எங்கிருந்தோ ஆசைகள்.-59

59 நீ பேசும் பேச்சுக்களில்... தினம் நனைய ஆசைகொண்டேன்.. அர்ஜீனுக்கு சிரிப்பையும் தெரியும்... ஆணியையும் தெரியும்.. இது இரண்டையும் ...

59
நீ பேசும் பேச்சுக்களில்...
தினம் நனைய ஆசைகொண்டேன்..


அர்ஜீனுக்கு சிரிப்பையும் தெரியும்... ஆணியையும் தெரியும்.. இது இரண்டையும் சேர்த்த சிரிப்பாணியென்றால் என்னவென்று சுத்தமாக அவனுக்குத் தெரியவில்லை..
அதற்கு விளக்கம் கேட்க வாய்திறந்தால்.. அதற்குள் அவள் கூரையைப் பற்றிப் பேசி வைக்கிறாள்.. சரி.. கூரையென்றால் என்னவென்று கேட்டு விடலாம் என்று நினைத்தால்.. அதற்கு இடம் கொடுக்காமல் கங்கணத்திற்கு ஒரே தாவாக தாவுகிறாள்...
சாண் ஏறினால் முழம் வழுக்குகிற கதையாக.. காவ்யாவை பேச்சில் வெல்ல முடியாமல் திணறிப் போனான் அர்ஜீன்...
சற்று நேரத்திற்கு முன்னால் அவளை 'அஃது.. அந்த பயம் இருக்கட்டும்என்று மிரட்டியவன்.. இப்போது அதை மறந்து போனவனாக.. ஒற்றைவிரலை நெற்றியில் தட்டியபடி ஆழமான யோசனைக்குள் போனான்...
"எதுக்கு இந்த சிந்தனை..?"
வாய்க்குள் உணவை அடக்கியபடி கொழ கொழ வென்று கேட்டாள் காவ்யா.. அவளை ஒரு மௌன பார்வை பார்த்த அர்ஜீன் மௌனத்தைக் கலைத்தவனாக...
"ஒன்னுமில்லை.. நீ உன் வேலையைக் கவனி..." என்றான்...
"நீங்க என்னதான் மனசில நினைச்சுக்-கிட்டிருக்கிங்க..?" காவ்யா சண்டைக்கு வந்தாள்..
"உன்னைத்தாண்டி நினைச்சுக்கிட்டிருக்கேன்.." அர்ஜீன் அலுத்துக் கொண்டான்...
காவ்யாவின் மனதில் காதல் ஊற்றெடுத்தது.. ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு அவனை முறைத்தாள்...
"அத ரொம்ப விசனமா சொல்றாப்புல போல இருக்கே.."
"விசனமா..?" அர்ஜீன் திகைத்துப் போனான்...
அடுத்தடுத்து அவனை நோக்கி வரும் மதுரைத் தமிழின் தாக்குதலில் அவனுக்குத் தலையைச் சுற்றியது...
"பைய முழிங்க.. இப்படி விரசா முழிச்சா நான் என்னத்தைன்னு நினைக்கிறது..?"
தட்டில் உள்ளதை மின்னல் வேகத்தில் காலி செய்தபடி புருவங்களை உயர்த்தினாள் காவ்யா...
அர்ஜீனோ 'இவள் கையில் இருக்கிற பையைச் சொல்கிறாளாஎன்று அவள் கையைப் பார்த்தான்...
"என்னாச்சு..?" அவள் விசித்திரமாக அவனைப் பார்த்தாள்...
"விரசான்னா என்னடி..?" அவன் பரிதாபமாகக் கேட்டான்...
அவன் கேட்ட விதத்தில் காவ்யாவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது...
"அதைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போகிறிங்க..?" என்று கெத்தாக கேட்டாள்..
"தெரியுதில்ல.. அப்புறமும் எதுக்காகடி இப்படிப் பேசி என்னை மிரள வைக்கிற..தெரியாத்தனமா உன் அண்ணனைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிட்டேன்.. அதுக்காடி இந்தக் காண்டு..?"
"திரும்பவும் என் அண்ணன் பேச்சை இழுத்தீங்கன்னா நடக்கறதே வேற.. நானே அம்மாகிட்ட மாட்டிக்கிட்டு கிளம்ப முடியாம முழிச்சுக்கிட்டு இருந்தேன்.. நல்ல வேளையா அண்ணன்தான் கை கொடுத்து காப்பாத்துச்சு..."
கண்ணதாசனின் நினைவில் குரல் நெகிழ்ந்த காவ்யாவை ஒரு மார்க்கமாகப் பார்த்தான் அர்ஜீன்...
"உன் அண்ணனைப் பத்திப் பேசறதுன்னா உனக்கு அல்வாச் சாப்பிட்டதைப் போல இருக்குமே..."
"ஆக.. ஐயா எனக்கு அல்வா கொடுத்துடலாம்கிற முடிவோடதான் இருக்கிறாருன்னு சொல்லுங்க..."
அவளின் நையாண்டியில் அவன் சிரித்து விட்டான்.. அவர்களுக்கு இடையிலிருந்த மெலிதான பனித்திரை உருகி மறைந்து காணாமல் போனது...
"உனக்கு அல்வா கொடுக்கனும்னு எனக்கும் ஆசைதான்.." அவன் கண்களில் கள்ளச் சிரிப்பிருந்தது...
"ஊம்..ஆசை.. தோசை.. அப்பளம்.. வடை.. ஐயா திருநெல்வேலிக்காரரே..! உங்க ஊர் அல்வாவை உங்க கூடவே வைச்சுக்கங்க.. நான் மதுரைக்காரி.. உங்க அல்வா வெல்லாம்.. இங்கே செல்லுபடியாகாது.. தெரியுதா..?" காவ்யா கழுத்தைச் சாய்த்து ஒயிலாக அவனைப் பார்த்தாள்..
"அதெப்படி.. மதுரைக்காரியைக் காதலித்தாலும்.. திருநெல்வேலிக்காரனோட பெருமையை விட்டுக் கொடுக்க முடியுமா...?"
"அப்ப.. அல்வாக் கொடுத்தே தீருவேன்னு அடம் பிடிக்கறிங்க..?"
"அப்படித்தான் வைத்துக்கயேன்.. ஏன்..உனக்கு அல்வா பிடிக்காதா..அது இனிப்பும்மா.. வாழைப்பழம் திங்காத குரங்குமில்ல.. அல்வாவை விரும்பாத பெண்ணுமில்ல..."
"அதெல்லாம் மத்தவங்களுக்கு.. மதுரைக்காரிக்கு இல்ல..."
"நீ இனிப்புச் சாப்பிட மாட்டியா..?"
"மாட்டேனே.. நானெல்லாம் பச்சை மிளகாயை ரசித்துத் திங்கிற ஆளு.. எனக்குக் காரசாரமா.. உப்பும் உறைப்புமா சாப்பிட்டாத்தான் பிடிக்கும்.. இனிப்பெல்லாம் உவ்வா.."
காவ்யா.. முகத்தைச் சுளித்தபடி கை கழுவ எழுந்தாள்.. அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியே வரும்போது என்னவோ வருடக்கணக்கில் அவர்கள் பேசிப் பழகியதைப் போல உணர்ந்தார்கள்...
'இந்த நாளை மறக்கவே முடியாது..என்று நினைத்துக் கொண்டான் அர்ஜீன்...
அவன் மதுரைக்குள் கால் பதித்த நாளிலிருந்து அன்று வரை காவ்யா.. அவனருகில்தான் இருந்தாள்.. ஆனால் வெகு தொலைவில் அவள் நிற்பதைப்போல விலகி நின்றாள்...
அன்றோ.. அவன் வேறு.. அவள் வேறு என்ற நினைவே வராமல் அவனுடன் மனம் கலந்து விட்டாள்...
அவளுடன் பேசிச் சிரித்து.. முறைத்து.. வம்பிழுத்த அந்த மணித்துளிகளில் அவன் மனம் நிறைந்திருந்தது...
 "நேற்று வரை..  
             நீ யாரோ.. நான் யாரோ...
    இன்று முதல்
             நீவேறோ.. நான் வேறோ..."
அர்ஜீனின் காரிலிருந்த எப்.எம். பாடியது.. இப்போதெல்லாம் அவன் பழைய பாடல்களை விரும்பிக் கேட்பதை அவன் உணர்ந்திருந்தான்.. எதனால் அந்த ஈர்ப்பு என்று அவனுக்குப் புரியவில்லை.. பழமை மாறாத மதுரையில் பிறந்தவளைக் காதலித்து விட்டதினால் அந்த ஈர்ப்பு வந்ததோ என்று அவன் நினைத்துக் கொண்டான்..
"மதுரை மருக்கொழுந்து வாசம்..
             என் ராசாவே உன்னுடைய நேசம்..."
பாட்டு மாறியதில் அவன் சிரித்துக் கொண்டே காவ்யாவைப் பார்த்தான்.. அதே நொடியில் அவளும் அவனைப் பார்த்தாள்.. கண்கள் கலந்தன.. அர்ஜீன் காரை வெளியூர்களுக்குச் செல்லும் சாலையில் திருப்பினான்...
"பை பாஸீக்கு ஏன் போறிங்க..?" காவ்யா பதறினாள்..
"உன்னைக் கடத்தலாம்ன்னுதான்.." அவன் குறும்பாகச் சொன்னான்...
"காரை நிறுத்துங்க..." காவ்யா அடம் பிடித்தாள்...
அர்ஜீன் காரை நிறுத்தவில்லை.. நான்கு வழிச் சாலையில் விரைத்த கார் விலகி ஒரு மரத்தடியில் ஓரம்கட்டி நின்றது.. அர்ஜீன் காவ்யாவின் பக்கமாக திரும்பினான்.. அவன் முகத்தில் தெரிந்த தாபத்தில் காவ்யா பேச்சிழந்தாள்...
"நீயும் நானும் பார்த்துக்கிட்டோம்.. பேசிக்கிட்டோம்.. ஆனா நம்மைச் சுற்றி நாலு பேர் இருந்தாங்களேடி..."
அவன் சொல்லியதில் இருந்த உண்மையில் காவ்யா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவள் முகம் தொட்டு தன் பக்கமாக இழுக்க முனைந்தான் அர்ஜீன்.. அவள் இசைந்து கொடுக்கவில்லை..
"ப்ளீஸ் காவ்யா.. தனிமை வேணும்ங்கிறதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. கனடாவில நான் உன்னை நினைக்கிறப்-பல்லாம் இந்த நிமிசங்களும் என் நினைப்பில் வரனும்.."
அவன் முரட்டுத்தனமாக அவள் முகம்பற்றி அவனருகே இழுத்ததில் அவன் மேல் சரிந்தாள் காவ்யா.. அவளை இறுக்கிக் கொண்டவன் அவள் உதட்டில் உதட்டைப் பதித்தான்...
கண்மூடிக் கிறங்கிப் போன காவ்யாவின் மனதில் அர்ஜீன் மட்டுமே இருந்தான்.. அவள் கண்ணதாசனின் கவலையை மறந்தாள்.. அவனது எச்சரிக்கையை காற்றில் பறக்க விட்டாள்.. அன்னபூரணி அவளைச் சுற்றிப் போட்டு வைத்திருந்த காவல்வேலியை சுக்கு நூறாக்கினாள்...
"காற்றுக்கென்ன வேலி..
             கடலுக்கென்ன மூடி..
    கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே..
             அடங்கி விடாது...
    மங்கை உள்ளம் பொங்கும்போது..
             விலங்குகள் ஏது..?"
அவள் செவிவழி இறங்கிய பாடலை உணர்ந்து கேட்கும் நிலையில் அவள் இல்லை.. அவள் அர்ஜீனின் கைகளுக்குள் தொய்ந்து அடைக்கலமாகியிருந்தாள்...
"காவ்யா..."
"ம்ம்ம்..."
"ஐ லவ் யு..."
"இந்த வார்த்தை நிலைச்சு நிற்குமா..இல்ல.. கனடா போனதும் காத்தில கரைஞ்சு போன கற்பூரம் போல மாயமாய் மறைஞ்சிருமா..?"
"அடிச்சுப் பல்லைக் கழட்டி விடுவேன்.. ராஸ்கல்.. யாரைப் பார்த்து என்ன வார்த்தைடி சொல்கிற..?"
"என்னதான் கனடாவுக்குப் பறந்தாலும் நம்ம ஊரு ஆம்பளைகளுக்கு பொம்பளைக பல்லைக் கழட்டற வித்தை மட்டும் மறக்கவே மாட்டேங்குது..."
"உன்னை..!"
அர்ஜீன் அவள் முகத்தில் முகம் பதித்து அவளைப் பேச விடாமல் செய்தான்.. முகம் சிவக்க விலகியவளை வெற்றிகொண்ட பார்வை பார்த்தவன்..
"பேச விட்டாத்தானே.. நீ பேசிக்கிட்டே இருப்பே.. இப்ப என்னடி செய்வ..?" என்று கேட்டான்...
கடைக்கு கார்திரும்பிய போது.. பிரிவின் துயரம் அவர்கள் இருவரின் மனதிலும் நிறைந்திருந்தது.. பேசாமல் அவளுக்குத் தாலியைக் கட்டி.. கையோடு கூப்பிட்டுக் கொண்டு போய் விடலாமா என்று யோசித்தான் அர்ஜீன்.. அதை அவளிடம் சொல்லவும் செய்தான்.. அவளோ...
"இது மதுரை..." என்றாள்..
"இதுக்கும் மதுரைதானா..இப்ப எதுக்காக உன் ஊரின் பெயரைச் சொல்லி மிரட்டற..நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.."
"இந்த ஊரில்தான் மீனாட்சி-சொக்கநாதனின் கல்யாணம் நடந்துச்சு.. அதுக்கு மீனாட்சியோட அண்ணனான அழகர் சீர் கொண்டு வந்தார்..."
"இதை எதுக்காக சொல்கிறேன்னுதான் கேட்கிறேன்.."
"வருசாவருசம் சித்திரைத் திருவிழாவில மீனாட்சி கல்யாணம் நடக்கும்.. தங்கைக்காக சீர் எடுத்துக்கிட்டு அழகரும் ஆத்தில இறங்குவார்.."
"பொறுமையை சோதிக்கற காவ்யா..."
"என் கல்யாணமும் அதுபோல ஊர் பார்க்க நடக்கனும்.. என் அண்ணன் எனக்காக சீர் செய்யனும்.."
"காவ்யா..."
"அது என் கையப் பிடிச்சு உங்ககிட்ட ஒப்படைச்சாத் தான் மனசார நான் உங்க மனைவியாவேன்.."
"இல்லைன்னா..?"
"என்னைக்குமே உங்க காதலிதான்.."
"ஏய்ய்.. உனக்கு என்னைவிட உன் அண்ணன் முக்கியமா போயிட்டானில்ல..." அர்ஜீன் விழி சிவந்தன...
"அதுக்கும் நான் முக்கியம்தான்..."
"ஒருவேளை அவன் மாட்டேன்னு சொல்லிட்டான்னா..?"
"ஒருநாளும் அப்படிச் சொல்லாது.. இப்ப உங்களைப் பார்க்கத்தான் நான் கிளம்பி வர்றேன்னு அதுக்கு நல்லாவே தெரியும்.. தெரிஞ்சிருந்தும் அம்மாகிட்டயிருந்து என்னைக் காப்பாத்தி அனுப்பி வைச்சுச்சு.. உங்களுக்கு அதைப் பத்தித் தெரியாது..."
தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அர்ஜீன் நினைத்தான்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.-59
எங்கிருந்தோ ஆசைகள்.-59
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-59_23.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-59_23.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy