எங்கிருந்தோ ஆசைகள் -64

64 என் மனதில் உன் மனது... இணைந்து விட ஆசைகொண்டேன் .. எது நடந்ததோ அது நன்றாகவே தேவராஜனுக்கு நடந்தது...அவன் எதை நினைத்து துரியோதன...


64
என் மனதில் உன் மனது...
இணைந்து விட ஆசைகொண்டேன்..


எது நடந்ததோ அது நன்றாகவே தேவராஜனுக்கு நடந்தது...அவன் எதை நினைத்து துரியோதனனை தூண்டி விட்டு அர்ஜீனை மாப்பிள்ளை கேட்க வைத்தானோ அந்தக் காரியம் வெற்றிகரமாக முடிந்து விட்டது..
அவனுக்கு அர்ஜீனின் காதலைப் பற்றி மிக நன்றாகவே தெரியும்.. அதேபோல அர்ஜீன் காதலில் இருந்து பின்வாங்க மாட்டான் என்பதும் அவனுக்குத் தெரியும்...
இருந்தும் அவன் துரியோதனனை முடுக்கி விட்டான்.. தங்கையின் மனதில் ஆசை வளர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற நினைவின்றி விபரீத விளையாட்டில் அவன் இறங்கினான்.. அவனுக்கு அவனுடைய ஆசை நிறைவேற வேண்டும்.. அது மட்டுமே அவனுக்கு முக்கியம்.. தேன்மொழியின் மனதில் ஆசையின் விதை ஊன்றி விடுவதைப் பற்றி அவனுக்கு யாதொரு கவலையும் இல்லை...
துரியோதனன் மகளுக்காக அர்ஜீனை மாப்பிள்ளை கேட்க வேண்டும்.. பார்த்தசாரதி அதை மறுக்க வேண்டும்.. அந்த மறுப்பினால் கோபம் கொள்ளும் துரியோதனனின் மனதை தேவராஜனின் விருப்பப்படி அவன் திருப்பி விட வேண்டும்...
"அப்படியாப்பா அந்த ஆளு சொன்னாரு..." அவன் கவலையுடன் கேட்பதைப் போல அவன் நடித்தான்...
"ஆமாண்டா மகனே.. உன் மகளைக் கட்டிக்க முடியாதுன்னு அவன் சொல்லிட்டாண்டா.." துரியோதனனின் வார்த்தைகளில் புறக்கனிப்பின் வலி தெரிந்தது...
செல்விக்கு பற்றிக்கொண்டு வந்தது.. இது நடக்காது என்றுதானே அவள் படித்துப் படித்துச் சொன்னாள்.. அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மகன் கொடுத்த சாவியில் பொம்மை போல ஆடிவிட்டு.. இப்போது பெண் கொடுக்கறேன் என்று போனேன்.. அவர்கள் மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள் என்று முகத்தை சுணங்கிக் கொண்டிருக்கும் புருசனின் முதுகில் நான்கு போடு போட்டால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது...
"என்னக்கு நல்லாத்தான் வருது வாயில.." என்று அவள் ஆரம்பித்தாள்...
"செல்வி.. நீயுமாடி.." என்றார் துரியோதனன்..
"பேசாதீங்க.. தங்கம் போல புள்ளயப் பெத்து வைச்சுக்கிட்டு சாதி விட்டு சாதி இவரு மாப்பிள்ளை கேட்கப் போனாராம்.. அன்னைக்கே தலைப்பாடாய் அடிச்சுக்கிட்டேன்.. இது வேணாம்ன்னு.. கேட்டிங்களா..?"
"நம்ம பொண்ணு தங்கம்.. அவங்க தவ்விக்கிட்டு வந்துருவாங்கன்னு நினைச்சேண்டி.."
"என்மக தங்கம் தான்.. மகனத்தான் பித்தளையா பெத்து வைச்சிருக்கேன்.. அன்னைக்கே என் மக சொன்னா.. இது நடக்காதும்மான்னு.."
"அவ மனசில ஆசையை வளர்த்துட்டனே..."
"ஒரு மண்ணும் இல்ல.. அவ புத்திசாலி.. உங்களப் போல புத்தியக் கடன் கொடுத்திட்டு நிக்கல.. இதப் பத்திப் பேசினாலே போம்மா.. நீயும் அப்பாவப் போல காமெடி பண்ணாதேன்னு சொல்லிருவா.. அந்த மட்டிலும் நான் பொழைச்சேன்.."
செல்வியின் பேச்சில் யோசிக்க ஆரம்பித்த துரியோதனனை கவலையுடன் பார்த்தான் தேவராஜன்...
'ஆஹா.. இந்த மனுசன் யோசிக்க ஆரம்பிக்கிறாரே.. இவரு யோசிக்க கூடாதே...'
அவசரமாக அவன் களம் இறங்கினான்..
"சும்மாயிரும்மா.. உனக்கு ஒன்னும் தெரியாது..."
"அதான் மெத்தப் படிச்ச மேதாவி நீயிருக்கியல்ல.. உனக்குத் தெரிஞ்சதே இந்தக் குடும்பத்துக்கு ஒரு தலைமுறைக்கும் போதும்.. இதில நான் வேறத் தெரிஞ்சுக்கனுமாக்கும்..?"
"ஆம்பளைக பேசறப்ப ஊடே பேசாதம்மா..."
"இதப்பாருடா.. என் இளந்தாரி மகன் பேசறத.. இன்னைக்குத்தாண்டா ஆம்பளையா லட்சணமா நீ பேசியிருக்க.. இத்தனை நாளும் உங்கப்பா முதுகுக்கு பின்னாலயில்ல ஒளிஞ்சுக்கிட்டு இருந்த..."
"அப்பா.. அம்மா பேசறத காதில போட்டுக்காதீங்க.. இது உங்க கௌரவப் பிரச்னை..." தகப்பனாரை தூண்டி விட்டான்...
"அதைத் தாண்டா நானும் நினைக்கிறேன்.." பழையபடி மகனின் வலையில் விழுந்தார் துரியோதனன்..
"அவனுகள பழிவாங்க சூப்பர் யோசன ஒன்னு என்கைவசம் இருக்குப்பா..."
பழைய துரியோதனனாக இருந்தால் மகனை இகழ்ச்சியாக ஒரு பார்வை பார்த்து...
"சூப்பர் யோசனையா..? உனக்கா..?" என்று கேட்டிருப்பார்...
இப்போதைய துரியோதனன்தான் அப்படியில்லையே.. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் அவர் பார்த்த சாரதியின் குடும்பத்தைப் பழிவாங்க வழி தேடிக் கொண்டிருந்ததால் அவர் பரபரப்பாக...
"சொல்லு.. சொல்லு..." என்றார்...
"அந்த அர்ஜீன் பயபுள்ள யாரைக் காதலிக்கிறான்னு எனக்குத் தெரியும்..." மர்மக் குரலில் சொன்னான்..
"இதப்பாருடா.. அந்தப் பயபுள்ள யாரைக் காதலிக்கிறான்னு உனக்கு எப்படிடா தெரியும்..?"
துரியோதனன் சுவராஸ்யமாக கேட்க... செல்வியும், தேன்மொழியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்...
"தெரியும்ப்பா.. நம்ம கடையில வேல பாக்குதே.. காவ்யா காவ்யான்னு ஒரு புள்ள..."
"நம்ம கடையில காவ்யான்னு யாரும் வேல பாக்கலியே..."
"நம்ம பழைய கடையிலப்பா..."
"அது இப்ப நம்ம கடையில்லடா மகனே..."
'இப்ப அதான் ரொம்ப முக்கியம்..' பல்லைக் கடித்தான் தேவராஜன்...
கடையை விற்று விட்டவரே இப்படிச் சொன்னால் அதில் வேலை பார்க்கிறவர்கள் சொல்ல மாட்டார்களா என்றிருந்தது அவனுக்கு...
"சரிப்பா.. அது ஊரான் கடைன்னே வைச்சுக்குவோம்.."
"ஊரான் கடைதாண்டா..."
"அந்த ஊரான் கடையில் காவ்யான்னு ஒரு புள்ள வேல பாக்குதா.. இல்லியா..?"
"பாக்குது.. அதுக்கென்ன இப்ப..?"
"அந்தப் புள்ளயத்தான் இந்த பயபுள்ள காதலிக்குது.."
இது துரியோதனனுக்கு மட்டுமல்ல.. செல்விக்கும் தேன்மொழிக்குமே ஆச்சரியத்தைத் தரும் புதிய செய்தியாக இருந்தது...
"நிசமாவாடா சொல்ற..? அந்தக் கண்ணதாசனோட தங்கச்சியையா அவன் காதலிக்கிறான்..?"
"ஆமாம்பா..."
"சிவதாணு பெத்த மகளையா காதலிக்கிறான்..?"
"ஆமாம்பா.. ஆமாம்.."
"அன்னபூரணி வயித்தில பொறந்த பொண்ணயா காதலிக்கிறான்..?"
தேன்மொழிக்கே தகப்பனாரின் கேள்விகளில் சிரிப்பு வந்துவிட்டது.. செல்வியோ.. கேள்வியின் நாயகனின் பாடு.. அவனைப் பெற்ற தந்தையின் பாடு என்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தாள்...
தேவராஜனுக்குத்தான் தாங்க முடியவில்லை.. ஒருத்தி மீது ஆசைப்பட்டு விட்ட பாவத்திற்காக அவன் என்னவெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது..?
"ஏம்ப்பா.. நீங்க கேட்ட அத்தனையும் ஒன்னுதான..?"
"அதுக்கில்லடா தேவா.. அந்த சிவதாணு கோவக் காரனாச்சேடா.."
"கோவக்காரர்தான்..."
"கண்ணதாசன் ரோசக்காரனாச்சே..."
"ரோசக்காரன்தான்..."
"அந்த அன்னபூரணி.. இந்த ரெண்டையும் சேத்துக் கரைச்சுக் குடிச்சவளாச்சே.. எப்புடிடா தைரியமா அந்தப் பொண்ணு காதலிக்குது...?"
துரியோதனன் வன்மத்தை மறந்து கதை கேட்பதில் இறங்கிவிட தேவராஜன் பல்லை நறநறத்தான்.. இப்படியாகப் பட்ட தகப்பனை என்ன செய்தால் தகும் என்ற கோபம் அவனுக்கு..
"ஏம்ப்பா.. இப்ப அதுதான் நமக்கு முக்கியமா..? அந்தப் புள்ளையோட தைரியத்த மெச்சறத விட்டுப்புட்டு உங்க சபதத்தில ஜெயிக்கிறது எப்புடிங்கிறதப் பத்தி மட்டும் யோசிங்க..."
"நான் எப்ப சபதம் போட்டேன்..?" குழம்பிப் போன துரியோதனன் செல்வியைப் பார்த்து...
"ஏண்டி நான் சபதமா போட்டேன்..?" என்று கேட்டு வைத்தார்...
தேன்மொழிக்கு தகப்பனாரின் நிலையைக் காணப் பரிதாபமாக இருந்தது.. ஆனாலும் அவளால் அதை வாய் விட்டுச் சொல்லிவிட முடியாது.. தேவராஜன் சண்டைக்கு வந்து விடுவான்.. அதற்கு முன்பென்றால் துரியோதனன் மகளின் பக்கம் நிற்பார்.. இப்போதுதான் அவர் மதில் மேல் பூனையாக மாறிவிட்டாரே...
ஆகையால் அவள் மௌனம் சாதித்தாள்.. செல்வி அப்படியல்ல.. அவளுக்கு மௌனம் சாதிக்க வேண்டிய அவசியமில்லையே.. கணவனை நறுக்குத் தெறித்ததைப் போல நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் என்று அவள் துடித்தாள்...
"பேசாதீங்க.. எதையாச்சும் சொல்லிப் புடுவேன்..."
"என்னத்தடி சொல்லுவ...?"
"நீங்க சபதம் போட்டிங்களோ இல்லையோ.. இன்னும் கொஞ்ச நேரத்தில அதை உங்க மகன் தொண்டைக் குழியில இருந்து தோண்டியெடுத்து உங்க முன்னால கடை பரப்பப் போறான்.. வீனா என்னத்துக்கு என்கிட்ட வம்பைக் கட்டி இழுக்கறிங்க...?"
செல்வி மகனை முறைத்தாள்...
'ஆனாப்பட்ட அப்பாவாலாயே என் தகிடுதத்தத்தை கண்டுபிடிக்க முடியல.. இந்த அம்மா மட்டும் எப்படிக் கண்டு பிடிக்குது..?' தேவராஜனின் மனதில் கேள்வி முளைத்தது...
அதையெல்லாம் கண்டு கொண்டிருந்தால் அவனுக்கு வேலைக்கு ஆகுமா..? அதனால் அவன் செல்வி சொன்னதைப் போல துரியோதனனின் தொண்டைக் குழியிலிருந்து சபதத்தை தோண்டி யெடுக்கும் வேலையில் ஈடுபட்டான்...
"என்னப்பா நீங்க.. இதயெல்லாம் போயி அம்மாகிட்டக் கேட்டுக்கிட்டு.. பொம்பளகளுக்கு என்னப்பா தெரியும்..?"
"ஆஹா.. வாடா மகனே.. இப்பத்தான் நீ உன் ஆம்பளப் புத்தியக்காட்டியிருக்க.. இத்தன நாளா இது எனக்குத் தெரியாமப் போச்சே.. தெரிஞ்சிருந்தா நீ செஞ்சு வைச்ச ஒவ்வொரு வேலைக்கும் உன்னைத் தூக்கிப் போட்டு மிதிக்கனும்னு உங்க அப்பா சொன்னப்ப எட்டி நின்னு வேடிக்கை பார்த்திருப்பேனே.. அதவிட்டுப்புட்டு பெத்த மகனாச்சேன்னு ஊடாலே புகுந்து உனக்கு விழுந்த அடியையெல்லாம் எம் முதுகில தாங்கியிருக்க மாட்டேனே.. என்னைக்காவது ஒரு நாளைக்கு திருந்திப்புடுவான்னு சொல்லி அவரு கையில எடுக்கற அருவாளைப் புடுங்கி வைப்பேனே.. அப்பல்லாம் பொம்பளகளுக்கு என்னப்பா தெரியும்ன்னு  நீ சொல்லலையே சாமி..."
மதுரைப் பெண்களுக்கேயான வாக்குச் சாதுர்யம் அந்த மீனாட்சி தந்த வரம்.. மதுரை வட்டாரப் பெண்களைப் பேசி ஜெயித்துவிட முடியாது.. அவர்கள் மீனாட்சியின் ஆட்சியில் வாழ்ந்து பழகியவர்கள்.. பேச்சென்று வந்து விட்டால்.. விவகாரத்தின் வேர்வரை போய் அலசி ஆராய்ந்து அக்குவேறு ஆணி வேறாக பிட்டுப் பிட்டு வைத்து விடுவார்கள்...
அந்தப் பெண்களில் ஒருத்தியான செல்வி.. பொம்பளைகளுக்கு என்ன தெரியும் என்ற கேள்வி காதில்  விழுந்தால்... அந்தக் கேள்வியைக் கேட்டவன் பெற்ற மகனேயானாலும் சும்மா விட்டு விடுவாளா..? அவள் தேவராஜனை பிலுபிலுவென்று பிடித்து உலுக்கி எடுத்து விட்டாள்...
"பொறுடி.. அவன் என்னதான் சொல்றான்னு கேப்போமே..."
துரியோதனன் தலையிட்டு தேவராஜனை தப்பிக்க வைத்தாரோ.. அவன் பிழைத்தானோ..
தேன்மொழிக்கும் அதே எண்ணம்தான்...
"ஏம்மா.. பூனைக்குட்டி வெளியில வரனும்கிற எண்ணமே உனக்கு இல்லையா..? இந்த அண்ணன் எதுக்காக இந்த வேசம் கட்டுதுன்னு உனக்கும் எனக்கும் தெரிய வேணாமா..? பொறுமையா இரும்மா..." தாயின் காதுகளில் அவள் கிசுகிசுத்தாள்...
"என்னப் பேச்சுப் பேசறான்.. இவனத் துவைச்சு தோரணம் கட்டினாத்தான் என் மனசு ஆறும்டி..." செல்வி பொருமினாள்...
"அதுக்குன்னு ஒருநாள் வரும்.. இப்ப அடக்கிவாசி.. அப்பா அண்ணன் பக்கம் சாஞ்சிருக்கார்.. இப்ப என்ன நடக்கப் போகுதுன்னு நமக்குத் தெரிஞ்சாகனும்..." தேன்மொழி எடுத்துச் சொல்லி செல்வியை மலையிறக்கினாள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள் -64
எங்கிருந்தோ ஆசைகள் -64
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-64.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-64.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy