எங்கிருந்தோ ஆசைகள். -61

61 நீயுறங்கும் நேரத்திலே.. உன் கனவில் வர ஆசைகொண்டேன்.. எதையும் தாங்கும் இதயம் படைத்த பாவனாவினாலேயே இதைத் தாங்க முடியவில்லை எணும் ...


61
நீயுறங்கும் நேரத்திலே..
உன் கனவில் வர ஆசைகொண்டேன்..

எதையும் தாங்கும் இதயம் படைத்த பாவனாவினாலேயே இதைத் தாங்க முடியவில்லை எணும் போது காவ்யா பாவம்.. என்ன செய்வாள்..?
"என்னடி... சார் இப்படிச் சொல்கிறாரு..." அவள் திகிலடைந்து விட்டாள்...
"அதாண்டி எனக்கும் புரியலை.. இந்த எழும்புக்-கூட்டு ஏகாம்பரத்தைப் பார்க்கவும் ஆளிருக்கா..."
"ஆளில்ல... அவருக்கு அது பொண்ணு.. உனக்கு அம்மா..."
"சீச்சி.. கதையை மாத்தாதே.. அந்தாளு பொண்ணுன்னு சொன்னதுக்கு.. அர்த்தமே வேற.. அவர் கண்ணுக்கு அந்த லேடி இளமையா இருக்குதாம்..."
"என்ன கண்றாவியோ..."
காவ்யா முகத்தைச் சுளித்தாள்.. அவள் பேசியதை அரையும் குறையுமாக கேட்ட ஏகாம்பரம்...
"இல்லையே.. பூமாதேவி கண்றாவியாய் இருக்காதே.. அது கண்ணுக்கு லட்சணமான பொம்பளையாச்சே..." என்றார்..
"முடியலை..." வாய்க்குள் முணுமுணுத்தபடி வாசல்பக்கம் பார்த்த பாவனா...
"காவ்யா அலர்ட்டா இருந்துக்கடி..." என்று எச்சரித்தாள்...
"என்னடி ஆச்சு..?" புரியாமல் கேட்டாள் காவ்யா...
"தேவாங்கு வந்துக்கிட்டு இருக்குடி..."
"தேவாங்கா..?"
காவ்யாவின் முகம் விளக்கெண்ணையைக் குடித்ததைப் போல ஆகிவிட்டது.. அவள் அவசரமாக கம்யூட்டருக்குள் தலையைக் கொடுத்தாள்..
அதுவரை வேலையைப் பற்றிய நினைவில்லாமல் அரட்டையடித்துக் கொண்டிருந்தவளுக்கு என்ன ஆனது என்று புரியாதவராக திரும்பிப் பார்த்தவரின் கண்களில் உள்ளே வந்து கொண்டிருந்த தேவராஜன் தென்பட்டான்..
'இதான் விசயமா..?'
ஏகாம்பரம் காவ்யாவை கருணையுடன் பார்த்தபடி வெற்றிலை எச்சிலைத் துப்பி விட்டு வரலாமென்று எழுந்து நின்றார்.. அதை தனக்குக் கொடுத்த மரியாதையாக நினைத்துக் கொண்ட தேவராஜன்...
"பரவாயில்லை.. உட்காருங்க..." என்று மிதப்பாக சொல்லியபடி காவ்யாவைப் பார்த்தான்...
"இது வேறயா...?" சத்தமாகவே சொல்லி வைத்தாள் பாவனா..
ஏகாம்பரம் தேவராஜனை முறைத்த முறைப்பில் அவனை பஸ்பமாக்கிவிடும் உத்தேசம் இருந்ததில் அவன் அரண்டு போனவனாக வாய் மூடிக் கொண்டான்...
"யாழு.. யாழை.. உழ்காழச் சொழ்ழுழது...?"
வெற்றிலையை குதப்பியபடி ஏகாம்பரம் கேட்ட கேள்வியை தேவராஜனால் புரிந்து கொள்ள முடியவில்லை..
அவன் இது போன்ற 'bநுhழ.. bநுhழா' பேச்சுக்களை குடிமகன்களிடம்தான் கேட்டிருக்கிறான்...
ஏகாம்பரம் குடிமகனல்ல.. அதை அவன் நன்றாகவே அறிவான்.. அப்படியிருந்தால்தான் அவன் ஒரு பாட்டிலை வாங்கிக் கொடுத்து அவரைக் கணக்கு பண்ணி... அவர் மூலமாக காவ்யாவை கணக்கு பண்ண முயற்சி எடுத்திருப்பானே...
என்னதான் இளங்கோ தேவராஜனிடம் தன்மையாகப் பேசினாலும்... தங்கராஜ் அலுவலக நிலவரத்தை பிட்டுப்பிட்டு வைத்தாலும்.. கந்தசாமி வாய் நிறைய புன்னகைத்தாலும்.. அவை அத்தனையும் ஏகாம்பரத்தின் அண்மைக்கு ஈடாகுமா..?
அவர் ஒருவர்தானே அந்தக் கடையில் வேலை பார்க்கும் அழகான இரு இளம் பெண்களின் அண்மையில் அமர்ந்திருக்கிறார்..?
அப்படிப்பட்ட ஏகாம்பரத்தைத்தான் 'பரவாயில்லை.. உட்காருங்க..' என்று பொருந்தன்மையோடு சொல்லி வைத்துத் தொலைத்தான் தேவராஜன்...
"எழுழ்ழி ழிழ்ழா ழீ உழ்காழ ழொழ்ழுழிலா.."
ஏகாம்பரம் எகிறிய எகிறலை பாவனாவினாலேயே தாங்க முடியவில்லை...
"ஏகாம்பரம் சார்.. முதல்ல நீங்க வெற்றிலையைத் துப்பி விட்டு வாங்க.. நீங்க பேசற லுல்லாயியை எங்களாலேயே புரிந்துக்க முடியலை.. இதில பாவம் தேவாசார் என்ன பண்ணுவார்...?"
பாவனா சொன்னதினால் போனால் போகிறதென்று தேவராஜனை விட்டு விட்டு பாத்ரூம் பக்கமாக நடையை கட்டினார் ஏகாம்பரம்...
தேவராஜன் பாவனாவை விட்டுவிட்டு காவ்யாவைப் பார்த்தான்.. அவளோ.. அப்படியொருவன் அங்கே நின்று கொண்டிருக்கும் நினைவே இல்லாதவளாக கம்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்...
"நேரம்டி.. இவனைக் காப்பாத்தினது நானு.. இவன் பார்வையிடறது உன்னையா..? ஏகாம்பரத்து கிட்ட இன்னும் கொஞ்சநேரம் மாட்டிக்கிட்டு 'லொலலொல' பேச்சைக் கேட்கட்டும்ன்னு விட்டிருக்கனும்... காப்பாத்தினது தப்பாப் போச்சு.." காவ்யாவின் காதோரமாக முணுமுணுத்தாள் பாவனா...
"உன்னை யாரு தேவையில்லாத வேலையையெல்லாம் செய்யச் சொன்னது..?" தனிந்த குரலில் பல்லைக் கடித்தாள் காவ்யா...
"போனாப் போகுது.. பழைய முதலாளியின் மகனாச்சேன்னு பரிதாபப் பட்டேன்.. அதுக்கு இவன் காட்டற நன்றிக்கடன் இதுதானா..?"
"அடச்சீ.. அடங்கு.. இப்ப உனக்கு என்ன நன்றிக்கடன் வேணும்..? இந்த தேவாங்கு உன்னைத் திரும்பிப் பார்க்கனுமா..? இந்தக் கொடுமையையா நன்றிக் கடன்னு சொல்கிற...?"
"ஹலோ.. இது மூஞ்சியைப் பார்க்கனும்னு எனக்கென்ன நேர்த்திக் கடனா இருக்கு.. செஞ்சது நானு.. பார்வை அங்கேன்னா எனக்கொரு பதில் தெரிஞ்சாகனுமில்ல...?"
"அதை அவன்கிட்டயே கேளு..."
"கேட்டுட்டாப் போச்சு..."
பாவனா நிமிர்ந்து அது நேரம் வரை பெண்கள் இருவரும் ரகசியக் குரலில் கிசுகிசுத்துக் கொண்டிருந்ததை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த தேவராஜனைப் பார்த்தாள்..
"என்ன தேவா சார்.. எங்கே இந்தப் பக்கம்..?"
பாவனா கேட்டு விட்டால் போச்சு என்று சொல்லும் போதே அவள் தேவராஜனிடம் என்ன கேட்கப் போகிறாள் என்று யூகித்து விட்டிருந்த காவ்யாவின் முகத்தில் சிரிப்பு அரும்பியது...
பாவனா இப்படிக் கேட்பாள் என்று எதிர் பார்த்திராத தேவராஜன் "ஹி.. ஹி.. சும்மா உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்.." என்று வழிந்தான்..
"உங்களைன்னு யாரைச் சொல்கிறீங்க..? ஏகாம்பரம் சாரையா..?" அறியாதவளைப் போல அப்பாவியாய் வினவினாள் பாவனா...
அத்துடன் நில்லாமல் ஏகாம்பரம் வருகிறாரா என்று வேறு திரும்பிப் பார்த்தபடி...
"அடடா.. இது தெரியாம அவரை விரட்டி விட்டேனே.. இருங்க.. தங்கராஜை விட்டு அவரை கூப்பிட்டு வரச் சொல்றேன்.." என்று வேறு சொல்லி வைத்தாள்...
"என்னது..." தேவராஜன் அலறிவிட்டான்...
"என்னாச்சு தேவா சார்..?" அக்கறையாக கேட்டாள் பாவனா...
"நான் அவரைப் பார்க்க வரலைங்க..."
தேவராஜன் காவ்யாவைப் பார்த்தான்.. உன்னைத் தான் பார்க்க வந்தேன் என்று விழிகளால் சொல்ல முயற்ச்சித்தான்.. கடுப்பாகிப் போன காவ்யா பல்லைக் கடித்தபடி.. கம்யூட்டரில் தீவிரமாக பார்வையை பதித்தாள்..
"நீ இந்தக் கடையோட அக்கவுண்டை டேலி பண்ணப் பாக்கறியா.. இல்ல.. சாப்ட்வேர் இன்ஜினியர் போல புராஜெக்ட் வொர்க்கை முடிக்க டிரை பண்ணிக்கிட்டு இருக்கியா..?" பாவனா கேட்டாள்...
பதிலுக்கு கொலைவெறிப் பார்வை பார்த்தாள் காவ்யா...
"விடுடி..." வெள்ளைக் கொடியை பறக்கவிட்டாள் பாவனா..
ஏகாம்பரம் வருகிற வழியும் தெரியவில்லை.. தேவராஜனுக்கு நகர்ந்து போகும் உத்தேசம் இருப்பதாகவும் தெரியவில்லை... பாவனா கழுத்தைச் சாய்த்து கருடபார்வை பார்த்தபடி...
"ஏகாம்பரத்தையும் பார்க்க வரலைன்னா.. வேற யாரைத்தான் பார்க்க வந்தீங்க...?" என்று கொக்கி போட்டாள்...
"உங்க எல்லாத்தையும் தான்..." என்றான் தேவராஜன்...
"ஏன் சார்.. நாங்க என்ன ஷோ கேஸ் பொம்மைகளா..? சும்மா எங்களைப் பார்த்துட்டுப் போகலாம்ன்னு நீங்க வந்து போகிறதுக்கு..? இது வேலை நடக்கிற இடம் சார்.. நல்ல வேளையா முதலாளி இங்கே இல்ல.. இருந்தா உங்களை உள்ளே வர அலோவ் பண்ணியிருக்கவே மாட்டார்..." எரிச்சலுடன் சொன்னாள் பாவனா...
'என் அப்பன்காரன் மட்டும் இந்தக் கடையை விக்காம இருந்திருந்தா இவ இந்தப் பேச்சு பேசுவாளா..?' வெகுண்டான் தேவராஜன்...
"தெரியும்ங்க... எனக்கு எல்லாம் தெரியும்.."
காவ்யாவை காக்காய் பார்வை பார்த்தபடி சொன்னான் தேவராஜன்.. அவள் துணுக்குற்றாள்.. தேவராஜன் பொடி வைத்துப் பேசுவதைப் போல அவளுக்குத் தோன்றியது..
"இவன் ஏதோ வில்லங்கமாப் பேசறாண்டி.." பாவனாவிடம் முணுமுணுத்தாள்..
"அப்படியா சொல்கிற..?" பாவனா தேவராஜனைப் பார்த்தாள்...
தேவராஜனின் கண்களில் தெரிந்த கபடத்தில் அவளுக்கு காவ்யாவின் சந்தேகம் உண்மையானது என்றே தோன்றியது...
"எல்லாம் தெரியும்ன்னா.. என்ன தெரியும் தேவராஜன்..?" என்று அவள் கேட்டுக் கொண்டிருந்த போதே ஏகாம்பரம் திரும்பி விட்டார்...
'அப்பாடி..' உதவிக்கு ஆள் வந்து விட்டதில் நிம்மதிப் பெருமூச்சை விட்டாள் காவ்யா...
"என்னம்மா..?" தேவராஜனை முறைத்தபடி கேட்டார் ஏகாம்பரம்...
"இவருக்கு எல்லாம் தெரியுமாம் ஏகாம்பரம் சார்.. அதான் என்ன என்ன தெரியும்ன்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தேன்..." பாவனா எடுத்துக் கொடுத்தாள்...
"என்ன தெரியுமாம்..? இந்தக் கம்யூட்டர்ல உட்கார்ந்து கணக்கெழுதத் தெரியுமா..? பொம்பளைப் புள்ளைக முன்னாடி நின்னு கடலை போடத்தான் தெரியும்.." வெளிப்படையாகவே திட்டி விட்டார் ஏகாம்பரம்...
"பார்த்துப் பேசுங்க ஏகாம்பரம்.. ஒரு காலத்தில எங்ககிட்ட கைநீட்டிக் காசு வாங்கின ஆளுதான நீங்க.. பழசெல்லாம் மறந்து போச்சா..?"
தேவராஜன் கொதித்ததில் பாவனாவுக்கு கோபம் வந்து விட்டது.. அது எப்படி சம்பளம் வாங்குபவர்களை அவன் குறைவாகப் பேசலாம்...?
"கை நீட்டி காசை வாங்கல தேவா.. சம்பளத்தைத் தான் வாங்கியிருப்போம்.. அது எங்களுக்குச் சொந்தமானது..."
"நான் உங்களைச் சொல்லலைங்க..."
"யாரைச் சொன்னா என்ன..? அவரைச் சொல்கிறதுதானே எங்களுக்கும் பொருந்தும்..? வேலையைப் பார்க்கிறோம்.. சம்பளத்தை வாங்குகிறோம்.. வெட்டியாய் பொழுதை ஓட்டலையே..?" பாவனா மறைமுகமாக தேவராஜனைச் சொல்லிக் காட்டினாள்..
"அட நீ வேறம்மா.. வெட்டியாப் பொழுதை ஓட்டியிருந்தா கடை தப்பிச்சிருக்குமே.. அப்பன் சொத்தை அழிக்கனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு களவாணிப் பயலுகளோட குடிச்சுப்புட்டு கும்மாளம் போட்டு கடையைத் தொலைச்சுப்புட்டு இப்ப பார்வையிட வந்து நிற்குது..." ஏகாம்பரம் நேரடியாகவே சொல்லிக் காட்டினார்...
தேவராஜனுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.. காவ்யாவின் முன்னால் அடிமேல் அடி விழுவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. எவ்வளவு நேரம்தான் அவனும் வலிக்காததைப் போலவே நடித்துக் கொண்டிருப்பான்.. அடி வாங்குவதைவிட.. அதைக் கேட்டு காவ்யா குறும்சிரிப்பு சிரிப்பதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
பதிலுக்கு அடித்தே ஆகவேண்டும் என்ற ஆவேசம் அவனுக்குள் கனன்றது.. காவ்யாவை முறைத்தபடி அவன் பேச ஆரம்பித்தான்...
"போனவாரம் ஏர்போர்ட் பக்கமா போயிருந்தப்ப உங்க முதலாளி காரைப் பாத்தேன்ங்க... அவரு பிளேனைப் பிடிக்கத்தான் போறாரோன்னு பாத்தா அவரு பிளேனையும் பிடிக்கல.. ஏர் போர்ட்டுக்கும் போகல... ரோட்டோரமா மரத்தடியில காரை மணிக்கணக்கா நிப்பாட்டி வைச்சிருந்தாரு.. அது ஏன்னுதான் எனக்குத் தெரியல.."



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -61
எங்கிருந்தோ ஆசைகள். -61
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-61.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-61.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy