சினிமா ... சினிமா

“யுவர் ஆனர், இந்த சகுந்தலையைக் காதலித்து ஏமாற்றிய துஷ்யந்தன், இதோ இந்த டைகர் தயாநிதிதான்...” என்று ‘விதி’ படத்தில் சுஜாதா ஆவேசமாக கோர...

“யுவர் ஆனர், இந்த சகுந்தலையைக் காதலித்து ஏமாற்றிய துஷ்யந்தன், இதோ இந்த டைகர் தயாநிதிதான்...”

என்று ‘விதி’ படத்தில் சுஜாதா ஆவேசமாக கோர்ட்டில் வாதாடும்பொழுது, நீதிபதியாக அமர்ந்திருக்கும் பாலாஜியே தன் கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொள்வார்.

ஆனால் கல்லுப்பட்டி லட்சுமி தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எவருமே கண் கலங்கவில்லை. அவர்கள் படம் ஆரம்பித்ததிலிருந்தே வேறொரு வேலையை மும்முரமாகச் செய்து கொண்டிருந்தார்கள். அதாவது, படம் ஆரம்பித்ததிலிருந்து அந்தப் படத்தில் பேசப்படும் அனைத்து வசனங்களையும், அந்தக் கதாபாத்திரங்களுடன் கூடவே சேர்ந்து மனப்பாடமாக ஒப்பித்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், ‘விதி’ படத்தின் வசனங்களை, பல நூறு முறைகள் விசேஷ வீடுகளில் ஒலிக்கும் ஒலிபெருக்கிகள் மூலமாகக் கேட்டுக் கேட்டு, அவர்களுக்குத் தெரியாமலேயே அந்த வசனங்கள் அவர்களுக்கு மனப்பாடம் ஆகியிருந்தன.

எங்கள் ஊரின் எல்லையில் இருந்த அந்த தியேட்டருக்கு, உழைத்துக் களைத்த பல்வேறு சுற்றுப்புற கிராம மக்கள், சீனியை நோக்கிச் செல்லும் எறும்புகளைப் போல தினமும் மாலையில் சாரை சாரையாகச் செல்வார்கள். சினிமா ஆரம்பிக்கும் நேரம் நெருங்க நெருங்க, தியேட்டரை நோக்கி ஆண்களும் பெண்களும் ஓடுவதைப் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். எண்பதுகளில், சினிமா என்பது அவ்வளவு ஆர்வத்திற்குரிய ஒரு விஷயமாக இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் நடந்த ஊர்த் திருவிழாக்களின் பொழுது, பொது இடங்களில் திரைகட்டி பழைய எம்ஜிஆர் மற்றும் சிவாஜி படங்களைத் திரையிடுவார்கள். ‘தங்கப்பதுமை’ படத்தின் க்ளைமாக்ஸில் கண்களை இழந்த சிவாஜி, ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே’ என்ற பாடலைப் பாடும்பொழுது, பெண் ரசிகைகள் நம்பியாரையும் எம்.என். ராஜம் அவர்களையும் காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார்கள். விடிய விடியத் திரையிடப்படும் அந்தப் படங்களைக் கண்விழித்துப் பார்ப்பவர்களில் பெரும்பாலான ஆண்களும் சிறுவர்களும், களைப்பில் அந்தப் பொது இடத்திலேயே தூங்கி விடுவார்கள். மறுநாள் அதிகாலையில் அந்தப் பக்கமாகச் சென்று, வெட்டவெளியில் வெவ்வேறு கோணங்களில் தூங்கும் அவர்களைப் பார்த்தால், போர்க்களத்தில் மாண்டு கிடக்கும் வீரர்களைப் போலத் தெரிவார்கள்.

டிவி என்கின்ற வஸ்துவை எண்பதுகளின் பிற்பாதியில்தான் கல்லுப்பட்டியில் சில வசதி படைத்தவர்கள் வாங்கினார்கள். வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்படும் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியையும், ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படும் திரைப்படத்தையும் பார்ப்பதற்கு, சிறுவர்கள் டிவி இருக்கும் வீடுகளைச் சுற்றி கூட்டம் கூட்டமாக அலைமோதுவார்கள். சில நேரங்களில் வன்முறையாக கதவைத் தள்ளிக்கொண்டு டிவி இருக்கும் வீட்டுக்குள்ளேயே அந்தச் சிறுவர்கள் நுழைந்து விடுவார்கள். சில கோபக்கார டிவி ஓனர்கள், அந்த சிறுவர்களை ஒவ்வொருத்தராகத் தூக்கிக்கொண்டு வந்து வீட்டிற்கு வெளியே விட்டாலும், ‘மம்மி’ திரைப்படத்தில் வெட்ட வெட்ட மணல் மம்மிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதைப்போல, சிறுவர்கள் தொடர்ச்சியாக டிவி இருக்கும் வீட்டிற்குள் நுழைந்து கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் டிவி ஓனர்கள் அலுப்படைந்து யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பதார்த்தமாக விட்டுக் கொடுத்து விடுவார்கள்.
கல்லுப்பட்டியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஒரு கிராமத்தின் அருகே டூரிங் டாக்கீஸ் ஒன்று ஆண்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்தது. ஏனென்றால், அந்த தியேட்டரில் ஆண்களுக்கான திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன. கூச்ச சுபாவமுடையவர்கள் பதுங்கிப் பதுங்கிச் சென்று அங்கே படம் பார்ப்பார்கள். சில நேரங்களில் தந்தையும் மகனும் ஒரே காட்சிக்கு வந்து தியேட்டருக்கு உள்ளேயே எதிரெதிரே தற்செயலாகச் சந்தித்துப் பின் தெறித்து ஓடி, தியேட்டருக்குள் ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து படம் பார்ப்பார்கள். தாங்கள் கடந்த காலத்தில் தவறவிட்ட பாலியல் நுட்பங்களைக் கைவசப்படுத்துவதற்காக, சில தாத்தாக்களும் அந்த தியேட்டருக்கு வந்து போவார்கள்.
கல்லூரி விடுதியில் வெள்ளிக்கிழமை இரவுகளில் திரைகட்டி சினிமா திரையிடுவார்கள். பெரும்பாலும் பிரபலமான திரைப்படங்களே திரையிடப்படும். நண்பன் ஒருவன் சினிமா ரெப் ஆக இருந்தபொழுது ஒருமுறை, அவ்வளவாக பிரபலமாகாத ஒரு பழைய ஜெய்சங்கர் படத்தைத் திரையிட வைத்தான். அந்தப் படம் ஆரம்பமாகும்போது உற்சாகமில்லாமல் பார்க்க ஆரம்பித்தவர்கள், போகப்போக மிகவும் உற்சாகமடைந்து, அந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்து திரையிட வைத்ததற்காக அவனைப் பாராட்டினார்கள். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் கர்ணன் என்பதே அவர்களுடைய பாராட்டுகளுக்கு மூலகாரணமாக இருந்தது.
சில வருடங்களுக்கு முன்பு, அமீரகத்தில் உள்ள ஒரு 4DX வசதி படைத்த தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று, ‘கிங் காங்’ வரிசையில் வந்த ‘ஸ்கல் ஐலேனட்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தைப் பார்த்தோம். முப்பரிமாணக் காட்சியுடன் சேர்ந்து, காட்சிகளுக்கேற்ப அசையும் இருக்கைகள், வாசனைகள், மழைத்துளிகள், பனிப்புகை, ஊதக்காற்று என்ற பல எஃபெக்ட்களுடன், அந்தப்படம் ஒரு அற்புதமான அனுபவமாக அமைந்தது. எங்கள் இருக்கை வரிசைக்கு சற்றுத்தள்ளி முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு முதிய வெள்ளைக்காரத் தம்பதி, இந்த ஸ்பெஷல் எஃபெக்டுகளை தங்களது ரொமான்ஸ் நடவடிக்கைகளுக்கு நல்லதொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: சினிமா ... சினிமா
சினிமா ... சினிமா
https://1.bp.blogspot.com/-Y3EWSfIY9CQ/XPThdq6ELXI/AAAAAAAAAn0/o86AnAEnz4QnBWyZJVfWMYam1EHW5nWLACPcBGAYYCw/s1600/12299241_458097944373776_513891426058382829_n.jpg
https://1.bp.blogspot.com/-Y3EWSfIY9CQ/XPThdq6ELXI/AAAAAAAAAn0/o86AnAEnz4QnBWyZJVfWMYam1EHW5nWLACPcBGAYYCw/s72-c/12299241_458097944373776_513891426058382829_n.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/moorthiyinpakkangal_24.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/moorthiyinpakkangal_24.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy