் போய் விட்டார். மேலே படிக்கவில்லை. விளையாட வருவதையும் நிறுத்தி விட்டார் ஆனால் கடைப் பக்கம் போனால் ஃப்ரீயாக அவர் இருந்தால் அரட்டை அடிக்கலாம்.

ரங்கா அண்ணன் பக்கா திமுக ஆதரவாளர், சூப்பர் ஸ்டார் ரசிகர். எப்படிப்பட்ட ரசிகர் என்றால், 
“தேவர் மகன் படம் சூப்பர் டா, உங்க ஆள் கலக்கிட்டான்” என்று சொல்லிக்கொண்டே பாண்டியன் படத்தை தியேட்டரில் போய் மூன்று முறை பார்த்தவர். 
இது அனைத்தையும் விட முக்கியமான சங்கதி என்னவென்றால் ரங்கா அண்ணன் இளையராஜா பக்தர். இந்த சமயத்தில் ரங்கா அண்ணனின் அப்பா தவறிப் போனார். அவரின் பெரியம்மா மகன் ராஜா என்பவர் கடைக்கு வந்தார். காரியம் முடித்த பின் ரங்கா அண்ணன் சாமி படங்களுக்கு அருகே தன் அப்பாவின் படத்தை வைத்தார் முகம் பார்க்கும் கண்ணாடிகள் உள்ள சுவர் அருகே கருணாநிதி படத்தையும் வைத்தார். அவர் கடையில் தினகரன் பேப்பர் தான்!  

எண்ணி நான்கே மாதங்களில் ரங்கா அண்ணனுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. ஆர்பிஎஃப் ரோடு நாயர் கடையில் இட்லி, ரோஸ்ட், மைசூர் பாகு என ட்ரீட் வைத்து சங்கதியை சொன்னார். வருடா வருடம் தீபாவளிக்கு வருவதாகவும் ஐந்து வருட காண்டிராக்ட் என்றும் சொன்னார். ரங்கா அண்ணன் சிங்கப்பூர் புறப்பட்டார். ராஜா அண்ணன் கடையைப் பார்த்துக் கொள்ள துவங்கினார்.

ராஜா அண்ணன் ரங்கா அண்ணன் போல் “அரசியல்” பேச மாட்டார். தினமும் காலை ஐந்து மணிக்கு கடை திறப்பார். வாரா வாரம் சமயபுரம் செல்வதால் செவ்வாய் கிழமைக்குப் பதில் வெள்ளிக்கிழமை கடைக்கு லீவ் விடத் துவங்கினார் ரங்கா அண்ணன் வைத்த கருணாநிதி படத்தை எடுத்தார்.

ஈக்வலைஸர் உள்ள அசெம்ப்ள்ட் செட், ரெண்டு பெரிய ஸ்பீக்கர் என கடையை மெருகேற்றினார். அனைத்து வயது பசங்களிடமும் நன்றாகப் பழகினார் காலை சீர்காழி கோவிந்தராஜன் விநாயகனே என்றும் டிஎம்எஸ் அழகென்ற சொல்லுக்கு முருகா என்றும் ஒலிக்க, பிற நேரங்களில் அவருக்கு மட்டும் பிடித்த டி,ராஜேந்தர் பாடல்களும், அவருக்கும் எனக்கு ரொம்ப பிடித்த ரோஜா, அசோகன், புதியமுகம் படப் பாடல்களும் ஒலிக்கும். ராஜா அண்ணன் எனக்கு நெருக்கமான ஸ்நேகிதர் ஆனார்.

இடையில் ரங்கா அண்ணன் அயல்தேசத்திலிருந்து வந்தார். ராஜா அண்ணன் தனியாக கடை ஆரம்பித்தார். ரங்கா அண்ணன் தன் கடைக்கு புதிதாக இருவரை வேலைக்கு சேர்த்தார், புதிது புதிதாக கடைக்கு நிறைய ஆட்கள் வர ஆரம்பித்தார்கள் ரங்கா அண்ணனுடன் அரட்டை அடித்தார்கள், வழக்கமாக முடி வெட்டிக் கொள்பவர்கள் ராஜா அண்ணன் கடைக்குப் போக ஆரம்பித்தார்கள்.

புதிய கடையிலும் ராஜா அண்ணன் அதே போல் தான் நடந்து கொண்டார் காலை ஐந்து மணிக்கு கடை திறப்பார். விளக்கேற்றி ஊதுபத்தி பற்ற வைத்து சாமி கும்பிட்டு கத்திரிக்கோலை எடுத்தால் டிபன் சாப்பிட பத்து மணி ஆகிவிடும். சனி ஞாயிறுகளில் இன்னும் தாமதமாகும். மதிய சாப்பாடு முடிய அவருக்கு நாலு மணி ஆகும். ராஜா அண்ணனுக்கும் அப்பா கிடையாது, அம்மா ஒரு தங்கை. காலையில் அம்மா தான் டிபன் கொண்டு வந்து தருவார். மதிய சாப்பாடும் அம்மா தான் கேரியரில் எடுத்து வருவார். தங்கை காலேஜ் படிக்கும் போது ராஜா அண்ணன் நிறைய சீட்டு போட ஆரம்பித்தார். படித்து முடித்தவுடன் சகோதரிக்கு திருமணம் முடித்தார். அதன் பின்பும் சீட்டு போடுவதைத் தொடர்ந்தார். தினமும் மாலை கடைக்கு சிலர் வந்தால், அண்ணன் அவர்களிடம் காசு தருவார். வந்தவர்கள் அட்டையில் ஏதோ குறித்து கையெழுத்திடுவார்கள்.

ஒரு சனிக்கிழமை காலை வெள்ளன முடி வெட்டிக் கொள்ள போனேன். ஏற்கனவே இருவர் மட்டும் இருந்தார்கள், வேலை ஏழரை மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. முடி வெட்டிக்கொள்ள காத்திருந்தவன் என் நண்பன். 
“கூட்டம் வந்தா பிரச்சனை, டிபனை முடிச்சுக்கறேன்” என்றார். நண்பன் தலையாட்டினான். 
அம்மா கொண்டு வந்திருந்த இட்லிக்களை சாப்பிட்டபடி என்னிடம் பேச ஆரம்பித்தார்.

“தந்தி பேப்பரை ஒரு வரி விடாம படிச்சுட்டியா?”

“ஆமாண்ணே”

கிரிக்கெட், லோக்கல் விஷயங்கள் என்று பேசினோம் திடீரென அண்ணன் “உங்க ஆளு உண்மையிலேயே பட்டையைக் கிளப்புறான் போ” என்றார்.

“யாரை சொல்றீங்கண்ணே?”

“ரஹ்மான்”

“அவர் மியூஸிக் தாண்ணே இப்போ டாப்”

“உங்க ஆள் மியூஸிக் போட்ட படம்னா எல்லா பாட்டையும் ரெக்கார்ட் செய்துடலாம், கலக்குறான்”

“நான் ரஹ்மான்னா ஒரிஜினல் கம்பெனி கேஸட் வாங்கிருவேண்ணே”

“என்னா மியூஸிக் அந்தப் படத்துல”

“எதை சொல்றீங்க வீரபாண்டி கோட்டையிலே தானே?”

“இரு வரேன், கை கழுவி அழுத்தமாக துடைத்துக் கொண்டவர் ஒரு கேஸட்டை எடுத்து டேப் ரெக்கார்டரில் போட்டார். மனோ குரல் ஒலிக்க, ரீவைண்ட் செய்தார், சுஜாதா குரல், ஒலிக்க ரீவைண்ட் செய்தார். அந்த மியூஸிக் வந்தது, என்னைப் பார்த்து “கேளு” என்றார்.

புல்லாங்குழல் கீதம் ஒரு பக்கம் ஒலிக்க இரு ஸ்பீக்கர்களுக்குள் நீர் வழிந்தோடி பரவசப்படுத்தியது.  

நான் பரவசம் மேலிட, “என்னண்ணே தலைவர் மியூஸிக் மாதிரி இருக்கு?”

“நீ கிழக்குச்சீமையிலே பட கேஸட் வரல வரலன்னு புலம்பிக்கிட்டு இருந்த, வந்துருச்சு உடனே ரெகார்ட் பண்ணி வந்து நேத்து நைட் முழுக்க கேட்டேன், ஒரு பாட்டு மனப்பாடமே ஆகிப்போச்சு. பாட்டு மனசை என்னமோ பண்ண உடனே எஸ்டிடி பூத் போய் ஊருக்கு போன் போட்டு தங்கச்சி கிட்ட பேசினேன். ‘என்ன மச்சான் இந்த நேரத்துல போன்னு’ தங்கச்சி வீட்டுக்காரர் பதறிட்டார்” அண்ணன் பேசி முடித்தார். தன்னிச்சையாக அவர் வாய் முணுமுணுத்த பாடல் வரிகள்...

“வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு, பள்ளப்பட்டி தாண்டிப்புட்டா பாதி உயிர் போச்சு”

  
  
               

       

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகங்கள் -part -II,
முகங்கள் -part -II,
https://1.bp.blogspot.com/-wodIpwjt9fc/Xoh8wCTqLbI/AAAAAAAAAz8/1OY138Kdiyo8KV_m_N37Jlt8A6G5qV7KQCLcBGAsYHQ/s320/Raja%2BAn%2BI.jpg
https://1.bp.blogspot.com/-wodIpwjt9fc/Xoh8wCTqLbI/AAAAAAAAAz8/1OY138Kdiyo8KV_m_N37Jlt8A6G5qV7KQCLcBGAsYHQ/s72-c/Raja%2BAn%2BI.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/mugangal-part-ii.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/mugangal-part-ii.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy