எங்கிருந்தோ ஆசைகள்..-52

 52 மண்மணக்கும் மதுரையிலே - அவள்... மனதைவெல்ல ஆசைகொண்டேன்... அந்த இரவு.. முடிவேயில்லாத நீண்ட இரவாக இருப்பதைப் போல காவ்யாவுக்கு தோ...


 52
மண்மணக்கும் மதுரையிலே - அவள்...
மனதைவெல்ல ஆசைகொண்டேன்...

அந்த இரவு.. முடிவேயில்லாத நீண்ட இரவாக இருப்பதைப் போல காவ்யாவுக்கு தோன்றியது.. ஒவ்வொரு மணித்துளிகளும் மெதுவாக நகர்வதைப் போல அவள் உணர்ந்தாள்...
அவளுக்கு அர்ஜீனைப் பார்க்க வேண்டும்.. அதற்கு பொழுது விடிய வேண்டும்.. அவள் கடைக்கு ஓட வேண்டும்.. அதற்காக அவள் விடிவதற்காக காத்திருந்தாள்..
அவள் காத்திருந்த அந்த இரவினிலே.. கண்ணதாசன் தூங்காமல் வீட்டை விட்டு வெளியேறினான்.. காரை அவன் எடுத்த போது.. வாசலில் விளக்கு எரிந்தது.. கண்ணைக் கசக்கியபடி அன்னபூரணி வந்து நின்றாள்..
"என்னப்பா இந்த நேரத்தில வெளியில கிளம்பற..?" என்று கேட்டாள்..
"ஒரு முக்கியமான வேலை இருக்கும்மா.. நீ போய் படு.. நான் ஆறே நிமிசத்தில் திரும்பி வந்துருவேன்.." என்றான் கண்ணதாசன்..
அன்னபூரணி விளக்கை அணைத்துவிட்டு உள்ளே சென்றாள்.. கண்ணதாசன் காரைக் கிளப்பினான்.. சாலையில் வேகமெடுத்த கார்.. அர்ஜீன் தங்கியிருந்த ஹோட்டல் வாசலில் போய் நின்றது...
அந்த நள்ளிரவிலும் ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில் நடமாட்டம் தெரிந்தது.. கண்ணதாசன் இயல்பாக அதைக் கடந்து லிப்டிற்குள் நுழைந்தான்.. தங்கராஜின் உபயத்தில் அர்ஜீன் தங்கியிருந்த அறையின் எண்ணை அவன் அறிந்து வைத்திருந்தான்.. மூன்றாவது மாடியில் லிப்டை விட்டு வெளிப்பட்டவன்.. நீண்டிருந்த காரிடாரில் நடந்து அர்ஜீனின் அறைவாசலில் நின்று.. அழைப்பு மணியை அழுத்தினான்.. சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்த அர்ஜீன் தூக்கத்தின் சாயல் துளிக்கூட முகத்தில் படியாமல் புத்துணர்வோடு இருந்தான்.. கண்ணதாசனைப் பார்த்ததும் அவன் புருவங்கள் சுருங்கின.. அந்த நேரத்தில் அவன் கண்ணதாசனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது முகக்குறிப்பு உணர்த்தியது...
"நீங்க காவ்யாவோட அண்ணன்தானே..?"
"யெஸ்.. ஐ வான்ட் டு டாக் வித் யு..."
"இஸ் தட் இம்பார்டண்ட்...?"
"யெஸ்..."
"எனி திங்க் சீரியஸ்..?"
"எனக்கு இது சீரியஸ்தான்.. உங்களுக்கு எப்படின்னு எனக்குத் தெரியாது.. நீங்கதான் உலகம் சுற்றும் வாலிபனாச்சே.. உங்களுக்கு எல்லாமே ஈஸியாத்தான் தோணும்..."
கண்ணதாசனின் காட்டமான பேச்சில்.. அர்ஜீன் முகம் மாறினான்.. எதற்காக இவன் இந்த அளவுக்கு கோபப் படுகிறான் என்று அவனுக்குப் புரியவில்லை.. காவ்யாவுக்கும் அவனுக்கும் இடையில் நடந்த தனிமையான சந்திப்பைப் பற்றி கண்ணதாசனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே அவன் நினைத்தான்..
'கொஞ்சம்கூட ஓட்டையில்லாத கச்சிதமான பிளானாச்சே.. அதை இவன் தெரிந்துகொண்டிருக்க முடியாது...'
காரணம் எதுவாக இருந்த போதிலும்.. வந்திருப்பது காவ்யாவின் அண்ணன் என்ற நினைவில்.. அந்த அர்த்த ராத்திரியிலும் கண்ணதாசனை அறைக்குள் அனுமதித்தான் அர்ஜீன்...
"சிட்டவுன்.."
சோபாவை கை காட்டினான்.. அறைக் கதவைச் சாத்தி விட்டு கண்ணதாசனுக்கு எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்தான்..
அந்த நேரத்திலும் அர்ஜீனுடைய லேப்-டாப்பின் திரையில் ஒளியிருந்ததைக் கவனித்த கண்ணதாசனுக்கு.. இவன் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்பவன் என்று தோன்றியது...
இருக்கட்டும்.. இவன் எப்படிப்பட்ட தீரனாகவும் இருக்கட்டும்.. அதைப்பற்றி கண்ணதாசனுக்கு ஒன்று மில்லை.. அவனுக்கு அவனின் தங்கையின் வாழ்வு மட்டுமே முக்கியம்..
"இந்த நைட்டில ரூம் சர்வீஸை டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு நினைக்கிறேன்.. ஸோ.. காபி.. ஆர் டீன்னு சூடா எதையும் தர முடியாது.. பட்.. ரூமில் இருக்கிற பிரிட்ஜில் கூல்டிரிங்க் இருக்கு.. இஃப் யுஹேவ் நோ எனி அப்ஜெக்சன்.. அதில ஒரு பாட்டிலை எடுத்து ஓபன் பண்ணவா..?" நிதானமாக வினவினான் அர்ஜீன்..
"நோ தேங்க்ஸ்.. இந்த மிட் நைட்டில காபி ஆர் கூல்டிரிங் வித் அர்ஜீன்னு குடிக்கிறதுக்காக நான் வரலை.. இதெல்லாம் எங்க வீட்டிலேயே எனக்குக் கிடைக்கும்.. நான் வந்தது வேற ஒன்னிற்காக..."
"அஃப்கோர்ஸ்.. ஐ நோ இட் வெரி வெல்.. மிட் நைட்டுன்னு நீங்களே சொன்ன பின்பு நான் அதைப் பத்திக் கேள்வி கேட்டு ஆகப் போகிறதில்ல.. சொல்லுங்க.. வாட் டு யு வான்ட்..?"
"ஐ வான்ட் ஒன்லி ஒன் மிஸ்டர் அர்ஜீன்.. நீங்க என் தங்கையின் மனசில ஆசையை விதைக்கிறதை நிறுத்தனும்..."
கண்ணதாசன் நேரடியாக போட்டுத் தாக்கியதில் அர்ஜீன் நிதானித்தான்.. எங்கோ ஒரிடத்திலிருந்து விவரம் கசிந்து விட்டதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது..
"புரியலை.."
"உங்களுக்கா புரியாது..? எவ்வளவு கச்சிதமா பிளான் போட்டு என் தங்கையை உங்ககூட காரில் ஏற வைச்சீங்க..? இத்தனையும் செய்துட்டு புரியலைன்னு சொன்னா எப்படி சார்...?"
கண்ணதாசன் அனைத்தையும் அறிந்து கொண்டு தான் வந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட அர்ஜீன்.. நிதானமாக.. நிலைமையை எதிர் கொண்டான்...
"ஸோ.. உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு.."
"யெஸ்.."
"காவ்யாவிடம் விசாரித்தீங்களா..?"
"இல்லை.. இப்ப என்ன சொல்ல வர்றீங்க.. அர்ஜீன்..? நீங்க அடக்கி வைக்க வேண்டியது உங்க தங்கையை.. என்னையில்லன்னு சொல்ல வருகிறீங்களா..?"
"நோ.. நோ.. இதில் காவ்யாவின் தப்பு எதுவுமே இல்லைன்னு தான் சொல்ல வர்றேன் மிஸ்டர் கண்ணதாசன்.. இந்த மேட்டரைப் பொறுத்தவரை ஷீ இஸ் இன்னொஸென்ட்..."
"அது எனக்கும் தெரியும்.. தெரிஞ்சதினாலதான் உங்களைத் தேடி வந்தேன்..."
"அவளை நீங்க எனகொயர் பண்ணினா அவ கில்ட்டியா ஃபீல் பண்ணுவா..."
"அதைப்பத்தி நீங்க கவலைப்படவேணாம்.. என் தங்கையைப் பாத்துக்க எனக்குத் தெரியும்..."
"நாம் எதிரிகளில்லை கண்ணதாசன்.."
"நண்பர்களும் இல்லை..."
"உறவுக்காரங்களா ஆகப்போகிறோம்ன்னு சொல்கிறிங்களா..?"
"அந்தக் கனவை நான் காணமாட்டேன்.. யதார்த்தம் என்னன்னு எனக்குத் தெரியும் அர்ஜீன்.. என் தங்கைக்கும் அது தெரிஞ்சிருக்கனும்.. என்ன சொல்லி அவளை மயக்கினிங்க..?"
"வாட்..? வி ஆர் லவ்வர்ஸ் கண்ணதாசன்..."
"உங்களைப் போல உச்சானிக் கொம்பில இருக்கிறவங்க மேலே என் தங்கைக்கு காதல் வந்தால் என்ன ஆகும்ன்னு எனக்குத் தெரியும் அர்ஜீன்.. வேண்டாம்.. உங்க விளையாட்டுக்கு வேற ஆளைப் பிடிங்க.. என் தங்கையை விட்டுவிடுங்க..."
கண்ணதாசனின் பிடிவாதமான பேச்சில் அர்ஜீனுக்குள் கோபம் மூண்டது.. எதிரே அமர்ந்திருந்தவனைப் பார்த்தான்.. காவ்யாவின் ஜாடையில் கண்ணியம் குறையாதவனாக அமர்ந்திருப்பவனின் மனதில் நெருப்பிருப்பதை புரிந்து கொண்டவனாக அமைதி காத்தான்...
"நீங்க பதட்டப்படறிங்க கண்ணதாசன்..."
"பதட்டப்படாம என்ன செய்யச் சொல்கிறிங்க அர்ஜீன்..? பொம்பளப் புள்ள கூடப் பிறந்தவனாப் போயிட்டேன்.. நெருப்புன்னு தெரியாம அதைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படறா என் தங்கச்சி.. அது சுட்டு விட்டா.. அவளுக்கு ஏற்படற வலியைவிட ஆயிரம் மடங்கு அதிகமா எனக்கு வலிக்கும் அர்ஜீன்.. அவளுக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் தாங்கிக்க மாட்டேன்.. அதுக்குக் காரணமானவங்களை கொன்னு புதைச்சிருவேன்.."
கண்ணதாசனின் கண்ணியத்தை மீறி அவன் கண்களில் தெரிந்த நெருப்பின் ஜீவாலையில் அர்ஜீன் உதட்டைக் கடித்துக் கொண்டான்...
'சும்மாவா.. அவ மதுரை.. மதுரைன்னு சொல்லி பயம் காட்டறா..' என்று அந்த நிலையிலும் அவனுக்குத் தோன்றியது...
"அந்த அளவுக்கு ஏன் போகனும் கண்ணதாசன்..? உங்க தங்கையை நான் காதலிக்கிறேன்.. அவளை மேரேஜ் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்.."
"சும்மா கதை விடாதீங்க..."
"கதையில்லை கண்ணதாசன் நிஜம்.."
"இதை டிவி ஷோவில வேணும்னா நிகழ்ச்சிக்கு தலைப்பா வைச்சுக்குவாங்க.. நான் என் மனசில வைச்சுக்க மாட்டேன்.. அப்படி நினைக்கிறவரா இருந்தா.. நீங்க முதலில் என்னிடமில்ல பேசியிருக்கனும்..?"
என்னடா இது என்றிருந்தது அர்ஜீனுக்கு...
ஒரு பெண்ணைக் காதலிக்க அவளிடம் காதல் சொல்லாமல் அவளுடைய அண்ணனிடம் காதல் சொல்வதா..?
இப்படியொரு நியாயத்தை எந்த ஊரிலும் அவன் கேட்டதில்லை.. இருந்தாலும் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு அவன் பேசினான்...
"காவ்யாவிடமே இப்பத்தான் இதைப்பற்றிப் பேசினேன்.."
"பொய் சொல்லாதீங்க.. அழகர் மலைக்கு கடையில வேலை செய்கிற ஆள்களை வேன் பிடிச்சுக் கூப்பிட்டுக்கிட்டுப் போனீங்களே.. எதுக்காக...?"
"இளங்கோவின் மேரேஜை அட்டெண்ட் பண்றதுக்காக..."
"அதை ஊரில இருக்கிற கேணப்பய எவனிடமாவது சொல்லுங்க... கேப்பையில நெய் வழியுதுன்னா.. அப்படியான்னு கேட்டுக்கிற கேணப்பய நானில்லை..."
அர்ஜீனுக்கு கேப்பையையே தெரியவில்லை.. ராகி என்று சொல்லியிருந்தாலாவது அவனுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.. அந்த நள்ளிரவில் அவனை ஆக்ரமித்த மதுரை மண்ணின் பழமொழியில் அவன் திணறிப் போய்விட்டான்..
"நீங்க யாரிடம் வேண்டும்ன்னாலும் கேட்டுப் பாருங்க கண்ணதாசன்.. அன்றைக்கு இளங்கோ மேரேஜை அட்டெண்ட் பண்ணத்தான் நாங்க போனோம்..."
"நாங்கன்னு மத்தவங்களையும் உங்ககூடக் கூட்டுச் சேர்த்துக்காதீங்க அர்ஜீன்.. மத்தவங்க அதுக்காகத்தான் போனாங்க.. நீங்க எதுக்காக போனீங்க..?"
கண்ணதாசனின் கிடுக்கிப் பிடி கேள்வியில் அர்ஜீனுக்குள் சன்னமான எரிச்சல் தோன்றியது...
'காதலிக்கிறவன் அவனுடைய காதலியை சைட் அடிக்க நினைப்பது கூடத் தப்பா..?'
"யு ஸீ மிஸ்டர் கண்ணதாசன்.. நான் இன்றைக்கே உங்க வீட்டில் வந்து பேச ரெடியாத்தான் இருந்தேன்.."
"உங்க கையைப் பிடிச்சு யார் தடுத்தது..?"
"காவ்யா..!"
"என்னது..?"
"முறைக்காதீங்க மிஸ்டர் கண்ணதாசன்.. அவ என் கையைப் பிடிச்சுத் தடுக்கலை.. பட்.. இன்றைக்கு வர வேண்டாம்ன்னு அவதான் சொன்னா..."
"இதை நம்ப நான் தயாரா இல்ல அர்ஜீன்.."
"நீங்க நம்பித்தான் ஆகனும்.. என் குடும்பத்தோட வந்து பெண் கேட்கச் சொன்னா.. நானும் ஓகேன்னு சொல்லியிருக்கேன்..."
"ஓஹோ..."
"இதையும் நீங்க நம்பலைன்னு தெரியுது கண்ணதாசன்.. நிச்சயம் நான் என் குடும்பத்தோட வந்து உங்ககிட்ட காவ்யாவைப் பெண் கேட்பேன்..."
"எப்ப..?"
"நாளைக்கு நான் சென்னைக்குப் போகனும்.. நாளை மறுநாள் கனடாவுக்கு பறக்கனும்.. இரண்டு மாதத்துக்கு மேலே அங்கே தங்க வேண்டியிருக்கு.. அங்கேயிருந்து திரும்பியதும் என் டாடியிடம் இதைப் பத்திப் பேசலாம்ன்னு இருக்கிறேன்.."
"அதானே பார்த்தேன்..."
"வேண்டாம் கண்ணதாசன்.. என்னை சந்தேகக் கண்ணோடே பார்க்காதீங்க.. கட்டாயம் ஒர்நாளில் என் குடும்பத்தோடு காவ்யாவ பெண்கேட்டு நான் வருவேன்.."
"அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.. சித்தப்பான்னு கூப்பிடறதைப் பத்தி அதுக்கப்புறமா யோசிக்கறேன்.."
இதுவும் அர்ஜீனுக்குப் புரியவில்லை.. ஆனால் நடக்காத ஒன்றை அவன் பேசுவதாக கண்ணதாசன் பழிப்புக் காட்டுகிறான் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது...
"நடக்கும் கண்ணதாசன்.. அப்போ உங்களுக்குத் தெரியும்.. இந்த அர்ஜீன் யாருன்னு..."


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்..-52
எங்கிருந்தோ ஆசைகள்..-52
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-52.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-52.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy