மௌனமான நேரம்.-4

4 "கால் சென்டரில் வேலை செய்தேன்.. நைட் பூராவும் கண்விழித்துவிட்டு காலையில் காலேஜ் போக சிரமமாக இருக்கும்.. தூங்க வேண்டும் போல கண்...


4

"கால் சென்டரில் வேலை செய்தேன்.. நைட் பூராவும் கண்விழித்துவிட்டு காலையில் காலேஜ் போக சிரமமாக இருக்கும்.. தூங்க வேண்டும் போல கண்கள் சொக்கும்.. ஆனால் காலேஜூக்கு ஓடி விடுவேன்.. ஏன் தெரியுமா..?"
"படிப்பின் மீது அவ்வளவு அக்கறையா..?"
வைசாலியின் அந்த நம்பிக்கையை உடைத்தான் கௌசிக்..
"நிஷாவின் மீது அவ்வளவு அக்கறை வைசாலி.. பாவம்.. அவளுக்கு தனியாக போய் காபி சாப்பிடக்கூடத் தெரியாது.. காலையில் கொலை பட்டினியாய் வந்து சேருவாள்.. அவளுக்கு காலை டிபனில் இருந்து.. சாயந்திரம் சாப்பிடும் ஐஸ்கிரீம் வரைக்கும் நான் தான் வாங்கித் தந்தாகணும்.. ஹாஸ்டலில் இருந்து பழக்கமில்லாதவள்.. தனியாக வீடெடுத்து தங்கியிருந்தாள்.. சில சமயம் நைட்டுக்கான.. டிபனையும் பார்சல் வாங்கிக் கொடுத்துவிடுவேன்.. பாவம்.."
'ம்ஹூம்.. யாரைப் பார்த்து யார் பாவம்ன்னு சொல்வது.. அவளைப் பார்த்து இவன் 'பாவம்' போடுகிறான்..'
வைசாலிக்கு என்னவோ கௌசிக்கைப் பார்க்கும் போதுதான் பாவம் போலத் தோன்றியது.. அதை வெளியில் சொல்வது அவ்வளவு மரியாதையாய் இருக்காது என்று தோன்ற.. அவளது வழக்கப்படி மௌனம் காத்தாள்..
"கால் சென்டரில் வேலை பார்த்த சம்பளத்தை சேர்த்து வைத்தும் வைரத்தோட்டிற்கு பணம் போத வில்லை.. அதனால் ரத்த தானம் செய்து அதில் வந்த பணத்தையும் சேர்த்து போட்டு அவளுக்கு வைரத் தோட்டை வாங்கிக் கொடுத்தேன்.."
வைசாலி பிரம்மிப்புடன் கௌசிக்கைப் பார்த்தாள்.. இப்படிக்கூட படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவனிடம் 'காதல்' என்ற பெயரில் ஒருத்தி வழிப்பறி செய்வாளா என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது..
"அதை வாங்கிக் கொண்டபோது நிஷாவின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்துவிட்டது வைசாலி.. அன்றைக்கு ராத்திரி அவளுடன் தங்க என்னை அவள் கூப்பிட்டாள்.."
அதற்கு மேல் கேட்க முடியாதவளாக வைசாலி சட்டென்று எழுந்துவிட்டாள்.. கௌசிக்கின் புருவங்கள் ஏறின..
"ஏன்..?" என்று புரியாமல் வினவினான்..
"எனக்கு.. வீட்டுக்குப் போகணும்.."
"போகலாம் பொறு.."
"இல்லை.. எனக்கு நேரமாகி விட்டது.."
"நான்.. இன்னும் சொல்லி முடிக்கவில்லையே.."
"எனக்கு கேட்க பொறுமையில்லையே.."
"உனக்கா பொறுமையில்லை..? நீ பொறுமையின் சிகரம்ன்னு எனக்குத் தெரியும் உட்கார்.."
"முடியாது.."
"நீ என்னிடம் காதல் சொன்னாய் வைசாலி.."
அதைக் கேட்டதும் வைசாலிக்கு கண்கலங்கி விட்டது.. அதை அவன் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறானா..? நினைவில் வைத்திருந்தால் இப்படியெல்லாம் அவளிடம் பேசுவானா..?
"சொன்னேன்தான்.. அதற்கென்ன இப்போ..?"
"ஏன் உன் காதலை மறுக்கிறேன் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டாமா..?"
'நீயே என் காதலை தூக்கியெறிந்து விட்டாய்.. அதை அலட்சியப்படுத்தி.. புறக்கணிப்பதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு எனக்கு ஆகப் போவதென்ன..?'
வைசாலியின் கண்களில் கண்ணீர் கோடாக வழிந்து இறங்கியது.. கௌசிக் எழுந்து அவளருகில் வந்தான்..
"அழாதேன்னு சொன்னேனா இல்லையா.. நீ அழுதால் எனக்கு கில்ட்டியாக இருக்கிறது வைசாலி.. புரிந்துகொள்.."
"நீங்கள்.. சொல்வதைச் சீக்கிரமா சொல்லுங்களேன்.. ப்ளீஸ்.."
"நிஷாவைக் காதலித்தேன்.. ஃபைனல் இயரில் நான் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகியிருந்தேன்.. அவள் செலக்ட் ஆகவில்லை.. என் கம்பெனியில் என்னை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.. அவள் மும்பைக்கு போய் விட்டாள்.. இடையில் இந்தியாவுக்கு வந்தபோது அவள் கொடுத்த அட்ரஸிற்கு அவளைத் தேடிப்போனேன்.. அவள் இல்லை.. காலேஜ் முடிந்தவுடன் அவளிடமிருந்து எனக்கு கடிதமோ.. ஈமெயிலோ வரவில்லை.. அவளுக்கு போன் பண்ணினால்.. 'ஸ்விட்ச் ஆப்' என்று பதில் வருகிறது.. அன்றிலிருந்து இன்றுவரை அவளைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்.. அவள் கிடைக்கவேயில்லை வைசாலி.."
'அவள்தான் கிடைக்கவில்லையே.. என் காதலை ஏற்றுக்கொள்ளேன்..' என்று அவனிடம் கெஞ்ச வேண்டும் போலத் தோன்ற.. இப்படி ஆகிவிட்டோமே.. என்ற பரிதவிப்புடன் வைசாலி அங்கிருந்து அவசரமாக கிளம்ப யத்தனித்தாள்..
ஆனால் அவளை போக விடுவேனா என்று கங்கணம் கட்டியவனாக கௌசிக் பேச்சைத் தொடர்ந்தான்..
"அவளை என்னால் மறக்க முடியவில்லை வைசாலி.. ஸ்கூல் டைம் முடிந்து காலேஜில் சேர்ந்த டீன் ஏஜ் பீரீயட் அது.. எனக்கு வேண்டியதை என் வீட்டார் வாங்கிக் கொடுத்து கொண்டிருக்க.. அவளுக்கு வேண்டியதைக் கேட்டு.. வாங்கி கொடுக்க வைத்து என்னை முதன் முதலில் பெரிய மனிதனாக உணர வைத்தவள் நிஷா.. அதனாலேயே அவள்மேல் எனக்குப் பிரியம் உண்டானது.."
ஏமாந்து போவதில் இப்படியும் ஒரு லாஜிக் இருக்கு மென்பதை அன்றுதான் அறிந்தாள் வைசாலி..
'இவன் ஏமாறுவதை சுகமாக நினைத்திருக்கிறான்..'
"அவளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. என்றாவது ஒருநாள் அவள் கிடைப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. அப்படி அவள் கிடைத்துவிட்டால்.. அவளைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்.. இப்போது சொல்லு.. என்னால் எப்படி உன் காதலை ஏற்றுக்கொள்ள முடியும்..?"
வைசாலி கண்மூடி நின்று அவனது வார்த்தைகளை கிரகித்து தன் காதல் தோல்வியை ஜீரணித்துக் கொண்டாள்.. தொய்வுடன் அவள் அடியெடுத்து வைத்தபோது அருகில் வந்த கௌசிக் அவள் முகத்தைப் பார்த்து ஆழமான குரலில் சொன்னான்..
"அவள்தான் என்னை அவளுடன் ஒரு ராத்திரியைக் கழிக்க கூப்பிட்டாள்.. ஆனால் நான் போகவில்லை வைசாலி.. இந்த பதிலாவது உனக்கு நிம்மதியை தருமில்லையா..?"
வைசாலி மறுகணம் அங்கே நிற்காமல் சிட்டாக பறந்து விட்டாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனமான நேரம்.-4
மௌனமான நேரம்.-4
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s320/Movunamana%2BNeram.jpg
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1I/cF_i24q2qUUvGvlXNudrVvyfnFQjph42gCPcBGAYYCw/s72-c/Movunamana%2BNeram.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/mounamaananeram-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/mounamaananeram-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy