எங்கிருந்தோ ஆசைகள். -57

57 உன் கைத்தலம் பற்ற நான் கண்டகனவு.. நனவாக மாற ஆசைகொண்டேன்.. "காவ்யா..." "ம்ம்ம்..." "கனடா போக மனச...


57
உன் கைத்தலம் பற்ற நான் கண்டகனவு..
நனவாக மாற ஆசைகொண்டேன்..


"காவ்யா..."
"ம்ம்ம்..."
"கனடா போக மனசேயில்லடி..."
"அப்புறம் எதுக்காக போகிறிங்களாம்.." அவள் சிணுங்கினாள்...
அந்தச் சிணுங்கலில் தெரிந்த உரிமையை அவன் ரசித்தான்.. அந்த உரிமை அவனுக்குப் பிடித்திருந்தது.. அது மழைச்சாரலாய் அவன் மனதை நனைத்தது.. சில்லென்று அவன் மனம் நனைத்த அந்த வசீகரத் துளிகளில் அவன் மனம் கிறங்கிப் போனான்.. அவன் நேசிக்கும்.. அவனை மட்டும் நேசிக்கும் அவனுடைய காதலியின் அருகாமையில் அவன் மனம் கிளர்ந்தது...
"போய்த்தானே ஆகனும்..? போகாம இருக்க முடியாதுடி.." அவன் கொஞ்சலாக அவளைச் சமாதானப் படுத்தினான்..
"போய்த்தான் ஆகனுமுன்னு நினைக்கிறவர் போக மனசில்லன்னு ஜாலம் பண்ணக்கூடாது..." அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்...
"ஜாலமா..?" அவனுக்குப் புரியவில்லை...
"ஆரம்பிச்சுட்டிங்களா..? உங்க கூடப் பேசனும்னா அதுக்குன்னு ஒரு அகராதியை எழுதிக் கொடுத்துட்டுத் தான் உட்கார்ந்து பேசனும் போல இருக்கு.. இது கூடத் தெரியாதுன்னா எப்படி..?"
"இது போலல்லாம் நான் பேசினதில்லடி.."
"இதப்பாருடா.. இவரே ஜாலக்காரர்.. இவருக்கு ஜாலம்ன்னா என்னான்னு தெரியாதாம்.. இந்தக் கூத்த எங்கே போய் சொல்ல..?"
"எங்கேயும் போய் சொல்லாதே.. நான் எதுக்கு இருக்கேன்..? எங்கிட்டச் சொல்லு.. கேட்டுக்கிறேன்.. அதை விட்டுட்டு.. சொல்ல ஆள் தேடினேன்னு வை.. கன்னம் பழுத்துரும்..."
அவன் அதட்டியதில் அவள் மனம் சிறகடித்தது.. ஆண்மையின் வன்மையை ஆண்டாண்டு காலமாக பெண்மை ரசிப்பதற்கான தாத்பர்யத்தை இதுவரை கண்டு பிடித்தவர் எவரும் இல்லை...
காவ்யா அர்ஜீனின் அந்த ஆண்மை கலந்த கோபத்தை ரசித்தாள்..
"கன்னம் பழுத்துருமா..?"
"ஆமாண்டி.. ஆமாம்..."
"என் கன்னம் என்ன.. பூப்பூத்து.. பிஞ்சாகி.. காயாகி நிக்குதா..? நீங்க வந்து பழுக்க வைக்கிறதுக்கு...?"
கேள்வி கேட்ட காவ்யாவின் கன்னத்தை லேசாக தட்டினான் அர்ஜீன்.. அவளது விரல் உணர்ந்த மென்மையில் அவன் முகம் மிருதுவானது...
"உன் கன்னத்தைப் போய் காய்ன்னு எந்த மடையனாவது சொல்வானா..? அது பஞ்சுடி..."
காவ்யாவின் முகம் பூவானது... பஞ்சு போன்ற கன்னம் சிவக்க அவள் விரலால் மண்டபத்தின் படியில் கோலமிட்டாள்...
அந்த வெட்கத்தை வெகுவாக ரசித்தான் அர்ஜீன்... அவனுடன் சரிக்கு சரியாக.. ஏன்.. அதற்கும் மேலாக வாயடிப்பவள்.. அவனின் ஒர் பார்வையில்.. சிறு பேச்சில்.. வெட்கித் தலைகுனிவதில் அவனுக்குள் இன்பம் சுரந்தது..
அவளது பெண்மையின் பொழிவில் தன் மனதைப் பறிகொடுத்தான் அர்ஜீன்...
"காவ்யா..."
எதற்காக அழைக்கிறோம் என்று தெரியாமலே அவன் அழைத்தான்..
"ம்ம்ம்.."
எதற்காக முணுமுணுக்கிறோம் என்று தெரியாமலே அவள் முணுமுணுத்தாள்...
இது காதல் செய்யும் மாயவேலை...
பேசப்படும் வார்த்தைகளில் அர்த்தம் பொதிந்திருக்-கிறதா என்று எந்தக் காதலரும் யோசிப்பதில்லை.. அவர்களின் அர்த்தமற்ற முணுமுணுப்புகளில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த அர்த்தத்தை அவர்களால் மட்டும்தான் அறிய முடியும்..
"இது புலிமேல் சவாரி காவ்யா.. இறங்க முடியாது.."
இதை எதற்காக வேலை மெனக்கெட்டு அவளிடம் சொல்கிறான் என்று புரியாமல் அவனைப் பார்த்தாள் காவ்யா...
"பணத்தைத் துரத்த ஆரம்பிச்சவனின் ஓட்டத்தை நிறுத்த முடியாதுடி..."
"ம்ம்ம்..."
"என்னை நம்பி என் கம்பெனிகள் இருக்கு.. அதில வேலை செய்கிறவங்க இருக்கிறாங்க.. அவங்க உழைப்பை நான் பயன்படுத்தியாகனும்.. அதுக்கான சேலரியை கொடுத்தாகனும்.. அதுக்கு ஒரிடத்தில நிற்காம நான் பறந்தாகனும்..."
"நான் அப்படியில்ல..." காவ்யா விரல்களைப் பார்த்தாள்..
அவள் பேச விரும்புவதை புரிந்து கொண்டவனாக அர்ஜீன் அவளைப் பேச விட்டான்..
"சொல்லு..."
"நான் பிறந்து வளர்ந்தது மதுரையில.. எனக்கு இந்த மதுரையைத் தாண்டி வெளியுலகம் தெரியாது.."
"அடேங்கப்பா.. வெளியுலகத்தை தெரிஞ்சுக்-காதவதான்.. உலகம் சுற்றிப் பறந்துக்கிட்டு இருக்கிற என்னை இந்த மதுரை மண்ணில் காலடி வைச்ச முதல் நாளிலேயே அந்தப் பாடு படுத்தினயா...? உன் லாங்வேஜிலேயே சொல்கிறதா இருந்தா என்ன ஒரு தெனாவெட்டு..! அசந்துட்டேண்டி.. அன்னைக்கு விழுந்தவன்தான்.. இன்னும் எழுந்திரிக்கல..."
"என்னைக்கு எழுந்திருப்பீங்க...?"
காவ்யா பட்டென்று கேட்டு விட்டாள்.. அதில் தெரிந்த மறைபொருளை உணர்ந்து கொள்ளாத அளவிற்கு அர்ஜீன் ஒன்றும் முட்டாளில்லையே...
"கடைசி வரை எழுந்திருக்க மாட்டேன்..."
அவளின் விழிகளையே பார்த்தபடி உறுதியான குரலில் அவன் சொன்னான்.. அவள் விழிகளில் மின்னல் தோன்றி மறைந்தது..
"நம்பலாமா..?"
"நம்பலாம்..."
"என் வேர் இந்த மதுரையிலதான் இருக்கு... இந்த மதுரையைத் தெரிந்தவளுக்கு உலகத்தைத் தெரிஞ்சுக்கனும்ங்கிற அவசியமில்ல.. ஏன்னா.. உலகம் பூராவும் இந்த மதுரைக்குள்ள அடங்கியிருக்குன்னு நினைக்கிறவ நான்..."
"நான் அப்படியில்ல.. என் குடும்பத்தோட பூர்வீகம் திருநெல்வேலிப் பக்கமாம்.. என் தாத்தா காலத்தில அவங்க மதுரையில இருந்தாங்களாம்.. அப்பாகாலத்தில சென்னையில செட்டில் ஆகிட்டோம்.. என் காலத்திலே நான் உலகம் பூராவும் சுற்றிக்கிட்டு இருக்கேன்.. ஒரு இடத்தில வேர்விட்டு நிலைத்து நிற்க என்னால முடியாது.. எங்கே வளர்ச்சி இருக்கோ.. அங்கே இடம் பெயர்ந்துக்கிட்டே இருப்பேன்.. நான் அப்படித்தான் இருந்தாகனும்..."
"அதுதான் என்னோட பயமே..."
"இதில பயப்பட என்ன இருக்கு..?"
"நிறைய இருக்கு.. நீங்களோ உலகம் சுற்றுகிற வாலிபன்.. கோடிக்கணக்கிலே பணம் கொட்டிக் கிடக்கு.. பார்க்கிறதுக்கு வேற அழகா இருந்து தொலைக்கறிங்க..."
"ஈஸிட்..?" அர்ஜீன் கண்களைச் சிமிட்டினான்..
காவ்யாவின் முகம் குங்குமமானது.. அவள் விரல் தானாக கோலத்தைத் தொடர்ந்து போட ஆரம்பித்தது...
"அடேங்கப்பா.. இவருக்கு அது தெரியாதாக்கும்..?"
"எவருக்கு..?"
"பகடியில ஒன்னும் குறைச்சலில்ல..."
"பகடியா..? அப்படின்னா..?"
"ஜாலம்ன்னு அர்த்தம்.."
"ஜாலம்ன்னா..?"
"வித்தாரம்ன்னு அர்த்தம்.."
"வித்தாரம்ன்னா...?"
"நீங்கன்னு அர்த்தம்.. அடேங்கப்பா... இவரு ஒன்னும் தெரியாத சின்னப் பப்பாதான்.. நாங்க அதை நம்பனுமாக்கும்..?"
அவள் பேசுவதை ரசித்தபடி அர்ஜீன் சுற்று முற்றும் பார்க்க காவ்யா விழிகளில் கேள்வியுடன் புருவங்களை உயர்த்தினாள்...
"என்னவாம்..?"
"நாங்கன்னு சொல்றயே.. இங்க நீ ஒருத்திதான உட்கார்ந்திருக்க..? மத்தவங்க எங்கேடி..?"
"ஓ.. ஐயா மனசில அப்படியாப்பட்ட ஆசையெல்லாம் இருக்குதாக்கும்..? இவருக்கு ஒருத்தி போதாதாக்கும்..?"
"அப்படி நான் சொன்னேனா..? நியாயமாய் பேசு.. நீ தானே சொன்ன.."
"கெட்டிக்காரர்தான்.. இதைத்தான் ஜாலம்ன்னு சொன்னேன்..."
"ஓ.. இதுக்குப் பேருதான் ஜாலமா..?"
"வித்தை தெரிஞ்ச மனுசனுக்கு வித்தாரமா பேச சொல்லியா கொடுக்கனும்..?"
அவள் அடுத்த கணையை எறிய அவளின் பேச்சில் தெறித்து விழுந்த கிண்டல் கலந்த கேலியில் கள்ளுண்ட வண்டாக கிறங்கிப் போனான் அர்ஜீன்...
"பேசுடி.. இந்தப் பேச்சிலதான என்னைக் கவிழ்த்த..?"
"யாரு கவிழ்ந்தது..? நீங்களா..? இதை நாங்க நம்பனுமாக்கும்..?"
"திரும்பவும் நாங்களா..? அப்படியே பேசி மயக்கறடி.. பேச்சிலயே என்னைக் கட்டிப் போட்டு காவல் காக்கிற.."
"ஆஹா.. இவரு பேச்சில மயங்கிப் போகிற ஆளுதான்.."
"மயங்கலையா..? உன் மனசைத் தொட்டுச் சொல்லு..."
அர்ஜீனின் ஊடுறும் பார்வையில் தடுமாறிப் போனாள் காவ்யா.. அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் அவள் பார்வை நிலம் பார்த்தது.. அவளின் விரல்கள் நடுங்க ஆரம்பித்தன..
அர்ஜீன் கிசுகிசுப்பான குரலில் கேட்டான்...
"சொல்லுடி.. நீ என்கிட்ட மயங்கலையா..?"
காவ்யா இப்போது மொத்தமாக தலையைக் கவிழ்ந்து விட்டாள்...
நடுங்கிய அவளின் விரல்களின் மீது அர்ஜீனின் கை படிந்தது.. அவள் விரலோடு விரல் கோர்த்துக் கொண்டான் அர்ஜீன்.. நடுங்கிய அவள் விரல்களை அழுந்தப் பற்றித் தைரியம் கொடுத்தன அவனின் விரல்கள்...
'மயங்கினேன்.. சொல்லத் தயங்கினேன்..
         உன்னை விரும்பினேன் உயிரே...'
காவ்யாவின் மனம் தவித்துப் பாடியது... அர்ஜீனின் விரல்களுக்குள் அடங்கிய அவளின் விரல்கள் நடுக்கத்தைக் குறைக்கவில்லை..
"நீங்க உலகத்தைச் சுத்தறவர்.."
"அதைத்தான் சொல்லிட்டேனே..."
"பல ஊர்களில பல பெண்களைப் பார்த்திருப்பீங்க.."
"பல நாடுகளிலன்னு சொல்லு.. பெண்கள் இல்லாத உலகத்திலேயா நான் இருக்கிறேன்..? நீ சொன்னது உண்மைதான்..."
"அவங்கள்ல யார்கிட்டயும் நீங்க மயங்கலையா..?"
காவ்யாவின் கேள்வியில் உரக்கச் சிரித்தான் அர்ஜீன்.. அவள் கவலையுடன் சுற்றுமுற்றும் பார்த்தாள்.. மற்றவர்கள் கவனித்து விடுவார்களோ என்ற எண்ணம் அவளுக்கு...
"இல்லையே.." அவன் உல்லாசமாகச் சிரித்தான்...
"இதுவரை இல்லை.. இனிமேல் அந்த மயக்கம் உங்களுக்கு வரலாமில்லையா..?" அவள் குரல் நடுங்கியது..
அர்ஜீனின் சிரிப்பு மறைந்தது.. அவன் முகத்தில் தீவிரம் வந்தது.. அவன் மறுப்பாக தலையை
அசைத்தான்..
"வராது..." நிச்சயத்துடன் அவன் குரல் ஒலித்தது..
"அதை எப்படி உங்களால உறுதியாச் சொல்ல முடியும்..?"
"முடியும்.. ஏன்னா.. இது மனசு.. ஒருத்திகிட்ட மயங்கின இந்த மனசு இன்னொருத்திகிட்டத் தாவாது..."
"தாவிட்டா..?"
"சூரியன் கிழக்கில உதிக்காம மேற்கில உதிச்சிட்டான்னு அர்த்தம்.. போதுமா..?"
அவன் சுள்ளென்று எரிந்து விழுந்தான்.. காவ்யாவின் கண்கள் கலங்கி விட்டன.. அவனின் அந்த எரிச்சலில் அவள் மனதில் தென்றல் அடித்தது.. சலனப்பட்ட அவள் மனது சமனப் பட்டிருந்தது...
"என்னையே கேள்வி கேட்கிறயே.. இதே கேள்விய நானும் உன்கிட்டத் திருப்பிக் கேட்கலாமில்ல..?"
"என்னத்தைக் கேட்பீங்க..?"
"என்னிடம் மயங்கியிருக்கிற நீ.. இதே மயக்கத்-தோடே என்னைக்கும் இருப்பியா..?"
"புரியலை..." அவள் கூர்மையாக அவனைப் பார்த்தாள்...
"ஹ.." அவள் பார்வையை அவன் அலட்சியம் செய்தான்..
"உனக்கா புரியாது...? இதை வேற யாராவது ஒரு கேத்தரவாடுகிட்டப் போய்ச் சொல்லு.. அவன் கேட்டுக்குவான்.."
"கேத்தரவாடா..?" அவள் விழிவிரித்தாள்..
"யெஸ்... கேத்தரவாடுதான்.. உன்கிட்ட மயங்கிப் போனவனுக்கு உன் லாங்வேஜைப் புரிஞ்சுக்கிட்டு அதைப் போல பேசிப் பழகறதில ஒன்னும் சிரமமில்ல..."
"இதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டவரு என் மனசைப் புரிஞ்சுக்காததுதான் ஆச்சரியமா இருக்கு... நான் மதுரைக்காரி.. பிடிச்சா ஒரே பிடிதான்.. நினைப்பிருக்கட்டும்.."
"மதுரைக்காரிக்கு மட்டும்தான் நிலையான மனசிருக்கனும்னு ஒன்னும் கட்டாயமில்ல.. உலகம் சுத்தற வாலிபனுக்கும் அது இருக்கும்.."
"இப்ப என்னதான் சொல்லவர்றீங்க...?"
"என் மனது ஒன்றுதான்..
             உன்மீது ஞாபகம்..
    வான் நிலவு ஒன்றுதான்..
             வான்மீது சத்தியம்.."
அவன் கண்சிமிட்டிப் பாடியதில் அவளின் காதல் பெருகியது... அதைப் போன்ற அழகான விடியலை அதற்கு முன்னால் அவள் சந்தித்ததில்லையென்று மனதுக்குள் அவள் நினைத்துக் கொண்டாள்...
'இந்த நாள்.. இனிய நாள்...'
அவனுடன் ஒற்றைச் சொல்லையாவது தனிமையில் பேசிவிட வேண்டும் என்ற தவிப்புடன் ஓடி வந்தவளுக்கு.. கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து அவனுடன் இனிமையாகப் பேசும் மணித்துளிகள் கோடிகோடியாய் கிடைத்து விட்டதில் சந்தோசம் ஊற்றெடுத்தது..
"உங்களைத் தனியாப் பார்க்க முடியுமோன்னு பயந்து போனேன் தெரியுமா..?" அவள் சின்னஞ்சிறு குழந்தையாகிப் பேசினாள்..
"உனக்கு மட்டும்தான் அந்த நினைப்பிருக்குமா..? எனக்கு இருக்காதா..? அதான்.. விடிகிறதுக்கு முன்னாலேயே குளித்து முடித்து உன் வீட்டுப் பக்கம் காரை
விட்டுட்டேன்..."
அவன் சொல்லச் சொல்ல அவள் கண்கள் மின்னின...
அவன் நினைப்பில் தூக்கத்தைத் தொலைத்து அவள் தவித்துக் கொண்டிருந்ததைப் போல அவள் நினைப்பில் அவனும் தூக்கத்தை தொலைத்து தவித்திருக்கிறான்
என்பதில் விண்ணளவு சந்தோசம் அவள் மனதில் முளைத்தது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -57
எங்கிருந்தோ ஆசைகள். -57
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-57.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-57.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy