எங்கிருந்தோ ஆசைகள்.. -60

60 இந்த மீனாட்சியின் சொக்கனாக.. நீயாக ஆசைகொண்டேன்... அர்ஜீன் கனடாவுக்கு கிளம்பிப் போய் விட்டான்... அவன் இல்லாத அலுவலகத்தின் வெற...


60
இந்த மீனாட்சியின் சொக்கனாக..
நீயாக ஆசைகொண்டேன்...


அர்ஜீன் கனடாவுக்கு கிளம்பிப் போய் விட்டான்... அவன் இல்லாத அலுவலகத்தின் வெறுமையில் மனம் நைந்தாள் காவ்யா...
'அவன் ஐ லவ் யு சொன்னப்பவே பதிலுக்கு ஐ லவ் யுன்னு சொல்லியிருக்கனும்.. வெட்டியா முறைச்சுக்கிட்டு நாளைக் கடத்தினேன்..' தன்னைத்தானே நொந்து கொண்டாள்...
'தினமும் பேச வருவான்.. நான்தான் முகத்தைத் திருப்பிக்குவேன்.. பாவம்.. என்கூடப் பேசனும்னு மல்லுக்கு நின்னான்.. கண்டுக்காம காலம் கடத்தினேன்...' பெருமூச்சு விட்டாள்...
'இப்ப பறந்து போயிட்டான்.. அவன் நினப்பிலயே நெஞ்சம் மறுகுது.. இதுக்கு அவன் இருந்தப்பவே ஒத்த வார்த்தய காலா காலத்திலே சொல்லியிருந்தா அத்தனை நாளும் வெட்டியாக் கழிஞ்சிருக்காது... பேசிப் பழகியிருக்கலாம்...'
திரும்பத் திரும்ப இந்த நினைவே அவளுக்குள் வந்து இம்சை செய்தது.. பாவனா அவள் பக்கத்தில்தான் இருந்தாள்.. எப்போதும் போல கலகலப் பிரியாவாக சிரித்துப் பேசிக் கொண்டுதான் இருந்தாள்.. காவ்யாவுக்குத்தான் அந்த கலகலப்பில் இணைந்து கொள்ள மனமில்லை...
"என்ன ஏகாம்பரம் சார்... உங்களுக்கு என்கவுண்டர் ஏகாம்பரம்ன்னு யாரோ பட்டப்பெயரை வைச்சிருக்காங்களாமே.. அது நிஜம்தானா..?"
காலையிலேயே மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் கடையைப் பார்த்து ஓடிவந்து விட்ட ஏகாம்பரம் விரக்தியுடன் பாவனாவை நோக்கினார்...
'பாவம் இந்த மனுசன் பாக்கிற இந்தப் பார்வையைப் பார்த்தாவது இவ இரக்கப்பட்டு இவர விட்டுத் தொலைக்கலாம்..' பரிதாபப் பட்டாள் காவ்யா...
பாவனாவிற்கு அதுபோன்ற இரக்கமெல்லாம் ஏற்படவில்லை.. அவள் கடமையே கண்ணாக.. ஏகாம்பரத்தை ஒரு வழி பண்ணிவிடும் உத்தேசத்தோடு களம் இறங்கியிருந்தாள்...
"இந்த மாதிரிப் புரளியயெல்லாம் யாரும்மா கிளப்பி விடறது..?" ஏகாம்பரம் எரிச்சலுடன் கேட்டார்...
இத்தனை நாள்களாக பாவனாவுடன் வேலை பார்த்தும் இந்த மனிதர் இந்த அளவுக்கு அப்பாவியாய் இருந்து தொலைக்கக் கூடாது என்று மனதிற்குள் கோபப் பட்டாள் காவ்யா..
பாவனா இருக்கும் இடத்தில் புரளியைக் கிளப்பிவிட புதிதாக ஒருவர் பிறந்து வர வேண்டுமா என்ன..?
அவள் ஒருத்தி போதாதா..?
"இந்தப் பெருமையை இந்த ஊரே பேசுதே சார்.." அலட்டிக் கொள்ளாமல் அள்ளி விட்டாள் பாவனா...
'அடிப்பாவி..' காவ்யா கண்களை அகல விரித்தாள்...
பாவனா அவள் பார்வையை கண்டு கொள்ளவே இல்லை.. அவள் போக்கிலேயே ஏகாம்பரத்தை ஒருவழி பண்ணிக் கொண்டிருந்தாள்...
"ஊரே பேசுதா..? என்னான்னு பேசுது..?" ஏகாம்பரம் யோசனையானார்...
அவர் கவலை அவருக்கு.. தினமும் அவர் வீட்டில் பறக்கும்.. தோசைக் கரண்டியையும்.. பூரிக்கட்டையையும் பற்றி ஊர் பேசுகிறதோ என்ற மிரட்சி அவருக்குள் தோன்றி விட்டது...
"என்னன்னு பேசும்..? நீங்க வல்லவர்.. நல்லவர்.. அப்படி.. இப்படின்னு ஆயிரம் பேசுது ஏகாம்பரம் சார்.."
"இருக்காதே..." ஏகாம்பரம் நம்பவேயில்லை...
அவர் நல்லவர் என்று சொன்னால் ஒப்புக் கொள்வார்.. வல்லவர் என்று சொல்வதை எப்படி அவர் ஒப்புக் கொள்வார்..?
அவரது வல்லமையின் லட்சணத்தைத்தான் அவர் குடியிருக்கும் வளாகமே விளாசித் தள்ளுகிறதே...
"ஏம்ப்பா.. ஏய்ய்.. ஏகாம்பரம்.. உனக்கெல்லாம் யாருப்பா மீசை வைக்கச் சொல்லிக் கொடுத்தது..? பொண்டாட்டியை அடக்கி ஆளத் துப்பில்ல.. முகத்தை மறைச்சு மீசையை மட்டும் வைச்சுக்கிட்டு அலையற.. உன் பொண்டாட்டி உன்னைப் படுத்தற பாட்டைப் பாத்து என் பொண்டாட்டியும் கத்துக்குவாளோன்னு பயமாய் இருக்குய்யா.. உன்னால இந்தக் காம்பவுண்டை விட்டே வீடு மாறிப் போறேன்.. நீதான் அச்சுக்கெட்ட ஆம்பளையாய் இருந்து தொலைக்கிறன்னா.. உன்னாலே மத்த ஆம்பளைகளும் பயந்து ஓடறதைப் போலயில்ல பண்ணி வைக்கிற..."
அவருடைய வீடு இருக்கும் வளாகத்தில் மொத்தம் எட்டு குடித்தனங்கள் வசித்து வந்தன.. அதில் இடம் மாறாமல் அன்றிலிருந்து இன்று வரை ஒரே வீட்டில் குடியிருந்து சாதனை படைத்த ஒரே குடித்தனக்காரர் ஏகாம்பரம் மட்டும்தான்.. மற்ற ஏழு வீடுகளில் எந்த வீட்டில் யார்குடி வந்தாலும் இரண்டே மாதத்தில் வேறு வீட்டைப் பார்த்து ஓடிப் போய் விடுவார்கள்..
ஏகாம்பரத்தின் சகிப்புத் தன்மை அப்படிப்பட்டது...
அவரைப் போன்ற சகிப்புத்தன்மையை தன் மனைவியும் எதிர்பார்த்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தடித்துக் கொண்டு மற்ற ஆண்மகன்கள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைக் காலி செய்து விடுவார்கள்...
அப்படிப்பட்ட ஏகாம்பரத்தை வல்லவர் என்று மதுரை மாநகரம் சொல்கிறது என்று பாவனா சொன்னால்.. அதை நம்பி ஏமாறுவதற்கு ஏகாம்பரம் என்ன ஏமாளியா..?
"ஏம்மா பாவனா.. கேப்பையிலே நெய் வடியுதுன்னு ஏம்மா விட்ட விடியாலையிலே வியாக்கினம் பிளக்கிற..? அத நம்ப நானென்ன கேணப்பயலா..?"
'பின்னே.. இல்லையா..?' என்று மனதில் நினைத்துக் கொண்ட பாவனா வெளியில் அதை மறைத்தவளாக...
"உங்களைப் போய் கேணைன்னு யாராவது சொல்லுவாங்களா சார்..?" என்று அதிர்ந்து போவதைப் போல பாவனை காட்டினாள்..
"என் பொண்டாட்டி சொல்லுவா..." என்றார் ஏகாம்பரம்...
'அதுதான் தெரிஞ்ச சங்கதியாச்சே...' இமை கொட்டி விழித்து மனதை மறைத்த பாவனா...
"அச்சச்சோ.. அப்படியா சார்...? உங்களைப் போயா அப்படிச் சொன்னாங்க.. காவ்யா.. கேட்டாயா இந்தக் கதையை..? சார் எப்படிப்பட்ட ஹி மேன்..! சூப்பர் மேன்..! இவரைப் போயி ஆண்ட்டி கேணை.. கேத்தரவாடு.. உதவாக்கரை.. ஊர்சுற்றி.. சோம்பேறி.. அப்படி.. இப்படின்னு திட்டியிருக்காங்க.. எனக்கு மனசே தாங்கலை..." என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள்..
'இவளுக்கு பாவனான்னு பொருத்தமாத்தான் பெயர் வைச்சிருக்காங்க.. என்னமா பாவனை பண்றா...' காவ்யாவுக்கு சிரிப்பு வந்தது...
"உனக்கு என் பெண்டாட்டியே தேவலாம்மா... அவ கேணைன்னு ஒத்த வார்த்தை தான் சொன்னா.. நீ ஊரில இருக்கிற அத்தனை வார்த்தையையும் சொல்லி வைக்கிறயே.. உனக்கே இது நல்லாயிருக்காம்மா..?"
"அப்படியா சார்..? உங்க வீட்டம்மா இதையெல்லாம் பேசலையா..? அவங்க பேசி.. அதை நீங்க சொல்லமுடியாம தவிக்கிறிங்களோன்னு நான் ஃபீல் பண்ணிட்டேன்.. காவ்யா.. நம்ம ஏகாம்பரம் சாரை அவரோட மிஸஸ் கேணைன்னு மட்டும்தான் திட்டினாங்களாம்.. கேத்தரவாடு.. உதவாக்கரை.. ஊர்சுற்றி.. சோம்பேறி.. அப்படி.. இப்படின்னெல்லாம் திட்டலையாம்.."
"ஏம்மா பாவனா.. உனக்கு காலங்கார்த்தால காலை வார நான்தான் கிடைச்சேனா..?"
"என்ன ஏகாம்பரம் சார்.. இப்படியொரு வார்த்தைய என்னைப் பார்த்துச் சொல்லிட்டிங்க.. எனக்கு மனசே தாங்கலைசார்..."
"உனக்கா மனசு தாங்காது..? அது எதையும் தாங்கும் வைர மனசும்மா..."
"இதை நீங்க சொல்லக்கூடாது ஏகாம்பரம் சார்.. உங்க நெஞ்சம்தான் எதையும் தாங்கும் வைர நெஞ்சம்ன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.. மத்தவங்கன்னா இந்நேரம் காவி வேட்டியைக் கட்டிக்கிட்டு.. சொல்லாம கொள்ளாம சன்யாசம் வாங்கிக்கிட்டு ஓடியிருப்பாங்களாம்..நீங்க அப்படியில்லயாம்.. உங்க சகிப்புத்தன்மையை மெச்சி.. பூமாதேவியே வந்து அவார்டு கொடுக்கப் போகிறாங்களாமே..."
"எந்த பூமாதேவிம்மா..?"
"உங்களுக்கு எத்தனை பூமாதேவியைத் தெரியும்..?"
"எங்க பக்கத்து வீட்டில பூமாதேவின்னு ஒரு பொண்ணு இருக்கு..."
"பொண்ணா..?"
"எனக்குப் பொண்ணு.. உனக்கு அம்மா..."
இது என்னமாதிரியான விளக்கம் என்று பாவனாவிற்கு பிடிபடவில்லை.. ஒரே மாது.. ஏகாம்பரத்திற்கு பெண் போலவும்.. பாவனாவிற்கு அம்மா போலவும் எப்படிக் காட்சியளிக்க முடியும்..?
"புரியலையே..."
"இதில புரியாமப் போக என்ன இருக்கு..? உன்னைப் புத்திசாலின்னு இந்தக் கடைக்குள்ள பேசிக்கிறாங்களே.. அது பொய்யா..?"
ஏகாம்பரத்தின் கேள்வியில் காவ்யா வாய் விட்டுச் சிரிக்க.. பாவனா அவரை இமைக்காமல் பார்த்து விட்டு..
"பார்த்தியா கிழபோல்டுக்கு இருக்கிற கொழுப்பை..?" என்று காவ்யாவின் காதோரமாக கிசுகிசுத்தாள்...
"நீதானேடி அவர்கிட்ட வம்பைக்கட்டி இழுத்த..? அப்ப வாங்கிக் கட்டிக்க.."
"மதுரைக் குசும்பு...?"
காவ்யாவை முறைத்த பாவனா.. ஏகாம்பரத்தின் பக்கம் திரும்பினாள்...
"நான் புத்திசாலியோ இல்லையோ.. நீங்க புத்திசாலிதான் ஏகாம்பரம் சார்.. எப்படியாப்பட்ட கண்டு பிடிப்பை சொல்லியிருக்கீங்க.. உங்களைப் போய் கேணைன்னு உங்க வீட்டம்மா சொல்லியிருக்காங்களே.. டூ பேட்.. டூ பேட்..."
"ஆரம்பிச்சுட்டியா..? ஏம்மா.. நீ இதை விடவே மாட்டியா...?"
"மனசு கேட்கலை சார்..."
"இன்னைக்கு பூராவும் இதை வைச்சே ஓட்டிரலாம்ன்னு ஒரு முடிவோட இருக்க போல இருக்கே.."
"என்ன ஓட்டு ஓட்டினாலும் நீங்க அசருகிற ஆளா ஏகாம்பரம் சார்..? உங்க வீட்டம்மாவும் உங்கள ஓட்டிரலாம்ன்னுதான் படாத பாடு படறாங்க.. எங்கே..? நீங்க உங்க காம்பவுண்டில குடியிருக்கிற மீசைக்காரங்களைத்தான் குடும்பத்தோட ஓட்டிக்கிட்டு இருக்கீங்களாமே.. நீங்க ஓடற மாதிரி இல்லையாமே..?"
"அதில உனக்கெதுக்கும்மா இம்புட்டு வருத்தம்..?"
"எதையெதையோ கேட்டுச் சொல்றீங்க.. கூறாமல் சன்யாசம் கொள்ன்னு பெரியவங்க சொன்னதை கேட்டுக்காம போயிட்டிங்களே சார்.."
"ஆக.. என்னை சாமியாராக்கி பத்தி விடனும்கிற கங்கணத்தோடதான் காலங்கார்த்தாலேயே நீ வம்பிழுக்க வந்திருக்கிற...?"
"ஐயோ சார்.. நான் அப்படிச் செய்வேனா...?"
"நீ மட்டும்தாம்மா அப்படிச் செய்வ..."
"உங்க வீட்டம்மா செய்ய மாட்டாங்களா சார்..?"
"உன் பக்கத்தில நிக்க வைச்சா அவ தங்கம்மா..."
"ஏன் சார்.. கல்யாணம் பண்ணிக்கிட்டு.. மாப்பிள்ளை பக்கத்தில நிற்கப் போகிற வயசில இருக்கிற என்னைப் பார்த்து உங்க வீட்டம்மா பக்கத்தில நிற்க வைக்கப் பாக்கறிங்களே.. உங்களை உங்க வீட்டம்மா காய்ச்சி எடுக்கறதில தப்பேயில்லை.. ஆமா.. யாரு அந்த பூமாதேவி..? அது எப்படி உங்களுக்கு பெண்ணாவும் எனக்கு அம்மாவாகவும் ஆக முடியும்..?"
"அந்தப் பொண்ணுக்கு உன் வயசில ஒரு பொண்ணிருக்கு..."
ஏகாம்பரம் போட்ட போட்டில் அயர்ந்து விட்டாள் பாவனா...
"பாருடி.. இந்த ஆளைப் போய் கேணைன்னு இவரோட பெண்டாட்டி சொல்லியிருக்கே.. இந்த ஆளு விவரத்துக்கு ஊரையே வித்துப்புடுவாரு போல இருக்கே.." காவ்யாவிடம் அங்கலாய்த்தாள்...
"அந்தம்மாதான் கேணை.. ஆளைப் பாரேன்.. எழும்புக்கூட்டைப் போல இருந்துக்கிட்டு.. பக்கத்து வீட்டு அம்மாவ எடை போடறாரு.. ஆசாமி டெர்ரர் கேஸ்டி.." என்றாள் காவ்யா...
"என்னத்தம்மா காதைக் கடிச்சுக்கறிங்க..?" ஏகாம்பரம் வெற்றிலை பாக்கை வாய்க்குள் திணித்தபடி கேட்டார்...
"ஹி.. ஹி.. ஒன்னுமில்ல சார்.. உங்க குணத்துக்கு பூமாதேவி போல ஒரு வொய்ப் வந்து வாய்ச்சிருக்கனும்னு காவ்யாகிட்டச் சொல்லிக்கிட்டு இருந்தேன்.. என்னடி காவ்யா..," பாவனா சமாளித்தாள்...
"ம்ஹீம்.. இதைத்தான் பூமா தேவியும் சொல்லிச்சு.."
ஏகாம்பரம் விட்ட பெருமூச்சில் '' வென்று வாய் பிளந்து உட்கார்ந்து விட்டாள் பாவனா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -60
எங்கிருந்தோ ஆசைகள்.. -60
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-60.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-60.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy